பலா பட்டறை: இரவு ஒரு சுகமான அமைதி

இரவு ஒரு சுகமான அமைதி




இருட்டு ரொம்ப சுகமான விஷயம், சப்தங்கள் அதிகமில்லாமல் மூளையும் மனதும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு எப்படி இருக்க சௌக்கியமா? என்று இரண்டும் பேசிக்கொள்ளும் நேரம், அதிகாலை தான் நல்லது என்பார்கள் ஆனால் எனக்கென்னமோ, அதிகாலையில் இரண்டுமே அதனதன் பணிகளுக்காக நம் உடலை தயார் செய்யும் வேலைகளில் இறங்கி விடுவதால் கொஞ்சம் தூரம் அதிகமாகி விடுகிறது...

மீண்டும்.., இருட்டு தான் சுகம் பகலெல்லாம் தவ்விதாவும் மன குரங்கு கூட ரொம்பவே அடக்கி வாசிக்கும் நேரம்.. நவீன கால அறிவியல் வளர்ச்சியில், எல்லாமே இரைச்சலாகத்தான் இருக்கிறது!! இப்படியே போனால் கேட்க்கும் திறன் என்னாகப்போகிறதோ தெரியவில்லை. சரி வெளி இரைச்சல் வேண்டாமென்று எவனாவது காதை மூடிக்கொண்டுவிட்டால் என்னாவது? என்று குழு போட்டு யோசித்திருப்பார்கள் போல....இப்போதெல்லாம் காதுக்குள்ளேயே சொருகிக்கொண்டு இசையையும், பண்பலை வரிசைகளையும் கேட்டுக்கொண்டு எங்களுக்கு வெளி இரைச்சல் வேண்டாம் எங்கள் இரைச்சலை நாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு விடுகிறோம் என்று மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்!!

இரவெல்லாம் உழைத்து பகலில் தூங்கும் மனிதர்கள் நிலை இன்னும் கொடுமை..

எல்லா சப்தங்களினுடே மெல்ல நம்மை தழுவும் சுகமான தூக்கம் கூட தினம் தினம் நாம் செய்யும் தியானம் தான். நமக்கே தெரியாமல் நாம் நம்மிலிருந்தே அமிழ்ந்து போவது பேரதிசயம் எப்படி அது நிகழ்கிறது என்று ஆராயவே முடியாது,, அது நீ மரணத்திர்கப்புரம் எங்கு சென்றாய்? என்று கேட்பது போல!!

அதனால்தான் இரவு ஒரு சுகமான அமைதியை தருகிறதாக படுகிறது...

0 comments: