பலா பட்டறை: Eagle's Wing (1979-2010) - திரை விமர்சனம்

Eagle's Wing (1979-2010) - திரை விமர்சனம்




Eagle's Wing (1979)

1980 களில் வெளிவந்து திரையிட்ட பல தியேட்டர்களில் இண்டீரியர் டெகரேஷன் எல்லாம் செய்தார்கள், இத்தனைக்கும் அப்போது டிக்கெட் அதிகமில்லை ஜெண்டில்மேன் வெறும் டூ ருப்பீஸ் ஒன்லி. திருட்டு விசிடி ப்ரச்சனை வேறு ரூபத்தில் இருந்தது. திரை போட்டு வாங்கசார் என்று சொல்லி, டெக் போட்டு ஜாக்கி சான் படம், ஷாலின் டெம்பிள் படம் எல்லாம் காட்டுவார்கள். தியேட்டரில் அல்ல சின்ன சின்ன கடைகளில்.

வேலூரில் VKR (aka) தினகரன் என்ற ஒரு தியேட்டர் இருக்கும், வெறும் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். இலவசமாய் மூட்டை பூச்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகலாம்.

5மென் ஆர்மி முதல் ஜேம்ஸ்பாண்டு படங்கள், ஜங்கிள்புக் என்று எல்லா படங்களும் 7ஆவது படிப்பதற்குள் பார்த்து மகிழ்ந்தது அங்கேதான்.

ஈகில்ஸ் விங் அப்படித்தான் உற்சாகத்தோடு பார்க்கப்போய், ஹாலி பாலி லெவலுக்கு இருந்ததால் அனேகமாக எல்லா சீட்களும் உடைக்கப்பட்டு, புதிதாய் உள்கட்டமைப்பு வேலைகள் செய்யப்பட்டது.

அப்படி உடைக்கற அளவுக்கு என்ன என்று கேட்க்காதீர்கள்:( ஒரு குதிரை, தொப்பி போட்ட ஒரு ஹீரோ, நடக்கறாங்க, நடக்கறாங்க படம் முழுதும்...ங்கொய்யால யாரடா ஏமாத்தறீங்கன்னு மக்கள் ஒரு பேயாட்டம் ஆடினது, நினைவில் இருக்கு. கொடுத்த காசுக்கு பரபரப்பாய் தியேட்டர் உடைத்ததை பார்த்து வீடு வந்து சேர்ந்தோம்.

அதற்கு பிறகு நிறைய படங்கள் பார்த்தாலும் இலவசமாய் கிடைக்காது போன மூட்டைபூச்சிகளால் மனசும், உடலில் வேறு சில இடங்களும் எதையோ இழந்ததுபோல இருந்ததென்னமோ உண்மை.

மேலதிக விவரங்கள் மற்றும் பட லின்க்..யார் ஹீரோ (ரொம்ப முக்கியம்) ஹாலிபாலி யை தொடர்புகொள்ளவும். முடிந்தால் நடித்த குதிரையின் தற்போதைய இருப்பிடமும் அறிவிப்பார்.


டிஸ்கி::1

எனக்கு தெரிந்து இந்த படத்துக்கு யாரும் தமிழில் விமரிசனம் எழுதி இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்... நானும் ஒரு பட விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்று - எறும்பு ராஜகோபால் திரை விமர்சனம் பார்த்து வந்த கொல வெறியில் எழுதப்பட்டது இது.

டிஸ்கி::2

ஜனாதிபதி ஆக்கிய என்னை பிரதமர் ஆக்காமல் கவர்னர் முதல்வர் ரேஞ்சுக்கு மட்டம் தட்டியதுமல்லாமல், என் ஏரியா உள்ள வராதே என்று மிரட்டிய ஹாலிபாலிக்கு சமர்ப்பணம்.::))

20 comments:

பாலா said...

யப்பா... ஒரு நிம்மதி..!!!! இனிமே யாரும் உங்களை ‘விமர்சனம்’ எழுதச் சொல்லி கேட்க மாட்டாங்க! :) :)

அப்புறம்... என்னை மாதிரி நாருடன் சேர்ந்து.. உங்களை மாதிரி பூவும் நாறிடுச்சின்னு.. யாராவது கமெண்ட் போடுவாங்க பாருங்க! :) :) :)

பாலா said...

///உற்சாகத்தோடு பார்க்கப்போய், ஹாலி பாலி லெவலுக்கு இருந்ததால்///

என்னமோ உள்குத்து இருக்கு. புரிஞ்சிக்க முடியலையா... இல்ல ‘விரும்பலை’யான்னு தெரியலை!!

இருந்தாலும்.. நோட் பண்ணிக்கிறேன். கோப ஸ்மைலி.. ஸாரி... ஆங்கர்லி.. ஆங்கர்லி.. ஆங்கர்லி..

பாலா said...

///கவர்னர் முதல்வர் ரேஞ்சுக்கு மட்டம் தட்டியதுமல்லாமல்////

கவர்னரா இருப்பதால்.. உண்டான நன்மைகளை பட்டியலிடவா அமைச்சரே???

1. ஒன்றல்ல...., மூன்று!!
2. ‘ரிலாக்ஸாக’ இருக்கலாம்.

வேணாங்க.. கொஞ்ச நாளைக்கு உங்க ரசிகர்களை போனாப் போகுதுன்னு தொந்தரவு பண்ணாம.. படிச்சிட்டு கம்முனு போய்டுறேன்! :)

பாவம்.. பாவம்!!

vasu balaji said...

சே! பாலாவ இப்படியா கலாய்க்கிறது. ஆஹா! வேலூரா? தினகரன்ல எக்ஸார்ஸிஸ்ட் படம் பாக்க போய் எங்க பாட்டியம்மா ஊரிஸ் காலேஜ் பசங்கள பங்க்சராக்கிடுச்சி.:))

சங்கர் said...

சாயுங்காலம் பார்த்தப்போ, இந்தக் கொலைவெறி தெரியலையே :))

அண்ணாமலையான் said...

ம்ம்ம் நடத்துங்க..............

'பரிவை' சே.குமார் said...

படத்தின் விமர்சனம் என்று பார்த்தால் தினகரன் ஸாரி VKR (aka) தியேட்டர் விமர்சனமாக இருக்கு. ஒகே பகிர்வுக்கு பாரட்டுக்கள்.

ஜெட்லி... said...

ஏன் அண்ணே,,,,?? நீங்களுமா??

எறும்பு said...

ஏன்பா ஏன்?? என் பதிவு தந்த ஊக்கத்தில் இந்த விமர்சனம் எழுதியதால் எனக்கு ராயல்டி உண்டா??
:))

Vidhoosh said...

இது! இது இதைத்தான் எதிர்பாத்தேன். :))
களை கட்டுது திரை விமர்சனப் பதிவு... "ஹாலிபாலி" பெட் நேம் சூப்பர்.

btw, ஜனாதிபதி அவர்களே, கந்தசாமியை விமர்சிக்கலையா?

:))

S.A. நவாஸுதீன் said...

ஏதோ! இப்பவாவது உங்க மனசுக்கு திருப்தியா இருந்தா சரிதான்.

Paleo God said...

ஹாலிவுட்ம் பாலா said...
யப்பா... ஒரு நிம்மதி..!!!! இனிமே யாரும் உங்களை ‘விமர்சனம்’ எழுதச் சொல்லி கேட்க மாட்டாங்க! :) :)//

மிக்க நன்றி பாலா..:) உங்களை என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத்தான் பெருமை..:)

Paleo God said...

வானம்பாடிகள் said...
சே! பாலாவ இப்படியா கலாய்க்கிறது. ஆஹா! வேலூரா? தினகரன்ல எக்ஸார்ஸிஸ்ட் படம் பாக்க போய் எங்க பாட்டியம்மா ஊரிஸ் காலேஜ் பசங்கள பங்க்சராக்கிடுச்சி.:))//

அனேகமா நீங்க போன எல்லா இடத்திலயும் நானும் போயுருக்கன் போல..ஊரீஸா அது போதிமரமாச்சே..:))
நன்றி சார்..:)

Paleo God said...

சங்கர் said...
சாயுங்காலம் பார்த்தப்போ, இந்தக் கொலைவெறி தெரியலையே :))//

சாமி அடக்கிரிச்சி..:))

Paleo God said...

அண்ணாமலையான் said...
ம்ம்ம் நடத்துங்க.........//

வாங்க தல.:)

Paleo God said...

சே.குமார் said...
படத்தின் விமர்சனம் என்று பார்த்தால் தினகரன் ஸாரி VKR (aka) தியேட்டர் விமர்சனமாக இருக்கு. ஒகே பகிர்வுக்கு பாரட்டுக்கள்.//
நல்லா பாருங்க குமார், குதிரயும் ஹீரோ வும் நடந்துகிட்டே இருப்பாங்க ,, அவ்ளவுதாங்க கத.. விமர்சனம் தான் தியேட்டர் கிழிஞ்சது.:)

Paleo God said...

ஜெட்லி said...
ஏன் அண்ணே,,,,?? நீங்களுமா??//

என்ன பண்றது ஜெட்லி... கொசு தொல்ல தாங்கல..

Paleo God said...

எறும்பு said...
ஏன்பா ஏன்?? என் பதிவு தந்த ஊக்கத்தில் இந்த விமர்சனம் எழுதியதால் எனக்கு ராயல்டி உண்டா??
:))//

என்ன கிடைக்குதோ மொத்தமும் உங்களுக்கும், ஹாலிக்கும்தான்..:))

Paleo God said...

Vidhoosh said...
இது! இது இதைத்தான் எதிர்பாத்தேன். :))
களை கட்டுது திரை விமர்சனப் பதிவு... "ஹாலிபாலி" பெட் நேம் சூப்பர்.

btw, ஜனாதிபதி அவர்களே, கந்தசாமியை விமர்சிக்கலையா?

:))//

வாங்க.. என்னது கந்தசாமியா.. ஹாலி..உங்களதான்...:))

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
ஏதோ! இப்பவாவது உங்க மனசுக்கு திருப்தியா இருந்தா சரிதான்//

ஆக இந்த படம் யாரும் பாக்கல..அப்ப உலக மகா மொக்க பார்த்தது நாந்தான்..விமர்சனமும் பண்ணியாச்சு..
திருப்திதான் நவாஸ்ஜி..:))