பலா பட்டறை: வெண்ணை (0.07) (கூடு தாவல்)

வெண்ணை (0.07) (கூடு தாவல்)




ன்ன செய்யப்போகிறேன்? என்ற கேள்வி எழும்போதெல்லாம் அன்றைய தேவைக்கான இரை என் கண்முன்னே விழும் அல்லது நானே அதனை தேர்ந்தெடுத்துக் கொள்வேன். இதுதான் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளின்றி, வருவதை வரவில்வைக்கும் வித்தை குரூரமாயினும் எனக்கு ஏற்புடையதாயிருப்பதற்கு காரணம், எனக்கும் துணை உண்டு,  நினைவுகளின் தாக்கத்தில் அனுபவித்து சுகித்தலில் பிறந்த குழந்தையும், குடித்து புத்தியின் தெளிவுகளற்ற மோன மிதப்பின் கூடலில் பிறந்ததும், சிறந்த வேட்டையின் இரை கண்ட களிப்பில் அவளே வந்து சுகித்ததில் பிறந்ததுமாய் என் வேட்டைகளுக்கு முடிவே இல்லாத பசி கொண்ட குஞ்சுகள் கொண்ட கூடு தினமும் இரை தேட வைக்கும். தவறு, சரி என்பது தாண்டி தின வாழ்வும் வெறுமையான எதிர்காலமும் நல்லவை, கடவுள், அடுத்தவன் துயரம் என்பதை நான் யோசிப்பதே இல்லை. என் வாழ்வு எனக்கு முக்கியம். அதில் அடுத்தவன் வாழ்வு நாசமாய்ப் போவதை நான் நினைப்பதில்லை, அல்லது கண்டும் காணாமல் போகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்ற முன்னேற்பாடுகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. அடுத்த நொடிகள் நம்மால் நிச்சயிக்கப் படுவதில்லை என்பது உண்மையே எனினும் அடுத்த நொடி முன்னே கால் வைக்கவேண்டும் என்ற தீர்மானமே உடல் தூக்கி நடப்பதற்கு சாத்தியப்படுத்துகிறது. திருமண பந்தமும், என்னை நம்பி வந்த துணைக்காய் வேண்டிய சம்பாத்தியங்கள், நானும் அவளும் சந்தோஷித்த கூட்டில் எங்களுக்குப் பின் எங்கள் பிள்ளைகள் இன்புற்று இருக்க வேண்டிய செல்வ தேடலில் எப்போதும் என் வம்ச வழியில் கற்றுணர்த்தப்பட்ட அளவுகளிலேயே நான் பயணப்படுகிறேன். ஒரு போதும் அடுத்தவருக்கு தீங்கு நேராவண்ணமே என்னுடைய பாதைகளில் என்னுடைய கனிகளை நான் சேகரிக்கிறேன். சோற்றுக்கு வழி இல்லை என்றாலும் ஒரு வாய் தண்ணீர் கொண்டு வயிறு நிறைக்க மனம் விழைகிறதே அன்றி, களவும், சூதும், சூழ்ச்சிகளும் எப்போதும் என்னை அடிமைப்படுத்த நான் விடுவதே இல்லை. வாய்ப்புகள் வரும்போதும் தவறு செய்யும் சந்தர்ப்பங்களை நான் கடந்தே போகிறேன் அல்லது காணவில்லை என்றே போகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்ற போதனைகள் என்னை ஈர்த்ததின் காரணமே, இப்படித்தான் வாழ்ந்தேன் என்ற என் முன்னோர்களின் வாழ்கை, குரு என்றழைக்கப்படும் இந்த கூட்டின் முன்னாள் பறவைகள் என்ன உண்டனர்? என்ன ஜீரணித்தது? என்ன வெளிவந்தது? என்ற பதிவுகள் விலங்குகள் போல் சுகித்து இரை தேடி மாளும் இப்பிறப்பின் பால் என்னை அன்னப்பறவையாக்கி நல்லவை அல்லவை பிரிக்கக்கற்றுக் கொடுத்தது. மனமும், மூளையும், உயிரின் இருப்பும் உள்ளே எங்கே? வெளியே எங்கே என்ற தேடலில் உடலில் புறத்தீண்டல் தேவையற்று அகத்தீண்டல் முக்கியமாய்ப் பட்டது. ஒருமுகத்தில் அமிழ்ந்து ஒரு முகத்தில் காண்பது பல முகம் என்ற தெளிவில், குடும்பம், கூடு, கூடி, தேடி, களைத்து நாடி வரும் பிறவிகளைக் காணும்போது, எண்ணங்கள் சலவை செய்து அழுக்குகள் நுரைத்துப்போன போதும் கண்டும் காணாமலே பிறவி கடத்துகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்பதற்கு இதுதான் செய்யப்போகிறோம் என்ற தெளிவின் பால் நம்மீதே நம்பிக்கை கொண்டு வாழ்தல் அவசியம். பிறப்பும், இறப்பும் ஒன்றாய் பயணம் செய்யும் இந்த ஒன்பது ஓட்டை உடல் படகில், பகுத்து அறிந்து செய்யும் செயல் பாவ நட்டக்கணக்கினை கிழித்துப்போட்டு சக மனிதன், எனது உயிர்ச் சமூகம், அதன் முன்னேற்றம், அதற்கான வழிமுறைகள் என்ற அளவிலேயே எண்ணங்கள் விதைத்து, எல்லோருக்குமான இன்பங்களின் பொது விதி வகுத்து, அடிமைத்தனமகற்றி, என் குடும்பம், அதன் முன்னேற்றம் சமூகம் சார்ந்ததாயும், சுதந்திர எண்ணங்களின் வித்தில் தின வாழ்வு, ஏற்றத்தாழ்வின்மை, சக மனிதருக்குதவி என்ற வகையில் என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், இதன் பிரக்ஞையற்ற மக்கள், வழிபாடுகளிலும், கள்ளத்தனங்களிலும் நேரம் கடத்தி புத்திக்கழுவிலேற்றிய எண்ணங்களின் எச்சங்கள் பாதை எங்கும் கிடைப்பினும், மாறும் என்ற நினைப்பில் நானும் நகர்கிறேன்.                

---

உனக்குச்சரியெனப்பட்டதும்
அடுத்தவனுக்குத்தவறெனப்பட்டதும்
எவனோ ஒருவனின் ஞான போதனைகளும்
மார்பிலடித்த அழுகைகளும்
வயிறு பிடித்த சிரிப்புகளும்
தலை நிமிர்ந்த வெற்றிகளும்
தரை பார்த்த தோல்விகளும்
இன்னும்.. இன்னும்.. எல்லாமே
காணும்போதே..


இறக்கும் காலமே.




.

20 comments:

ஜெட்லி... said...

மீ 1st .....

ஜெட்லி... said...

தங்கள் பட்டறையில் எனக்கு பயிற்சி தேவை.....
எவ்ளோ பீஸ் வாங்குவீங்க??

sathishsangkavi.blogspot.com said...

இது சரி தான்.....

AkashSankar said...

யோசிக்க வைத்துவிட்டீர் ...

பனித்துளி சங்கர் said...

அன்பின் பாலா உங்களின் ஒவ்வொரு {இதுதான் செய்யவேண்டும் }பற்றிய எண்ணங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது .

மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . வார்த்தைகளில் பல புதுமைகள் . பகிர்வுக்கு நன்றி !தொடருங்கள் .,மீண்டும் வருவேன் வார்த்தைகள் அறிந்துகொள்வதற்கு .

vasu balaji said...

/இன்னும்.. இன்னும்.. எல்லாமே
காணும்போதே..


இறக்கும் காலமே./

அபாரம் ஷங்கர்.

Ramesh said...

நல்ல இடுக்கை 2வது பராவில் நீங்கள் ஆகா.. ரசனைக்கும் மீட்டுப்பார்க்கவும் வைத்துவிட்டீர்கள்

செ.சரவணக்குமார் said...

//இதுதான் செய்யவேண்டும் என்பதற்கு இதுதான் செய்யப்போகிறோம் என்ற தெளிவின் பால் நம்மீதே நம்பிக்கை கொண்டு வாழ்தல் அவசியம். //

உண்மை ஷங்கர், நல்ல பகிர்வு.

ஹேமா said...

நல்ல தெளிவான சிந்தனை ஷங்கர்.ஆனால் காலம் இறக்கமுன் எங்களுக்குள் வரவேணுமே !

ஜெயந்தி said...

உங்கள் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது.

Vidhoosh said...

Wow, it's indeed a big leap, Shankar. Possibly, now i've already started envying you!! :))


I enjoyed this post, totally. Louder Applause.

-vidhoosh.

தராசு said...

சும்மா அதிருதல்ல

Chitra said...

வேதாந்தமும் தமிழ் புலமையும் அருமையாக போட்டு கலக்கி இருக்கிறீங்க.

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு வரியிலும் கருத்து செறிவும், வாழக்கைக்கு உகந்த விஷயங்களும்... மனதை தொட்டது.

சீமான்கனி said...

//உனக்குச்சரியெனப்பட்டதும்
அடுத்தவனுக்குத்தவறெனப்பட்டதும்
எவனோ ஒருவனின் ஞான போதனைகளும்
மார்பிலடித்த அழுகைகளும்
வயிறு பிடித்த சிரிப்புகளும்
தலை நிமிர்ந்த வெற்றிகளும்
தரை பார்த்த தோல்விகளும்
இன்னும்.. இன்னும்.. எல்லாமே
காணும்போதே..

இறக்கும் காலமே.///

ஆஹா...ஷங்கர்ஜி...சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாய் வந்திருக்கு பகிர்வு...பாராட்டுகள்...

'பரிவை' சே.குமார் said...

அன்பின் ஷங்கர்.

உங்களின் ஒவ்வொரு எண்ணமும் அருமை.
நல்ல பதிவு.

பழமைபேசி said...

இரசித்து வாசித்தேன்....

ரிஷபன் said...

அருமையான கருத்தோட்டம்..

Jaleela Kamal said...

///அடுத்தவன் துயரம் என்பதை நான் யோசிப்பதே இல்லை. என் வாழ்வு எனக்கு முக்கியம். அதில் அடுத்தவன் வாழ்வு நாசமாய்ப் போவதை நான் நினைப்பதில்லை, அல்லது கண்டும் காணாமல் போகிறேன்.//

ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க

எல்லா வரிகளும் ரொம்ப அருமை.

Paleo God said...

@ஜெட்லி :: பீஸ் - முக்கா கிலோ மூளை!! :))

@சங்கவி: நன்றிங்க.:))

@அ ஆ கற்றது கைமண் அளவு: வாங்க. மிக்க நன்றி! :))

@பனித்துளி: நன்றிங்க சங்கர்..:))

@வானம்பாடிகள்:: மிக்க நன்றி சார். :))

@றமேஸ்: நன்றி றமேஸ்.:))

@செ.சரவணக்குமார்:: நன்றிங்க சரவணன்.:))

@ஹேமா: எல்லோருக்கும் வரும் சகோ. நன்றிங்க:))

@ஜெயந்தி:: மிக்க நன்றிங்க :))

@விதூஷ்:: ரொம்ப நன்றிங்க! (இங்கிலீஷ்ல திட்டினதுக்கும்!! :-)

@தராசு: நன்றி தலைவரே..:))

@சித்ரா: ரொம்ப நன்றிங்க.:)) (தமிழ்ல திட்டினதுக்கும்:-) )

@ தமிழ் உதயம்:: நன்றிங்க.:))

@ சீமான்கனி:: மிக்க நன்றி கனி.:))

@சே.குமார்:: நன்றி நண்பா.:))

@பழமைபேசி:: வாங்க. மிக்க நன்றிங்க.:))

@ரிஷபன்:: வாங்க ரிஷபன். மிக்க நன்றி.:))

@ ஜலீலா:: வாங்க சகோதரி. மிக்க நன்றிங்க.:))