பலா பட்டறை: வலையில் கிடைத்த சீனத்து தேவதை

வலையில் கிடைத்த சீனத்து தேவதை

வலையில் கிடைத்த சீனத்து தேவதை





முழிப்பு முதல்
தூக்கம் வரை
எல்லாம் பகிர்ந்தோம்

வார்த்தைகள் போலவே
உன் குரலும் இனிமையா
என்றேன்..

அழைத்து பார்த்து
நீயே சொல் என்றாள்

ஹலோ சொல்ல
செல்லில் அழைத்தேன்
எடுத்தவுடனே
அவள் குரல்தான்

தேன்போல குரலில்

'வை'

என்றாள்..
வைத்து விட்டேன்..

வாயில் வரும்
ஓசைகள் மொழி
என்று ஆனபிறகு

மனனம் செய்து
மரத்துப்போன மூளை
மெதுவாய் தான்
தெரிந்துகொண்டது
'வை' என்பது
அவங்க ஊர்
ஹலோ வாம்

தாய் மொழிகளால்
தொலைத்த காதலை
பொது மொழியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

12 comments:

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான கவிவரிகள்
வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

//வை'
என்றாள்..
வைத்து விட்டேன்..//

குட் ஜோக்.

சீக்கிரம் சீன மொழியை கற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

சரி சரி இதுக்கெல்லாம் பொய் வைய வேண்டாம்.

--வித்யா

Paleo God said...

Xie xie:) நினைவுகளுடன் -நிகே
என் பதிவுக்கு 25 ஆவது ரசிகர் நீங்க::))

Xie xie:) பூங்குன்றன்
விளக்கம் ok தானே::))

Xie xie:) வித்யா மேடம்

Xie xie (chinese) = தேங்க்ஸ் :)) ^_^

அண்ணாமலையான் said...

நீங் எப் யங்.. என்ன புரியலயா? நீங்க எப்பவுமே யங்கா இருங்கன்னேன்...

சீமான்கனி said...

நல்ல கவிதை...
மொழி தெரியாமலேயா!? இவ்வளவு நாள் கடலை போட்டிர்கள்...:)

Paleo God said...

அண்ணாமலையான் said...
நீங் எப் யங்.. என்ன புரியலயா? நீங்க எப்பவுமே யங்கா இருங்கன்னேன்..//

சரிங்க அப்படியே ஆகட்டும்... நன்றி. ^_^

Paleo God said...

seemangani said...
நல்ல கவிதை...
மொழி தெரியாமலேயா!? இவ்வளவு நாள் கடலை போட்டிர்கள்...:)//

ஹி.. ஹி.. கடலைக்கு கை கொடுத்தது ஆங்கிலம்.

ரிஷபன் said...

வாயில் வரும்
ஓசைகள் மொழி
என்று ஆனபிறகு

வாவ்..

கமலேஷ் said...

அடடா கவிதை பட்டாசு கொளுத்துதே...
உண்மைலயே எதவாது சீனால செட்லாய்டிங்களா....
வாழ்த்துக்கள்...

Paleo God said...

கமலேஷ்...

:(( இல்லைங்க நட்பு இன்னும் தொடர்கிறது...

^_^ நன்றி :-)

சரவணன். ச said...

//தாய் மொழிகளால்
தொலைத்த காதலை
பொது மொழியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்..//

மிக அருமை ”மேலே வையுங்கள்” அதான்பா Keep it up எப்படி கமெண்டுலேயும் மொழி பிரச்சன அரமிச்சிடோம்முல......