பலா பட்டறை: வெளிசம்..

வெளிசம்..


.






லை அல்வாவை சுடச்சுட ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டால் வழுக்கிக்கொண்டு போகுமே அப்படி ஒரு குரலில், 


”ஹாய் ஐ ஆம் ஸ்வா..” 

வள் கை நீட்டியபோது சத்தியமாய் எனக்கு தெரியாது, அவள்தான் என்னுடைய வருங்கால காதலிகளில் ஒருவள் என்று!. அப்போ மொத்தம் எத்தனை என்கிறீர்களா? மொத்தம் இரண்டு பேர்தான், ஆனால் படிப்பு முடித்து திருநெல்வேலியிலிருந்து ரயிலேறி சென்னை மாநகர் வந்து எக்மோரை பிரமிப்பாய் பார்த்த நாளெல்லாம் நானே எரேசர் (ரப்பர் என்று சொல்லக்கூடாது என்று தினேஷ் முதல்முறை அமெரிக்கா போனபோது சொல்லிக்கொடுத்தான்) வைத்து மனதிலிருந்து அழித்து மாதங்களாயிற்று. 

.சி.ஆர் சாலையில் இருக்கும் ரகசிய டிஸ்கொதேக்கள் முதல், நியூயார்க்கின் அழுக்கான, ஆங்கிலம் தெரியாது, முதுகு வளைத்து பறிமாறும் சைனா டவுன் வரைக்கும் எனக்குத்தெரியும். உபயம் - நான் கற்ற கணிணி மொழி, அது தந்த வேலை, அந்த வேலை நிமித்தம் நான் பயணித்த நாடுகள், சந்தித்த மனிதர்கள், ஏகப்பட்ட பெண் நண்பிகள் இரண்டே இரண்டு காதலிகள். 

”ஓ ஹாய் .. ஐ ம் ஷான்,”

ண்முகவடிவேலன் என்று சொன்னால் எந்த பெண் திரும்பிப்பார்ப்பாள்? அதுவும் நான் சாஃப்ட்வேர் எஞ்சினியர், கூட வேலை செய்வதெல்லாம் தேவதைகள், ஒரு சீனப்பெண்ணை வேறு நெட்டில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். 'வோ அய் நி' என்று மாண்டரின் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ன் பெயரைக் கேட்டதும் முகத்தின் இரு புருவங்களையும் சுருக்கி உதட்டோரம் சிரித்தவள். 

”ஒரு காபி சாப்பிடலாமா?” 

ப்போதும் கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது திடீரென தண்ணீரிலிருந்து ஒரு மீன் உங்கள்மீது தூண்டில்போட்டால்...?! அவள் கேட்டதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். என்ன இவள் என்னையே போட்டு வாங்குகிறாளா? இரை சுலபமா, ஷன்முகவடி...ச்சே..ஷான் மச்சம்டா உனக்கு..

”ஓ யெஸ், கான்டீன் போலாமா? இல்லை.” 

“ ஹவ் அபொட் தாஜ் ?”  

சிரித்துக்கொண்டே உள்ளே பல் கடித்தேன், இல்லை இவள் ஏதோ முடிவோடுதான் வந்திருக்கிறாள், பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, பெயர் மட்டும் சொல்லி காபி சாப்பிட தாஜ் போகலாம் என்றால் என்னமோ உதைக்கிறது! ஒரு வேளை பல்லவி இவளிடம் ஏதாவது சொல்லி இருப்பாளா என்னைப்பற்றி.


 ல்லவி?? காஷ்.. அவளை பிறகு யோசிக்கலாம். 

“பயப்படாதீங்க நான் வேணா ’பே’ பண்ணிடறேன்” 

மீண்டும் சிரித்தாள். இவள் தூண்டில் இல்லை. என்னைச் சாய்த்த நங்கூரம். அது புரிய வெகு நாளாயிற்று. ஆனால் அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. 

”ஹேய் நான் ஜஸ்ட் ஒரு ப்ரோஜக்ட் கால் பத்தி நினெச்சேன், ஃபைன்.. நோ ப்ரோப்ளம்.. அப்சல்யூட்லி” வார்த்தைகள் மாற்றி நான் வழிவது எனக்கே தெரிந்தது. 


ஷான் கவனம்’ ஒற்றைக்கால் கொக்காய் நிற்கச்சொல்லி உள்ளுக்குள் ஆதாம் பல்லி கத்திக்கொண்டிருந்தது.

“லெட்ஸ் கோ”

ன் முன்னே (டொக்)(டொக்)ந்(டொக்)தா(டொக்)ள். ஹை ஹீல்ஸ், ஜீன்ஸ், ச்சிக் டாப்ஸ், பெர்ஃபெக்ட் வளைவுகள், தலைமுடி..வாவ் இவ்வளவு நீளமான முடி அடர்த்தியாய் கருப்பாய், சீராய் நான் பார்த்ததே இல்லை.


 உங்களுக்கு பிடித்த பிட்ஸ்ஸா நீங்கள் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால்.. ச்சே.. சரியான சாப்பாட்டு ராமனாகிவிட்டேன், ஒரு அழகான பூங்கொத்து விலாசம் தவறி உங்களுக்கு டெலிவரி ஆனால், அய்யோ எப்படி சொல்வது அவளை அதற்குள் லிஃப்ட் உள்ளே நுழைந்து ‘பேஸ்மென்ட்தானே’ என்றபடி (-1) பட்டனை அழுத்தினாள்.


ப்போதுதான் கவனித்தேன், அவள் வலது கையில் அந்த ஆறாவது விரல். அதிலிருந்த தக்குனியூண்டு நகத்துக்கும் பெயர் சொல்ல இயலா நிறத்தில் ஒரு வர்ணம் பூசி இருந்தாள். அந்த் லிஃப்ட் என்னையும் அவளையும் அப்படியே மேலே பிய்த்துக்கொண்டு போய் விடாதா என்றபடிக்கு அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது. 

(தொடரும்)



குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில். கதை பெயர் காரணம். கதை சாதாவா இருந்தாலும் பெயர் கொஞ்சம் நவீனமா இருக்கட்டுமேன்னுதான்...:-)).

--------------
நண்பர்களே..

திரு.ஆரூரன் விசுவநாதன் தனது கொங்கன் பக்கத்தில் பதிவிட்டுள்ள கீழுள்ள இடுகையை படித்து, கண் குறைபாடுள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்/பயன் பெறவும். மிக்க நன்றி.:)

26 comments:

நாடோடி said...

அடுத்த தொடரா....ஆரம்பமே அமர்களம்..

Chitra said...

என் முன்னே ந(டொக்)ட(டொக்)ந்(டொக்)தா(டொக்)ள். ஹை ஹீல்ஸ், ஜீன்ஸ், ச்சிக் டாப்ஸ், பெர்ஃபெக்ட் வளைவுகள், தலைமுடி..வாவ் இவ்வளவு நீளமான முடி அடர்த்தியாய் கருப்பாய், சீராய் நான் பார்த்ததே இல்லை.

...........நடத்துங்க ..........
வெளிசம் - தூண்டில். தமிழ் பாடத்துக்கு நன்றி.

vasu balaji said...

ம்ம்ம். அப்புறம்:)

சீமான்கனி said...

//உங்களுக்கு பிடித்த பிட்ஸ்ஸா நீங்கள் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால்.. ச்சே..//
//, ஒரு அழகான பூங்கொத்து விலாசம் தவறி உங்களுக்கு டெலிவரி ஆனால், //

பதிவும் அப்படிதான்...அருமை...

Tharshy said...

தொடர்ந்து எழுதுங்க,,,,படிக்க ஆவலாக உள்ளது,..நல்ல மொழி நடை அண்ணா....:)

புலவன் புலிகேசி said...

சுவாரஸ்யமா படிச்சிட்டிருந்தேன்...தொடரும் போட்டு முடிச்சிட்டீங்க..அது ஏன் அடுத்த பாகம் முகிலனில்?

Unknown said...

//சுவாரஸ்யமா படிச்சிட்டிருந்தேன்...தொடரும் போட்டு முடிச்சிட்டீங்க..அது ஏன் அடுத்த பாகம் முகிலனில்?
//

ஏன்னா அடுத்த பாகத்தை சிதைக்கப் போறது முகிலன்.. :)))

Unknown said...

நல்ல களம்.. இன்னும் நான் பிரபா அண்ணனோட அடுத்த பாகத்தோட முடிச்சுப் போடணும்.. முயற்சி பண்றேன்.

பிரபாகர் said...

வெளிசம் என இருக்க என்னடா சேம் பிளட் தப்பு பண்ணாதே என பார்க்கையில் தான் நம்மை கவர இட்ட தூண்டில் என தெரிந்தது. கலக்கல் நண்பா! நடை, வர்ணனை அருமை!

பிரபாகர்.

மீன்துள்ளியான் said...

பலா சங்கர் புது தொடர் கலக்கலாக வர வாழ்த்துங்கள் .

சைவகொத்துப்பரோட்டா said...

ஷங்கர் வோ அய் நீ :))
நல்ல ஆரம்பம்.

எறும்பு said...

நீங்கள் எதிர்காலத்தில் மிக பெரிய எழுத்தாளர் ஆகும் அறிகுறி தெரிகிறது.. வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

முதல் வரியே டாப் அண்ணே......

தமிழ் உதயம் said...

எழுதறது ஷங்கரா... சுஜாதாவா... ஒரு சின்ன சந்தேகமே வந்துடுச்சு சார்.

செ.சரவணக்குமார் said...

அடுத்த ஆட்டம் ஆரம்பமா தல‌.

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்....

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

பிரபாகர் சொன்னது
// வெளிசம் என இருக்க என்னடா சேம் பிளட் தப்பு பண்ணாதே என பார்க்கையில் தான் நம்மை கவர இட்ட தூண்டில் என தெரிந்தது//

அதான் நானும் நினைத்தது.உங்களுக்கு
கதை சரளமா வருது.அதோட கொஞ்சம் நக்கல்,கிண்டல்,வழிதல் இப்புடி
நீளும்.அதுனால ஒரு வார்த்த ..சூப்பர்!
முழுக்கதை நீங்க எப்ப எழுதுவீங்க?

திவ்யாஹரி said...

//இலை அல்வாவை சுடச்சுட ஒரு விள்ளள் எடுத்து வாயில் போட்டால் வழுக்கிக்கொண்டு போகுமே அப்படி ஒரு குரலில்,//

//உங்களுக்கு பிடித்த பிட்ஸ்ஸா நீங்கள் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால்.. ச்சே.. சரியான சாப்பாட்டு ராமனாகிவிட்டேன், ஒரு அழகான பூங்கொத்து விலாசம் தவறி உங்களுக்கு டெலிவரி ஆனால்,//

இந்த வரிகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. but.. interest-ஆ படிக்கும் போது தொடரும் போடுறது நல்லா இல்லை அண்ணா..

நசரேயன் said...

ஒரு இடத்திலே படிக்க விட மாட்டீங்க போல இருக்கு

மதுரை சரவணன் said...

natanthom nangkalum . heels sound dudan . super.

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது . வாழ்த்துக்கள் நண்பரே !

Jerry Eshananda said...

படித்தேன்,ரசித்தேன்.// .அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது...//
நாயை விட நாய்க்குட்டி பெஸ்ட்.

CS. Mohan Kumar said...

நான் கூட என்னடா தலைப்பு தவறாக உள்ளது என நினைத்தேன் . புது வார்த்தை கற்று தந்தீர்கள். ஆருரார் பதிவு மிக நல்ல ஒன்று. பகிர்வுக்கு நன்றி

R.Gopi said...

//சுடச்சுட ஒரு விள்ளள் //

ஷங்கர்... அது “விள்ளல்” அல்லவா? ஆஹா... விண்டு போச்சே..

சரி...ரைட்......

Paleo God said...

கோபி சார்..அட ஆமாங்க..:) திருத்தி விட்டேன் நன்றி,:)

முடிந்த வரையில் பிழை இல்லாது எழுதவே விருப்பம். ஆனாலும் எப்போதும் பிசகி விடுகிறது.:( மன்னிக்கவும். ::)))

Vidhoosh said...

///முடிந்த வரையில் பிழை இல்லாது எழுதவே விருப்பம். ஆனாலும் எப்போதும் பிசகி விடுகிறது.:( மன்னிக்கவும். ::)))///
அது சரி. அந்தப் பொண்ணு அவ்ளோ அழகாச்சே.. :))

ம்ம். ந.. ட..க்..க..ட்..டு..ம்..ந.. ட..க்..க..ட்..டு..ம்..ந.. ட..க்..க..ட்..டு..ம்..ந.. ட..க்..க..ட்..டு..ம்..