பலா பட்டறை: வெண்ணை (0.06) (உரைக்காதவைகள்)

வெண்ணை (0.06) (உரைக்காதவைகள்)




தலைவரே வாழ்க..
தலைவர் வாழ்க...
தலைவா வாழ்க...
தலைவனே வாழ்க...

ஏவ்வ்வ்வ்வ்...
கவர் கொடு நண்பா
கடை மூடிடுவான்
கிளம்பரோம்..


--


சில நேரங்களில்
கண் தெரிவதில்லை
காது கேட்பதில்லை
புத்தி உரைப்பதில்லை
ஏதும் நிகழந்ததாகவும்
நினைவில்லை,
ஆயினும் அந்தச் சில நேரங்களின்
குறிப்புகளை வேறொரு நாளில் கக்க
என் பல்லிடுக்குகளில்
பத்திரப்படுத்தி இருக்கிறேன்

இருப்பினும், இருப்பினும், இருப்பினும்
எல்லாம் மரத்து
உங்களைக் காப்பாற்ற
எப்போதும்
என்னையே தேர்ந்தெடுங்கள்..!


--


வலிஒலிகள் எழுப்பாதமையால்
ஆணவம் கொண்டயர்ந்தவனுக்கு
சும்மா துப்பிய எச்சிலில்
புகை மூட்டக்கணக்கு
மூச்சு முட்டுகிறது..

--

வீம்புக்காய் சுவற்றிலடித்த
கீரையைய்யே வழித்து, வழித்து
தின்ற வீரனிடம்
மானம், அவமானமெல்லாம்
உவமானத்தில் பிசைந்து
எகனை மொகனை பொறையுடன்
உனக்கே ஊட்டி, பிண்டமே
உன் உயிர்வளர்த்தவன் நான் என்பான்
உவகை கொள்,
உயிர் எடுக்கும்வரை
உயிர் கொடு
அவனுக்கே எப்பொழுதும் முடிகொடு..!


---

தல

இன்னாய்யா?

என்னாத்தல இப்படி பண்ணிட்ட மானம் பூட்ச்சு.. இனிமே எப்படி வெளில தல காட்டறது

அடப்பாவி, கேணையாடா நீ? அதெல்லாம் ஒண்ணுமில்லடா? வா அந்த சேட்டு கடைக்குப் போலாம்

சேட்டு, அடமானம் வெக்கனும்..

இன்னாதுப்பா? தங்கமா, வெள்ளியா??

இல்ல சேட்டு, மானம், மருவாத, மனித நேயம்..

யோவ் லூசாய்யா நீயி? அதுக்கெல்லாம் எவன்யா துட்டு குடுப்பான்..போய் வேற எதுனா எட்த்துகினு வாய்யா..

சேட்டு சொன்னத கேட்டியா?  அதெல்லாம் டப்பு பேராதுன்னு??
சொம்மா கூவாத, எங்கனா, எதுனா பீராய முடியுமான்னு பார், பொழப்ப கவனி. புரியிதா??





.

26 comments:

யாசவி said...

expressed in nice way

என் நடை பாதையில்(ராம்) said...

புரியறக்கே இரண்டு முறை படிக்கவேண்டி இருக்கு தல!

சங்கர் said...

எப்பவும் போல

vasu balaji said...

ஓஓ. இதத்தான் ரவுண்ட் கட்டி அடிக்கறதோ. ஆனா மானம் மருவாத மனிதனேயம் கூட சேட்டுகிட்டதான் அடமானத்துக்கு போகணும்னு சொன்ன உள்குத்து டாப்பு. இந்த வெயில்ல வெண்ணனு பேரு வெச்சிகினப்பவே தெர்து. தில்லு கார மன்சம்பா நீய்யி:))

Vidhoosh said...

வெண்ணை புளிச்சு மஞ்சப் பூத்துப் போச்சு...

அவ்வ்.....

தராசு said...

//சொம்மா கூவாத, எங்கனா, எதுனா பீராய முடியுமான்னு பார், பொழப்ப கவனி. புரியிதா??//

புரியுதுபா, அல்லாம் புரியுது, டேங்சுப்பா.

Unknown said...

நல்லாக்கூவுறபா நீயி..

Unknown said...

// April 19, 2010 12:00 PM , Vidhoosh(விதூஷ்) said...
வெண்ணை புளிச்சு மஞ்சப் பூத்துப் போச்சு...

அவ்வ்.....//

புளிச்சாவது கடைக்கு வந்துச்சே?? சில பேருக்கு அதுகூட வரலை..

Ahamed irshad said...

//பொழப்ப கவனி. புரியிதா??//

ரொம்ப நல்லாவே பிரி சாரி புரியுதுப்பா....

settaikkaran said...

உறைக்காதவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள இந்த உரைக்காதவைகளைப் படித்ததும் எமக்கு உறைக்கிறது.

க.பாலாசி said...

இப்டி நாறடிச்சிட்டீங்களே தலைவரே... குத்துன்னாலும் இது குத்து....

உண்மைத்தமிழன் said...

யாரையோ குறி வைத்து எழுதியிருப்பது போல் தெரிகிறது..?

யாரைன்னு நீயாவே சொல்லி்ட்டா உனக்கு நல்லது தம்பி..???????

Anonymous said...

பாதி புரிஞ்சு பாதி புரியாம இருக்கு

பனித்துளி சங்கர் said...

/////தலைவரே வாழ்க..
தலைவர் வாழ்க...
தலைவா வாழ்க...
தலைவனே வாழ்க...

ஏவ்வ்வ்வ்வ்...
கவர் கொடு நண்பா
கடை மூடிடுவான்
கிளம்பரோம்..///////


அட நம்ம மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் வந்ததைப் பற்றி எழுதி இருக்கீங்க போல .

ஹேமா said...

இன்றைய அரசியல் நிகழ்வின் வேதனை நகைச்சுவையாக வெளிப்பட்டதோ ஷங்கர்!

நாடோடி said...

உங்க‌ கோப‌ம் புரியுது.......

ரவி said...

ரொம்ப நல்லா இருக்கு ஷங்கர்.

எல் கே said...

kobam :)

Kiruthigan said...

ரொம்ப நல்லாகீது..

பத்மா said...

செவுத்து கீரைய வழிச்சு போடுடி சொரண கெட்டவளேயும், பீராய்தலையும் படிக்கும் போது
கோபத்திலும் ஒரு சந்தோசம் வருது .
தமிழ் மணம்

sathishsangkavi.blogspot.com said...

வழக்கம்போல் ஆனால் கலக்கல்....

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

nalla irukunga!! :) but eppadi ippadiyellam???

சீமான்கனி said...

//எல்லாம் மரத்து
உங்களைக் காப்பாற்ற
எப்போதும்
என்னையே தேர்ந்தெடுங்கள்..!//

நச் வரிகள் ஷங்கர் ஜி...வாழ்த்துகள்....

Chitra said...

//பொழப்ப கவனி. புரியிதா??//

.....இதாங்க நாட்டு நடப்பு.....

'பரிவை' சே.குமார் said...

இன்றைய அரசியல் நிகழ்வின் வேதனை நகைச்சுவையாக வெளிப்பட்டதோ ஷங்கர்!

.....இதான் நாட்டு நடப்பு.....

Paleo God said...

அனைவருக்கும் நன்றி!!

--

இனியாவது, நல்லது நடப்பின் மகிழ்ச்சி!