பலா பட்டறை: சனிக்கிழமை சந்திப்போம்..

சனிக்கிழமை சந்திப்போம்..




Web






சென்ற பதிவிற்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. பல வருடங்களாக வித விதமாய் வரும் அது போன்ற மெயில்களை அழித்துவிடுவேன். ஆயினும் இன்றும் இது தொடர்கிறதென்றால், இன்னும் அப்பாவி (அல்லது பேராசை) மக்கள் இவர்களின் வலையில் விழுகிறார்கள் என்றே தெரிகிறது. சில பின்னூட்டமும், மெயில்களும் அதனை உறுதி செய்தது. (நண்பர்களின் நலன் கருதி அவற்றை நான் வெளியிடவில்லை) மற்றபடி தாமதத்திற்கு ஓர் மன்னிப்பு பிளீஸ்..:))

---

சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சனிக்கிழமை சந்திப்பில் அனைவரையும் காண ஆவலாய் இருக்கிறேன். நல்ல துவக்கமாய் அமைய வாழ்த்துகளும், ஆவலும்..


நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
6. முனுசாமி சாலை, 
மேற்கு கே.கே.நகர். 
சென்னை: 

தொடர்புக்கு 
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308 
நர்சிம் ; 9841888663 
பொன்.வாசுதேவன் : 9994541010 

--



கீழே உள்ளதிற்கும் ஜெட்லிக்கு நான் சொன்ன கவிதை எழுதவது எப்படிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. :))



பச்சைய நாக்குகள் கருகி நிறைந்திருந்த அடர்கானகத்தில்
என் பாதங்களின் அழுத்த ஒலிச்சிதறல்களில்
குளுமையை அனுபவித்தவாறே
கோடாலிகொண்டு விறகெறிக்க வாகாயிருக்கும்
மரத்தினைத் தேடி அலைகின்ற கண்களுக்கு
விறைத்திருக்கும் அரிசி வேகவைக்கும்
சிந்தனையில் போதி மரமும் பொருட்டாயில்லை..

------------

ராஜ கோபுரம்
அண்ணாந்து தரிசனம்.
சிறியதாக்கும் ஒரு மலை
அதையும் தொழச்சொல்லிய ஒரு கட்டளையில்
முடிவில்லா வெளி
கோடுகளாலான
அளவுகளை நகைத்துக்கொண்டிருக்கலாம்..



.

21 comments:

சீமான்கனி said...

//கோடாலிகொண்டு விறகெறிக்க வாகாயிருக்கும்
மரத்தினைத் தேடி அலைகின்ற கண்களுக்கு
விறைத்திருக்கும் அரிசி வேகவைக்கும்
சிந்தனையில் போதி மரமும் பொருட்டாயில்லை..//

சூப்பர்...நண்பர்கள் எல்லோரையும் நான் மிகவும் கேட்டதாக சொல்லவும்.....

vasu balaji said...

தன்யனானேன் சுவாமி

ஜெட்லி... said...

சந்திக்கும் போது கவிதை எதுவும் சொல்லாமல்
இருந்தால் சரி....:))

நட்புடன் ஜமால் said...

ஒரு நாள் கழித்து சென்னை வருகிறேன் நான் - உங்கள் ஜாய் செய்ங்க.

Paleo God said...

@ கனி : கண்டிப்பாக..:)

@ வானம்பாடிகள்: வேணும் தரிசனம்..:))

@ பழமைபேசி: நன்றிங்க..:)

@ ஜெட்லி : ரைட்டு :)

@ ஜமால்: அடடா :( நம்மள் ஜாய்ங்க.

settaikkaran said...

சந்திப்பு வெற்றிகரமாக இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!

settaikkaran said...

சந்திப்பு வெற்றிகரமாக இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

அய்யய்யோ நீங்க கவிதை எழுதறவரா. தெரியாமா வந்திட்டேன். அப்படியே ரிவர்சிக்கிறேன்:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

சனிக்கிழமை சந்திப்போம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அரிசி வேகவைக்கும்
சிந்தனையில் போதி மரமும் பொருட்டாயில்லை..//

கானகம் அழித்து அகிலம் அழிக்காதேனு எந்த மரம் சொல்லிக் கொடுத்து போதி மரம் ஆகப் போகிறதோ ?

Paleo God said...

@சேட்டைக்காரன் :: நன்றிங்க:)

@வித்யா:: இனிமே எச்சரிக்கை போட்டுடறேங்க..:))

@ ராதாகிருஷ்ணன்:: சந்திப்போம் சார்:)

@ நாய்குட்டி மனசு:: வாங்க :) ஒரு வேளை கடைசி மரமாக இருக்கலாம் :(

ஏதோ உங்களுக்காவது பிடிச்சிதே..:) நன்றிங்க.

Chitra said...

வாழ்த்துகள்!
Best wishes!

Ashok D said...

நானும் ஆட்டத்திற்கு வரலாமா...

கவித 1 அட அட ... :)

க.பாலாசி said...

நல்லா கொண்டாடுங்க...

ரெண்டாவது கவிதைதான் புரிந்தது கொஞ்சமாய்....

Vidhoosh said...

:) saringna... :))

நர்சிம் said...

வணக்கம் ஸார்.

வாழ்த்துகள்

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Wow Shankar... Sanikkilamai santhippom!!! :)

'பரிவை' சே.குமார் said...

உங்கள் கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

Romeoboy said...

கண்டிப்பா ..

Anonymous said...

சனிக்கிழமை சந்திக்கலாம் சங்கர். காத்திருக்கிறேன். :-)

துபாய் ராஜா said...

அருமை.வாழ்த்துக்கள்.