பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்

சின்ன சின்ன கவிதைகள்


வாழ்க்கை




இடதும், வலதுமாகவே
இருக்கிறது 
வாழ்க்கை .

நன்றாய்
திரும்பி நின்று 
வலதை இடமாகவும்.. 
இடதை வலமாகவும்..

மாற்றிவிட
முனைந்த  போதும் 

இடதும் வலதுமாகவே
இருக்கிறது 
வாழ்க்கை. 


மழை





என்னதான் 
முகம் சுளித்து ..

சலித்த வார்த்தைகள் 
உதித்தபோதும் 

என் தாகத்திற்கான
தண்ணீரை 

பூமியில் எங்கோ 
எனக்கென 

எப்போதும் சேமித்து 
வைத்தே போகிறது.. 

மழை...  

9 comments:

பூங்குன்றன்.வே said...

இரண்டு கவிதைகளுமே அசத்தல். வாழ்த்துக்கள்.

Unknown said...

பட்டையைகிளப்புது

Paleo God said...

நன்றி பூங்குன்றன்.வே

நன்றி Mohan..

Cable சங்கர் said...

பாராட்டுக்கள் உங்களின் முதல் கவிதைக்கு.

thiyaa said...

அசத்தல்,
வாழ்த்துக்கள்.

Paleo God said...

நன்றி...

Cable Sankar

தியாவின் பேனா

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

இரண்டாவது மழை கவிதை நல்லாயிருக்கு பாஸ்...

சூர்யா - மும்பை said...

முதல் கவிதை எளிமையான வார்த்தைகளால் ஆன கனமான உட்பொருள் கொண்டது.

அன்புடன் சூர்யா

Paleo God said...

நன்றி பிரியமுடன்...வசந்த்..

நன்றி சூர்யா..