பலா பட்டறை: முறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....

முறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....


முறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....











அமிலங்கள் ஊற்றி வளர்க்கப்பட்ட
காதல் செடி விருட்ஷமாய்
விஷப்பூக்களை சொரிய துவங்கியிருந்த நேரம்..

மலர்களின் மணங்களில் மனமிழந்து..
காதல் கோடாலிகளுடன்
வரிசையாய் வந்த கிளிகள் ஐந்து
ஒன்றாய் அல்ல ஒவ்வொன்றாய்..

அமிலம் வளர்த்த மரமல்லவா
வாடை வீசியதும் ஒவ்வொன்றாய்
பறந்தது, இது ஒன்றும் புதிதல்ல என
கிளைகளில் வடுக்கள்
கொண்ட விருட்ஷம் வெறும்
வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது..

விட்டுப்போன நான்கிற்கு தூதுபோகவா
என்று அமிலம் மீறி
ஒற்றையாய் வந்து கேட்ட ஒரு கிளியின்
அன்பு சொறிந்த அந்த நொடியில்
அமிலங்கள் அமுதமாய் மாறி
விருட்ஷத்தின்
இருப்பு புரிந்து என் கூட்டில்
துணையாக எப்போதும் இரு என்னோடே
என்று வெயில் தின்று
நிழல் தந்து தானே தனக்கொரு போதிமரமாய்
இரு விழுதுகளுடன் வேர்பிடிக்க
வடுக்களோடு நிற்கிறது அமைதியாக...

______________________________________________________________________________________________
டிஸ்கி (இது போன பதிவுக்கு :) )

நானெடுத்த புகைப்படங்களுக்கு இவ்வளவு வரவேற்பா?? ::)) மிக்க நன்றி நண்பர்களே ::))

காமெரா :  Sony DSC H9  Digital Camera. சத்தியமா நாந்தாங்க எடுத்தேன் அட டிஜிட்டல் காமெரால யார் வேணாலும் இத விட நல்லா எடுக்கலாம் என்ன கொஞ்சம் அடிப்படை ஆங்கிள் தெரிஞ்சி இருக்க வேண்டும் அவ்வளவுதான் ::)) சின்ன வயசுல இருந்து எனக்கு காமெரா பைத்தியம். தஞ்சை பெரிய கோயில் உள்ளே எப்போது போனாலும் அந்த பிரம்மாண்டம் தொண்டை அடைக்கும். ஆயிரம் வருட சரித்திரம் கண் முன்னே வரும் எனக்கே எனக்கு என்று படமெடுத்து வைத்துக்கொள்ளும் ஆசை சில நாட்களுக்கு முன்பு கிடைத்தது. காலை நேரம் 8 மணி சுமாருக்கு ஒரு சிறப்பான வெயில் வெளிச்சத்தில் நீல வான அழகில் எனக்கு படமெடுக்க கிடைத்தது. பொங்கல் வாழ்த்தாக நான் போட்டிருந்த படமும் அப்போது எடுத்ததுதான். நேரக்குறைவு காரணமாக என்னால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் கைகளால் பிடித்துக்கொண்டு எடுத்த படங்கள் அதனால் துல்லியம் பிசகி இருக்கலாம்.

அந்த கிளியும், தேன் சிட்டும், எங்கள் வீட்டின் எதிரில் உள்ள கொய்யா, தென்னை மரங்களில் எடுத்தது பல முறை நான் முயன்று, சப்த்தம் கேட்டதும் பறந்துபோய் கடைசியாய்  எனக்கு கிடைத்த படங்கள் அவை. வீட்டினருகில் வந்து உட்காரும் ஒரு சிறிய பறவையை எடுக்க ததிங்கினத்தோம் போடும்போதுதான் அனிமல் பிளானெட், நேஷனல் ஜியாகரபிக்கில் டாகுமெண்டரி எடுப்பவர்களின் சிரமமும், காதலும்  புரிந்தது. புகைப்பட விரும்பிகளுக்கு டிஜிட்டல் காமரா ஒரு வரம் உடனே ரிசல்ட் தெரிந்துவிடும். நான் இப்போதும் அதிசயிப்பது கருப்பு வெள்ளை துல்லியங்களைத்தான்.

அந்த பூக்கள் மற்றும் குரோட்டன் இலைகள் க்ளோசப் பெங்களூருவில் எடுத்தது, பூக்கோலமும் அங்கேதான். கோபுர சிலைகள் கும்பகோணத்தில் எடுத்தது. மிக அருகில் படமெடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும், இதுவரை அதிகமாக மெனக்கெடவில்லை, டிஜிட்டல் எடிட்டிங் எல்லாம் சுத்தமா தெரியாதுங்க :) ஒரு டிஜிட்டல் SLR வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது பார்க்கலாம்.::) மேலும் நான் எடுத்த படங்கள் அவ்வப்போது போடுகிறேன். ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றி.          

(இதுக்கு பேரு டிஸ்கியா?  
சாரிங்க நன்றி நவிலல் ...:)
நிஜ டிஸ்கி 1: மேலே உள்ள படம் நான் எடுக்கலைங்க, அப்புறம் அந்த ( ஹீரோ ) நான் அவரில்லைங்க (ஹும் !)  
நிஜ டிஸ்கி 2:. முறிந்த காதல் நிறைவு (இதுக்கு இவ்வளவு கைதட்டா..:))

13 comments:

vasu balaji said...

//என்று வெயில் தின்று
நிழல் தந்து தானே தனக்கொரு போதிமரமாய்
இரு விழுதுகளுடன் வேர்பிடிக்க
வடுக்களோடு நிற்கிறது அமைதியாக...//

நல்ல வரிகள் முடிக்க.

Paleo God said...

மிக்க நன்றி சார்..:)) வருகைக்கும் வாழ்த்துக்கும்...::)

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

'பரிவை' சே.குமார் said...

அருமை... உங்கள் போட்டோக்களை இன்றுதான் பார்த்தேன். சூப்பர்ப்.......

கவிதையும் மிக... மிக... அருமை.

Chitra said...

அமிலங்கள் ஊற்றி வளர்க்கப்பட்ட
காதல் செடி விருட்ஷமாய்
விஷப்பூக்களை சொரிய துவங்கியிருந்த நேரம்..
...............very nice!

பாலா said...

நேத்து ஓட்டு போட்டுட்டு தூங்க போய்ட்டேன். அதுக்குள்ள இன்னொரு கவிதை.. இன்னொரு டிஸ்கி-ன்னு.... என்னா நடக்குது இங்கே அமைச்சரே??

இன்னும்... என்னென்ன திறைமைகளை ஒளிச்சி வச்சிருக்காரோ.. இந்த ஜெனரேட்டர்-மார்க்கெட்டிங்-போட்டோக்ராஃபி கவிஞர்???!!

என் ஏரியா பக்கம் மட்டும் வந்துடக்கூடாது ஜாக்கிரதை! :) :)

ப்ரியமுடன் வசந்த் said...

அமிலம் வளர்த்த மரமல்லவா
வாடை வீசியதும் ஒவ்வொன்றாய்
பறந்தது, இது ஒன்றும் புதிதல்ல என
கிளைகளில் வடுக்கள்
கொண்ட விருட்ஷம் வெறும்
வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது..//

அசால்ட்டு மாமேய்.....!

எறும்பு said...

//தஞ்சை பெரிய கோயில் உள்ளே எப்போது போனாலும் அந்த பிரம்மாண்டம் தொண்டை அடைக்கும்//


தண்ணிய குடி தண்ணிய குடி...

;))

அன்புடன் மலிக்கா said...

கவிதை அருமை வரிகளில் விஸ்வரூபம் சூப்பர்.

நீங்க அவரில்லையா?

S.A. நவாஸுதீன் said...

////என்று அமிலம் மீறி
ஒற்றையாய் வந்து கேட்ட ஒரு கிளியின்
அன்பு சொறிந்த அந்த நொடியில்
அமிலங்கள் அமுதமாய் மாறி////

////நிழல் தந்து தானே தனக்கொரு போதிமரமாய்
இரு விழுதுகளுடன் வேர்பிடிக்க
வடுக்களோடு நிற்கிறது அமைதியாக..////

பிடித்த வரிகள் சங்கர். ரொம்ப நல்லா இருக்கு.

சீமான்கனி said...

//இது ஒன்றும் புதிதல்ல என

கிளைகளில் வடுக்கள்

கொண்ட விருட்ஷம் வெறும்

வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது..//

அருமை...நண்பா...
விருட்ஷம் ஓங்கி வளர வாழ்த்துகள்.....

கமலேஷ் said...

நண்பா...நீங்க உங்க போட்டோ கலக்சனுக்கு ஒரு தனி ப்ளாக் ஆரம்பிச்சா நிச்சயம் நல்ல வரவேற்ப்பு இருக்கும்....முயற்சி பண்ணுங்களேன்..கவிதை ரொம்ப நல்லா இருக்கு..அப்புறம் புக்ஸ் ஸ்டால்ல வொர்க் பன்றிகளா சொல்லவே இல்ல....

///விஷப்பூக்களை சொரிய துவங்கியிருந்த ///

///அன்பு சொறிந்த அந்த நொடியில்///

சொரியவா ? அல்லது செறியவா ?

Vidhoosh said...

//அன்பு சொறிந்த அந்த நொடியில்
அமிலங்கள் அமுதமாய் மாறி
விருட்ஷத்தின்
இருப்பு புரிந்து என் கூட்டில்
துணையாக எப்போதும் இரு என்னோடே//

இவங்கதாங்க... இவங்களேதான்... ஆனா சொல்லி வையுங்க, உன் நாத்தனார் ரொம்ப கொடுமைக்காரின்னு...
:))

ஒரு வழியா... :))

வித்யா