பலா பட்டறை: வெண்ணை (0.09) (நீதிக் கதை)

வெண்ணை (0.09) (நீதிக் கதை)



ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு பக்கத்து ஊட்ல இருந்தவரை திருடன்னு இல்லாததும் பொல்லாததுமா சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுது. போலீசும் அவர கைது பண்ணி ஜெயில்ல போட்டாங்க, கொஞ்ச நாளுக்கப்புறம் அவர் திருடனில்லைன்ற உண்மை தெரிஞ்சு அவர வெளில விட்டாங்க.. வெளில வந்த அந்த பக்கத்து வீட்டு இளைஞர் தன்னோட பேர கெடுத்ததுக்காக  அந்த பெரிசு மேல கேஸ போட்டாரு.


பெரிசும் தில்லா கோர்ட்டுக்கு போய் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்ன கமென்ட், பெரிசா எடுத்துக்காதீங்க ஜட்ஜையா ன்னு சொல்லிச்சு...


ஜட்ஜையா கொஞ்ச நேரம் தீர்ப்பு கொடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சாரு... சரின்னு பெரிச கூப்டாறு ஐயா பெரிசு இப்போ நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல எழுதுங்க, எழுதினப்புறம் அந்த பேப்பர துண்டு துண்டா கிழிச்சி கொஞ்ச கொஞ்சமா வீட்டுக்கு போகும்போது போட்டுகிட்டே போங்க...  நாளைக்கு வாங்க கேஸுக்கு தீர்ப்பு சொல்றேன்னாறு.


மறுநாள் எல்லாரும் கோர்ட்டுக்கு வந்தாங்க நீதிபதி பெரிச கூப்பிட்டு, நீங்க வெளில போய் நேத்து தூக்கி போட்ட எல்லா பேப்பர் துண்டுகளையும் எடுத்துகிட்டு வாங்கன்னார்.


பெரிசு ரொம்ப கூலா சாரி ஜட்ஜையா அந்த காகிதமெல்லாம் எங்க பறந்து போயிருக்குமோ தெரியாது. அத தேடி கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ன்னாரு.


உடனே நீதிபதி குறுக்கிட்டு அதே மாதிரிதான் வார்த்தைகளும் ஒரு முறை வெளில விட்டா அது ஊர் பூரா பரவிடும் திரும்ப சரி பண்றது கஷ்ட்டம்.. உங்களால ஒழுங்கா பேச முடியாதுன்னா நீங்க பேசாம இருக்கறதே நல்லதுன்னாரு.


நீதி: நாம் நம் வாய்க்கு எஜமானாக இருந்தால்..வார்த்தைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.. !!


( அதிக வேலை காரணமாக இடுகைகள் எதுவுமே படிக்க முடியவில்லை. தமிழ்மணம் திறந்தால் காலத்தால் அழியாத மீள் இடுகைகள் கண்களில் தென்படுகிறது. சரி நாமும் அப்படி ஏதேனும் எழுதி இருக்கிறோமா என்று பார்த்தால் ஹி ஹி.. எனக்காகவே எழுதப்பட்ட ஒன்றைக் கண்டேன். ரைட்டு எதுவும் எழுதும் மன நிலையில் இல்லாத இப்பொழுதில் என் இருப்பை எனக்கு நீதி சொல்லும் இந்த இடுகை ஒருவேளை உணர்த்தக்கூடும் என்பதால்...!!)

மறந்துடாதீங்க மக்களே ! என்றும் உங்களுக்காகவே இயங்கும் ஒரு பட்டறை!!
(ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா சாமீ...கண்ணக்கட்டுதே! :-)



.

29 comments:

பாலா said...

அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ... அய்யோ...

யம்மா.........

Paleo God said...

சகுனமே சரியில்லையே!! :-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புகைப்படம் பொருத்தமோ பொருத்தம் ...

dheva said...

மீள் இடுகையா இருந்தாலும் பரவாயில்லைங்க.... நீதி .. நீதிதான்! இது தெரியாமதான் மனுசங்க...வார்த்தை விளையாட்டு விளையாடுறாங்க....! சீக்கிறம் ஒரு பதிவ போடுங்க சாமி....! வெயிட்டிங்ங்ங்க்!

நாடோடி said...

மீள் இடுகையை திரும்ப‌வும் ஒருக்கா ப‌டிச்சாச்சி..

ஈரோடு கதிர் said...

மீ.இ. சங்கத்திற்கு வாங்கோ

King Viswa said...

யார் அந்த பெரிசு?

இந்த பதிவில் ஏதேனும் நுண்ணரசியல் உள்ளதா?

vasu balaji said...

அந்த பெரிசு அந்த கடுதாச அப்புடியே ஒரு இடுகையா போட்டிருந்தா ஜட்ஜ் கேட்டதும் காட்டியிருக்கலாம்ல:))

Ahamed irshad said...

மீள் இடுகை ஒகே.. அதற்கு இந்த மாதிரி படம்தான் கிடைச்சுதா...?

Paleo God said...

@ஹாலி : போன் அடிச்சா எடுக்க மாட்டீங்களா? :)

@உலவு : நன்றிங்க! :)

@தேவா: நன்றிங்க. கூடிய சீக்கிறம்.

@நாடோடி: நன்றிங்கோவ்.:)

@கதிர்: வரவே கூடாதுன்னு நெனெச்சே வந்துட்டேங்கோ..:) நன்றிங்க!

@கிங் விஸ்வா: அய்யய்யோ அந்த மாதிரி ஒன்னுமில்லீங்க! :) கடைசி பேராவ எதுக்கும் ஒருமுறை படிச்சிடுங்க! :-)

@வானம்பாடிகள்: போட்டுடலாம் சார்:)

@அஹமது: மாத்திட்டேங்க இப்ப ஓக்கேதானே :). நன்றி! :)

எல் கே said...

நல்ல இருக்குங்க. ஆனா பாருங்க இப்ப பதிவுலகத்தில நடந்துகிட்டு இருக்கற ஒரு விவகாரத்துக்கும் இதுக்கும் எதோ சம்பந்தம் இருக்குமோனு தோணுது

அனு said...

இது ஏதாவது உள்குத்து பதிவா இருக்க,
நான் அது புரியாம ஏதாவது சம்மந்தமே இல்லாம கமெண்ட் எழுத,
எதுக்கு வீண் ரிஸ்க்??

நான் attendanceஅ மட்டும் போட்டுட்டு ஓடிடுறேன்..

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

மீள் இடுக்கையா !!!! .... இருந்தாலும் சில பதிவு மன்னர்களுக்கு பாடமா சரியான நேரத்தில நெத்தியடி அடிச்சிடீங்க... ஷங்கர் ஜி...

பனித்துளி சங்கர் said...

/////நீதி: நாம் நம் வாய்க்கு எஜமானாக இருந்தால்..வார்த்தைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.. !!
//////

நண்பரே இந்த இரண்டு வரிகளில் அழகாக மொத்தக் கதையும் அடங்கிவிட்டது . பகிர்வுக்கு நன்றி !

ஹேமா said...

ஷங்கர் நீதிக்கதைதானே.
அது எப்பவும் பழைய கதை ஆகாது !

Prasanna said...

நல்ல டைமிங் சென்ஸ் ;)

Anonymous said...

I love this story. =))

க ரா said...

இடுக்கை சொல்ற நீதிக்கு ஒரு சல்யூட்.

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

@ஹாலி : போன் அடிச்சா எடுக்க மாட்டீங்களா? :)//

அவர் ரொம்ப பிஸின்னு சொல்ல சொன்னாருங்க :-).

பாலா said...

அண்ணாத்த... போன் அடிச்சாதானே எடுக்கறதுக்கு??????????????

Anisha Yunus said...

ஸ்ஸ்ஸ்....அப்பா....சென்னைல அடிக்கற வெயிலோட தாக்கம் இங்க வரை தெரியுதே.....ஸ்ஸ்ஸ்...

Unknown said...

என்னவோ நடக்குது மர்மமா இருக்குது..

யாராவது விளக்குங்களேன்..

ஜெட்லி... said...

நீதிமான் ஷங்கர் அண்ணே வாழ்க.....

துளசி கோபால் said...

மனசே சரி இல்லை.

சாந்தி மாரியப்பன் said...

என்னாங்க நடக்குது இங்கே!!....

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கலக்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சென்னைல வெயில் ஜாஸ்தியோ?

Paleo God said...

LK, அனு, மதுரை சரவணன், கனி, ஹேமா, பிரசன்னா, அனாமிகா, இரா.கண்ணன், ஹாபா, அன்னு, முகிலன், ஜெட்லி, துளசி டீச்சர்,அமைதிச்சாரல், ஜெய் சங்கர், ரமேஷ் (ரொ ந ச) வருகைக்கு மிக்க நன்றிங்க.:))