பலா பட்டறை: தள்ளி திரிந்த காலம்..

தள்ளி திரிந்த காலம்..

காதலர் தின சிறப்பு பதிவு - இரண்டு. (கொசுவத்தி)






இதற்கு முன் முகிலன் பக்கத்திலிருந்து ஒரு தொடர்கதை இரண்டாம் பாகம் எழுதினேன். இப்போது அவர் டீன் ஏஜ் வாழ்க்கை கொசுவத்தி சுத்த அழைத்திருக்கிறார்.:) எனக்கு பின் இதை தொடர வழக்கம்போல நான் யாரையும் பெயர் சொல்லி அழைக்க விரும்பவில்லை விருப்பமிருக்கும் நட்புகள் யாரும் தொடரலாம்.. (கண்டிப்பாய் தொடருங்கள்:) முன் குறிப்பு: நான் காதலித்தபோது காதலர் தினம் எல்லாம் இல்லீங்க. 10 வருஷமாதான் இந்த பொங்கல் எல்லாம்..:))


----------

சாரி முகிலன் என் டீன் ஏஜ் வாழ்க்கையே இப்படித்தான் இருந்தது:). என் தந்தை கொடுத்த சுதந்திரம் தம்/தண்ணி எல்லாமே திருடாமல் அடித்ததால் அவ்வளவு சுவார்ஸ்யமாயில்லை “அப்பா இன்னிக்கு பார்ட்டி ஒரு பீர் அடிச்சிட்டுத்தான் வருவேன்” .




ன்னடா ஆச்சு ரிசல்ட்? டென்த் போய்டுவியா?”.“ஃபெயிலும்மா.” கண்களில் கண்ணீருடன் நான் சொன்னபோது, ”விடுடா நானே பல முறை எக்ஸாம்ல ஃபெயில் ஆயிருக்கேன் அடுத்த முறை பாஸாயிடலாம்,இதுக்கு போய் அழுதுகிட்டு, ஆனா இங்க வேண்டாம், சென்னைக்கு போய்டு” அப்பாவின் அந்த அன்புதான் என்னை எதிலும் ஃபெயிலாகாமல் இன்னும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.


குரங்கு பெடல் அடித்து முட்டி ஒடிய சைக்கிள் ஓட்டிய தழும்புகள், ”ஷங்கர் இந்தாப்பா கணக்கு பேப்பர். ரெண்டு மார்க் வாங்கி இருக்க அப்பாவ கூட்டிகிட்டு வா கண்ணு,” டான்பாஸ்கோ பள்ளி டைரியின் நடுவிலிருக்கும் ரோஸ் நிற பக்கத்தில் ஒல்லியாய் உயரமாய் கண்ணாடி போட்ட கணக்கு வாத்தியார் டியூஷனுக்கு நான் வராத கடுப்பில் எழுதியபோது மற்ற நண்பர்கள் பயத்துடன் பார்க்க, ”அப்பா இன்னிக்கு ஸ்கூல் வாப்பா”, ”ஏண்டா?” ”எனக்கு கணக்கு வரலை, அரை பரிட்ச்சையில ரெண்டு மார்க் தான், என்னை ஹிஸ்டரி செக்‌ஷன் மாத்திடு, உடனே சைக்கிளில் என்னுடன் வந்த என் அப்பா ஹெட்மாஸ்டர் ஃபாதரிடம் ”என் புள்ளைக்கு கணக்கு வராதுங்க, ஹிஸ்டரிக்கு மாத்திடுங்க..” காதலன் படத்தில் பீர் பாட்டிலுடன் வரும் அப்பாவைவிட என் அப்பா ரொம்ப ஃப்ரெண்ட்லி..:) 

மெட்ராஸிலிருந்து வந்த சித்தி பையன்கள் ”வாடா முட்டி பீஸ் விளையாடலாம்” னு கோலி விளையாட கூப்பிட்டுபோய் என் கை விரலின் முட்டிகளை ரத்தத்துடன் பார்த்து ரசித்த வில்லத்தனம். கிரிக்கெட் விளையாடப்போய், சச்சினுக்காய் அதை விட்டுக்கொடுத்த பெருந்தன்மை.

ச்சி ஒக்காருடா” ஒரு டிசம்பர் கடைசி நாள் இரவில் ரமேஷ் யமஹா பின் சீட்டை காட்டி கூப்பிட்டபோது அவன் நூற்றுப்பத்து கிலோமீட்டர் வேகத்தில் சொன்னது ”மாம்ஸ் ஜம்ப் னு கொரல் குடுத்ததும் கரெக்ட்டா ஜம்ப் பண்ணிடு என்ன,” ”ஏண்டா” ”திடீர்னு எதிர்க்க எவனாவது வந்தா உயிர் தப்பிக்கனும்ல,” ”டேய் நான் வீட்டுக்கு ஒரே பையன் டா, ” அதனாலதான் உன்ன கூப்ட்டு சொன்னேன், வேற எவனாவதா இருந்தா நோ வார்னிங்”. வேலூரின் குளிர் கண்களில் வழிந்த நீரை உரைய செய்து நான் வண்டியை நிறுத்த சொல்வதற்கு முன் ஏழு கிலோமீட்டரை நொடிகளில் கடந்து சி.எம்.சி அருகில் வண்டியை நிறுத்தி ஹாப்பி நியூயியர்டா” மறு ஜென்மத்தில் நம்பிக்கை பிறந்தது அப்போதுதான். சரி போதும் மிச்ச சுய புராணங்கள் பதிவுகளுக்காய் ரிசர்வ்ட். இப்போ சீசனுக்கு ஏற்ற பதிவு..(திங்கள் வரை என் தொந்தரவு இல்லை..!)

நான் அழகாத்தானே இருக்கேன். ஏன் எனக்கு மட்டும் ஒரு காதலியும் கிடைக்கவில்லை..?

ம்புங்கள் சாதா போனும், கறுப்பு, வெள்ளை தொலைக்காட்சி பொட்டியும் பரவலாய் வருவதற்கு முன்பே அதாவது நான் 6-வது வகுப்பு படிக்கும்போதே எனக்குள் காதல் வந்துவிட்டது (நான் அவ்ளோ அரத பழசுதான் ஆனாலும் யூத்து ). 9-வது வகுப்பு டான்பாஸ்கோ மேன் நிலை பள்ளியில் ஃபெயில் ஆகும்வரையில் மேலே உள்ள கேள்விகள் மட்டுமே பிரதானமானதாய் இருந்தது. 

கூடப்பிறந்தவர்கள் யாருமில்லாத தனிமை, நிறைய புத்தகங்கள் எனக்கான வாழ்க்கையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்த சமயத்தில் 10ஆவது வரையாவது படிக்க வைக்கும் முயற்சியில் என் தந்தை என்னை அனுப்பியது சென்னைக்கு. அங்கே நான் சேர்ந்தது கோஎட் பள்ளி, அப்போதும் எனக்கே எனக்கான ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் தேடலில் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

துவரை படித்துவிட்டு என்னை சரியான ரோமியோ, Girls Pick என்று நினைத்திருந்தால் ப்ளீஸ் நான் ரொம்ப பாவங்க, அதாவது பொன்னுங்களே நம்மள தேடிவந்து நீ ரொம்ப அழகா இருக்க ன்னு சொல்லி, க்ளுக் ன்னு சிரிக்கனும்னு ஆசப்பட்ட ஒரு பாவ ஜீவன். (அடப்பாவி நீ பாவமாடா..?? )

பிறகுதான் ’பாகு’ சித்தரின் அருள் வாக்கு படிக்க கிடைத்தது..

பெண்களை கவருவதில் முதல் வழி கண்டுகொள்ளாமலிருப்பது. அவள் அழகை கண்டு வாய்பிளக்காமலிருப்பது, எல்லா நேரங்களிலும், அமைதியோடு பேசுவது, தடுமாறுகிறவனை எந்தப்பெண்ணும் மதிப்பதில்லை.’

நான் படித்த அதிக பட்ச காதல் இலக்கியம் இவ்வளவுதான். ஆனால் இன்றைக்கும் இதுதான் சக்சஸ் பார்முலா (அட்லீஸ்ட் - எனக்கு) ஆனாலும் பெண்களை விட கூச்சம் எனக்கு அதிகம். இரண்டு பெண்கள் எதிரே வந்தாலும் எந்தப்பக்கம் எஸ்கேப் ஆகலாம் என்று யோசிப்பேன். வலிய வந்து யாராவது பேசினாலும் பதில் பேசுவதற்குள் நாக்கு உலர்ந்துவிடும், ஏன்? தெரியாது. ஆனாலும் என் வாழ்வில் செம்புலப்பெயனீர் போல தானே வந்து கலந்தவர்கள் பல பேர்..

சென்னையில் மீண்டும் 9-ஆவது, ஒரு வழியாய் 10-ஆவது படித்து பாஸாகி 11,12 ம் வகுப்பு படிக்க டான்பாஸ்கோவையே தேர்ந்தெடுத்தேன் (என்னை ஃபெயில் பண்ணிட்டீங்கல்ல இங்கேயே பாஸாகுறேன் பார் +2 என்ற வெறி) உங்களுக்கு தெரிந்த சிவராமன் முதல் பல நட்புகள் கிடைத்த நேரம் அதுதான் (என்னது ஏற்கனவே ஃபெயிலாகி இப்போ 11வது சேர்ந்து சிவராமன் க்ளாஸ்மெட்டுன்னா இன்னும் அரத பழசான்னு கேட்க்கறீங்களா?? ஸ்டில் யூத்துதான் ஒண்டிக்கு ஒண்டி எங்க வேணாலும் பெட் வெச்சிக்கலாம்:). 

டான்பாஸ்கோ பள்ளியின் பின்புறம் ஆக்சிலியம் பெண்கள் பள்ளி பச்சை தாவணி, வெள்ளை மேல் சட்டையில் தேவதைகள் சைக்கிளில் போவதை தரிசிக்க பள்ளி விட்டவுடன் நிறைய பேர் கேட்டின் இடது புறம் திரும்ப நான் மட்டும் வலது புறம் திரும்பி வீட்டிற்கு செல்வேன். (அப்போ இலக்கியம் தேடி சிவராமன் சென்னைக்கு சென்றதெல்லாம் சத்தியமாய் எனக்கு தெரியாது. அதுசரி யாரோட காதலையும் யாரிடமும் சொல்லாத ஒரு நட்பு வட்டம் அது..:)

10-ஆவது படிக்கும்போது முதல் காதல் நான் படித்த பள்ளி ஆசிரியரின் பெண், ஒரே வகுப்பு. அவளின் தைரியம் சக நண்பர்களுக்கு பயத்தை தர என்னை கோர்த்து விட்டார்கள், ட்ராயரும், கையில்லா பனியனுமாய் பி.டி வகுப்புக்கு வரிசையில் செல்கையில் அவள் சிரிக்கும் நமுட்டு சிரிப்பு அவளுக்குள் என்மீதான ஈர்ப்பை சொல்லியது. ”அவன் ஒரு வெள்ளை உளுவை, அவனை போய் லவ் பண்றியேடி” என்ற சக தோழிகளின் கேலியையும் மீறி அது வளர்ந்தது,  பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பாக என் பெயரிட்ட விலாசம் தாங்கிய முதல் கடிதம் பொங்கல் வாழ்த்தாய் வந்து சேர்ந்தது. ஆயிரம் கடிதங்கள் அதன் பின் வந்து விட்டாலும் அந்த முதல் கடிதம் அப்படியே பதிந்துவிட்டது.  இரண்டே வருடங்களில் நண்பர்களாலேயே வளர்ந்து, அவர்களாலேயே மலர் வளையம் வைக்கப்பட்டது.

ரு சினிமா, எத்திராஜ் கல்லூரி முன் அவளுக்கான அவஸ்தை தவம், அந்த கூவம் பாலத்தை தாண்டி நேரே போய் ஆவின் பார்லரில் ஐஸ் கிரீம் சாப்பிட்டது, ஒன்றாய் பார்த்த அரங்கேற்ற வேளை படம், காதலுக்கு ’சுபம்’ போட்ட புல்லா அவென்யூ திரு.வி.கா பூங்கா, அந்த காதலின் எச்சங்களாய் மிச்சமிருப்பது இவை மட்டுமே.

ந்த பிரிவில் எல்லாரையும் போலவே பெண்களை வெறுக்கத்தொடங்கினேன். மூன்றே மாதத்தில் வேறொறுத்தி வந்தாள், ஒரு பெண் என்பவள் யார்? அவளின் குணங்கள் என்ன? ஒரு ஆண் பெண்ணை எப்படி அணுக வேண்டும்?, காதலின் உச்சம் என்ன? உயிரை பிடுங்கி எறியும் முத்தம் எது?, பெண்மையின் வாசனைகள், கோபம், அழுகை, சிரிப்பு, கேலி, அசரவைக்கும் அழகு, காதல் இன்னபிற ஈரத்தோடு இந்த களிமண்ணை நோக்கி தினம் வருவாள் பார்க்கும் நாளெள்லாம் என்னை வைத்து பொம்மைகள் செய்வாள்.

ன்றைக்கும் எனக்கான பெண்களைப்பற்றிய புரிதலின் போதி மரம் அந்த பெண்தான். ஆங்கிலத்தில் மாதங்களின் ஸ்பெல்லிங் கூட சரியாக சொல்லத்தெரியாத என்னை இரண்டு இன்ச் அளவிற்கு ஆங்கில புத்தகம் படித்த பெண் கிறங்க கிறங்க காதலித்தாள். எந்த வித எதிர்பார்ப்புமில்லாத அந்த காதல் எனக்கு கற்று கொடுத்த பாடங்கள் அதிகம். அது மோகத்தை விட புரிதலை நோக்கி என்னை கூட்டிச்சென்றது. ஒரு கட்டத்தில் சட்டென்று அதுவும் முறிந்துவிட அதன் பின் வாழ்வில் காதல் சொல்லி வந்த பெண்கள் நிறைய பேர் டீன் ஏஜ் தாண்டியும்..                      
             
வெவஸ்தையே இல்லையா? இதுக்கு பேர் காதலாய்யா ன்னு கேட்டீங்கன்னா? தெரியல. உங்கள எனக்கு பிடிச்சிருக்குன்னு ஐ லவ் யூ ன்னு ஒரு பெண் முகத்த பார்த்து சொல்லும்போது நான் திரும்ப பதில் மரியாதையா அவங்கள காதலிச்சிருக்கேன்ன்னுதான் சொல்லமுடியிது (அல்லது அப்படித்தான் என் ஜீன்களில் எழுதப்பட்டிருக்கிறது). Is it Love or Lust? என்று மீண்டும் கேட்டால் நிச்சயம் Lust இல்லை என்று என்னால் சொல்ல முடியும். அப்ப காதலா? என்றால் ஒரு உணர்ச்சி பொங்கும் அந்த அனுபவத்தை நட்பு என்று என்னால் சொல்ல முடியவில்லை. என்னிடம் காதல் சொன்னவர்களும் நட்பு என்பதை பிரயோகிக்கவில்லை. ஆனால் மனதறிந்து யாரையும் நான் ஏமாற்றவில்லை, ’சத்தியமா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொல்லி மேலே கை வைத்ததில்லை. எப்படி என்னை காதலிப்பதாய் சொன்னபோது நான் மகிழ்ச்சியாய் வரவேற்றேனோ அதுபோலவே ’சாரிடா’ என்று எதுவும் சொல்லாது அவர்கள் பிரிந்தபோதும் சிரிப்போடே பிரிந்து மறைந்திருக்கிறேன் (ஆம் மீண்டும் யாரையுமே பார்க்கவில்லை/முயலவுமில்லை) .

ரு புரிதலோடே பிரிந்திருக்கிறோம். புரிதல் எப்படி பிரிவை தரும் என்றால் புரிதல் பிரிவை மட்டுமே தரும் வேதனையை அல்ல. சில காலம் என்னுடன் காதலாயிருந்த அந்த பெண்கள் இப்போது நல் வாழ்வு வாழக்கூடும். நிம்மதியாய் அவர்கள் உலாவிய ஒரு இடமாய் என் மனமும் இருந்திருக்கிறது என்பதில் எனக்கு பெருமைதான். 

ந்த 10 பேருமே என்னிடம் காதலை சொல்லியவர்கள், காதலுமின்றி நட்புமின்றி இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிரித்து யோசித்தபடியே, ”ஆல் த பெஸ்ட்” சொல்லி பிரிந்து போயிருக்கிறோம். ஆனால் கடைசியாக நான் சொல்ல விரும்பி காதலிக்கிறேன் என்று நான் சொல்லிய பெண் சிரித்தபடியே என்னை நிராகரித்ததோடு எனக்காய் தூது போனவரையே ”உனக்கு இவதான் கரெக்ட்” என்று ரெகமென்டேஷனுடன் திருப்பி அனுப்பினார்.:)) அட சரிதான் என்று அவரையே நான் தங்கமணியாகவும் ஆக்கிக்கொண்டேன்..:)) காதலுக்கு மரியாதை. இப்போதும் அந்த பெண்மணி நல்ல குடும்ப நட்பாகவே தொடர்கிறார். மேலே சொன்ன எல்லாமும் தெரிந்த என் மனைவியும் ”ஏங்க உங்க ரெண்டாவது லவ்வர் ரொம்ப அழகுங்க” என்று சொல்லும்போது ஏற்படும் உணர்வுகளுக்கு எந்த பெயரும் வைக்க மனமில்லாது சிரிப்போடே கடந்து போகிறேன்...:)) (அட அவங்களுக்கும் கொசுவத்தி இருக்குங்க..:-)         

ன் வாழ்வில் வந்த அந்த ஜீவன்களை, அறியாமலேயே என்னை செம்மைப்படுத்திய நல் மேய்ப்பர்களாகவே பார்க்கிறேன். காதலித்துப்பார்த்துவிட்டு அது வேஸ்ட் என்று சொல்வதற்கு முன்பு உண்மையில் காதலித்தோமா என்று கேட்டுக்கொள்வது நல்லது என்பது என் கருத்து. 

திகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும் (ஃபீலிங்ஸ் தாண்டி புரிதலோடு, மரியாதையோடு,). அது ஒரு மறு பிறப்பு போலத்தான். பெண்ணை/ஆணை நோக்கி மட்டுமே காதல் என்பது தேவை இல்லை தன்னை நோக்கியதாயும் இருத்தல் நலம். இன்னும் நிறைய எழுதலாம், ஆனால் அடிக்க வருவீர்கள்..:))  





Golden Moments Slip by
I Cannot Hold them Back
Don't ask me what and why
Expression is what i lack.
All that i can write to you
is that I have a Treasure
The meetings with you - though few
They were such a pleasure

.. 
..

As I think of you my love
my pen moves uninterruptedly
But there has to be a stop,
and I stop here.








.

58 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

//*இன்னும் நிறைய எழுதலாம், ஆனால் அடிக்க வருவீர்கள்..:)) *//

பதிவு நல்லயிருக்கரதால இப்போதைக்கு விடறோம்....

மரா said...

இவ்ளோ வேலைகள் பண்ணவரா நீங்க? இந்த கேட் மில்க் சாப்பிடுமான்னு இருக்கீக. உங்க அப்பா ரொம்ப நல்லவரு தல...காதலர் தின வாழ்த்துக்கள்.

VISA said...

நானும் டான்போஸ்கோ தான் படிச்சேன். அங்கனன்க்க சென் மேரீஸ் இருந்திச்சு. குட்டை பாவாடை எஸ்.எல்.ஆர் சைக்கிள் சொல்லவா வேணும். நம்ம பசங்க தொல்லையினால ரெண்டு ஸ்கூள் டைமிங்கே மாத்தினாங்க ஒரு வாட்டி. பெண்கள் ஒரு பூஸ்ட். பெண்கள் இல்லாத வாழ்க்கை ரொம்ப வேஸ்ட்.

sathishsangkavi.blogspot.com said...

//மனதறிந்து யாரையும் நான் ஏமாற்றவில்லை, ’சத்தியமா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொல்லி மேலே கை வைத்ததில்லை. எப்படி என்னை காதலிப்பதாய் சொன்னபோது நான் மகிழ்ச்சியாய் வரவேற்றேனோ அதுபோலவே ’சாரிடா’ என்று எதுவும் சொல்லாது அவர்கள் பிரிந்தபோதும் சிரிப்போடே பிரிந்து மறைந்திருக்கிறேன் //

எப்படி நம்மகிட்ட பேசுவா அவ கூட தோள் மேலே கையப்போடலாம் என்று சொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கிறறேன் ஆனால் நீங்க.... வாவ்.... சூப்பர்...

ஷங்கர் அழகாகவும் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றுகிறது உங்கள் இளமைக்காலம்....

இதுவரை 6 முறை படித்து ரசித்தேன் உங்கள் வரிகளை....

Anonymous said...

ரசித்தேன். அருமை. இதைவிட எது சொன்னாலும் பொருத்தமா சரிவருமான்னு தெரியலை.

Paleo God said...

@ராம்..
வாங்க ராம்..:)) ரொம்ப நாளாச்சு:) நன்றி

@மயில்..
எங்கப்பா வளத்த கேட், அதனால அப்படி..:)

@விசா..
:)) அட அப்படியா? எஸ்.எல்.ஆர் சைக்கிள்!!:) நீங்க நம்ம கேட்டகிரி பாஸ்..:) அவசியம் சந்திக்கனும் உங்கள..

@சங்கவி..
அட நானும் அப்படி யோசிக்க வைக்கப்பட்டவந்தாங்க.. ஆனா கிடைத்த பெண் நட்புகள் என்னை திருத்தியது.

@சின்ன அம்மிணி
மிக்க நன்றி சகோதரி..:)

Unknown said...

வாவ்.. ஷங்கர்.. கலக்கிட்டிங்க.. எனக்குப் பாராட்ட வார்த்தையே வரலை..உங்கப்பாவை நான் ரொம்ப மதிக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரசித்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

அருமை.. ரசித்தேன்...இதற்கு மேல சொல்ல சரியான வார்த்தைகள் கிடைக்கலை.

ப்ரியமுடன் வசந்த் said...

ஒவ்வொரு ஜீனும் ஒரு எழுத்தா மாறியிருக்கு ஷங்கர்

உங்களைவிட உங்கள் மனைவிதாங்க நல்லமனசுக்காரங்க நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்...

Vidhoosh said...

////நான் திரும்ப பதில் மரியாதையா///

ஹுக்கும்... :)

Vidhoosh said...

nice post. happy valentine. இந்த வருஷமும் எந்த வருஷமும் தங்கமணியே வேலன்டைனாகக் கடவது...

Vidhoosh said...

///தள்ளி திரிந்த காலம்///

காலத்தைத் தள்ளினத மட்டும் தானே mean பண்றீங்க..:))

Paleo God said...

@முகிலன்..
நன்றி முகிலன்..:)

@T.V.R..
மிக்க நன்றி சார்..

@அமைதிச்சாரல்..
நன்றிங்க..:)

@வசந்த்..
உண்மைதாங்க..:))

@விதூஷ்..
ஹுக்கும்.// என்னமோ திட்ட வந்தீங்க..:)

சாபத்துக்கு நன்றி..:)

தள்ளி ‘த்’ போடல பாருங்க.. நான் தள்ளியே ..இப்படி சொன்னாலும் தப்பாயிரும்:(

’ஒதுங்கியே’ திரிந்த காலம் - சரியா?..:) நன்றிங்க..:) ..

பாலா said...

உங்க மேட்டரெல்லாம் படிச்சதும்.. கை பரபரங்குது..! ஆனா.. நம்ம மேட்டரெல்லாம்.. இத்தனை டீஸண்ட் கிடையாது. எழுதினா 18+ ஆகிடும்.

நம்ம ஊரு கிராமம் வேறயா..! பேரைப் போடாம எழுதினா கூட... ஈஸியா கண்டுபுடிச்சிடுவாங்க. அதனால.. அப்பீட்டு..!! :)

Thenammai Lakshmanan said...

கிரிக்கெட் விளையாடப்போய், சச்சினுக்காய் அதை விட்டுக்கொடுத்த பெருந்தன்மை.



சூப்பர் ஷங்கர் பின்னே நாங்களெல்லாம் விசிறி ஆகி இருபோம்ல

கார்க்கிபவா said...

பாஸ், நீங்க கவிதை எழுதறத குறைக்கலாம்..


ஐ மீன் இந்த மாதிர்யும் எழுதலாமே :))

அகநாழிகை said...

ஷங்கர், சரளாமா நல்லா எழுதியிருக்கீங்க.

//சத்தியமா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொல்லி மேலே கை வைத்ததில்லை//

இவ்ளோ நல்லவரா நீங்க...

:)

அகநாழிகை said...

மன்னிக்கணும். ‘சரளமாக‘ அப்படின்னு இருக்கணும்.

Vidhoosh said...
///தள்ளி திரிந்த காலம்///

காலத்தைத் தள்ளினத மட்டும் தானே mean பண்றீங்க..:))


சரியான கேள்வி :)))

தமிழ் உதயம் said...

காதல் நல்லோருக்கு வாய்ப்பின்_
காதல் அனுபவமாகிறது... காதல் செம்மை படுத்துகிறது... காதல் வாழ்க்கையை அழகாக்குகிறது... காதலே ஒரு ஏணியாகி, நம்மை வெற்றியின் சிகரத்திற்கே அனுப்புகிறது.

ராமலக்ஷ்மி said...

அனுபவங்களைச் சார்ந்து வெளிப்படுத்தியிருக்கும் சிந்தனைகளும் அருமை.

vasu balaji said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஷங்கர்.:)

Chitra said...

அது ஒரு மறு பிறப்பு போலத்தான். பெண்ணை/ஆணை நோக்கி மட்டுமே காதல் என்பது தேவை இல்லை தன்னை நோக்கியதாயும் இருத்தல் நலம்.

............பதிவு முழுவதும் உங்கள் அனுபவங்கள் தந்த சிந்தனை பெருக்கு, அற்புதம்.
இந்த பதிவு, one of your best ones.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான பகிர்வு.

Unknown said...

அட.., ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க... காதலிக்கிறத்துக்கும் கல்யாணம் பண்ணிக்கிறத்துக்கும் சம்பந்தம் இல்லங்க.., இத சொன்னா அடிக்க வராங்க

மீன்துள்ளியான் said...

//கிரிக்கெட் விளையாடப்போய், சச்சினுக்காய் அதை விட்டுக்கொடுத்த பெருந்தன்மை.//
:))

//பெண்களை கவருவதில் முதல் வழி கண்டுகொள்ளாமலிருப்பது. அவள் அழகை கண்டு வாய்பிளக்காமலிருப்பது, எல்லா நேரங்களிலும், அமைதியோடு பேசுவது, தடுமாறுகிறவனை எந்தப்பெண்ணும் மதிப்பதில்லை.’//

ஆமா... இது ரெம்ப உண்மை ..

// அதிகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும் (ஃபீலிங்ஸ் தாண்டி புரிதலோடு, மரியாதையோடு,). அது ஒரு மறு பிறப்பு போலத்தான். பெண்ணை/ஆணை நோக்கி மட்டுமே காதல் என்பது தேவை இல்லை தன்னை நோக்கியதாயும் இருத்தல் நலம் //

அருமையான அனுபவம் .. .. மனிசனுக்கு எதாவது ஒரு காதலாவது வேண்டும் ..

Unknown said...

//நான் காதலித்தபோது காதலர் தினம் எல்லாம் இல்லீங்க. 10 வருஷமாதான் இந்த பொங்கல் எல்லாம்..:))//

அப்போ நீங்க யூத் இல்லயா

மீன்துள்ளியான் said...

//கிரிக்கெட் விளையாடப்போய், சச்சினுக்காய் அதை விட்டுக்கொடுத்த பெருந்தன்மை.//
:))

//பெண்களை கவருவதில் முதல் வழி கண்டுகொள்ளாமலிருப்பது. அவள் அழகை கண்டு வாய்பிளக்காமலிருப்பது, எல்லா நேரங்களிலும், அமைதியோடு பேசுவது, தடுமாறுகிறவனை எந்தப்பெண்ணும் மதிப்பதில்லை.’//

ஆமா... இது ரெம்ப உண்மை ..

// அதிகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும் (ஃபீலிங்ஸ் தாண்டி புரிதலோடு, மரியாதையோடு,). அது ஒரு மறு பிறப்பு போலத்தான். பெண்ணை/ஆணை நோக்கி மட்டுமே காதல் என்பது தேவை இல்லை தன்னை நோக்கியதாயும் இருத்தல் நலம் //

அருமையான அனுபவம் .. .. மனிசனுக்கு எதாவது ஒரு காதலாவது வேண்டும் ..

சைவகொத்துப்பரோட்டா said...

யூத்து உங்களுக்கு பழுத்த அனுபவம்தான்:)) உங்க அப்பா கிரேட்.

ஜெட்லி... said...

ரைட்..உங்களை வச்சு ஒரு autograph படமே
எடுக்கலாம் போல...

எறும்பு said...

இன்னாமா பீல் பண்றப்பா.. மெய்யாலுமே கண்ணு கலங்கிடுச்சு
:))

ஈரோடு கதிர் said...

வாவ்... அருமையான பகிர்வுங்க சங்கர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரசித்துப் படித்தேன். உண்மையாகவே மனதைத் திறந்து காட்டியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்படி வாழ்க்கையை இலகுவாக எடுக்கப் பலரால் முடிவதில்லை. இதுவே பெரிய வரம். 'காதலில் தோற்று விட்டோம் என்பதைவிட ,இது காதல் தானா என்று கேட்பது மேல் ''சூப்பர்.

அண்ணாமலையான் said...

தீராத விளையாட்டு பிள்ளை? ரொம்ப குறும்புதான்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அன்பு சகோதரருக்கு வணக்கம். காதல எழுதச்சொன்னா என்னமா வருதுப்பா உங்களுக்கு! சூப்பர் எழுத்து நடை. மனதின் பக்கங்களை விரித்து வைத்துவிட்டீர்கள்.அழகு!

CS. Mohan Kumar said...

நிறைய பேசலாம் இத பத்தி.. எப்பவாவது நேரில் பேசுவோம்

Radhakrishnan said...

அழகிய உணர்வுகளை படம் பிடித்த விதம் மிகவும் அருமை. காதல், கலக்கிட்டீங்க.

Tech Shankar said...

எப்படிங்க இப்படியெல்லாம்? இம்மாம் பெரிய பதிவு எழுதி கீறிங்க.. அடேங்கப்பா. இருங்க பொறுமையா படிச்சுடுறேன். இது அதுக்கு மின்னாடி வரும் பின்னூட்டம்.. ஆஹா

Thenammai Lakshmanan said...

//என் வாழ்வில் செம்புலப்பெயனீர் போல தானே வந்து கலந்தவர்கள் பல பேர்..//

அட இது வேறயா !!!

Thenammai Lakshmanan said...

//நிம்மதியாய் அவர்கள் உலாவிய ஒரு இடமாய் என் மனமும் இருந்திருக்கிறது //

அட நல்லாருக்கே இது....!!!!

Thenammai Lakshmanan said...

//பெண்ணை/ஆணை நோக்கி மட்டுமே காதல் என்பது தேவை இல்லை தன்னை நோக்கியதாயும் இருத்தல் நலம்//

அட்டகாசம் அருமை சங்கர்

குடுகுடுப்பை said...

சூப்பர். எனக்கு ஏக்கம் ஏப்பம் எல்லாமே வருது, இனிமேதான் காதலிக்க ஆரம்பிக்கனும்.

நாடோடி said...

ஒன்று, இரண்டு, மூன்று....யப்பா....ம்ம்ம்...மலரும் நினைவுகள் நல்லா இருக்கு..

தாராபுரத்தான் said...

மன உணர்வை சரியான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.ரொம்ப நல்லா இருக்குதுங்க.

புலவன் புலிகேசி said...

எவ்வளவு சேட்டைங்க

'பரிவை' சே.குமார் said...

ரசித்தேன். அருமை

வெள்ளிநிலா said...

ஆமா வீட்டுக்கு தெரியுமா?

பழமைபேசி said...

கொடுத்து வச்சவர்ங்க நீங்க......நான் இனிமேதான் என்னையும் காதலிக்கப் போறேன்....

PPattian said...

//அந்த 10 பேருமே என்னிடம் காதலை சொல்லியவர்கள்//

அடேங்கப்பா.. பத்தா.. சொக்கா.. சொக்கா !!!!!!!! யார் சார் நீங்க?

கலக்கலா இருக்குங்க இந்த பதிவு

சீமான்கனி said...

//அந்த 10 பேருமே என்னிடம் காதலை சொல்லியவர்கள், காதலுமின்றி நட்புமின்றி இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிரித்து யோசித்தபடியே, ”ஆல் த பெஸ்ட்” சொல்லி பிரிந்து போயிருக்கிறோம். //

திறந்த மணசு...தல...உங்களுக்கு...
படிக்கும்போதே...மணசு ஏதோ..சொல்ல துடிக்குது...

கமலேஷ் said...

நான் இப்படிதான் இருந்தேன்னு சொல்லவும் ஒரு தைரியம் வேணும்..பதிவு
ரொம்ப நல்ல சுவையோடு இருக்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

ஸ்ரீராம். said...

அருமை....
அருமை ஷங்கர்..
எந்தப் பாராவைச் சொல்லிப் பாராட்ட..

angel said...

ungaluku rombah thairyam than

Prathap Kumar S. said...

கலக்கர் ஷங்கர்ஜி,

ஆமா அதென்னங்க வெள்ளை உளுவை அப்படின்னா-?

//இரண்டே வருடங்களில் நண்பர்களாலேயே வளர்ந்து, அவர்களாலேயே மலர் வளையம் வைக்கப்பட்டது//

ஹஹஹஹ... சிலபேரு உசுப்பேத்தியே..உசுப்பேத்தியே நம்மளை அலையவுடுவானுங்க...

கடைசி பாரா சூப்பர்...

நினைவுகளுடன் -நிகே- said...

ரொம்ப அருமையான பகிர்வு.
காதலர் தின வாழ்த்துக்கள்

Paleo God said...

@ஹாலிபாலி ..
ரைட்டு..:)

@தேனம்மை..
இப்ப மட்டும் என்னங்க ..?:))

@கார்க்கி..
ஓகே சகா..:))

@அகநாழிகை..
வாங்க வாசு சார்..
தெரியலைங்க..:))
பதில் சொல்லிடேன் பாருங்க..:)

@தமிழ் உதயம்..
உண்மைதாங்க.. நன்றி.:)

@ராமலக்ஷ்மி..
மிக்க நன்றிங்க..:)

@வானம்பாடிகள்..
நன்றிங்க சார்..:))

@சித்ரா..
நன்றி சகோதரி..:))

@ஜலீலா..
மிக்க நன்றி சகோதரி..:))

@பேநா மூடி..
சரிதாங்க.. :)) நன்றி..:)

@மீன்ஸ்..
நன்றி மீன்ஸ்..:)

@பேநா மூடி..
யூத்து தாங்க ஆனா குழந்தை இல்ல..:))

@சை.கொ.ப..
நன்றி நண்பரே..:))

@ஜெட்லி..
சீக்கிரம் எடுங்க..:))

@எறும்பு..
:)))

@கதிர்..
நன்றிங்க..:))

@ஜெஸ்வந்தி..
நன்றிங்க..:))

@மலை
தீர்ந்துடுச்சிங்க..:)) நன்றி.:)

@க.நா.சாந்தி..
நன்றிங்க..:))

@மோகன் குமார்..
கண்டிப்பா..நன்றி நண்பரே..:))

@ராதாகிருஷ்ணன்..
நன்றிங்க..:))

@டெக் ஷங்கர்..
இன்னும் படிச்சி முடிக்கலையா..? நன்றிங்க..:))

@தேனம்மை..
மீண்டும் நன்றிங்க..:))

@குடுகுடுப்பை..
வாழ்த்துக்கள்..:))

@நாடோடி..
நன்றி நண்பரே.:))

@தாராபுரத்தான்..
மிக்க நன்றி ..:))

@புலிகேசி..
:( ஆமாங்க..:)

@குமார்..
நன்றி குமார்..:))

@வெள்ளி நிலா..
நல்ல படிச்சி பாருங்க.. :))

@பழமைபேசி..
மொதல்ல அத செய்ங்க..:)) மிக்க நன்றி..:)

@புபட்டியன்..
வாங்க. நன்றிங்க:))

@கனி..
சொல்லுங்க சொல்லுங்க..:))

@கமலேஷ்..
நன்றி தோழரே..:))

@ஸ்ரீராம்..
மிக்க நன்றிங்க..:)
@பிரதாப்..
என்னோட நிறத்த கிண்டல் பண்ணிருக்காங்க போல - அது என்னான்னு ஆராய்சி எதுவும் பண்ணல :))
ஆமா பிரதாப்..
மிக்க நன்றி..:))

@நிகே..
மிக்க நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..:))

கண்ணகி said...

உளம்திறந்த மலரும் நினைவுகள் அருமை...

cheena (சீனா) said...

அன்பின் ஷங்கர் - கொசுவத்தி அருமை - உண்மையான - இயல்பான இடுகை. பதின்ம வயதில் ஒரு வித்தியாசமான பதின்ம வயது.

நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா