பலா பட்டறை: 'அது' எது?

'அது' எது?



'அது' நானாக வரவைத்துகொண்டது 'அது' என்ன செய்யப்போகிறது என்று தெரிந்திருந்தும், தெளிவாய் சொல்லப்பட்டிருந்தும் நானே 'அதை' தெரிவு செய்தேன், விதி வலிது. நான் அதை பற்றி கவலைப்படவில்லை, 'அது' என்னை கூட்டிச்சென்ற இடத்தில் கலவையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் சொல்லப்பட்டிருந்ததாகவே இருந்தது வேறு வேறு த்வனியில் இருந்தாலும் நிகழ்வு ஒன்றாகவே இருந்தது. 'அதை' பார்த்தேன் எந்தவித சலனமும் இன்றி அப்படியே இருந்தது. 

நிகழ்வுகளில் நான் கலக்க முடியாது, கருத்துரைக்க முடியாது, ஓங்கி குரலெழுப்ப முடியாது 'அது' ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது. சத்தியத்தை மீற நினைத்தாலும் என்னால் முடியவில்லை. கண்கள் இருண்டது பசி எடுத்தது 'அது'வும் சத்தியத்தை மீறவில்லை கரிக்கும் ஒன்றை தின்னக்கொடுத்தது. மறுப்பேதும் சொல்லாமல் புசிக்கத்துவங்கினேன். 

ண் முன்னே பார்த்த நிகழ்வுகளை சகிக்க முடியவில்லை, சில என்னை வேதனை படுத்தியது. வாளெடுத்து வரவில்லை. வந்திருந்தாலும் 'அது' பெற்ற சத்தியம் என்னை ஏதும் செய்ய விடாது. விதியை வெல்ல முடியாது என்னை நோக முடிவு செய்தேன்.    

காரண காரியங்களுடன் எனக்கு விளக்கப்பட்டிருந்தும் ஏன் இங்கு வந்தேன்? 'அதை' கேட்கலாம் என்றால் என்னால் முடியவில்லை. 'அது' எனக்கான அடையாளத்துடன் நானாகவே இருந்தது. இது இதற்கு முன்பும் எனக்கு நடந்திருக்கிறது அப்போதும் 'அது' என்னோடு இருந்திருக்கிறது ஆனாலும் நிகழ்வுகள் வேறு வேறானதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் எதுவும் செய்ய இயலாது வெறுமனே எனக்கு முன்னால் நடப்பதை ஒரு ஜடமாக பார்த்துகொண்டிருந்தேன். 

வாளிப்பான ஒருவன் சவலை பிள்ளையை தோளில் கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட என் வண்டி எனக்காய் தயாராய் இருந்தது. நான் கண்ட நிகழ்வுகளோடு 'அது'வும் கூடவே இப்போதும் என்னூடே வந்து கொண்டிருந்தது. 

'அது' கூட்டிச்சென்ற நிகழ்வில் சிலர் காரித்துப்பினார்கள், என்னைப் பார்த்தா? அப்படித்தான் தெரிந்தது அல்லது 'அது' அப்படி என்னை நினைக்க வைத்திருக்கலாம், 'அதனை' கேட்கலாம் என்றால் 'அதனுடன்' என்னால் தர்கிக்க முடியவில்லை! 'அது' வெவ்வேறு பெயர்களுடன் எப்போதும் என்னை அழைத்துக்கொண்டே அல்லது நான் அழைத்ததாய் இருக்கிறது. இதோ இப்போதும் இதனை அசை போடும்போதும் 'அது' சாதுவாய் என்னோடே இருக்கிறது. 

என்ன செய்ய?                              

'அதனுடன்'  போகும்போது மனது சமநிலையாய் இருந்தது. வரும்போது அப்படி இல்லை. ஆனால் போகும்போதும் வரும்போதும் 'அது' என்னமோ ஒரே நிலையிலேயே இருந்தது.     

வடிவங்கள் வேறாய் இருந்தாலும் உங்களுக்கும் 'அது' தெரிந்ததுதான் 'அது' எது?

 கொஞ்சம் சொல்லுங்களேன்..! 


பி.கு. 

து இன்றைக்கு எனக்கு நடந்தது! தயவு செய்து கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் நாளை 'அதை' படமாய் காண்பிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய இயலும். நன்றி!      

38 comments:

ஜெட்லி... said...

இன்னைக்கு செவ்வாய்கிழமை அதனால யாருக்கும்
பதில் சொல்ல மாட்டேன்....

ஜெட்லி... said...

ரெண்டு கட்டிங் 'அது' போடுங்க சரி ஆயிடும்னு
நினைக்கிறேன்...அப்புறம் சனிகிழமை அன்னிக்கு
'அது இது எது' பாருங்க...'அது' தானா சரி ஆயிடும்...

Paleo God said...

நாளைக்கு அதனோட படம் பார்த்துட்டு சொல்லு ஜெட்லி.

Chitra said...

ஓங்கி குரலெழுப்ப (comment) முடியாது 'அது' ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது. சத்தியத்தை மீற நினைத்தாலும் என்னால் முடியவில்லை.
......."அத"னால்தான்.

பிரபாகர் said...

மனசாட்சி?

பிரபாகர்.

Paleo God said...

@சித்ராஜி - யோசிங்க :)
@பிரபாகர் - நண்பரே..சாரி இல்லை :)

கார்க்கிபவா said...

சகா முடியல..

சொல்லிடுங்க ப்ளீஸ் :)))

Paleo God said...

அது நியாமில்லை கார்கி ஆனால் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கீங்க. :(

ப்ரியமுடன் வசந்த் said...

ஆவ் ராத்திரி நேரத்தில இடுகாட்டு படமெல்லாம் போட்டு பயமுறுத்துறீங்களேண்ணா...

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா
கடிகாரம்,

இல்லாங்காட்டி
நிழல்

இல்லாங்காட்டி
ப்ளாக்,

இல்லாங்காட்டி
கோபம்

இல்லாங்காட்டி
மொபைல்...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நேத்து புத்தக வெளியீட்டுல வாங்குன ஒரு புத்தகத்துல உள்ள ஒரு கதையா?இல்லையா? உடல்.அதுவும் இல்லையா அப்ப ஆன்மா! சாரிங்க சகோதரா! இதுக்கு மேல யோசிக்க முடியல.

Romeoboy said...

:) (இது தான் எனது பதில்)

vasu balaji said...

mobile:-s

கலகலப்ரியா said...

உடல் என்று கொள்ள இயலாது .. உயிரும் அப்படியே.. //'அது' நானாக வரவைத்துகொண்டது// ஆரம்பமே தடுக்கிறது...

character இருக்கலாம்... கொஞ்சம் இடிக்கிறது... உள்ளுணர்வு...? விதி என்ற சொல் வந்திருக்கு... தலைவிதியாகவும் இருக்கலாம்... அல்லது மதியாகவும் (யார் அது என்று யாரும் கேக்க வேண்டாம்) இருக்கலாம்.. அல்லது வாழ்க்கையாகவும் இருக்கலாம்... இல்லை.... அறிவு? நம்பிக்கை? அட போங்கப்பா...

("இத" வச்சு காமெடி கீமடி பண்ணா... அது வேற கோணத்தில பார்க்கணும்...)

கலகலப்ரியா said...

"பெயர்" ஆ..?

Unknown said...

நான் நாளைக்கி வந்து பதில் சொல்றேன்..

Unknown said...

நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்துட்டீங்களா?

திவ்யாஹரி said...

தூக்கம், கனவு, மனசாட்சி, அன்பு அல்லது காதல்.. அவ்வளவு தான் அண்ணா தோணுது..

சீமான்கனி said...

'அது'வும் 'அதை' பற்றிய உங்கள் 'அது'வும்...'அது' போல 'அது'வாய் உள்ளது...'அது'க்கு என் 'அது'கள்...

Radhakrishnan said...

;) மனசாட்சினு நினைச்சேன், ஆனா அது இல்லைனு சொல்லீட்டீங்க, வேறென்ன அது அது! அதாவது பிரச்சினை!

புலவன் புலிகேசி said...

எனக்கு என்னமோ மனசாட்சின்னுதான் தோனுது...ஆனா ஒரே குழப்பமா இருக்கே..

ஸ்ரீராம். said...

அது என்னங்க....
திகிலா இருக்கு....
உடம்பா?

சைவகொத்துப்பரோட்டா said...

சுய மரியாதை (OR) கோபம் ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதுகூடவா தெரியலை..அது என்னவென்று எனக்குத் தெரிந்துவிட்டது.இது தான் அது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னைப் பற்றி சொல்லனுமுனா நேராச்சொல்லுங்க...
என்னப் பார்த்து என்ன பயம் உங்களுக்கு..

நான் உங்கள் வீட்டுப் பிள்ளையில்லய்யா...

கனவுதானே சார்..

குலவுசனப்பிரியன் said...

நிழற்படமோ?

ரோஸ்விக் said...

ஷங்கர் அண்ணே.... எதை வேணும்னாலும் காமிங்க... ஆனா "அதை" மட்டும் இங்க போட்டுடாதீங்கா... (தப்பா புரிஞ்சுகிட்டா நிர்வாகம் பொறுப்பில்லப்பா...)

அது எனப்படுவது - உங்கள் ஐம்புலன்களா?? உங்கள் நிழலா? கால் பாதமா??

இப்புடி ஒரு பதிவ போட்டு... எல்லாரையும் "அதை" பத்தியே நினைக்க வச்சுட்டீங்க... (இங்கயும் நிர்வாகம் பொறுப்பில்ல... தப்பா புரிஞ்சுகிட்டா...)

Jerry Eshananda said...

நல்லா பிலிம் காட்டுற மக்கா..

நாடோடி said...

//அப்போதுதான் நான் நாளை 'அதை' படமாய் காண்பிப்பதா? வேண்டாமா?//

ஏதோ படம் பார்க்க போயிருக்கீங்கனு எனக்கு தோணுது..

VISA said...

புடிச்சுட்டேன்....
புடிச்சுட்டேன்......
புடிச்சுட்டேன்.........

Vidhoosh said...

என்னங்க.. தர்ஷிணிக்கு ஜுரம்னு ரெண்டு நாள் லீவு விட்டுட்டு அவளோடயே இருந்துட்டேன். நாட்டு நடப்பு ஏதும் தெரில.
அதுக்குள்ளே இங்க எல்லோரும் இப்டி ஆயிட்டீங்க?
"லெமன் ட்ரீ"யில் மனப்'பிராந்தி' ரொம்ப ஜாஸ்தியாயிடுத்தா? :))
blog, smiley, காதல், உங்களோட பழைய பத்து காதலிகள், அல்லது அதில் யாரோ ஒருத்தி, மனசு (அ) இதயம், இணையதளம்,
என்னவோ போடா மாதவா?

Vidhoosh said...

naalaikkuthaan vanthaachche ... cheekiram solidunga.

தமிழ் உதயம் said...

நீங்களே சொல்லிடுங்க. எனக்கு கேட்க தான் தெரியும்.

Unknown said...

கண்டுபிடிச்சுட்டேன்... அது தான

Anonymous said...

//முகிலன் said...

நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்துட்டீங்களா?
//

:)

creativemani said...

காதலா தலைவரே? ஏதோ என்னால யூகிக்க முடிஞ்சது.. ;)

Thenammai Lakshmanan said...

அய்யோ தலை வெடிச்சுரும் போல இருக்கு ...என்னது ஷங்கர் ..?சீக்கிரம் சொல்லுங்க...

தராசு said...

அதை நினைச்சாலே எனக்கு ஒரே இதுவா இருக்குங்க, ஆனா நான் சொல்ல வர்றதைப் பார்த்து நீங்க ஒரு இதுவா ஃபீல் பண்ணுவீங்க, அதனால நமக்குள்ள ஒரு இது வேண்டாமேன்னுதான் நான் அதைப் பத்தி எதுவும் சொல்லலை.