பலா பட்டறை: எதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி

எதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி





எதற்கோவென 

மனதெல்லாம் குத்திக்கிடக்குது 
அம்புகள் 

கொடுத்த வாக்குறுதிகள்.. 
வாழ்க்கையில் 
பெற்ற வாக்குறுதிகள்.. 

இழந்த காதல் 
மற்றும் 
எல்லாம்.. எல்லாம்..

வம்ச நிலை மாறி 
எண்ணும் எண்ணங்கள் மாறி 
உடல் மாறி,
உறுதியும் மாறி, 

இப்பொழுதெல்லாம் 
நடிக்க ஆரம்பித்துவிட்டன 
மனமும், உடலும்,
செய்கைகளாய்..

காதலோ, பந்தமோ 
இழந்ததோ, இழக்கப்போவதோ,

இப்படி ஏதாவதொரு 
படித்துறையில் 

ஏங்கி 
குமுறும்..

மௌனமாய் 
ஒப்பாரி வைக்கும் 

எதற்கோவென  
இன்னும் 
நான் வாழ........  

21 comments:

கமலேஷ் said...

நல்ல இருக்கு கவிதை..
பரிசு பெற வாழ்த்துக்கள்...

thamizhparavai said...

எனக்குப் பிடிச்சிருக்குது கவிதை...
பரிசு பெற வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

விஜய் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே

பரிசு பெற மனமார வாழ்த்துகிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே

பரிசு பெற மனமார வாழ்த்துகிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

Vidhoosh said...

நன்றாக இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
-வித்யா

மணிஜி said...

ஆல் த பெஸ்ட்

பூங்குன்றன்.வே said...

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

ஜெனோவா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே !

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

அம்புகளை எல்லாம் படித்து வருத்தமாக இருந்தது
வெற்றி பெற வாழ்த்துக்கள்

Sakthi said...

நல்லா இருக்கு..!

Sakthi said...

நல்லா இருக்கு..! நண்பரே...!

அவனி அரவிந்தன் said...

நன்று. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

thiyaa said...

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

//இப்பொழுதெல்லாம்
நடிக்க ஆரம்பித்துவிட்டன
மனமும், உடலும்,
செய்கைகளாய்..//

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

Paleo God said...

நன்றி நண்பர்களே... தொடர்ந்த ஊக்கத்துக்கும்.. வாழ்த்துக்களுக்கும்... :))

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு

பரிசு பெற வாழ்த்துகிறேன்

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

Radhakrishnan said...

எதற்கோ என இருக்காமல் இதற்கு என வாழ்ந்தால் அதில் வாழ்க்கை மிகவும் சிறக்கும் என சொல்லும் அழகிய கவிதை.

வெற்றி பெற வாழ்த்துகள்.

ராம்குமார் - அமுதன் said...

அழகான கவிதை... வெற்றிக்கு வாழ்த்துக்கள்....