பலா பட்டறை: அங்காடித்தெரு - சுடும் நிஜம்..

அங்காடித்தெரு - சுடும் நிஜம்..




அம்பை நாணில் பூட்டி குறிபார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனைப்பார்த்து வித்தை சொல்லித்தந்த குரு கேட்டார்.

"என்ன தெரிகிறது? "

"மரம்"

"பிறகு?"

"கிளை"

"ம்ம்.. பிறகு"

"ஒரு பறவை"

”சரி வேறு”

”அதன் கண்கள்..”

அடுத்த சிஷ்யனைப்பார்த்து கேட்டார்..

”உனக்கு??”

”பறவையின் கண்கள் மட்டும்..”

”இதுவே சரியான பார்வை. அம்பை விடு இலக்கு விழும் வெற்றி உனதே.”

--

ஆனால் அங்காடித்தெரு படம் முதல் கோணத்தை சொல்கிறது. இப்படித்தான் பல தேவைகளுக்காக பலதரப்பட்ட மனிதர்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நம் குறி நமது தேவைகள் மட்டுமே. அதில் தவறில்லை ஆனால் அதனை நிறைவேற்றும் மனிதர்களுக்கும் நம் போலவே ஒரு வலியுண்டு, வாழ்வுண்டு, ஆசைகளுண்டு அதனையும் புரிந்துகொள்வோம், மதிப்போம் என்று உணரவைக்கிறார் இயக்குனர் திரு.வசந்த பாலன்.  

இயல்பான காட்சிகள், பாத்திரங்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு, திரு.ஜெயமோகன் அவர்களின் வசனம், போன்றவை படத்தின் பலம். உயர் ரக காரில் காலில் செறுப்பு கூட இல்லாது கடைக்கு வந்திறங்கும் முதலாளி (இவர்களின் வியாபார சூத்திரங்கள் அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு புரியும். என்ன இவர் வாட்ச் கட்டி இருக்கிறார், நான் பார்த்தவர்களுக்கு அது கூட கிடையாது!!)

 ஆண்டாண்டு காலமாய் இன்வெஸ்டிகேஷன் ஜர்னல்கள் (என்று சொல்லிக்கொள்ளும்) கூட முழுமையாய் சொல்லமுடியாத/இயலாத/சொல்லாத ஒரு களம் இங்கும் முடிந்தவரையில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கே ஒரு பெரிய சபாஷ் போடலாம்.    

சின்னச் சின்ன கதா பாத்திரங்கள் மூலம் பெரிய விஷயங்கள் சொல்லப்பட்ட விதம் அருமை. முக்கியமாய் கதாநாயகியின் தங்கைக்கு வரும் ஒரு பிரச்சனை/கையாண்டவிதம். கண் தெரியாத பெரியவர், குள்ளமான மனிதரும் அவர் மனைவியும், நாயகியின் தோழிகள், நாயகன்/நாயகியின் முறிந்த காதல், கடையின் கண்கணிப்பாளர், இப்படியாக படம் முழுவதும்.

படம் இயல்பாகவே சில கேள்விகளை உள்ளுக்குள் எழுப்பும்? அது நம்மின், மனிதத்தின் சுயபரிசோதனை பற்றியதாக, அது புரிய விரும்பாதவர்கள்/தெரியாதவர்களுக்கு மேலே சொன்ன பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.

கற்றுக்கொடுக்கப்பட்டவை தாண்டி கற்றலும் நல்லதுதானே.

வாழ்த்துகளும், நன்றியும்..

திரு.வசந்த பாலன் அவர்களுக்கும்,
மற்றும் கண்ணில் நிறைந்த அத்துணை கதாபாத்திரங்களுக்கும்.


மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.


.

24 comments:

துபாய் ராஜா said...

பதிவின் கடைசிவரி படித்து என் கண்களிலும் ஈரம் நண்பரே...

vasu balaji said...

ம்ம்

பாலா said...

குருவி மட்டுமே எங்க ஊருக்கு தியேட்டர் விசிட்டும் என்பதால்... திருட்டு டிவிடியில் உணரப் போகும் என்னை... வசந்தபாலன் மன்னிப்பாராக.

சீமான்கனி said...

அருமை தல ஆர்வமாய் இருக்கிறேன்...நன்றி...

என் நடை பாதையில்(ராம்) said...

அழ வைக்கும் படத்திற்காக நானும் பல வருடமாக காத்திருக்கிறேன்.

பாத்திருவோம்...

Unknown said...

//குருவி மட்டுமே எங்க ஊருக்கு தியேட்டர் விசிட்டும் என்பதால்... திருட்டு டிவிடியில் உணரப் போகும் என்னை... வசந்தபாலன் மன்னிப்பாராக//

கசக்கின்ற உண்மைதான்.. என்னையும் வசந்த பாலன் மன்னிக்கட்டும்..

தியேட்டர் டிக்கெட்டுக்கான பணத்தை தயாரிப்பாளருக்கு அனுப்பி வைக்க முடியுமென்றால் செய்ய வேண்டும்.

Chitra said...

////மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.////


...... ஆஹா..... உங்கள் மனதை நெகிழ வைத்து விட்ட படத்தை பற்றிய விமர்சனம், அருமை.

மணிஜி said...

நேற்று இரண்டாவது முறை அழுதேன்...

நாடோடி said...

உங்க‌ள் விம‌ர்ச‌ன‌த்தில் வ‌லியை உண‌ர முடிகிற‌து..‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

என் கண்களிலும் ஈரம்

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!!!
இரத்தின சுருக்கம், அழகு.

butterfly Surya said...

கவிதைக்குரிய நயத்தோடு அருமையான விமர்சனம்.

நல்லவேளை உங்களை மிஸ் பண்ணியிருப்பேன்..

Vidhoosh said...

:) எழுத எழுத எழுத்து மேம்படுவது வெகு சிலருக்கே வாய்க்கிறது. அதுவும் VISIBLE ஆக தெரியக் கிடைப்பது இன்னும் அரிதே. நான் அப்படிப்பட்ட அற்புதமான எழுத்து வடிவங்களை காண்பது நர்சிம், மணிஜீ மற்றும் உங்களிடம். வாழ்த்துக்கள். இன்னும் எழுதிக் கொண்டே இருங்கள்.

சினிமா! இதையும் எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை :) "செய்யணும்" லிஸ்டில் இதுவும் இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

//கற்றுக்கொடுக்கப்பட்டவை தாண்டி கற்றலும் நல்லதுதானே.

வாழ்த்துகளும், நன்றியும்..

திரு.வசந்த பாலன் அவர்களுக்கும்,
மற்றும் கண்ணில் நிறைந்த அத்துணை கதாபாத்திரங்களுக்கும்.


மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.
//

கவிதைக்குரிய நயத்தோடு அருமையான விமர்சனம்.

முகில் said...

அருமையான விமர்சனம்

Anonymous said...

பாக்கணும்னுதான் இருக்கேன். ஆனா சோகக்கதைனா பாக்க யோசிக்கறேன்

ஜெட்லி... said...

என்ன அண்ணே சண்டே சத்யமா.....

வரதராஜலு .பூ said...

உங்கள் விமர்சனம் அருமை சங்கர்
//மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.//

ரொம்பவே டச்சிங் !!!

Radhakrishnan said...

உங்க பதிவை நான் வாசிக்கல ஷங்கர், இப்படி படம் பிடிச்சி காமிச்சாதான் நம்ம மக்களுக்கு உண்மை சுடுமோ? வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களில் நாமும் ஒருவரே.

Radhakrishnan said...

தினம் தினம் நாம் பார்க்கும் அவலங்களை விடவா ஒரு திரைப்படம் காமித்து விட இயலும்? உங்கள் கடைசி வரிகளுக்காக இந்த வரிகள்.

rajasundararajan said...

//ஆண்டாண்டு காலமாய் இன்வெஸ்டிகேஷன் (என்று சொல்லிக்கொள்ளும்) ஜர்னல்கள் கூட முழுமையாய்ச் சொல்லமுடியாத/ இயலாத/ சொல்லாத ஒரு களம் இங்கும் முடிந்தவரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.//

சரிதான்.

உங்கள் மகாபாரத எடுத்துக்காட்டு தனித்துச் சிறக்கிறது. பறவையின் கழுத்துமட்டுமே (கண் என்பது உங்கள் பாடம்) தெரிவதே சரியான பார்வை என்றுதான் நானும் நினைத்திருந்தேன். வியாஸர் மாதிரி மகான்களை வினவாமல் ஏற்றுக்கொள்கிற என் மரபுக் கோளாறு. உங்கள் எழுத்தை வாசித்த பிறகுதான், அது ஆதாய நோக்கு; கலைஞனுக்குரிய நோக்கு மரம், கிளை,... என்று காண்பதே என்று ஞானம் வந்தது.

நன்றி.

Priya said...

நேற்றுதான் நானும் பார்த்தேன். என்ன சொல்வது... நீங்க சொல்லியது போல் "உணர்ந்தேன்":(

Paleo God said...

மிக்க நன்றி!!

@துபாய் ராஜா..
@வானம்பாடிகள் சார்
@ஹாலிபாலி..
@கனி
@ராம்
@முகிலன் (அடுத்த முறை செல்லும்போது கேட்கிறேன்)
@சித்ராஜி
@மணிஜீ :(
@நாடோடி
@ராதாகிருஷ்ணன் சார்
@சைவகொத்துபரோட்டா
@சூர்யாஜி
@விதூஷ்ஜி (இல்லீங்க!) :)
@குமார்
@ராமு
@சின்ன அம்மிணி (அட பாருங்க மேடம்)
@ஜெட்லி :)
@வரதராஜலு
@V.ராதாக்ருஷ்ணன். (சில நேரங்களில், ஆமாங்க)
@ராஜசுந்தரராஜன்:: மிக்க நன்றி சார் படத்தின்மூலம் என்னுள் நுழைந்தது, உங்களின் மூலம் இன்னும் பலமாய் பயணப்படட்டும்..:)
@ப்ரியாஜி நன்றிங்க.

பின்னோக்கி said...

முதல் எ.கா அருமை.

இந்த படம் வந்த பிறகு, அரசு அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல். நல்லது நடந்தால் நல்லதே.