பலா பட்டறை: ஆயிரம் வகை தோசைகள்..

ஆயிரம் வகை தோசைகள்..

ஆயிரம் வகை தோசைகள்..




தேவையான பொருட்கள்:

ரெடிமேட் தோசை மாவு, எவர் சில்வர் தாவா, இண்டக்‌ஷன் ஸ்டவ், கரண்ட்.
மினரல் வாட்டர், டிஸ்போஸபிள் க்ளாஸ், பேப்பர் தட்டுகள், டிஷ்யூ பேப்பர். கத்தி, ஸ்பூன், கரண்டி.

வெண்ணை,
கேரட்,
கோஸ்,
தக்காளி,
வெங்காயம்,
காட்பரீஸ் சாக்லேட்,
மில்க்மெய்ட்,
இட்லி மிளகாபொடி,
கொத்துமல்லி,
புதினா,
வாழைப்பழம்,
நல்லெண்ணை,
தேங்காய் எண்ணை,
துருவிய தேங்காய்,
சீஸ்,
நெய்,
வெண்ணிலா ஐஸ்கிரீம்,
சர்க்கரை,
வெல்லம்,
தேன்,
தயிர்,
லேய்ஸ் சிப்ஸ்,
குர்குர்ரே,
இனிப்பு சோம்பு,
தூள் பக்கோடா,
ஓமப்பொடி,
பச்சை மிளகா,


செய்யறதுக்கு நீங்க, சாப்பிடறதுக்கு ஒரு அப்புராணி.




அதாங்க தாவாவ அடுப்புல வெச்சி, ரெடிமேட் தோச மாவ ஊத்தி, மேல சொன்ன ஐட்டம்ல ஒன்னு ஒன்னா தோசை மேல போட்டு சாப்பிடுங்க, அப்புறம், ரெண்டு,ரெண்டு ஐட்டமா மிக்ஸ் பண்ணுங்க, அப்புறம் மூணு,மூணு ஆஹ்ஹா கப்புனு புடிச்சிடீங்களே. அதான் அதேதான், மாறி, மாறி எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி 1000 என்ன? 6000 வகை தோசைகள் கூட பண்ணலாம்.

விளாட்டு இல்லீங்க சீரியஸ்தான். சாப்பிட்டுபார்த்துட்டு சொல்லுங்க.


எல்லாமே ரெடிமேடா கிடைக்கிற ஐட்டம்ஸ்தான், ரொம்ப மெனெக்கெடவேண்டாம்..:)))


--

எதப்போட்டாலும் ’குத்து’றாங்க’, அதான் இதப்போட்டேன். ஹி..ஹி. 






.

40 comments:

settaikkaran said...

இதுக்கும் "குத்தி"யாச்சே! இப்போ என்னா பண்ணுவீங்க?

தினேஷ் ராம் said...

:D

அப்படியே சட்னி அல்லது இதற்கு தோதான பக்க பாத்திரங்கள் பற்றியும் சொல்லுங்களேன்!!

Ahamed irshad said...

vada poccheey.........

மணிஜி said...

தோசையை நான் கொஞ்சம் திருப்பி போடவா?

தினேஷ் ராம் said...

@மணிஜீ

தோசையை திருப்பிப் போட்டால் "சைதோ" என வருமோ!!

எறும்பு said...

அண்ணே, ஒரே நுண்ணரசியல் பதிவும் உள்குத்து பதிவுமா போடறீங்களே என்ன விசயம்.. கவலைபடாதீங்க இதுவும் கடந்து போகும்..

:)

எறும்பு said...

//தோசையை நான் கொஞ்சம் திருப்பி போடவா?//

தலைவர்னா திருப்பி போடலாம்
;)

மணிஜி said...

நண்பா..சைதை என்று வரும்ல...

என் நடை பாதையில்(ராம்) said...

வெண்ணை(0.02).......????????

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

தோசை.. பெயர் காரணம் கூறுக. (1 x 5 = 5)

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

this is for follow up comments...

தினேஷ் ராம் said...

@நாளைப்போவான்

காலங்காலமாய் ஓரே கேள்வி ஓரே பதில்.. மனனம் செய்து செய்தே என்னைப் போன்றவர்களுக்கு வாயும், மூளையும் தேய்ந்து விட்டது.

'சை' என்பது ஒலி. 'தோ' என்றால் ஹிந்தியில் 'இரண்டு' என்று அர்த்தமாம். 'டவா'வில் மாவு ஊற்றப்படும் பொழுது ரெண்டு 'சை' சத்தம் கேட்குமாம். கேள்வி ஞானம் தான். அனுபவஸ்தர்கள் தான் பெயர் காரணம் சரியா என தெளிவுப்படுத்த வேண்டும்.

பிரபாகர் said...

ம்.... கலக்குங்க! அடுத்து என்ன சமையல் குறிப்பு?

பிரபாகர்...

துபாய் ராஜா said...

//எறும்பு said...
அண்ணே, ஒரே நுண்ணரசியல் பதிவும் உள்குத்து பதிவுமா போடறீங்களே..//

ஆமா எறும்பாரே... அந்த தலைப்பே ஆயிரம் கதை சொல்லுதே..அண்ணன் ஒரு முடிவோடதான் இருக்காரு... எது எப்படியோ... அண்ணன் நாங்க எப்பவும் உங்க கூடத்தான்.....

vasu balaji said...

பட்டர் தோசை:)

சாந்தி மாரியப்பன் said...

நீங்க சொன்ன எல்லாத்தையுமே போட்டு தோசை சுட்டேன்.. அது செத்துப்போச்சு.. அது தலையில பால் ஊத்திட்டு இப்ப என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

நீங்க சொன்ன எல்லாத்தையுமே போட்டு தோசை சுட்டேன்.. அது செத்துப்போச்சு.. அது தலையில பால் ஊத்திட்டு இப்ப என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கேன் :-)

Chitra said...

செய்யறதுக்கு நீங்க, சாப்பிடறதுக்கு ஒரு அப்புராணி.

...... ஹா,ஹா,ஹா,ஹா....

1000 தோசை சுட வைத்த அபூர்வ ஷங்கராமணி.

நாடோடி said...

சூடான‌ ஆயிர‌ம் தோசை ந‌ல்லா இருக்கு..

சீமான்கனி said...

எல்லாம் சூப்பர்...வெண்ணை தோசை தான் டாப்...எதுக்கு இப்பூடி?????

prabhadamu said...

வெண்ணை தோசை சூப்பர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தோசையில, உங்க Logo வர்றமாறி, ஏதாவது டிப்ஸ் வெச்சுருக்கீஙக?

மரா said...

அடுத்த பதிவு இந்த நாள் இனிய நாள்னு சொல்லி ‘இன்று வெள்ளிக்கிழமை’ன்னு போடுங்கண்ணே!

தராசு said...

ஆயிரம் தோசை சுட்ட அபூர்வ சிகாமணி சங்கர் வாழ்க.

பனித்துளி சங்கர் said...

///செய்யறதுக்கு நீங்க, சாப்பிடறதுக்கு ஒரு அப்புராணி.////////


ஏலே மக்கா !
உங்க திட்டம் பலிக்காதுல .

மீண்டும் வருவேன் .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
ஏலே மக்கா !
உங்க திட்டம் பலிக்காதுல .

மீண்டும் வருவேன் .
//

மீண்டும் வந்தாலும், அதே தோசைதான்..சொல்லிட்டேன்

செ.சரவணக்குமார் said...

ரைட்டு தல.

ஹரீகா said...

*//தோசை.. பெயர் காரணம் கூறுக//
-----------------------------------
//'சை' என்பது ஒலி. 'தோ' என்றால் ஹிந்தியில் 'இரண்டு' என்று அர்த்தமாம். 'டவா'வில் மாவு ஊற்றப்படும் பொழுது ரெண்டு 'சை' சத்தம் கேட்குமாம். கேள்வி ஞானம் தான்.//
-----------------------------------
தோசா என்பது தான் சரியான சொல் பதம். தோ (ஹிந்தி) என்றால் கொடு. சா (இங்கிலீஷ்) என்றால் பார். அதாவது பார்த்துக்கொடு என்பது தான் சரியான வார்த்தை. நீங்க சுட்டதை எல்லாம் பார்த்து கொடுத்தாலே, சுவையா தானிருக்கும். ஏதோ நம்மால் முடிந்தது. ஹி.. ஹி...

அன்புடன்
ஹரிகா

தினேஷ் ராம் said...

@ஹரிகா

அது ஹோட்டல், ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் 'தோசா'வாக இருக்கலாம். கையேந்தி பவன், முனியாண்டி விலாஸ்களில் எனக்கு தெரிந்த வரை 'தோசை' தான். ஏன் அண்ணன் 'ஷங்கர்' அவர்களும் தோசை என்றே குறிப்பிட்டுள்ளார்!! எனக்கு தெரிந்த அனைவர் வீட்டிலும் தோசையை தோசை என்று தான் சொல்கிறார்கள்.

"தோ(இரண்டு) + ஓசை" என்று பிரிக்கலாமோ என்னவோ!!

//தோசை.. பெயர் காரணம் கூறுக//

பெயரையே மாத்திட்டீங்களே!! ம்ம்..

சந்தனமுல்லை said...

:-))

Vidhya Chandrasekaran said...

'dosa killing'ன்னு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடுங்க:))

Anonymous said...

ஹஹா

'பரிவை' சே.குமார் said...

அது சரி... நீங்களும் மலிக்கா, சாதிகாவுக்கு போட்டியா நீங்களுமா என்று நினைத்தால் இப்படியா... ஹி... ஹி...

கவுத்துப்புட்டீங்களே அய்யா....

ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும் எல்லார் மூஞ்சியிலயும் தோசை வார்த்தாச்சு.

Prasanna said...

//லேய்ஸ் சிப்ஸ்,
குர்குர்ரே//

அய்யய்யோ :)

Vidhoosh said...

கிர்ர்ர்...

மைனஸ் வோட்டு அடியேன்தான்.

தமிழ்மணத்தில் கள்ளவோட்டு போடும் நடைமுறைகள் தெரியாத ஞானியாக இருக்கிறதால், 1000 மைனஸ் வோட்டுகள் விழாமல் போய் விட்டது.

அழகுக் குறிப்புக்கள் எபோது வரும் என்று ஆவலாய் இருக்கிறேன். :))

Vidhoosh said...

உங்களுக்கு மைனஸ் வோட்டு போட்டு பிரபலமாக்கும் படி கேட்டுக் கொண்டதை யாரிடமும் சொல்லவில்லை.

Vidhoosh said...

எல்லாஞ்சரிதான்!! வெந்து இருக்கான்னு எப்படி பாக்கறது???

:))

இரசிகை said...

thosaiyamma thosai.....
neththu maavum innaikku maavum kalanthu sutta thosai...

hostel mess il pelamaa paaduvom...

athuthaan gnapakam varuthu:)

Priya said...

ஆஹா ஷங்கர் சமையல் குறிப்பு கூட தர ஆரம்பிச்சுட்டாரே:) அடுத்த குறிப்பு எப்போ வரும்?

Paleo God said...

நண்பர்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி.:))