பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..







தேவதைகள் வெள்ளை இறக்கைகளுடன் வருமென்று
ஏதோ ஒரு நாரை கூட்டத்தை பார்த்து
எவனோ சொல்லியதாய்

பேரூந்துக்காக காத்திருந்தமாலை நேரத்தில்
எங்கிருந்தோ வந்த நங்கைகள் கூட்டம்

பொய்யென்று நிரூபித்து
ஏறெடுத்தும் பார்க்காத சாபம்தந்து
என்னை முட்டாளாக்கியது.









அதில்லாமல்
வெளியில் செல்ல முடியவில்லை
எப்போதும் அணிந்திருப்பதில் கவனமாயிருக்கிறேன்
கோவிலிலும், அடிக்கடி பார்த்துக்கொள்கிறேன்
வீட்டிற்குள் மட்டும் அனுமதியில்லை
வீட்டின் தரையே அதுதானா இல்லை
தரையைத்தான் அதுவாய் அணிந்துகொண்டு செல்கிறேனா??








கண்கள் மட்டும் சுதந்திரமாய்
சலசலக்கும் நீரோடையை
அனுபவித்துக்கொண்டிருந்தது


நீ மட்டும் குளிரும் என்று
கூப்பாடு போடாமலிருந்திருந்தால்
நானாவது குளித்திருப்பேன் என்றது
கோவித்த என் பாதங்கள்..
கத கதப்பை அனுபவித்துக்கொண்டிருந்தன
இரு உள்ளங்கைகளும்..


----------------------

சாலையோரம் தொடர்பதிவு படித்து, பின்னூட்டமிட்டு, தொடர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள் . :) 

.

16 comments:

எறும்பு said...

என்னமா feel பண்றீங்க தலைவா...

:)

vasu balaji said...

2,3,1.:)

செ.சரவணக்குமார் said...

கவிதையும் படங்களும் அருமை நண்பா.

S.A. நவாஸுதீன் said...

///வீட்டின் தரையே அதுதானா இல்லை
தரையைத்தான் அதுவாய் அணிந்துகொண்டு செல்கிறேனா?///

வித்தியாசமான சிந்த்தனை.

மற்ற இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு சங்கர்.

'பரிவை' சே.குமார் said...

கவிதையும் படங்களும் அருமை நண்பா

Ashok D said...

நங்கைகள் ஏறெடுத்து பார்க்கவில்லைன்னு டூப்புவிடக்கூடாது..

இந்த செருப்புதான் போடுவீங்களோ..

சரி மேட்டருக்கு வர்றேன்.. மொதொ இரண்டு ரொம்ப நல்லாயிருக்கு :)

சைவகொத்துப்பரோட்டா said...

//கவிதையும் படங்களும் அருமை நண்பா//

ரிப்பீட்...

மாதேவி said...

படித்தேன் 1,3 பிடித்தது.

sathishsangkavi.blogspot.com said...

நண்பரே அனுபவிச்சு எழுதியிருப்பீங்க போல...

ராமலக்ஷ்மி said...

மூன்றும் நன்று. இரண்டாவது மிகப் பிடித்தது.

கண்ணகி said...

நல்ல கவிதை. முதல், கடைசிபடங்கள் அள்ளுது.

ஹேமா said...

மூன்றுமே அருமை.இரண்டாவதின் சிந்தனை அற்புதம் பலா.

சீமான்கனி said...

//கண்கள் மட்டும் சுதந்திரமாய்

சலசலக்கும் நீரோடையை

அனுபவித்துக்கொண்டிருந்தது

நீ மட்டும் குளிரும் என்று
கூப்பாடு போடாமலிருந்திருந்தால்
நானாவது குளித்திருப்பேன் என்றது
கோவித்த என் பாதங்கள்..
கத கதப்பை அனுபவித்துக்கொண்டிருந்தன
இரு உள்ளங்கைகளும்..//

இது அசத்தல்...நல்ல இருக்கு நண்பரே...வாழ்த்துகள்...

"உழவன்" "Uzhavan" said...

கவிதைகள் அருமை

பிரபாகர் said...

கண்கள், பாதங்கள், உள்ளங்கைகள் என... கடைசிக்கவிதையில் அருமை...

கலக்குங்க நண்பா!

பிரபாகர்.

திவ்யாஹரி said...

மூன்றும் நன்று.. வித்தியாசமான கவிதை.. அருமை நண்பா..