பலா பட்டறை: பேரூந்தில் காதல் - தொடர் பதிவு

பேரூந்தில் காதல் - தொடர் பதிவு





"மச்சி" 
"சொல்லுடா நாளைக்கு பஸ் ஸ்டாப் வந்துடு கடைசி பஸ்லதான் காலேஜுக்கு போவோம் "
"அதுவரைக்கும்.." 
"நூல் விடவேண்டியதுதான்.." 
--
"ஏண்டா குமார் இப்படி இருக்கான்?"
"அதோ உள்ள ஒரு அக்கா புடவை கட்டிக்கிட்டு நிக்கிது பாரு, சார் அத டீப்பா லவ் பண்றார் அதான் இந்த பீலிங்.."
"அப்படியா மச்சி," 
"ஆமாண்டா இவனுங்க மாதிரி தினம் ஒண்ணு இல்ல நான் அவள  மட்டும்தான் சின்சியரா லவ் பண்றேன்."
அந்த பெண் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. 
--
அதிகம் பஸ்ஸில் பயணித்திருந்தாலும் அடுத்தவர் காதல்களே அதிகம் பார்த்ததுண்டு. மேல் கம்பியில் விரல்களின் தொடுதல்கள், ஊக்குவிக்கும் நட்புகள், ரன்னிங்கில், படிக்கட்டில் வீரசாகசம், புத்தகம் மாற்றிக்கொள்வது இதெல்லாம் என்னை ஈர்த்ததை விட அவர்களின் முக பாவங்களும், நடையின் வித்தியாசமும், மொத்த உடல் மொழியும் நான் இப்போதும் ரசிக்கும் ஒன்று. யாரும் தங்களை பார்த்துவிடக்கூடாது என்பதை கவனமாய் அவர்கள் கையாளும்போது, சுலபமாய் மாட்டிக்கொள்வது தெரியாமலேயே மாட்டிக்கொள்ளும் காதலர்கள் எங்கேயும் எப்போதும் காணக்கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.             

பேரூந்தில் காதல் என்பது சுலபமல்ல, நிறைய வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும், என்னைப்போல ஒரு வீரசாகசம் செய்யத்தெரியாதவனை துணைக்கு வைத்தால், தேவதையிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கும். ஒரு நாள் என்னையும் நண்பர்கள் பஸ்ஸின் முன் வாசல் பக்கம் ஓட விட்டார்கள். தேமே என்று ஓடும்போது திடீரென வண்டி வேகமெடுத்தது ஓடிபோய் பதட்டத்தில் முன் வாசலின் ஜன்னலை பிடிக்கப்போனபோது  அங்கே உட்கார்ந்திருந்த பெண்ணின் இடுப்பையும் தொட்டு என் கை ஜன்னலோரத்தை பிடிக்க வீல் என்று கத்திய அந்த பெண்ணின் சத்தத்தில் பஸ்ஸின் வீல் நின்றது. செயலின் வீரியம் புரிந்து உடனே தங்கச்சி சாரிம்மா (அப்ப ஸ்நேக் பிரபா என் ப்ரென்ட் இல்லீங்க:) என்றேன். முதுகு தப்பிய அன்று இது இனி வேலைக்காவது என்று முடிவெடுத்தேன்.

சிநேக முகம் காட்டி கண்களில் பேசும் பெண்கள்  எனக்கும் வாய்த்ததுண்டு, எவ்வளவுதூரம் இவள் பின்னால் செல்ல முடியும்?? என்ற கேள்வியில் புன்னைகையோடு முடித்துக்கொண்ட நாட்கள் அதிகம். ஆனாலும் அந்த ஒற்றை புன்னகைக்காய் பஸ்ஸில் மஞ்சு விரட்டும் பசங்களை பார்க்கும்போது வருத்தமும் உற்சாகமும் ஒன்றாகவே வந்து செல்லும்.

இதெல்லாம் நடந்தது வேலூரில், பணி நிமித்தம் சென்னை வந்தும் ரூபாய் இருநூறுக்கு ஐடி இல்லாத எல்லாப் பேரூந்திலும் ஏறும் பாஸ் கொண்டு சர்ச் பார்க்கிலிருந்து திருவேற்காட்டிற்கு, அமைந்தகரை வழியே தினமும் பயணித்த தொன்னூறுகளில், காதல் போய் உரசல்களே அதிகம் தென்பட்டது. இப்போதும் எப்போதாவது சென்னையில் பேரூந்தில் பயணிக்கும்போதும் இதுவே மித மிஞ்சியும் கண்ணில் படுகிறது. இது போக நான் அதிகம் கவனித்தது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களைத்தான் :) நிறுத்தத்தில் ஏறி பாலத்தின் திருப்பத்தில் பர்ஸ் அடித்து இறங்கி விடும் லாவகம் பர்ஸ் பாதுகாப்பு பற்றி எனக்கு சொல்லித்தந்தது.    

யாகூ சாட்  மூலம் நட்பான ஒரு மலையாள தோழியை பணி நிமித்தம் மும்பையில் சந்தித்தபோது அவரை விட வயதில் மிக மூத்த ஒருவருடன் கல்லூரி பஸ் பிரயாணத்தில் காதல் வயப்பட்டு அவருக்கு முன்பே திருமணம் ஆனது தெரியாமல் வீட்டைப்  பகைத்து, பாதி படிப்பில் திருமணம் முடித்து, முதலிரவில் விவரம் தெரிந்து, மீண்டும் படிப்பைத்  தொடர்ந்து முதல் நிலையில் தேறி, ஏமாற்றிய, தூற்றிய, அனைவரையும் உதறி மும்பை வந்து நல்ல வேலையில் தெளிவாய் வாழ்கிறார். 

கணவரின் முதல் மனைவி இறந்து அவர் பெற்ற ஒரே மகனை தன் ஊரிலிருந்து வரவழைத்து இப்போது தன் செலவில் மேற்படிப்பு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். திருச்சூரின் செல்வந்தர் வீட்டுப்பெண் அவர். ஏமாற்றிய கணவர் வெளிநாட்டில் இப்போதும் சந்தேகத்துடன் குத்திக்கொண்டிருக்க எதைப்பற்றியும் கவலை கொள்ளாது, தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து உழைப்பில் நிம்மதி தேடிவரும் அவரிடம் இன்னும்  ஏன் கணவரை சகித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு. தன் செயலால் பெற்றோரை நடை பிணமாக்கி தன் பிறந்த நாளின் போது  தன் பெயரை சொல்லி இறந்த தந்தையை  மும்பையிலிருந்து விமானத்தில் சென்றும் காணமுடியாது போனதையும், தன்னால் காப்பாற்ற முடிந்தும் தன் மீது பாசம் உள்ள தாயை உடன் பிறந்தவர்கள் மும்பை வர விடாது  தடுப்பதையும், யாரோ மூலம் அவருக்கு பணம் அனுப்புவதையும், மன நிலை சரியில்லாத தன் சகோதரிக்காய் தன் பாகத்திற்கான சொத்து முழுவதையும் தந்ததையும் சொல்லி, இது தான் செய்த அந்த தவறுக்கான ஒரு தண்டனையாய் நினைப்பதாய் சொன்னார். 

பிரிதலின் மூலம் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும், பிரிந்தவைகள் கிடைக்காது என்பதால் இது தன்னாலேயே தொடர்வதாய் சொல்லியபோது எக்காலத்திலும் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாது என்பது எனக்கு புரிந்தது.                  

எவ்வளவோ ஸ்வாரஸ்யமாய் சொல்ல நினைத்தும், பேரூந்தில் காதல் என்று நினைத்த போது என்னை பாதித்த இந்த பெண்மணியின் வாழ்வை தவிர்க்க இயலாமல் பதிகிறேன்.    
                               
தொடர அழைத்த சங்கவிக்கு நன்றி! 

             

28 comments:

Ramesh said...

பேருந்தில் நீங்க எந்தப்பக்கம்??

Unknown said...

இப்பிடி நிறைய பேர் சாட் முலமாக ஏமாறி தங்கள் வாழ்கையை தொலைத்து விட்டு இருக்கிறார்கள்

பத்மா said...

அட என்னங்க சட்ன்னு கொஞ்சம் கஷ்டமா போச்சு .
நல்ல எழுதிருக்கீங்க

settaikkaran said...

ஆஹா! நான் தான் ஃபர்ஸ்ட்டா? :-))

ரொம்பவே அருமையா எழுதியிருக்கீங்க! பாராட்டுக்கள்!!

நட்புடன் ஜமால் said...

கேரள டாக்டர்ட்ட
இப்படி நமக்கு தெரிஞ்சவங்க இரண்டாவதா மாட்டினாங்க, அப்புறம் அவரை தலாக்கிட்டு இப்போ திருமணம் முடிந்து குழந்தையோடு நிம்மதியா நல்லவிதமா இருக்காங்க - ஏனோ அவங்க ஞாபகம் வந்துடுச்சி

Chitra said...

பிரிதலின் மூலம் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும், பிரிந்தவைகள் கிடைக்காது என்பதால் இது தன்னாலேயே தொடர்வதாய் சொல்லியபோது எக்காலத்திலும் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாது என்பது எனக்கு புரிந்தது.

.......... As usual, கலக்கல் கருத்துக்களுடன்........... வித்தியாசமான பதிவு.

பாலா said...

பண்ணண்டாவது படிக்கும்போதும்... காலேஜ் செகண்ட் இயர்லயும்.. எனக்கும் இந்த அனுபவம் இருந்துச்சி.

ஆனா.. அதெல்லாம்... பஸ்ல இருந்து.. பொண்ணுங்களின் ஒருதலைக் காதல். நான் ஒரு கெத்’தா.. அதை வச்சிருந்தேன். :)

ச்ச்சேட் நட்பு-திருமணத்தில்... நல்லாயிருக்கறவங்களையும் தெரியும். எனக்குத் தெரிஞ்சி.. யாரும் மாட்டினதில்லை.

sathishsangkavi.blogspot.com said...

நண்பரே கலகலன்னு ஆரம்பிச்சு....

கடைசியா மனச அள்ளீட்டிங்க............

என் வேண்டுதலுக்கு இணங்க ஒரு அற்புதமான பதிவை பதித்தற்கு நன்றி நண்பா............

vasu balaji said...

wow.இந்தத் தொடர்களில் இதுவரை வந்ததில் பெஸ்ட் ஷங்கர்.

துபாய் ராஜா said...

அக்மார்க் ஷங்கர் ஸ்டைல்...

Unknown said...

நல்லா ஆரம்பிச்சி சூப்பரா முடிச்சிட்டீங்க தலை.. :))

VISA said...

தமிழ் எழுத்து மாற்றம் பற்றி சுட்டி இருக்கிறது.
எழுத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றட்டும் ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வருமானால் அது போதும் ஹீ ஹீஹீ

கலகலப்ரியா said...

நல்லாருக்கு...

நாடோடி said...

ஜாலியா ஆர‌ம்பிச்சி..வ‌ருத்த‌மா முடித்து விட்டீர்க‌ள்..

விக்னேஷ்வரி said...

குறும்புடன் நெகிழ்வாகவும் இருக்கும் பதிவு.

பனித்துளி சங்கர் said...

{{{{காதல் போய் உரசல்களே அதிகம்}}}}

உண்மைதான்!!

அருமையான பதிவு நண்பரே!!
வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

very touching shankar.

பா.ராஜாராம் said...

அருமையான நடையோட்டம் ஷங்கர்!!

என் நடை பாதையில்(ராம்) said...

நல்லதுங்க.... ஒரு கதை சொல்லிருந்தா கூட இவ்வளவு நல்லா இருந்திருக்காது. இந்த தொடர்பதிவால் சில வேளை சில நல்ல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியுது.

ஸ்ரீராம். said...

பிரிதலின் மூலம் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும், பிரிந்தவைகள் கிடைக்காது என்பதால் இது தன்னாலேயே தொடர்வதாய் சொல்லியபோது எக்காலத்திலும் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாது என்பது எனக்கு புரிந்தது"//

நல்லா எழுதறீங்க ஷங்கர்...உங்க நடையில் கணப் படும் முதிர்ச்சி கவர்கிறது.

பிரபாகர் said...

நண்பா, யதார்த்தமாய் சொல்லி, இறுதியில் அந்த மலையாள சகோதரியின் கதையினை சொல்லி... கலக்கி கலங்கடித்திருக்கிறீர்கள்...

நன்றி நண்பா பகிர்வுக்கு!

பிரபாகர்.

தமிழ் மதுரம் said...

பேரூந்தில் காதல் என்பது சுலபமல்ல, நிறைய வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்//


அண்ணாச்சி என்ன அனுபவமோ?

தமிழ் மதுரம் said...

பேருந்துப் பயணம் போரடிக்காமல் சுவாரசியமாக உள்ளது. அது சரி இந்த பஸ் நிக்காதோ தலை?

க.பாலாசி said...

//ஏமாற்றிய, தூற்றிய, அனைவரையும் உதறி மும்பை வந்து நல்ல வேலையில் தெளிவாய் வாழ்கிறார். //

ஆச்சர்யம் தரும் பெண்மணி.... தொடர் இடுகையின் போக்கை மாற்றியிருக்கிறீர்கள் சிறப்புடன்....

Vidhoosh said...

to meet people and learning from their experiences is indeed a misfortune. or should i call it a fortune? :(

அன்புடன் மலிக்கா said...

mmmமிக மிக அருமை. யதார்தங்களை நடபோட்டபடி அசத்திட்டீங்க..

இரசிகை said...

ithukku mela yethaiyum solla mudiyaathu...!

பின்னோக்கி said...

வித்தியாசமான பெண்மணியை, தொடர்பதிவில் நுழைத்தது அருமை