பலா பட்டறை: விதி..

விதி..





எவ்ளோப்பா?

முழம் 15 ரூவா தாயி

சரி 2 முழம் குடுங்க, ஆட்டோகார் கொஞ்சம் இருங்க பார்லர் போயிட்டு வந்திடறேன்..

-----

என்னாச்சி

ரீச் ஸ்டேக்கர் பிரச்சனை பண்னுது. கன்டைனர் தூக்கல

ஹைட்ராலிக்ஸ் எதுனா பிரச்சனையா?

இல்ல சார் இஞ்சின் அமுங்குது, லோட் எடுக்கல, ப்ரைம் மூவர்தான் பிரச்சனை,

சரி மெக்கானிக் யாராவது வரச்சொல்லுங்க, ஏகப்பட்ட லாரிங்க நிக்கிது..

சொல்லியாச்சு சார், ஆன் த வே

-----

ஏம்மா இப்படியா செலவு பண்றது, உன் புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் தெரியுமில்ல,?

இல்லம்மா அவர்தான் இப்பதானே கல்யாணம் ஆச்சி எனக்குன்னு யாருமில்ல இப்பதான் நீ இத்தன வருஷத்துல வந்த உறவு, கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம் உனக்கு என்ன வேணுமோ செலவு பண்ணிக்கோ, நீ சந்தோஷமா இருக்கத்தான் நான் சம்பாதிக்கிறேன்றார், நானும் சொல்லிப் பார்த்துட்டேன், கேக்கல, சரி அவர் சந்தோஷம்ன்னு விட்டுட்டேன்..

----

என்னாச்சுங்க?

லோட் எடுக்கல சார், எம்ப்டி கண்டெய்னர் தூக்கினாகூட அப்படியே அமுங்குது..

ம்ம்..  நல்ல டீசல்தான் யூஸ் பண்றீங்களா? ஃபில்டர் எப்ப மாத்தினீங்க?

டீசல் லோக்கல் பங்க்லதான் வாங்கறது, ஃபில்டர் மாத்தறதில்லசார் அப்படியே க்ளீன் பண்ணி போட்றுவோம்..

என்னங்க ஒரு கோடி ரூபாய்க்கு கிரேன் வாங்கிட்டு 1700 ரூவா ஃபில்டர் மாத்த யோசிக்கிறீங்க? கிடைக்கிற டீசல்லயே ஏகப்பட்ட கலப்படம், இதுல ஃபில்டரும் மாத்தலன்னா எப்படி? ஸ்டாக் இருந்தா ஸ்டோர்ஸ்லேர்ந்து எடுத்துட்டு வாங்க..

----

ஹலோ


சார்

ஏன்ப்பா லேட் ஆவுது லோடிங்?

கிரேன் பிரச்சனை சார், மெக்கானிக் பார்த்துகிட்டு இருக்காங்க சரியாகிடும், முடிச்சிடலாம் சார் ஹார்பர் லோடிங்..

சீக்கிறம்ப்பா, பதில் சொல்ல முடியல, போன்ல கத்தறாங்க..

----

சார் ஃபில்டர் இந்தாங்க..

ஸ்பின் ஆன் ஃபில்டர்தானே, ஒரு அசக்கு அசக்கி திருகினா வெளில வந்திடும், புதுசு சுலபமா மாட்டிடலாம், ஓரிங் கூட இல்ல, லீக் ஆவாது, இதப்போய் க்ளீன் பண்ணி போடறீங்களே? ம்ம் மாத்தியாச்சு.. இஞ்சின ஆன் பண்ணுங்க..

ஷ்ர்க்..

டொம்..

ஐய்யோஓஓஓஓ

---

ஹலோ

---
ஹலோ

---
ஹலோ







(.....)

30 comments:

எறும்பு said...

I understood a little..

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கதை..

சந்தனமுல்லை said...

:-(((

சிநேகிதன் அக்பர் said...

விதி!

தலைப்பு கதையை சொல்லுது.

Anonymous said...

எனக்கு புரியலை.
அந்த செலவாளி பொண்ணோட புருஷன் தான் இறந்துட்டாரா?

Unknown said...

புரிஞ்ச மாதிரி இருக்கு

ஆனா புரியல்ல

அண்ணாமலையான் said...

நடத்துங்க... (சாமியார் கெட்டப்புல வந்ததோட எஃபக்டோ? பாவம் விதவை.. சரி சாமியார் பாத்துப்பார்)

vasu balaji said...

ஆஹா. இப்புடி வருதா விதி. ஸ்மார்ட் அண்ட் சூபர்ப்.:)

சைவகொத்துப்பரோட்டா said...

விதி வலியது...............
(இன்னும் புரியல......இப்படிதான சமாளிக்கணும்.....ஹி.......ஹி.... )

க.பாலாசி said...

விதி யாரை விட்டது.....

ஸ்ரீராம். said...

தெரியல....ஒண்ணும் புரியல...ஏதோ...ஏதோ நடந்துருக்கு...கை போச்சா, தலையேவா...

எறும்பு said...

அண்ணே நீங்க இயற்றுகிற கவிதைக்குத்தான் விளக்கம் சொல்லனும்னு பாத்தா, இப்ப கதைக்கும் விளக்கம் சொல்ல வச்சுருவாங்க போலிருக்கு..

சங்கர் said...

பஸ்சுல ஏறுங்க, பேசி புரிஞ்சிக்கிறேன்

VISA said...

suruk!!!naruk!!!super!!!

விக்னேஷ்வரி said...

நல்ல கதை. அதை இன்னும் நல்லா சொல்லிருக்கலாமே ஷங்கர்...

கலகலப்ரியா said...

// எறும்பு said...

I understood a little..

:)//

i understood a little more...

Chitra said...

விதி???? :-(

அன்புடன் நான் said...

நீங்க கனரக வாகன நிபுணரா??? ...

இறந்தது.... யாருங்க?

ருத்ர வீணை® said...

விதி... விதி...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

பாலகுமாரன் டச் இருக்கு.கதை முடிவு தான் ம்ச் விதி.

'பரிவை' சே.குமார் said...

விதி வலியது ஷங்கர்

Unknown said...

இந்தக் கதைய படிக்கிறது எங்க விதி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

யாருடைய விதி முடிந்தது என்று சரியாகத் தெரியவில்லை ஷங்கர். ஒரு chapter close என்று மட்டும் தான் தெரிகிறது.

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லா இருக்கு..இரண்டு கதைகளை நேர்கோட்டில் கொண்டு சென்று ஒரு புள்ளியில் முடித்த விதம் அருமை. பாராட்டுக்கள்.

சாமக்கோடங்கி said...

போட்டுத் தள்ளீட்டீங்களே ஷங்கர்...

(எங்களையும் சேர்த்துத் தான்..)

பனித்துளி சங்கர் said...

நான் சொல்ல நினைத்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க நான் என்ன சொல்வது என்று புரியவில்லை . புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .

பகிர்வுக்கு நன்றி !

Paleo God said...

@எறும்பு,.. me too..
@ஸ்டார்ஜன், நன்றி நண்பரே..
@ராதாகிருஷ்ணன் சார். மிக்க நன்றி சார்..

@சந்தனமுல்லை.. நன்றிங்க.
@சின்ன அம்மிணி.. இருக்கலாங்க.:) ஆனாலும் பாசிட்டிவ் முடிவுகளும் இருக்குங்க.:)
@சிவசங்கர்..வாங்க.. முடிவு உங்க யூகம்தான் நண்பரே..மிக்க நன்றி..
@அண்ணாமலையான் .. ரைட்டு தல..:)
@வானம்பாடிகள்.. நன்றி சார்..:)
@சை.கொ.ப.. அப்படியெல்லாம் இல்லைங்க :)
@க.பாலாசி.. ரூல்ஸ்தானே சொன்னீங்க..:)
@ஸ்ரீராம்.. உங்களுக்கு எது பிடிக்கும்(காது)..:)
@எறும்பு.. அது என் தப்புண்ணே..:)
@சங்கர்.. புரிஞ்சிதா??:)
@விசா.. ரைட்டு..:)
@விக்னேஷ்வரி.. நிச்சயமாங்க.. நன்றி..:))
@கலகலப்ரியா.. வாங்க, மிக்க நன்றி..
@சித்ரா.. ஆமாங்க.
@சி,கருணாகரசு.. வாங்க, நிபுனர்லாம் இல்லைங்க..:) சஸ்பென்ஸ்..:))
@ருத்ரவீணை.. வாங்க, மதி மதி அதானே சொல்ல வந்தீங்க..:)
@சாந்தி லெட்சுமணன்.. அப்படியா?? ப்ச்.. ஆமாங்க. நன்றி.
@குமார்.. வாங்க குமார். நன்றி.
@முகிலன்.. அப்ப எழுதினது..?? :)
@ஜெஸ்வந்தி.. அப்படியா சொல்றீங்க??
@அமைதிச்சாரல்.. மிக்க நன்றிங்க.
@பிரகாஷ்.. அட இல்லீங்க..:)
@பனித்துளி சங்கர்..வாங்க நண்பரே.. மிக்க நன்றி.:)

--
மிக்க நன்றி நண்பர்களே, சில நேரம் என் வேலையில் இவ்வாறான ஆபத்துகள் சகஜமாய் நிகழும், சிறு பிசகும் பலி கேட்க்கும், அந்த ஒரு நொடியை வாசிப்பவரின் மனநிலைக்கே விட்டுவிட்டேன்.. ஏனோ முடிவு எழுத மனம் வரவில்லை. மற்றபடி சிறப்பான காரணங்கள் ஒன்றுமில்லை.
மீண்டும் அனைவருக்கும் மிக்க நன்றி.

Vidhoosh said...

விபரீத கற்பனை.
என்னவோ போடா மாதவா...

--வித்யா

Thenammai Lakshmanan said...

என்ன ஷங்கர் இப்படி முடிச்சிட்டீங்க