பலா பட்டறை: பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)

பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)பதிவர்கள் என்று ஆரம்பித்து சந்திப்பு/குழுமம்/சங்கம்/கட்சி/பேரவை என ஏதோ ஒன்றில் முடியப்போகும் நேற்றைய சந்திப்பிற்கு நானும் போனேன். 

சிறிய கால அவகாசத்தில் நட்புகளின் அடிப்படையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. முறையான தகவல்கள் அளிக்கப்பட்டது, ஒருங்கிணைப்பு மட்டுமே சில நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் அழைப்பு விடப்பட்ட நிலையில், அதற்கான இடமும், நேரமும் அறிவிக்கப்பட்ட நிலையில், லோகோவில் மட்டுமே சில கருத்து வேறுபாடுகள் வந்தது. முயற்சியில், நோக்கத்தில் என்ன செய்யப்போகிறீற்கள்?? என்பதனை அறிவிப்பு நிலையிலேயே கேட்க்கப்பட்டிருந்தால் ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. அது வரை எனக்குப்புரிந்த வரையில் (அல்லது பெரும்பாலான பதிவர்களின் புரிதலின் படி) ஒரு முறையான நட்புக்கூட்டம் ஆரம்பிக்க இருக்கிறது. அது சங்கமாக, குழுமமாக கட்சியாக இருப்பதற்கு தடைகள் இருப்பின், இது வேண்டும் அல்லது வேண்டாம் என்று முடிவெடுத்து கடந்து போயிருக்கலாம். யார் யாரைக் கட்டாயப்படுத்த முடியும்? எதற்கு இத்தனைக் குழப்பம் என்றே புரியவில்லை. எந்த குழுவும் வேண்டாம் நட்பு ரீதியாகவே இணைவோம் என்றால் அதனை பதிவாகவோ அல்லது பின்னூட்டமாகவோ சொல்லி இருக்கலாம். அல்லது இதனை ஆரம்பித்து வைத்தவர்களுடன் கருத்து வேறுபாடு இருப்பின் புறக்கணிக்கிறோம், எங்களுக்கு தேவை இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம். வேண்டியவர் கலந்து கொண்டிருப்பர், வேண்டாதவர் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கலாம். அதை விடுத்து இது போன்ற ஒரு நிகழ்வை நான் எதிர்பார்க்கவில்லை.

எல்லாவற்றையும் குழப்பி, கடைசியில், இல்லைன்னா சொல்றோம் இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றோம், என்பது போல, குழுவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை சொன்னபோது. கல்கி ஆஸ்ரமமே தேவலை போல இருந்தது. நண்பர்களே எந்த குழுவும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. தயக்கமிருப்பின் சேரவே வேண்டாம். நட்பு ரீதியான சந்திப்பு எப்போதும் தொடரும். நல்ல நட்புகளுக்கான ஒரு தளமாகவே இந்த வலைமக்களை நான் பார்க்கிறேன். அது தொடர வேண்டும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆரம்பிப்போம். கவர்ச்சியாய் ஏதேனும் சொல்லி ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அது தேவையா? இதைத்தான் செய்யப்போகிறோம் என்பதை விட இதைச்செய்யலாம் என்பது சிறப்பானாதாக இருக்காதா? 

உண்மைத்தமிழன் அவர் கருத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டாக தந்தார். அதில் குறைகள் ஏதுமிருப்பின் அதனை பிறகு விவாதித்திருக்கலாம். அல்லது நிராகரித்திருக்கலாம். அதனையே ஒரு காரணமாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. எதற்கும் ஒரு துவக்கம் வேண்டும். பிள்ளை பெறுவது முக்கியம் சுக பிரசவமோ?, சிசேரியனோ? ஆனால் அபார்ஷன் வேண்டாமே. பிள்ளையே வேண்டாம் என்பவர்களுக்கு நிறைய சாதனங்கள் இருக்கிறது. 

துவக்கம் மட்டுமே செயல்படுத்த யாராலும் இயலும். அதன் நகர்வோ, முடிவோ, இப்படித்தான் போகுமென்ற துல்லிய கணிப்போ, யாராவது இவ்வுலகில் இதுவரை செயல்படுத்தி இருக்கிறார்களா?? நான் ஆரம்பிக்கும் ஒன்று இன்னும் ஐம்பது வருடங்களுக்கு ஒவ்வொரு நொடியும் இப்படித்தான் நகரும் என்று யராவது ஒரு பட்டியல் தாருங்கள். உங்கள் குழுமத்தில் நான் ஆயுட்கால மெம்பர் ஆகிறேன்.   

அதுவரை, நேற்றைய நிகழ்வில் இணைய விருப்பமுள்ளவர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள், ஒரு நல்ல துவக்கத்தை நல்லபடியாய் ஆரம்பிக்க, சிறப்பானதாக்க .. 

மெயில் அனுப்ப வேண்டிய முகவரி tamilbloggersforum@gmail.com

நன்றி. 

---

வெண்ணை. இனி இந்த பெயரிலேயே அவ்வப்போது சிலவற்றை எழுதலாமென்று இருக்கிறேன் சிலது பிடிக்கலாம் சிலது மரண மொக்கையாக இருக்கலாம் ப்ளீஸ் பொருத்தருள்க!!!


மனுஷன் உயிரோட இருந்தா நோ பிராப்ளம்
செத்தா ரெண்டு பிராப்ளம்

அவன புதைக்கறதா? எரிக்கிறதா?

எரிச்சா நோ பிராப்ளம்
புதைச்சா ரெண்டு பிராப்ளம்

அங்க புல்லு வளருமா? வளராதா?

வளரலைன்னா நோ பிராப்ளம்
வளர்ந்தா ரெண்டு பிராப்ளம்

அத மாடு தின்னுமா? தின்னாதா?

தின்னலைன்னா நோ பிராப்ளம்
தின்னா ரெண்டு பிராப்ளம்

அது பால் கறக்குமா? கறக்காதா?

கறக்கலைன்னா நோ பிராப்ளம்
கறந்தா ரெண்டு பிராப்ளம்

அத மனுஷன் குடிப்பானா? மாட்டானா?

குடிக்கலைன்னா நோ பிராப்ளம்
குடிச்சா ரெண்டு பிராப்ளம்

அவன் உயிரோட இருப்பானா? மாட்டானா?

உயிரோட இருந்தா நோ பிராப்ளம்
செத்தா ரெண்டு பிராப்ளம்

அவன புதைக்கறதா? எரிக்கிறதா????????????

(யார் வேண்டுமானாலும் தொடரலாம்..)

45 comments: