பலா பட்டறை: டச் (குட் & பேட், ஆல் இன்குலூசிவ்)

டச் (குட் & பேட், ஆல் இன்குலூசிவ்)






யிர்ப்பித்தே வருகிறது ஸ்பரிசங்கள்
சிலிர்ப்பு மட்டுமே தீர்மானிக்கும்
ஸ்பரிசத்தின் மொழி
சொல்லும் வார்த்தைகளற்ற
உணர்ச்சிக் குவியல்

யிரில்லாத உடைகளும்
சித்திரவதை செய்திருக்கிறது
கூட்டத்தினூடே எல்லா ஸ்பரிசமும்
நிறம் பிரிக்கும்வரை

வேட்கைக்கான நடுக்கங்களுடன்
ஆயத்த ஸ்பரிசங்கள் தேடி
உணர்ச்சிகளை திரியாய் உருட்டி
ஸ்பரிசக்குச்சி கொண்டு தீப்பிடித்து
வெந்து, தணியாமல் கனன்று
கடக்கும் காற்றில் சாம்பல்
உடல் நடுங்குகிறது...

ங்குகள் ஒளிர்ந்ததில் மக்கிப்போனது.
மாய உயிர்ச் சுழலின் தந்திரம்,
வட்டத்தின் தொடர் பயணம்,
நீந்தித் தீண்டித் தொடர்ந்துகொண்டே
முடிந்து, தீர்ந்து, முடியவிருக்கும் தருணத்தில்
இச்சுவர்களின் வண்ணம் விலகவாரம்பிக்கிறது.

னித் தவங்கள் தேவைப்படலாம்,
உணர்வுகளைக் குத்தும் பரிட்சைகளும்
வேட்கையின் கணங்கள் மீது சயனத்தின் வரம்
நினைவுகளில் ஸ்பரிசங்களை மீட்க முடியவில்லை
தொடர் சயனத்தின் அழுத்தங்கள் கொப்புளித்து வரலாம்

லியில்லா ரணத்தின் வீச்சங்கள்
ஸ்பரிசங்களுக்கு அருவெறுப்புத் தரக்கூடும்.
ஒரே போல்தான் உடல் நடுங்குகிறது
தளர்ச்சி மட்டுமே ஏளனம் செய்கிறது இருப்பை..


.

20 comments:

Vidhoosh said...

:) அருமை.

எறும்பு said...

///வேட்கைக்கான நடுக்கங்களுடன்
ஆயத்த ஸ்பரிசங்கள் தேடி
உணர்ச்சிகளை திரியாய் உருட்டி
ஸ்பரிசக்குச்சி கொண்டு தீப்பிடித்து
வெந்து, தணியாமல் கனன்று
கடக்கும் காற்றில் சாம்பல்
உடல் நடுங்குகிறது...///


எசுச்மீ... நீங்க நித்தி படம் பாத்து எழுதுனதா??
;)

vasu balaji said...

Salute!

Prathap Kumar S. said...

புரியுது ஆனா புரியல..:))

பத்மா said...

வலியில்லா ரணத்தின் வீச்சங்கள்
ஸ்பரிசங்களுக்கு அருவெறுப்புத் தரக்கூடும்.


அதுபோல்
வலிக்கும் ரணத்தில் ஸ்பரிசம்
மாறாத வடுவை தரலாம்

நல்லா இருக்கு ஷங்கர்

Ashok D said...

கவித வரவரைக்கும் வெயிட் பண்ணலாமே! :)

கவிதை ’எழுத’ முயற்சி பண்ணாதிங்க... முக்கியமா ’topic’ வெச்சி..

let it come automatically

Chitra said...

நடத்துங்க...... நடத்துங்க......

விஜய் said...

உங்களின் கவிதைகள் அடுத்த பரிணாமத்தை அடைய ஆரம்பித்துவிட்டதாக நினைக்கிறேன்.

(நமக்கு இப்பயெல்லாம் தோணமாட்டேன்கிறதே)

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

தமிழ் உதயம் said...

சித்ரா அழகா சொல்லிட்டாங்க.

சீமான்கனி said...

அட பார்ரா...ஷங்கர் ஜி...எதுக்கோ ஆயத்தம் ஆகுராப்ள தெரியுது...இம்ம்ம்...நடக்கட்டும்...
அருமையோ...அருமை...இது எப்போ இருந்து???

மசக்கவுண்டன் said...

ஆஜர் போட்டுக்கறனுங்க. அப்பறமேல வந்து உங்க பதிவுகள ருசிக்கிறனுங்க

ILLUMINATI said...

கவிதைய புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு மூள போதாதுங்க.ஆனா,நல்லா இருக்குற மாதிரி தெரியுதுங்க.முடிஞ்சா நம்ம பக்கமும் வந்து போங்க பாஸ்....

Sanjai Gandhi said...

சிலது குழப்புது.. பலது நல்லா இருக்குது

ஜீவன்சிவம் said...

என்னமோ போ சார்...இத்த மாதிரி கவிதை படிக்கசொல்ல நமக்கு ஒன்னும் பிரியமாட்டேங்குது....
அடுத்த தபா என்னை மாறி முனிசிபாலிட்டி இஷ்கூழு பயனுக்கு பிரியரமாதிரி எழுதி போடு சார்....

வெள்ளிநிலா said...

:)

ஸ்ரீராம். said...

(நமக்கு இப்பயெல்லாம் தோணமாட்டேன்கிறதே)

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//

நமக்கு எப்பவுமே தோண மாட்டேங்குதே...!

நல்ல இருக்கு ஷங்கர்.

Unknown said...

என் காதலி போலவே
இருக்கும்
உங்கள் கவிதைகளையும்
புரிய முயட்சி செய்கிறேன்

புரிந்தும் புரியாததுமாய்தான்
இருக்கின்றன
அவளை போலவே

Paleo God said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..

---

ஊற்றம்னு விளக்கிப்பின்னெழுதும்போதும் இத்துனை கேள்விகளா?? அவ்வ்வ்வ்

:))))

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:) நல்ல முயற்சி ஷங்கர்..

Thenammai Lakshmanan said...

இது முன்பு வந்த ஒரு ஸ்பரிசக் கவிதையின் சாயலை ஒத்திருக்கிறது