பலா பட்டறை: எனக்கு நீதி கிடைக்குமா???

எனக்கு நீதி கிடைக்குமா???




2009 ஜனவரி 2-ம் நாள் இருந்த இருசக்கர வண்டி கொஞ்சம் ஊடல் பண்ணியதால் மாற்றி விடலாம் என்று பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் அந்த பிரபல ஷோரூமுக்கு போய் டிவியில் மின்னல் வேகத்தில் போகும் வண்டியை புறம் தள்ளி, ஸ்பெசல் மசாலா ’கண்டுபிடிப்பு 135’ ஐ தேர்வு செய்தேன்.

கொடுத்த வண்டி போக மீத தொகைக்கு, ஸ்பெசல் மசாலா பெயரிலேயே வழங்கப்படும் ஃபைனான்ஸ்சை தேர்ந்தெடுத்தேன், கேட்ட ஆவணங்களை கொடுத்து, ஈசிஎஸ் சில் பணம் ஒரு வருடத்திற்கு மாதா மாதம் எடுக்க கையெழுத்திட்டு அதற்கான காசோலையும், புகைபடமும் தந்து,. உடனடி டெலிவரி எடுத்து, பாடிகாட் தலைவரிடம் அட்டெண்டன்ஸ் போட்டு, ஓட்ட ஆரம்பித்தேன். வழக்கம்போல தின வாழ்வு நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.

 பிப்ரவரிக்கு மேல்தான் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். மார்ச், ஏப்ரல் வரை பணம் எடுக்கவில்லை திரும்பவும் ஷோரூமில் கேட்டதற்கு சில சமயம் அப்படி தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

மே மாதத்தில் முதல் ஏழரை ஆரம்பம்..

“ஹலோ மிஸ்டர்.சங்கர்”

“சொல்லுங்க”

“ஸ்பெசல் சாதா தோசை 135 வாங்கினீங்களே, பணம் கட்டலியே”

“இல்லைங்களே, என் கணக்குல உங்களுக்கான பணம் அப்படியே தான்
இருக்கு” காதில் போட்டுக்கொள்ளாத அந்த கடமை தவறாத வாடிக்கை சேவை குயில்..

“இல்லைங்க ஈசிஎஸ் பவுன்ஸ் ஆகுது, ப்ராப்ளம் உங்க பேங்லதான், கொஞ்சம் செக் பண்ணுங்க” எனக்கு கோவம் வந்தது.

“ஏம்மா ஈசிஎஸ்-னா ’ஸிஸ்டம் பேஸ்டு’தான, 10-ம் தேதி, பாங்க்காரன் கல்லாவ தொறந்த உடனே காசு கம்ப்யூட்டரே எடுத்திடும், உங்க ஸைடுல தவறு இருக்கும் பாருங்க.”

“இல்லைங்க எங்களுக்கு, பவுன்ஸ் ஆகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு மொதல்ல பாங்க்ல செக் பண்னுங்க”

எனக்கு புரியவில்லை, சரி எங்கயோ தவறு, இப்பவே சரி பண்ணிடலாம்னு, என்னுடைய வங்கிக்கு போய் கேட்டா, ”

அப்படி ஒரு ஈசிஎஸ் ரிக்வெஸ்ட்டும் உங்க கணக்குக்கு வரலையே, அக்கவுண்ட்ல வேண்டிய பணமும் இருக்கு, நாங்க ஏன் சார் ரிட்டர்ன் அனுப்ப போறோம், வேணும்னா, மவுண்ட் ரோட்ல எங்க ஈசிஎஸ்-இன்சார்ஜ் இருக்காங்க போய் பாருங்க”    

சரி என்று அங்கேயும் போனேன், அங்கிருந்த பெண்மணி தெளிவாய் சொல்லிவிட்டார்,

“இல்லைங்க, எதுவும் வரல, அவங்க பேப்பர மிஸ் பண்ணி இருப்பாங்க, ஸ்பெசல் மசாலா கம்பெனிலயே கேட்டுபாருங்க”

இதெல்லாம் நடப்பதற்குள், பல போன் அழைப்புகள், ஒருவர் காலம் காலையில் வீட்டிற்கே வந்து ..

“சார், டியூ கட்டலையே கேஷா தற்றீங்களா?”

 அமைதியாய் நல்ல வார்த்தைகள் தேர்ந்தெடுத்து, நிலைமையை அவருக்கு சொல்லி, இனி இது போல வீட்டிற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

என் பெயரிலும், வங்கி பெயரிலும் தவறில்லை, இனி மசாலாதான் பதில் சொல்லவேண்டும் என்று ஜெமினி மேம்பாலத்தின் அருகில் இருக்கும் அவர்களின் தலைமை அலுவலகத்தில் போய் சம்பத்தப்பட்ட நபரை பார்த்து நடந்ததை சொன்னேன். அவரும் பொட்டியில் தட்டி உங்க லோன் அக்கவுண்டே அப்டேட் ஆகலியே என்று தேடி எடுத்து,

”சரிங்க சார், ஒண்ணும் ப்ராப்ளமில்லை , இதுவரைக்கும் உண்டானத பணமா இப்ப கட்டிடுங்க, மிச்சம் அடுத்த மாசத்திலிருந்து, ஈசிஎஸ் ல போய்டும்” எனக்கு பிசிறு தட்டியது, எப்படி நம்புவது...

”நீங்க இத ஒரு லெட்டரா கொடுத்துடுங்க, அப்பறம், நான் கேஷ் தரமாட்டேன், பணம் கணக்குல அப்படியேதான் இருக்கு ஈ சி எஸ்-ல மொத்தமா கூட எடுத்துக்கங்க, நோ ப்ராப்ளம்”

“இல்ல சார் லெட்டர் கொடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது, மெய்ன் சரக்கு மாஸ்டர் வந்ததும், கால் பண்றேன், லெட்டர் வந்து வாங்கிக்கங்க”

 எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒவ்வொரு மாதத்திற்கும் பெனால்டியோடு நிறைய வரிகள் அடித்து என் பெயர் போட்டு தந்தார்கள்.

திரும்பவும், போன் கால்கள் தொடர்ந்தது, அதே பல்லவி, ஏன் சார் டியூ கட்டல, வீட்டுக்கு வந்து பணமா வாங்கிக்கலாமா..இன்ன பிற..ஒவ்வொருமுறையும் பொறுமையாய் நடந்த விஷயங்களை சொன்னேன்.. ம்ஹும் ஒரு மாற்றமுமில்லை, ஜூன், ஜூலை, பணம் அப்படியே இருந்தது. மீண்டும் ஒருமுறை தலைமை அலுவலகம் சென்று, கொஞ்சம் அழுத்தமாக பேசியவுடன்,

“சார் எதுக்கும் நீங்க ஒரு ஃப்ரெஷ் ஈசிஎஸ்-மாண்டேட் ஃபார்ம் வாங்கி தந்துவிடுங்களேன் ஒங்க பாங்க்லேர்ந்து, நான் பார்த்துக்கரேன்.”

”எனக்கு அது பிரச்சனை இல்லைங்க. ஒரு லெட்டர் குடுத்துடுங்க, இது வரைக்கும் நடந்த தாமதத்திற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்லன்னு, ஏன்னா நீங்க இப்ப இருப்பீங்க, நான் லோன் முடிஞ்சு, என் ஓ சி வாங்க வரும்போது வேற யாராவது இருப்பாங்க, பெனால்டி, அதுக்கு வட்டின்னு ஆரம்பிச்சா பிரச்சனை, அதனாலதான் லெட்டர் கேக்கறேன்”

 திரும்பவும் அவர் ”இல்லைங்க எனக்கு அதிகாரம் இல்லை”

’அப்ப ஃபார்ம் கொடுங்க இன்னைக்கே இத ரெடி பண்ணிட்றேன், ஆனா எப்ப லெட்டர் தறீங்களோ அப்பதான் கொடுப்பேன், அதுவரைக்கும் எனக்கு யாரும் லூசுத்தனமா டியூ கேட்டு போன் பண்ணக்கூடாது”.

சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆகஸ்ட் மாதம் எனக்கு வேறு ஒருவர் போன் செய்தார்,

”தவறு நடந்துவிட்டது, நான் கடிதம் தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார்,

”ஒன்றும் பிரச்சனை இல்லை, ஈசிஎஸ் பார்ம் ரெடியாக் உள்ளது, பணமும் வங்கி கணக்கில் அப்படியே உள்ளது எப்போதுவேண்டுமானாலும் பணம் மொத்தமாய் எடுத்துக்கொள்ளுங்கள், அனால் கடிதம் முக்கியம்”

 பூனாவில் உள்ள அவர்களின் அலுவலகத்திலிருந்தும் எனக்கு அழைப்பு வந்தது, கடிதம் தருவதாயும் கூடவே வாக்குறுதியும். அப்பாடி யாரோ செய்த தவறு, இப்போதாவது முடிகிறதே என்று நான் அவர் கூப்பிட்ட ஒரு நாளிள் சென்றேன். நான் வண்டி எடுத்தபோது கொடுத்த அனைத்து படிவங்களும், காசோலைகளும் தொலைந்து விட்டதாக (எட்டு மாதங்கள் கழித்து-என்ன ஒரு கண்டுபிடிப்பு!) தெரிவிக்கப்பட்டிருந்தது. சரி என்று நான் கடிதம் வாங்கி, புதிய ஈசிஎஸ்-படிவம், ஒரு காசோலையும் தந்துவிட்டு, காத்திருந்தேன். சரியாக செப்டம்பர் 10ம் தேதி பணம் எடுக்கப்பட்டிருந்தது, மொத்தமாக, ஆனால் ஒரு தவணை குறைவாக, சரி இடைப்பட்ட காலத்தில் விட்டிருப்பார்கள், அடுத்த மாதத்தில் எடுத்துவிடுவார்கள் என்று எண்ணி, விட்டுவிட்டேன். செப்டம்பர், 28ம் நாள் வழக்கம் போல பணி நிமித்தம் சில இடங்களுக்கு சென்று விட்டு, ஒரு முக்கிய வாடிக்கையாளரின் வீட்டில் காம்பவுண்டிற்கு உள்ளே, வண்டியை நிறுத்தி, பூட்டிவிட்டு, ஹெல்மெட்டை வண்டி மேல் வைத்துவிட்டு உள்ளே போய் 10 நிமிடத்தில் வெளியில் வந்து பார்த்தால் வண்டியை காணோம்.

அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று, புகார் செய்யும்போது, பணியிலிருந்த காவலர்,

“வண்டி ஃபைனான்ஸா”

“ஆமாம் சார், ஆனால் பணம் எல்லாம் ஒழுங்கா..”

“சார் எதுக்கும் நீங்க அவங்க கிட்ட ஒரு வார்த்த கேட்டுடுங்க, இந்த மாதிரி காரியம் எல்லாம், அவங்க தான் செய்வாங்க” சரி என்று எனக்கு கடிதம் தந்தவரை கூப்பிட்டேன், அவரோ மறுத்தார்,,

“எதுக்கும், ரெக்கவரி டிபார்ட்மெண்ட் நம்பர் தரேன், நீங்களே கேட்டுடுங்க” சரி என்று அழைத்தால், “வண்டி நம்பர் சொல்லுங்க, ஆமா வண்டி ச்சீஸ் பண்ணிருக்கோம், வந்து பணம் கட்டி எடுத்துக்கங்க”

”ஹலோ நான் எல்லா பணமும் கட்டியும் எப்படி எடுப்பீங்க, நான் கம்ப்ளெய்ண்ட் பண்னப்போறேன், உங்க மேல கேஸ் போடுறேன், என்ன நினைச்சிட்டுக்கீங்க உங்க மனசுல”

அவர் நக்கலாக ”நீங்க என்ன வேணா பண்ணிக்குங்க, வந்து, பணம் கட்டின ரசீது, காட்டினா வண்டி கிடைக்கும்” தொடர்பு துண்டித்தேன். பசி, கோவம், ஆத்திரம், கடிதம் கொடுத்து வாக்கு தந்தவனை அழைத்து கேட்டால், மழுப்பினான்,

போலீஸ்காரர், ”நீங்க புகார் கொடுங்க, தாயோளி அவனுங்கள இங்க வரவெச்சு ஒரு வழி பண்ணிடறேன்” அதற்குள் கூட இருந்த, உதவியாளன், அந்த ஏரியாவின் பெரிய மனிதரிடம் அழைத்து சென்றார். அவரோ..

“சார், கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால்லாம் ஒன்னும் ஆவாது, நீங்க மொதல்ல ஸ்பெஷல் மசாலா அபீஸுக்கு போங்க, வண்டிய பார்த்துடுங்க, அவங்க கிட்ட பேசுங்க, சுமூகமா முடிஞ்சிருச்சினா விட்டிருங்க” எனக்கு சரி என்று பட்டது. முதலில் வண்டி அவர்களிடம் இருப்பதை உறுதி செய்ய கிளம்பி போனேன்.

அங்கு சென்று ”சார் என் வண்டி சீஸ் பண்ணிட்டாங்க”

“அங்க போய், மொதல்ல ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வாங்க” வந்தேன்.

“என்ன சார் ஒரு டியூ கட்டல போல, அதான் வண்டி சீஸ் பண்ணிட்டாங்க” அதற்கு முன் வரியில் ஏன் மொத்தமாய் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது, என்ன இதுவரை நடந்தது எதுவும் அக்கரை இல்லை,

”நீங்க பணம் கட்டிட்டு வண்டி எடுத்துக்குங்க” எனக்கு கோவம் வந்தாலும் மொதல்ல நடந்ததுக்கு ஒரு ரெக்கார்ட் வேண்டுமென்று புத்தி சொல்லியது.

சார், நான் இது தெரியாம போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டேன், உங்காளுங்க, என் வண்டிய எடுத்த வீடு வேற ஒரு எம் எல் ஏ வோடது, இப்ப எஃப் ஐ ஆர், கான்ஸல் பண்னனும்னா, வண்டி உங்ககிட்டதான் இருக்குன்னு ஒரு லெட்டர் கேக்கறாங்க அதான்.

“அப்படியா, இந்தாங்க, பொஸஷன் லெட்டெர்” அந்த உன்னதமான ஸ்பெஷல் தோசை கம்பெனியின் கலெக்‌ஷன் அதிகாரி வண்டியை ’தூக்கிவிட்டது’ தாங்கள்தான் என்று, கையெழுத்து போட்டு தந்தார். மெதுவாய் நான் வண்டி வாங்கியதிலிருந்து நடந்த விஷயங்கள், தவறு அவர்கள் மீதுதான் என்று அவர்களின் பூனா அலுவலகமே ஒத்துக்கொண்ட லெட்டர் போன்றவைகளை காண்பித்து மொத்த அலுவலகமும் என்னை பார்க்கும் வ்கையில் சவுண்ட் விட்டதும். கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரி என்னை அழைத்து, அப்போதுதான் விவரங்கள் கேட்டார், சொன்னதும்,

 “ஸோ சாரி சார், உங்கள் வண்டி இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் வீடு வந்து சேரும்”

 என்னால் முடியவில்லை, அலைச்சலும் கோபமும், பசியுமாய் ஒருவழி ஆகி இருந்தேன். சரி இதோடு விட்டது சனி என்று வீடு வருவதற்குள், அப்படியே, என் தந்தையிடம் சொல்லிவிட்டு ”ஸ்பெஷல் மசாலா 135” ஐ, வீட்டு வாசலில் விட்டு விட்டு ’எஸ்’ ஆகி இருந்தார்கள் இரண்டு பேர்,. வண்டியை சோதனை இட்டால், லாக் உடைக்கப்பட்டிருந்தது, ஹெல்மெட் சேதம், ஒரு சொட்டு கூட பெட்ரோல் இல்லை (பாதி டாங்க் நிரப்பி வைத்திருன்தேன்) உடனே மீண்டும் ஸ்பெஷல் மசாலா கம்பெனிக்கு போன்,

“ஓ அப்படீங்களா, நீங்க ஷோரூம்ல ரிப்பேர் பண்ணிடுங்க, பேய்மெண்ட் நாங்க பாத்துக்கறோம்” அடுத்த நான்கு நாட்க்கள் ஆயுத பூஜை லீவு, ஐந்தாம் நாள், கொடுத்து, லாக் செட் கிடைகாமல் வண்டி கையில் வர 10 நாள் ஆகி விட்டது. செலவு 800 சொச்சம்.

”சார் பணம் நீங்களே கட்டி விடுங்கள், பில்லை அபீஸில் கொடுத்துவிடுங்கள்” இது லெட்டெர் கொடுத்த புத்திசாலி. சரி என்று மீண்டும் ஸ்பெஷல் சாதா ஆபீஸ், பில்லை கொடுத்தால் கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரி ”சார் தீபாவளி முடிஞ்சதும், க்ளியர் பண்ணிடுறேன்,” ஒழியட்டும் என்று வந்துவிட்டேன். அனால் மனது ஆறவில்லை, அது எப்படி ஒரு தவறும் செய்யாமல் எனக்கு இந்த தண்டனை, மெதுவாய் கூகுள் ஆண்டவரிடம் விவரங்கள் சேகரித்தால் நிறைய பேர், தோசை சுட்டிருப்பது தெரிந்தது, கூடவே நுகர்வோர் உரிமைகள் பற்றியும் தேடியபோது, அடையாரில் ஒரு குழு நுகர்வோருக்காய் இயங்கி வருவது அறிந்து, அவர்களுக்கு மொத்த கதையையும் மின் அஞ்சல் செய்தேன்.

அதற்குள் நவம்பர், டிசம்பர் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று வங்கி கணக்கு சொல்லியது. மீண்டும் ஒரு தோசை நோக்கி பயணம், முதலிலேயே ஸ்டேட்மெண்ட் வாங்கி விட்டேன். அது அப்படியே தான் இருந்தது வட்டி மற்றும் அதற்கான குட்டியுடன், இப்போது உபரியாக வண்டி சீஸ் பண்னியதற்கு அபராதம் ஒரு 3000/- ரூபாய் கணக்கில் ஏற்றப்பட்டிருந்தது. சுருட்டி கையில் வைத்துக்கொண்டு, அதிகாரமில்லாத பார்ட்டியிடம் சென்று,

“2 மாதங்களாக என் கணக்கிலிருந்து பணம் எடுக்கபடவில்லை, திரும்பவும் வண்டி தூக்க ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டேன், வழக்கம் போல மண்டை சொறிந்து, கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரியிடம் அழைத்து சென்றார்,

“இல்லங்க, பெனால்டி எதுவும் போடமாட்டாங்க, நான் அப்பவே இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துட்டேன்” நான் மெதுவாய் ஸ்டேட்மெண்ட் நீட்டி

”நீங்க சொல்றது பழைய கதை, இப்போது சீஸ் பண்ணிய வகையில் ரூபாய்.3000/- சேர்ந்திருக்கிறது, உங்க ஸிஸ்டம் எல்லாம், வண்டிய தூக்கறதும், பெனால்டி போடறதும், காசு புடுங்கறதுமாகவே இருக்கே, கஸ்டமர் கிட்ட ஒரு வார்த்த கூட என்ன ஏதுன்னு கேக்கமாட்டீங்களா? பிரச்சனை தீக்கறதுக்கான வழியே யாரும் பேசாம, காசு ஒண்ணே குறியா இருக்கீங்களே, இதுதான் உங்க கம்பனி லட்சணமா? ”

“இல்ல சார், நான் என்னன்னு பாக்கறேன், பெனால்டி எதுவும் வராது”

 நான் வெறுத்து போய் எழுந்து வந்துவிட்டேன். அடையார் நுகர்வோர் குழுவிலிருந்து எனக்கு போன் வந்தது, முதலில் அவர்களுக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் அனுப்ப சொன்னார்கள், கொஞ்சம் அவகாசம் கொடுத்து பதில் கேட்க்கலாம் என்று, ஆயிற்று திரும்பவும் “சார் டியூ கட்டலயே” என்ற போன் கால் வந்த போது, மொத்த ஸ்பெஷல் மசாலா தோசை மாஸ்டர் எண்களையும் கொடுத்து அவர்களிடமே கேளுங்கள் என்று வைத்துவிட்டேன். 2 மாதங்களாகியும் பதில் வராததால் நஷ்ட ஈடு கேட்டு ஏன் உங்கள் மீது வழக்கு தொடுக்க கூடாது என்று இப்போது நுகர்வோர் சங்கத்திடமிருந்தே ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். ம்ஹூம். அதிசயமாக இந்த மாதம் ஒரு தவணை மட்டும் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற விஷயங்கள் கிணற்றில் போட்ட கல்தான்.

ஒழுங்காய் பணம் செலுத்திய எனக்கு நேர்ந்த கதி இதுதான், நானும் விடுவதாயில்லை, நுகர்வோர் நீதிமன்றம் எனக்கு என்ன நீதி வழங்கபோகிறது என்று பார்க்கபோகிறேன். இப்படி ஒரு மொள்ளமாரித்தனம் செய்தும் ஒரு கவலையுமின்றி செயல்படும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரிந்துகொள்ள ஆசை. எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணாது போவதுதான் இவர்களின் பலமென்றால், எனக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..

(உங்களின் கருத்து எனக்கு உதவுமென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.          

நிஜமாகவே இவ்வளவு பெரிய பதிவை பொறுமையுடன் படித்ததிற்கு நன்றி.  


குடியரசு தின வாழ்த்துக்கள்.

61 comments:

அண்ணாமலையான் said...

உங்களுக்கு எதாவது நல்லது நடந்துட்டா ஆச்சரியம்தான். பாப்போம்.

பாலா said...

இந்தியாவுக்கு வர்ற கொஞ்ச நஞ்ச ஆசையையும்... நிறுத்திடுவீங்க போலயிருக்கே! :)

(நேத்து சைலண்ட் மோடில் இருந்திருக்கு. ஸாரி! :()

Unknown said...

// ஹாலிவுட் பாலா said...
இந்தியாவுக்கு வர்ற கொஞ்ச நஞ்ச ஆசையையும்... நிறுத்திடுவீங்க போலயிருக்கே! :)//

ரிப்பீட்டேய்..

S.A. நவாஸுதீன் said...

///இந்தியாவுக்கு வர்ற கொஞ்ச நஞ்ச ஆசையையும்... நிறுத்திடுவீங்க போலயிருக்கே! :)///

அதானே சங்கர். (இதையே நானும் கேட்டுக்கிறேன் மக்கா)

என்ன கூத்தடிக்கிறானுங்க பாவிங்க. இவ்ளோ உஷாரா நீங்க இருக்கும்போதே இப்படின்னா, மத்தவங்க நிலமை? இதுக்கு தான் கைல காசு வாயில தோசை பெட்டர்னு தோனுது. நோ இன்ஸ்டால்மெண்ட்.

எறும்பு said...

ஆக்சுவல்லி பிரச்சினை உங்களை தேடி வருதா இல்ல நீங்க பிரச்சினையை தேடி போய் வாங்குறீங்களா... இன்சூரன்ஸ் எடுத்தாலும் பிரச்சினை, மசால் தோசை வாங்கினாலும் பிரச்சினை.. நீங்க ஏதாவது மலையாள நம்பூதிரிய பார்த்து உங்களுக்கு ஏதாவது கழிப்பு எடுக்கணுமானு பிரசனம் பாருங்க...

:))

பிரபாகர் said...

நண்பா, பொறுமையாய் படிக்கவிலை, பொங்கி வரும் கோபத்தை அடக்கித்தான் படித்து முடித்தேன். உங்களுக்கு எப்படி உதவுவது என தெரியவில்லை. கண்டிப்பாய் படிக்கும் நமது இடுகையாளர் எவரேனும் உதவுவார், கவலை வேண்டாம். எதேனும் ஒரு பத்திரிக்கையை (ஜு.வி. போல்) அணுகலாமே விவரங்களுடன்?

பிரபாகர்.

Ashok D said...

நிச்சயமாக இது 7 1/2 நடக்கறதனால வர்ற பிரச்சனையே... ஷங்கர்

பரிகாரம்: வாரத்திற்கு ஒரு புல் விஸ்கி வாங்கி கவிஞர் D.R.Ashok ஆபிஸில் கொடுத்துவிடவும்.. அப்புறம் அவரது கவிதைகளுக்கு(!) தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் ஓட்டு போட்டுவிடவும்.. தவறாமல் நாலஞ்சு கமண்டு போடவும்.

அப்புறம் பாருங்க பிரச்சனைகள் எல்லாம் சால்வ் ஆகி வாழ்வின் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக மாறிவிடும். சீரியஸா தாங்க.

பி.கு.:பின்னூட்டதின் நீளத்திற்கும் உங்கள் பதிவின் நீளத்திற்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.

Paleo God said...

@அண்ணாமலையான்

நன்றி மல சார்.. நான் பார்த்தவரை நிறைய பேர் எதற்கு என்றே தெரியாமல் பல பெனால்டிகள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

@ஹாலி

தல எப்படியும் இங்க வந்துதான் ஆகனும் அதற்கு தயார் படுத்தற முயற்சி தான் இது. ::)

@முகிலன்
ஹாலி- ரிப்பீட்டேய்...:))

@நவாஸ்..
கொடும நவாஸ்..னா நான் மொத்த காசும் கொடுத்திருப்பேன், சரி மொத்தமா மொடக்க வேண்டாமே, (பிஸினஸ் புத்தி) அப்படின்னு பார்த்ததுல வந்த வென..:(

@எறும்பு..
அப்ப நீங்க நம்பூதிரி இல்லயா?? :))

@பிரபாகர்:

நன்றி நண்பா.. நுகர்வோர் மையம் உதவி பண்ணுதான்னு பார்த்துட்டு அவங்கள ஒரு வழி பண்றதா இருக்கேன்.

ருத்ர வீணை® said...

"கண்டுபிடிப்பு 135" .. ரூம் போட்டு யோசிப்பாங்களோ ??

Vidhoosh said...

///ஏதாவது மலையாள நம்பூதிரிய பார்த்து உங்களுக்கு ஏதாவது கழிப்பு எடுக்கணுமானு பிரசனம் பாருங்க.////


///எதேனும் ஒரு பத்திரிக்கையை///
lucky look-kai kelungalen

Paleo God said...

@D.R.Ashok..

தல நல்லகாலம் ஞாபகப்படுத்தினீங்க

குடியரசுதின வாழ்த்துக்கள்

ச்சே..என்ன ஒரு நாட்டுபற்றுங்க..:))

Paleo God said...

@ருத்ரவீணை..
தமிழ் ல சொல்றதுக்கு ரூம் போடத்தான் வேண்டீருக்கும் போல..”))

@விதூஷ்..
சட்டம் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் மேடம். :) இவனுங்க கொழைய கொழைய பேசி, மக்கள சிக்கல்ல மாட்டிவிடறதும், கண்டுக்காம போகறதும்தான் என் ஆத்திரம், என்ன சார் உங்க பிரச்சனைன்னு, ஒருத்தர் கேட்டிருந்தா சுலமபா முடிஞ்சிருக்க வேண்டியது இது..

கும்மாச்சி said...

தலைவா இவனுக எல்லோரையும் விடாதீங்க, சொத்தே போனாலும் பரவாயில்லை.

அப்போதான் உங்க கேசை வைத்து மற்றவர்கள் பொழைக்கலாம்.

Paleo God said...

@கும்மாச்சி..

வணக்கம்
முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.

உதவுவதற்கு எல்லை இல்லை

::))))))

ஜெட்லி... said...

// வாரத்திற்கு ஒரு புல் விஸ்கி வாங்கி கவிஞர் D.R.Ashok ஆபிஸில் கொடுத்துவிடவும்.. அப்புறம் அவரது கவிதைகளுக்கு(!) தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் ஓட்டு போட்டுவிடவும்.. தவறாமல் நாலஞ்சு கமண்டு போடவும்.
//


கவிஞர் அசோக் அவர்களே,,,,
உங்க நேர்மை எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு..
(சைடில் ஒரு கட்டிங் அல்லது குவாட்டரை
தள்ளவும்...)

ஜெட்லி... said...

சீரியஸ்ஆ சொல்றேன் அண்ணே
இந்த மாதிரி பெரிய கம்பெனிகாரங்க
சத்தியமா திருந்த மாட்டாங்க......

Paleo God said...

@ஜெட்லி

சரிதான் ஜெட்லி ஆனால் நாம் இப்படி நினைப்பதுதான் அவர்களுக்கு சாதகம்:(

என்னதான் நடக்கும் என்று பார்ப்போமே.. அதென்னவோ நான் கற்றுக்கொள்வதெல்லாமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது..::))

sathishsangkavi.blogspot.com said...

இவனுக திருந்தவே மாட்டானுக என்ன செய்வது கடன் வாங்கினால் இப்படித்தான்..

Ramesh said...

அப்பாடா இவ்வளவு நடந்திருக்கா...

ஆமாங்க பதிவென்று எழுதுவோம்ண்ணு வந்தேன் எல்லாம் மறந்துபோயிடுச்சு ம்ம்ம்... ஏதோ வாசிச்சி முடிச்சுட்டன்..

இனியாவது நடப்பது நல்லவையாக இருக்கட்டும் உங்களுக்கு.. மொள்ளமாரித்தனம் கொஞ்சம் கூடத்தான் இருக்குது போல...

Paleo God said...

@சங்கவி..
அட நான் கிரெடிட் கார்டு கூட உபயோகப்படுத்தறதில்லைங்க.. சரி ஒரு வருசம் தானேன்னு போட்டேன். எனக்கு ஆத்திரமே இவனுங்களோட சேவைதான்..தப்பெல்லாம் அவங்க பண்னிட்டு என்ன அலைய வெச்சிட்டாங்க..

@றமேஸ்

வாங்க றமேஸ் பார்த்து நாளாச்சு:))
எல்லோரும் நலம்தானே.

VISA said...

கோபம் கொப்பளிக்க தான் படித்து முடித்தேன். இது போன்ற அராஜகங்கள் நிறைய நடக்கிறது. மேலும் உங்கள் புத்திசாலித்தனமான நகர்த்தல்கள் அருமை. இதை பின் தொடருகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். விடக்கூடாது. மேலும் இதை தொடரும் பட்சத்தில் உங்களுக்கு பண செலவோ மன உளைச்சலோட் நேர்ந்துவிடக்கூடாதென்று மனம் பதறுகிறது.

திவ்யாஹரி said...

அண்ணா, நீங்க இவ்வளவு உஷாரா இருந்தும், இவ்வளவு பிரச்சனையை பண்ணிருக்காங்களே.. அவங்கள சும்மா விடாதீங்க.. எதிர்த்து நில்லுங்க.. நாங்கலாம் ஆதாரம் இல்லாம யாரையும் எதும் பண்ண முடியல.. எல்லா ஆதாரம் இருந்தும் பாவம்ன்னு விட்டுடாதீங்க.. கடைசி வரை போராடுங்கள்.. நாங்க துணையாய் இருப்போம்..

Paleo God said...

@VISA
நன்றி நண்பா..
ஒரு சாதாரண குடிமகனுக்கு எந்த தவறும் செய்யாத பட்சத்தில் அவனுக்கு கிடைக்கும் சட்டத்தின் பாதுகாப்பு என்ன? என்பதுதான் என் கேள்வி பல மாதங்கள் இது நடந்தாலும், வட்டம் சுறுங்குகிறது அதனால் பதிவிட்டேன். நானே வாதாடலாம் என்பதால் செலவுகள் ஏதும் இருக்காது..பார்க்கலாம். அப்டேட் நிச்சயம் வரும். இடதோ, வலதோ..:)

Paleo God said...

@திவ்யாஹரி..

நிச்சயமா..பல பேர் சிக்கி இருக்காங்க, புரியாததுனால சுலபமா ஏமாந்துடறாங்க. கொஞ்சமாவது இவங்களோட முகம் வெளில தெரியட்டுமே.. என்னோட வேண்டுகோள் யார் இப்படி பாதிக்கப்பட்டாலும், கண்டிப்பா பதிவிடுங்க..மற்றவர்களுக்காவது பயன்படும்.

தமிழ் உதயம் said...

லா பாயிண்ட் பேசும் இவர்கள், ஒரு போதும் நாம் சொல்வதை காது கொடுத்தே கேட்பதே இல்லை. அஙகே பணியில் இருப்பவர் ஒரு தவறு செய்தாலும் பாதிக்கப் படுவது நாம் தான்

மீன்துள்ளியான் said...

கண்டிப்பா நீதி கிடைக்கும் . நல்லவங்களுக்கு என்னைக்குமே ஏமாற்றம் கிடையாது ..

சங்கர் said...

சாமி சரணம், என்ன பண்ணுறது, இத படிக்கும் போது வந்த கோபத்தில தோணின வார்த்தைகளை இப்படிதான் அடக்கிகிட்டேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சங்கர் , இது ரொம்ப வருத்தமான சம்பவம் .

என்ன அநியாயமெல்லாம் பண்ணுவானுங்க இந்த பயலுவ .

அவனுவளுக்கு எது சாதகமா இருக்கோ அப்படி பண்ணீருவானுங்க .

ரொம்ப அலைய விட்டுனானுங்களே ...

இந்த பைனான்ஸ்ன்னுனாலே ரொம்ப பிரச்சனை தான் .

கவலையை விடுங்க சங்கர் .

நாளை நமதே ...

சீமான்கனி said...

நம்ம கனவு ஆசையெல்லாம் அம்பேல் ஆயடுபோல இருக்கே....சாமீதான் காக்கணும்....

Radhakrishnan said...

அடக் கடவுளே!

இந்த விசயத்தை அப்படியே விட்டுவிடாதீர்கள்.

ஏதேனும் நடவடிக்கை நிச்சயம் எடுங்கள், ஆனால் உங்கள் பணம் விரயமாகி விடவேண்டாம். எத்தனை மன உளைச்சல்!

நீதி கிடைக்க வேண்டுகிறேன்.

Chitra said...

ஒழுங்காய் பணம் செலுத்திய எனக்கு நேர்ந்த கதி இதுதான், நானும் விடுவதாயில்லை, நுகர்வோர் நீதிமன்றம் எனக்கு என்ன நீதி வழங்கபோகிறது என்று பார்க்கபோகிறேன். இப்படி ஒரு மொள்ளமாரித்தனம் செய்தும் ஒரு கவலையுமின்றி செயல்படும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரிந்துகொள்ள ஆசை. எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணாது போவதுதான் இவர்களின் பலமென்றால், எனக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்................. lets hope for the best.
Keep us posted about the outcome.

நட்புடன் ஜமால் said...

குடியரசு தினத்துல இப்படி ஒரு இடுக்கை படிக்க வேண்டியதா போச்சி

பெரும் கொடுமை - உங்க காசு போனதை விட - நேரம், மற்றும்
மன உளைச்சல் - இந்த நஷ்ட்டத்துக்கு ஈடு எதுனா உண்டா.

வழி ஒன்றும் தெரியலை. கவலையோடு கவணித்து கொண்டு ...

புலவன் புலிகேசி said...

சே இப்புடி ஆயிருச்சே..பாக்கலாம் எதாவது நல்லது நடக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

இவனுக எல்லோரையும் விடாதீங்க

Romeoboy said...

தலைவரே இவங்க கொட்டம் எப்ப அடங்க போகுதோ..,. விடாதிங்க உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம்.

Cable சங்கர் said...

சங்கர்.. முதலில் உங்களை பாராட்டுகிறேன். நிச்சய்ம் விடாமல் போராடியதற்கு.. இந்தியாவில் நம் உரிமைகளை நாம் தான் போராடி பெற வேண்டும். விடாதீர்கள். நிச்சயம் உஙக்ள் பக்கம்தான் வெற்றி வரும் நான் இது போல நிறைய இடங்களில் பிரச்சனை பண்ணி வெற்றி பெற்றிருக்கிறேன்.

Ganesan said...

பலாபட்டறை,

போய்யா, போய் புள்ளைங்கள படிக்க வைக்க வழிய பாரு.
இந்தியாவுல இருந்துட்டு இப்படி ஒரு பதிவு.

ஒரு discover 135 வண்டிக்கு இப்படி, இம்மாம் பெரிய பதிவு.

அவனவன் , ICICI பேங்கல 2 கிரவுண்ட் வீட்டுக்கு பேங் லோன் 60 லட்சம் full settlement கட்டிட்டு,பத்திரத்த திருப்பி கேட்டா, 1 வாரத்துல வரும், மும்பையில இருக்கு, வந்துரும் சொல்லிட்டு, 15 நாள் கழித்து கேட்டா, டாக்குமெண்ட் காணோம் கூலா பதில் வருது.டேய், கேப் மாறிங்களா, வேல பாக்குற உங்களுக்கு அது வெறும் டாக்குமெண்ட், அது எனக்கு வாழ்க்கைன்னு கேப்டன் மாதிரி, டேபிள ஓங்கி தட்டி , காவல் துறையிடம் புகார் அளித்து, மிரட்டி, உருட்டி, 1 1/2 மாதம் கழித்து பத்திரத்த வாங்குன கதைய எழுதுனா புத்தகம் தான் போடனும்.

போப்பா, போய் , புள்ளைங்கள ஒழுங்கா படிக்க வைப்பா பலாபட்டறை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காப்பீடு,மருத்துவமனை,வண்டி எங்க போனாலும் பிரச்சினை தான்.நம்ம நாட்டு லட்சணமா? இல்ல நம்ம பிரஜைகளின் குறைபாடா? நல்லா கிழிச்சிருக்கீங்க! சம்பந்தப்பட்டவங்களுக்கு புத்தி வருதோ இல்லையோ? நம்ம மக்களுக்கு விழிப்புணர்வு வந்தா போதும். அப்படி ஆளுங்க சரியாயிருவாங்க.

எறும்பு said...

எல்லாம் கமெண்டும் படிச்சேன். எல்லா கமெண்டும் சீரியசா இருக்க நானும் அசோக்கும்தான் சிரியசா கமெண்ட் போடருகம். உங்களை ஊக்குவிக்க வில்லை என்றால் எங்களை ஊரை விட்டு தள்ளி வைக்க கூடிய சாத்தியகூறுகள் இருப்பதால்....
பலாபட்டறை அவங்களை விட்ராதிங்க.... என்ன ஆனாலும் சரி, கடைசி வரை போராடுங்க. எனக்கு கோவம் கோவமா வருது. என் புஜங்கள் துடிக்குது. அறசீற்றம் அதிகமாகுது... நீங்க விட்ராதிங்க... போராடுங்க போராடுங்க...
புரட்சி செய்யுங்க...
(நான் ஒரு தடவை கிங் பிசெர் air linesla டிக்கெட் கான்செல் பண்ணி எட்டு மாசமா refund கிடைக்காம, எல்லா மாசமும் கிரெடிட் கார்டு மினிமம் pay பண்ணி, கடைசில வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, அடையார்ல இருக்குற ஒரு கன்சூமர் நிறுவனத்தை அணுகி, அவங்க ஒரு நோட்டீஸ் அனுப்பி, பணத்த வாங்கறதுக்குள்ள இப்படிதான் முற்றுபுள்ளி இல்லாத இந்த நீண்ட பின்னூட்டம் படிக்கிற மாதிரி நாக்கு தள்ளிபோச்சு. refund அமௌன்ட் 22000 .எட்டு மாசம் கிரெடிட் கார்டு வட்டி வேற.)
Be proud to be an indian. Incredible india. Happy republic day.
:)

திவ்யாஹரி said...

கண்டிப்பா பதிவிடுறோம் அண்ணா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆஹா.. பாலா..
ஊரிலே வண்டி வாங்குவது அவ்வளவு
பிரச்சனையா?..பேசாம தெருவில நிற்கின்ற வண்டிய உபயோகித்துவிட்டு , திரும்ப
கொண்டுவந்து அதே இடத்தில் நிறுத்துவதுதான் சிறந்தது என நினைக்கிறேன்..

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ரொம்ப ஓவரா போறாங்க,,,அவனுங்கள சும்மா விட்டுராதிங்க அண்ணே

விஜய் said...

மிகக்கொடுமையாக உள்ளது நண்பரே, சீக்கிரம் நீதி கிடைக்க வாழ்த்துகிறேன்.

விஜய்

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

to kaveriganesh // அவனவன் , ICICI பேங்கல 2 கிரவுண்ட் வீட்டுக்கு பேங் லோன் 60 லட்சம் full settlement கட்டிட்டு,பத்திரத்த திருப்பி கேட்டா, 1 வாரத்துல வரும், மும்பையில இருக்கு, வந்துரும் சொல்லிட்டு, 15 நாள் கழித்து கேட்டா, டாக்குமெண்ட் காணோம் கூலா பதில் வருது //

கேக்கவே டர் ஆகுது அண்ணே

Paleo God said...

@தமிழ் உதயம்..
அதை உணர்த்தவே இந்த முயற்சி, நன்றி நண்பரே..:)

@மீன்ஸ்
நன்றி மீன்ஸ்..:)

@சங்கர்
சாமி சரணம்..:))

@ஸ்டார்ஜன்..
என்றுமே நமதுதான்..நன்றி..:))



http://kaveriganesh.blogspot.com/2009/11/blog-post_27.html

Paleo God said...

@சீமான்கனி..
உஷாரா இல்லைன்னா அம்பேல்தான், அதை பரப்பவே இந்த பதிவு..:))

@வெ.இரா.. மிக்க நன்றி,,:))
நீதி? - எது கிடைக்கிறதோ கண்டிப்பாய் பதிவு வரும்..:))

@சித்ராஜி.. கண்டிப்பாய்.. நன்றி:)

@ஜமால்.. மிக்க நன்றி..:))

Paleo God said...

@புலிகேசி.. மிக்க நன்றி..:)) பார்க்கலாம்..:)

@ரோமி.. மிக்க நன்றி.

@கேபிள் ஜி.. தெரிந்தே ஏமாறுவது குறித்து எந்த கவலையும் எனக்கில்லை, அது போனால் போகட்டும் என்று விடுவது, அனால் இது அலட்சியம், இப்படியே விட்டால் எல்லோருக்கும் ஆப்பு நிச்சயம். கேள்வியாவது கேட்டால்தான் கொஞ்சமாவது பயமிருக்கும். மிக்க நன்றி தல.

Paleo God said...

@KaveriGanesh..
http://kaveriganesh.blogspot.com/2009/11/blog-post_27.html
இந்த பதிவு போட்டது நீங்கள்தானே?? நல்லது. உங்கள் கமென்ட்டுக்கான பதில்

//////////Reserved ////////////

-------------------
நன்றி..:))

ரோஸ்விக் said...

நமது வங்கிகளிலும், இது போன்ற விற்பனை மையங்களிலும் அவர்கள் அலட்சியமாக செய்யும் இது போன்ற தவறுகள் நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும்.

உங்களிடம் போதுமான அளவு சாட்சிகள் உள்ளதால் பயப்படத் தேவையில்லை. நுகர்வோர்மன்றம் தம் பணியை சரியாகச் செய்யும் என்று நம்புகிறேன்.

அண்ணன் பிரபாகர் சொன்னது போல சில பத்திரிக்கைகளை நாடலாம். நம் பதிவுலகமும் சற்றும் சளைத்தது அல்ல. நம்மவர்களுடனும் இதுபோன்ற உரிமை மீறல்களுக்கு கை கோர்த்துக் கொள்ளலாம்.

Paleo God said...

@க.நா.சாந்தி லெட்சுமணன்..
மிக்க நன்றி சகோதரி.

சர்வ சாதாரணமாய் இப்படி நடக்கிறது என்பதை சொல்லவே இந்த பதிவு, புரிதலுக்கு மிக்க நன்றி. :))

@எறும்பு..
நாக்கு தள்ளினாலும், கிடைத்ததே..!:)
குடியரசு தின வாழ்த்துக்கள்.
இந்தியன் என்பதில் எனக்கும் பெருமை.:)

@திவ்யாஹரி..
மிக்க நன்றி சகோதரி..:))

@பட்டாபட்டி..
இங்க எது வாங்கினாலும் அப்படித்தான்..:)

@BONIFACE..
வருகைக்கு, கருத்துக்கு மிக்க நன்றி.:)

@விஜய்.. மிக்க நன்றி நண்பா..:))

Paleo God said...

@ரோஸ்விக்..
மிக்க நன்றி ரோஸ்விக். எனக்கு நடந்தது இது நீங்களும் ஜாக்கிரதை என்பதை சொல்லவே இது. சட்டம் என்ன உதவி செய்கிறது என்று பார்ப்போம்..:))

ஸாதிகா said...

பதிவைப்பபார்த்து விட்டு எங்களுக்கே வெறுத்து போய் விட்டது சார்.நேரடியாக பைக் பெயரையும் ,கம்பெனி பெயரையும் பதிந்து இருக வேண்டும்.சரி இனிமேலாவது நல்லது நடக்க வாழ்த்துக்கள்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சார்,
இந்த மாதிரி மொள்ளமாரிகளை சும்மா விட்டுவிடாதீர்கள்.
குறைந்தபட்சம் இதுபோல் அடுத்தவர்களுக்கு செய்ய தயங்கவாவது செய்வார்களே !
அன்புடன்,
பாஸ்கர் .

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சார்,
இந்த மாதிரி மொள்ளமாரிகளை சும்மா விட்டுவிடாதீர்கள்.
குறைந்தபட்சம் இதுபோல் அடுத்தவர்களுக்கு செய்ய தயங்கவாவது செய்வார்களே !
அன்புடன்,
பாஸ்கர் .

சாமக்கோடங்கி said...

அலட்சியம் தான் நமது நாட்டின் இன்றைய சாபக் கேடு.. அடுத்த பதிவில் இதைத் தனியாக அலசி எழுதவேண்டும்...

நன்றி...

பின்னோக்கி said...

நீங்க வண்டிய எடுத்து 2 மாசத்துல பிரச்சினை வந்ததுன்னா, அவங்க கம்பியூட்டர்ல சரியா அப்டேட் செய்யலை. நீங்க எல்லாத்தையும் கடாசிட்டு, புதுசா செக் (இசிஎஸ் மட்டும் எதுக்கும், எப்பவும், எங்கயும், யாருக்காவும் தயவு செய்து தராதீர்கள்) குடுங்க. செக்னா, பிராப்ளம் வரும் போது கேன்சல் பண்ணிட்டு (நிறைய தடவை காணாம போட்டுடுவாங்க) புதுசா குடுத்திடலாம். இசிஎஸ் சரியா பண்ற அளவுக்கு நம்ம பேங்க் கம்பியூட்டர்ஸ் ஒண்ணும் உருப்படியா இல்லை. அதுனால இ.சி.எஸ் குடுக்காதீங்க.

நான் ஏர்டெல் கனெக்‌ஷன் 7 வருஷமா வெச்சுருக்கேன். ஒரு தடவை பில் கட்டியும் (பில் வந்த ஒரு வாரத்துல கட்டிட்டேன்), எனக்கு ரிகவரி ஏஜண்ட் கிட்டயிருந்து போன் வந்துச்சு. வெப்சைட் செக் பண்ணுனா, பில் கட்டிட்டேன்னு இருந்துச்சு. அத சொன்ன உடனே, அப்படியான்னுட்டு விட்டுட்டானுங்க.

பின்னோக்கி said...

பலா இந்த விஷயத்துல நீங்க ஜெயிச்சாலும் அவனுங்க மாறப் போறது இல்லை. அவனுங்களுக்கு இந்த மாதிரி கோர்ட் கேஸ் பார்க்குறத்துக்குன்னே 100 பேர் இருக்குறாங்க.

rainmaker படம் ஒரு தடவை பார்த்துடுங்க.

காவேரிகணேஷ் வேற வயித்துல புளிய கரைக்குறாரு. ஏங்க வீட்டு பத்திரத்தை, பத்திரமா வைக்க மாட்டாங்களா ?. பயந்து வருதே. நான் கனரா பேங்க். எதோ iciciன்றதால அவருக்கு பத்திரம் வந்துடுச்சு. கனரா பேங்க் நினைச்சா .... ஐய்யயோ.. இன்னைக்கு தூக்கம் வந்தாப்புல தான்.

வினோத் கெளதம் said...

நானா இருந்துருந்தா "டேய்..உங்க மசால் தோசையை நீங்களே வச்சிக்கிங்கடா...ஆணியே புடுங்க வேணாமுன்னு" சொல்லிருப்பேன்..;)

CM ரகு said...

தலைவா இவனுக எல்லோரையும் விடாதீங்க, சொத்தே போனாலும் பரவாயில்லை.

அப்போதான் உங்க கேசை வைத்து மற்றவர்கள் பொழைக்கலாம்.

என் நடை பாதையில்(ராம்) said...

நல்லவர்களைக் கண்டு தான் பயப்பட வேண்டும். அவனுங்கள அப்படியே விட்ராதீங்க.....

(ஒரு 10 நாள் பக்கம் blog வரவில்லை. அதான் இப்போது பின்னூட்டம் இடுகிறேன்)

என் நடை பாதையில்(ராம்) said...

இது உங்கள் வண்டி தொடர்பான இடுக்கைக்காக எழுதிய பின்னூட்டம்