பலா பட்டறை: மரணமில்லா இறப்புகள்..

மரணமில்லா இறப்புகள்..



றந்து போன யாரோ சிலரின்
துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்
உயிர் வாழ்கிறதென் கவிதைகள்
இறந்து போனவனை தாங்கி வந்த
வரிகளை உயிரோடு
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்
பொருள் இல்லாவிடினும்,
சுவை இல்லாவிடினும் இறந்தவனின்
குறிப்புகளாய் இறந்தவனைப்பற்றிய
சோகங்கள் தாங்கி இனி இறக்கப்போகும்
எவனாவது வாசிக்கக்கூடும், அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்
என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு..



.

36 comments:

Chitra said...

இறந்து போன யாரோ சிலரின்
துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்
உயிர் வாழ்கிறதென் கவிதைகள்

..........துக்கங்கள் மட்டும் தானா? சந்தோஷங்கள் இல்லையா? :-)

நசரேயன் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாரு

சீமான்கனி said...

அழகு...அழகு...அழகு...
இறக்காத கவிதை...

புலவன் புலிகேசி said...

கவிதை இயல்பாய் இ(ரு)றக்கிறது...

தர்ஷன் said...

அஞ்சலியை எழுதப்படும் கவிதைகள் பற்றியதுதானே
நன்றாக இருக்கிறது

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

ஷங்கர் உங்கள் தளம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறதே ஏன்?

Unknown said...

// நசரேயன் said...
எப்படியெல்லாம் யோசிக்கிறாரு
//

ரிப்பீட்டேய்..

Cable சங்கர் said...

arumai

ஆர்வா said...

//இறந்து போனவனை தாங்கி வந்த
வரிகளை உயிரோடு
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்//

நல்ல கற்பனை.. தொடருங்கள் ஷங்கர்

Vidhoosh said...

ரொம்ப அருமை.


//ஷங்கர் உங்கள் தளம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறதே ஏன்?/// அவசியம் வேண்டும் என்று இல்லாத, தேவை இல்லாத widgetகளை நீக்குங்கள்.

சங்கர் said...

அருமை

அய்யய்யோ, புரிஞ்சிடுச்சே :))

சங்கர் said...

//Vidhoosh said...
அவசியம் வேண்டும் என்று இல்லாத, தேவை இல்லாத widgetகளை நீக்குங்கள்//

பதிவுகளையோன்னு நினைச்சேன் :))

vasu balaji said...

அருமை.

மணிஜி said...

கொன்னுட்டீங்க எஜமான் !

எறும்பு said...

Present sir

ஜெட்லி... said...

//அய்யய்யோ, புரிஞ்சிடுச்சே :))


//

என்ன சொல்றது....

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு ஷங்கர்...

நாடோடி said...

ரெம்ப நல்லா இருக்கு..

நாடோடி said...

ரெம்ப நல்லா இருக்கு..

நினைவுகளுடன் -நிகே- said...

உங்கள் கவிதையில் தமிழ் அழகாக வந்து விளையாடுகிறது

திவ்யாஹரி said...

அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்
என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு..

கவிதை அருமை அண்ணா.. உண்மையை சொல்லுது..

ஹேமா said...

இறந்தபின்னும் விட்டுச் செல்லும் சுவடுகளை அடுத்தவர்கள் மட்டுமே எழுதமுடியும்.இயல்பு ஷங்கர்.

சாந்தி மாரியப்பன் said...

//இறந்தவனைப்பற்றிய
சோகங்கள் தாங்கி இனி இறக்கப்போகும்
எவனாவது வாசிக்கக்கூடும்//

அழகான வரிகள்.

Unknown said...

ஒரு மாதிரி புரின்சிடுத்து

Unknown said...

ஒரு மாதிரி புரின்சிடுத்து

Radhakrishnan said...

நல்லதொரு சிந்தனையுள்ள கவிதை, இறப்பு என்றதுமே எதிர்மறை எண்ணம் தெரிகிறது.

அண்ணாமலையான் said...

மிக நன்றாக இருக்கிறது

தமிழ் உதயம் said...

இறந்தப்பின் ஏதோ ஒன்று, நம் நினைவாக மிச்சமிருக்க வேண்டும். அது கவிதையாக இருந்து விட்டு போகட்டுமே. அழகு ஷங்கர்.

அன்புடன் நான் said...

இனி இறக்கப்போகும்
எவனாவது வாசிக்கக்கூடும், அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்
என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு..//

கவிதை... மனதிற்கு தெளிவை தருகிறது.... நல்லாயிருக்கு.

வினோத் கெளதம் said...

பட்ட..பட்டய கிளப்புது தல..;)

vidivelli said...

காலத்தை நீங்கதான் சரியா கணக்கு போட்டு நகர்த்திறீங்க.
பிடிச்சிருக்கு உங்கள் கவிதை.

vidivelli said...

காலத்தை நீங்கதான் சரியா கணக்கு போட்டு நகர்த்திறீங்க.
பிடிச்சிருக்கு உங்கள் கவிதை.

Matangi Mawley said...

tht was beautiful sir!

விஜய் said...

பிராட்பேண்ட் இணைப்பு அறுந்து போனதால் சரியாக வரமுடியவில்லை.

இறக்காத கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

Thenammai Lakshmanan said...

நிச்சயமா சங்கர்

அண்ணாமலையான் said...

காலா காலத்துக்கும் உங்க பேர் நிக்கும்... சந்தோஷம்தானே? (உங்களுக்கும் ரெண்டு)