பலா பட்டறை: பூம் பூம் பூம் மாட்டுக்காரர்....

பூம் பூம் பூம் மாட்டுக்காரர்....

ணிணியில் மேய்ந்து கொண்டிருந்த காலை நேரம்.. பே பப பே என்ற சத்தம் DTS துல்லியத்தில் காதில் விழ ஓடி வந்த என் குழந்தைகள் ..

“அப்பா என்ன சத்தம்பா அது?

“பூம் பூம் மாடு வந்திருக்கு குட்டிங்களா” ன்னு சொல்லி ”வாங்க பார்க்கலாம்னு

கேமராவோட போனா..

இவர்மட்டும் நின்னுக்கிட்டு இருக்காரு, புள்ளைங்க என்னை கடுப்பாய் (வாடா போய் ’பென் 10’ பார்க்கலாம்) பார்க்க..

“என்னங்க ஆச்சு மாடு இல்லையா??”

“மாட்டுக்கு உடம்பு சரி இல்ல சாமி.
அதான் வீட்டுல விட்டுட்டு, நான் மட்டும் வந்தேன்..”

அவர் வாத்தியத்தை வாசிக்க ஆரம்பித்து விட்டார்....

ரொம்ப நாளாச்சு பூம் பூம் மாடுகள பார்த்து, அழகான ஆடைகள், வித்தியாசமான அலங்காரங்களுடன் தலையை ஆட்டிக்கொண்டு அழகாய் இருக்கும்,

ஆனால் இவர்கள் எப்போதும் எங்கள் பக்கம் வந்ததில்லை, எனவே யாசகத்திற்கான காரணங்கள் எதுவுமில்லை, உடம்பு சரியில்லாத அந்த ஜீவனை வீட்டிலேயே விட்டு விட்டு, ஏதேனும் கிடைக்குமா என்று வந்த அந்த நல்ல மனிதரை ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

”ஏங்க எடுத்த படம் இதுல தெரியுமா??”நான் காமரா ஸ்கிரீனில் காண்பித்ததும் அப்படி ஒரு சந்தோஷம் அவர் முகத்தில்..

செல் போன் டவர்களால் சிட்டுகுருவியே அரிதாகிவிட்ட இந்த நகர வாழ்வில், வித விதமான பறவைகளை தேடி அடையாளம் கண்டு, படமெடுத்து, காட்சிக்கு வைக்கும் ஒரு போட்டியை தினசரிகளில் பார்த்தபோது, மகிழ்ச்சி ஏற்பட்டது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ தெரியாது இப்போதெல்லாம்
கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது.

எத்தனையோ வேலைகள் இந்த நகரத்தில் இருந்தும், விடாமல் இவர்களில் சிலர் இந்த பரம்பரை விஷயத்தை செய்து வருகிறார்கள். கூகுளில் தேடியபோது இவர்களை பற்றிய ஒரு கட்டுரை இந்த தளத்தில் பார்க்க கிடைத்தது. எல்லாவற்றையும் கணிணியிலேயே காண்பிக்கும் போது குழந்தைகள் சலிப்படைகின்றன.

”வாவ் இன்ஞினியரிங் மார்வெல்” என்று நாம் வியக்கும், நாகரீக கட்டிடங்களில், செங்கல், சிமென்ட்டோடு பல கலாசார, வாழ்க்கைமுறைகளும் பூசி புதைக்கப்படுகிறது. பாசமாய் பயிர்கள் வளர்த்து, பருவ காலங்கள் அறிந்த விவசாயிகள் பைஞ்சுதை வளர்க்க காப்பு காய்த்த கைகளுடன், பீடி புகைத்துக்கொண்டு சாலை ஓரம் வேலைக்காக காத்திருப்பது வளர்ச்சியா? அடுத்த கட்டம் எங்கே போகும்? கட்டிடங்களின் மாடிகளில் கழனிகள் வருமோ..??

போகிற போக்கில் கூகிள்தான் வருங்கால சந்ததிக்கு வரலாறு சொல்லுமோ என்னமோ..எதற்கும் அரிதான செய்திகளை பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா..!

.

41 comments:

மரா said...

தல..பொங்கலுக்கு ஏத்தாப்ல பதிவு போடுறீக.நல்லா இருக்கு.
//செல் போன் டவர்களால் சிட்டுகுருவியே அரிதாகிவிட்ட//

உண்மை உண்மை.
//வித விதமான பறவைகளை தேடி அடையாளம் கண்டு, படமெடுத்து, காட்சிக்கு வைக்கும் ஒரு போட்டியை//
உங்களுக்கு நான் நேர்ல பாக்கும்போது நிறையா சொல்றேன் அதுபற்றி.
ந்ன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

பூம் பூம்...மாடு - 1970's...

பூம் பூம் - ஷக்கலக்கா... 2009...

அருமை.

அண்ணாமலையான் said...

கலக்குங்க...

Paleo God said...

வாங்க மயில்ராவணன்..::))

//வித விதமான பறவைகளை தேடி அடையாளம் கண்டு, படமெடுத்து, காட்சிக்கு வைக்கும் ஒரு போட்டியை//
உங்களுக்கு நான் நேர்ல பாக்கும்போது நிறையா சொல்றேன் அதுபற்றி.
//
மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன்..::)
நன்றி.

Paleo God said...

ஸ்வாமி ஓம்கார் said...
பூம் பூம்...மாடு - 1970's...

பூம் பூம் - ஷக்கலக்கா... 2009...

அருமை.//

ஸ்வாமி..தன்யனானேன்::))

வருகைக்கு நன்றி.

Kumky said...

வரலாறு முக்கியம்தான் அமைச்சரே...ஆனால் வராத மாட்டை விடுங்கள்...கூகுளில் தேடியாவது எமக்கு நீர் ஒரு பூம் பூம் மாட்டை காட்டியிருக்கலாமில்லையா....
என்ன அமைச்சரோ போங்கள்.

Paleo God said...

அண்ணாமலையான் said...
கலக்குங்க...//

வாங்க தல.. நன்றி::))

Paleo God said...

கும்க்கி said...
வரலாறு முக்கியம்தான் அமைச்சரே...ஆனால் வராத மாட்டை விடுங்கள்...கூகுளில் தேடியாவது எமக்கு நீர் ஒரு பூம் பூம் மாட்டை காட்டியிருக்கலாமில்லையா....
என்ன அமைச்சரோ போங்கள்.//

மன்னா...லின்க் பார்க்கவில்லையா.. ’அந்த’ புரத்தில் நிரம்ப பொங்கிவிட்டீர்கள் போல...

..,மிக்க நன்றி..கும்க்கி::))

Chitra said...

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ தெரியாது இப்போதெல்லாம்
கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது.
............................ நிஜத்தை பட் என்று சொல்லி இருக்கும் விதம் நல்லா இருக்கு.

Jerry Eshananda said...

// ”வாவ் இன்ஞினியரிங் மார்வெல்” என்று நாம் வியக்கும், நாகரீக கட்டிடங்களில், செங்கல், சிமென்ட்டோடு பல கலாசார, வாழ்க்கைமுறைகளும் பூசி புதைக்கப்படுகிறது. பாசமாய் பயிர்கள் வளர்த்து, பருவ காலங்கள் அறிந்த விவசாயிகள் பைஞ்சுதை வளர்க்க காப்பு காய்த்த கைகளுடன், பீடி புகைத்துக்கொண்டு சாலை ஓரம் வேலைக்காக காத்திருப்பது வளர்ச்சியா? அடுத்த கட்டம் எங்கே போகும்? கட்டிடங்களின் மாடிகளில் கழனிகள் வருமோ..?? //
ரியல்லி ஆவ்சம்.

vasu balaji said...

கலக்கறீங்க :))
/ பலா பட்டறை said...

கும்க்கி said...
வரலாறு முக்கியம்தான் அமைச்சரே...ஆனால் வராத மாட்டை விடுங்கள்...கூகுளில் தேடியாவது எமக்கு நீர் ஒரு பூம் பூம் மாட்டை காட்டியிருக்கலாமில்லையா....
என்ன அமைச்சரோ போங்கள்.//

மன்னா...லின்க் பார்க்கவில்லையா.. ’அந்த’ புரத்தில் நிரம்ப பொங்கிவிட்டீர்கள் போல...

..,மிக்க நன்றி..கும்க்கி::))//

:)) முடியல

Prathap Kumar S. said...

//கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது.//

வார்த்தைகளைப்போட்டு விளையாடுறீங்களே சார்.

//போகிற போக்கில் கூகிள்தான் வருங்கால சந்ததிக்கு வரலாறு சொல்லுமோ என்னமோ..//

அதிலென்ன சந்தேகம். :-)

//எதற்கும் அரிதான செய்திகளை பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா..!//

ஆமா... ஆமா வரலாறு முக்கயிம் மன்னா.... :-) பதிவு அருமை

மீன்துள்ளியான் said...

//போகிற போக்கில் கூகிள்தான் வருங்கால சந்ததிக்கு வரலாறு சொல்லுமோ என்னமோ..எதற்கும் அரிதான செய்திகளை பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா..!//

பலா ரெம்ப நிதர்சனமான வரிகள் ...

பூம் பூம் மாடு , சாம கோடங்கி , வில்லு பாடு , கரகாட்டம் அப்படின்னு நம்மளோட நிறைய விசயங்களை விட்டு நாம் பிரிஞ்சுகிட்டும் அழித்துக்கொண்டும் இருக்கிறோம் ..

என்ன பண்றது வேற வழி இல்லை . இது எல்லாம் காப்பத்தனும் அப்படின நாம ஒரு இடத்திலயே தேங்கி வாழற மாதிரி இருக்கும் .. அப்படி இருந்த காலபோக்கில நாமளே அழிஞ்சிடுவோம் .

போற இடத்துக்கு எல்லாம் இந்த மாதிரி விடயங்கள எடுத்துகிட்டு போறதுனா ரெம்ப கடினம் .....

கலகலப்ரியா said...

good post.. & v. nice photo.. =))

Romeoboy said...

\\“பூம் பூம் மாடு வந்திருக்கு குட்டிங்களா” ன்னு சொல்லி ”வாங்க பார்க்கலாம்னு

கேமராவோட போனா..//

எனக்கும் இதே வேலைதான் தலைவா, எதாவது புதுசா தெரிஞ்சா படம் எடுகிறதே எனக்கு வேலையா போச்சு :D

நட்புடன் ஜமால் said...

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ தெரியாது இப்போதெல்லாம்
கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது]]

நிதர்சணம்.

இப்பவே பல விடயங்கள்
அடுத்த சந்ததியினருக்கு கூகிளில் தேடித்தான் காட்ட வேண்டியிருக்கு

இன்னும் என்னா என்னா இப்படி ஆகப்போகுதோ

பும் பூம் பும்

Paleo God said...

Chitra said...
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ தெரியாது இப்போதெல்லாம்
கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது.
............................ நிஜத்தை பட் என்று சொல்லி இருக்கும் விதம் நல்லா இருக்கு//

மிக்க நன்றி சித்ரா ஜி

Paleo God said...

ஜெரி ஈசானந்தா. said...
// ”வாவ் இன்ஞினியரிங் மார்வெல்” என்று நாம் வியக்கும், நாகரீக கட்டிடங்களில், செங்கல், சிமென்ட்டோடு பல கலாசார, வாழ்க்கைமுறைகளும் பூசி புதைக்கப்படுகிறது. பாசமாய் பயிர்கள் வளர்த்து, பருவ காலங்கள் அறிந்த விவசாயிகள் பைஞ்சுதை வளர்க்க காப்பு காய்த்த கைகளுடன், பீடி புகைத்துக்கொண்டு சாலை ஓரம் வேலைக்காக காத்திருப்பது வளர்ச்சியா? அடுத்த கட்டம் எங்கே போகும்? கட்டிடங்களின் மாடிகளில் கழனிகள் வருமோ..?? //
ரியல்லி ஆவ்சம்.//

மிக்க நன்றி ஜெரி சார்..::))

Paleo God said...

வானம்பாடிகள் said...
கலக்கறீங்க :))
/ பலா பட்டறை said...

கும்க்கி said...
வரலாறு முக்கியம்தான் அமைச்சரே...ஆனால் வராத மாட்டை விடுங்கள்...கூகுளில் தேடியாவது எமக்கு நீர் ஒரு பூம் பூம் மாட்டை காட்டியிருக்கலாமில்லையா....
என்ன அமைச்சரோ போங்கள்.//

மன்னா...லின்க் பார்க்கவில்லையா.. ’அந்த’ புரத்தில் நிரம்ப பொங்கிவிட்டீர்கள் போல...

..,மிக்க நன்றி..கும்க்கி::))//

:)) முடியல//

::)) நன்றி சார்..எனக்கும்தான்..::))

Paleo God said...

நாஞ்சில் பிரதாப் said...
//கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது.//

வார்த்தைகளைப்போட்டு விளையாடுறீங்களே சார்.

//போகிற போக்கில் கூகிள்தான் வருங்கால சந்ததிக்கு வரலாறு சொல்லுமோ என்னமோ..//

அதிலென்ன சந்தேகம். :-)

//எதற்கும் அரிதான செய்திகளை பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா..!//

ஆமா... ஆமா வரலாறு முக்கயிம் மன்னா.... :-) பதிவு அருமை//

மிக்க நன்றி பிரதாப்..::))

Paleo God said...

மீன்துள்ளியான் said...
//போகிற போக்கில் கூகிள்தான் வருங்கால சந்ததிக்கு வரலாறு சொல்லுமோ என்னமோ..எதற்கும் அரிதான செய்திகளை பதிந்து வைப்போம். வரலாறு முக்கியமல்லவா..!//

பலா ரெம்ப நிதர்சனமான வரிகள் ...

பூம் பூம் மாடு , சாம கோடங்கி , வில்லு பாடு , கரகாட்டம் அப்படின்னு நம்மளோட நிறைய விசயங்களை விட்டு நாம் பிரிஞ்சுகிட்டும் அழித்துக்கொண்டும் இருக்கிறோம் ..

என்ன பண்றது வேற வழி இல்லை . இது எல்லாம் காப்பத்தனும் அப்படின நாம ஒரு இடத்திலயே தேங்கி வாழற மாதிரி இருக்கும் .. அப்படி இருந்த காலபோக்கில நாமளே அழிஞ்சிடுவோம் .

போற இடத்துக்கு எல்லாம் இந்த மாதிரி விடயங்கள எடுத்துகிட்டு போறதுனா ரெம்ப கடினம் ....//

மிக்க நன்றி மீன்ஸ்..::))

Paleo God said...

கலகலப்ரியா said...
good post.. & v. nice photo.. =))//

மிக்க நன்றி ப்ரியா ஜி..::)

Paleo God said...

||| Romeo ||| said...
\\“பூம் பூம் மாடு வந்திருக்கு குட்டிங்களா” ன்னு சொல்லி ”வாங்க பார்க்கலாம்னு

கேமராவோட போனா..//

எனக்கும் இதே வேலைதான் தலைவா, எதாவது புதுசா தெரிஞ்சா படம் எடுகிறதே எனக்கு வேலையா போச்சு :D//

பழசெல்லாம் புதுசாயிட்டே வருது நண்பா :)) புதுசும் பழசாயிடும் :)) திரும்பி பழசு புதுசா கிடைக்கும்..::))

கிர்ர்ர்ர்ர்,,

படமெடுத்து தள்ளுங்க::))
மிக்க நன்றி..::))

Paleo God said...

நட்புடன் ஜமால் said...
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதோ தெரியாது இப்போதெல்லாம்
கழுதையும் காணோம் கட்டெறும்பையும் காணோம், மனிதத்தோடு அதும் தேய்ந்து என்னைப்பார் யோகம் வரும் என்று வாஸ்து போட்டோவாய் ஆகிவிட்டது]]

நிதர்சணம்.

இப்பவே பல விடயங்கள்
அடுத்த சந்ததியினருக்கு கூகிளில் தேடித்தான் காட்ட வேண்டியிருக்கு

இன்னும் என்னா என்னா இப்படி ஆகப்போகுதோ

பும் பூம் பும்//

அதேதான் ஜமால்..::((

விஜய் said...

செல்போன் கோபுரத்தால் சிட்டுக்குருவிகள் அழிந்தது போல்

கல்வாரி மரங்கள் அழிந்ததால் டோடோ பறவை அழிந்தது போல்

ராபின் பறவை அழிந்தது போல்

ரசாயன உரங்களால் பட்டாம்பூச்சியும் (மூட்டைப்பூச்சி) அழிந்து கொண்டு இருக்கிறது

நோஸ்டால்ஜிக் வாழ்த்துக்கள்

விஜய்

சைவகொத்துப்பரோட்டா said...

கான்க்ரீட் காட்டுக்குள் நாம் இருக்கிறோம் என்பதை சரியாக சொல்லி உள்ளீர்கள் ஷங்கர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்குங்க...

Paleo God said...

விஜய் said...
செல்போன் கோபுரத்தால் சிட்டுக்குருவிகள் அழிந்தது போல்

கல்வாரி மரங்கள் அழிந்ததால் டோடோ பறவை அழிந்தது போல்

ராபின் பறவை அழிந்தது போல்

ரசாயன உரங்களால் பட்டாம்பூச்சியும் (மூட்டைப்பூச்சி) அழிந்து கொண்டு இருக்கிறது

நோஸ்டால்ஜிக் வாழ்த்துக்கள்

விஜய்//

ஆற்புதம்.. நன்றி விஜய்..::))

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
கான்க்ரீட் காட்டுக்குள் நாம் இருக்கிறோம் என்பதை சரியாக சொல்லி உள்ளீர்கள் ஷங்கர்//

நன்றி நண்பரே...::))

Paleo God said...

T.V.Radhakrishnan said...
கலக்குங்க.//

நன்றி சார்..::))

பாலா said...

///வரலாறு முக்கியமல்லவா..!///

ஆம் அமைச்சரே!!!!

மக்கள் எல்லோரும் நலம்தானே? மாதம் மும்மாறி பொழிகிறதா?

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
///வரலாறு முக்கியமல்லவா..!///

ஆம் அமைச்சரே!!!!

மக்கள் எல்லோரும் நலம்தானே?//

இல்லை மன்னா நிறைய டாலர்கள்
அனுப்பவும் ‘முருகர் டாலர்’ அல்ல:)

மாதம் மும்மாறி பொழிகிறதா?//

கிழிகிறது...’அமெரிக்கா கொண்டானே’::))

நன்றி ஹாலி:))

பாலா said...

தற்பொழுது.. பள்ளி கொள்ள அந்தப்புறம் செல்லவிருப்பதால்... தங்கள் கோரிக்கையை.. பரிசீலனை செய்து நிராகரிக்கிறேன்.

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
தற்பொழுது.. பள்ளி கொள்ள அந்தப்புறம் செல்லவிருப்பதால்... தங்கள் கோரிக்கையை.. பரிசீலனை செய்து நிராகரிக்கிறேன்//
ஹும்ம் இங்கே பகலில் மக்களை வேலை செய்யவிட்டு அங்கே கொட்டமா??
உங்கள் பள்ளியில் ‘பல்லி’ சப்தமிட்டு துயில் ’கொல்லு’ மாக.::)

அம்பிகா said...

\\பொங்கலுக்கு ஏத்தாப்ல பதிவு போடுறீக.நல்லா இருக்கு.\\

பதிவு நல்ல இருக்குங்க.

Paleo God said...

அம்பிகா said...
\\பொங்கலுக்கு ஏத்தாப்ல பதிவு போடுறீக.நல்லா இருக்கு.\\

பதிவு நல்ல இருக்குங்க//

மிக்க நன்றி அம்பிகா..::))

தாராபுரத்தான் said...

நல்ல பதிவு.

மாதேவி said...

பொங்கல்நினைவுகள்"பூம்பூம்...மாடு இங்கு கண்டதில்லை.படம் அருமை.

முன்பு பொங்கல் நாளில் அவ்வூர் நாதஸ்வர கலையர்கள் வீடுகளுக்கு வந்து வாசித்துச் செல்வது வழமை. சிறுவயதில் கண்டிருக்கிறேன்.அந்த ஞாபகங்கள் வந்தன.

Vidhoosh said...

ஹாலிவுட் பாலாவின் கமெண்ட் ரொம்ப ரசித்தேன்..

:))

நான் சின்னவளா இருந்த போதெல்லாம் பூம் பூம் மாட்டுக்காரங்க துணி, அரிசி பருப்பும்தான் வாங்குவாங்க. பணம் வாங்க மாட்டாங்க.

நல்ல பதிவுங்க. :)

வித்யா

S.A. நவாஸுதீன் said...

வேறு தொழிலே அறியாத இவர்களின் பாடு திண்டாட்டம்தான் பாவம்.

கான்க்ரீட் காடுகளாய் மாறிய பிறகு செல்ஃபோன் டவர்கள் மட்டும்தான் இருக்கும். சிட்டுக்குருவிகள் இருக்காதுதான். நல்ல இடுகை சங்கர்.

Thenammai Lakshmanan said...

//கட்டிடங்களின் மாடிகளில் கழனிகள் வருமோ..??//

உண்மையான கவலை ஷங்கர்