பலா பட்டறை: ம்ருதுளா..

ம்ருதுளா..



இடதும், வலதுமாகவே
இருக்கிறது
வாழ்க்கை .

நன்றாய்
திரும்பி நின்று
வலதை இடமாகவும்..
இடதை வலமாகவும்..

மாற்றிவிட
முனைந்த போதும்

இடதும் வலதுமாகவே
இருக்கிறது
வாழ்க்கை.


எழுதி முடித்து நிமிர்ந்தபோது, அனந்தன் காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான்.

”வாட்ஸ் ஹாப்பனிங்? கதையா? கவிதையா?”

”ரெண்டும் இல்ல நேரக் கொலை.”

”எப்பவுமே நக்கல்ஸ்தாண்டா உனக்கு. சரி. ஃப்ரீயா? ம்ருதுளா ஷாப்பிங் போலாம்னு சொன்னா .”

”ஹாங்..” என்று உதடுகள் சொன்னாலும் உள்ளுக்குள் மனம் குமுறிக்கொண்டிருந்தது.

முகத்தை படிச்சிட்டான் போல.. ”என்னடா ரொம்ப ஃபீல் ஆயிட்டயா?” அவன் கவிதையை வைத்தே கேட்டிருப்பான்..

”ஆனந்த் வந்த விஷயம் சொல்லு ப்ளீஸ்..”

”யேய் கூல்டவ்ன் யார்.. லவ்ன்னா இதெல்லாம் சகஜம். இதுக்குப்போய் இவ்ளோ எக்ஸ்ப்ரஷன் வேஸ்ட் பண்ற. ஓக்கே நான் நாளைக்கு காலைல மும்பை போய் அங்கேர்ந்து நைட் லாஸ் ஏஞ்சல்ஸ் போறேன். ஈவ்னிங் நானும் ம்ருதுளாவும் ஷாப்பிங் போறோம். நீ வற்றியான்னு கேட்கலாம்னுதான் வந்தேன்.”

நான் ஆனந்தை முறைத்தேன். எல்லாத்துக்கும் இவனே காரணம்.

--

எனக்குப் பிடித்ததை
நீ சொல்வாய் என
நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன்

உனக்குப்பிடித்ததை நான்
சொல்வேனென நீயும்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாய்

காதலுமின்றி நட்புமின்றி
காரணமில்லாத உரையாடல்கள்
போதுமாயிருக்கிறது
காரணமில்லாத நம்
தொடுதல்கள் போலவே

”ரொம்ப அழகா எழுதறீங்களே, எப்படி இதெல்லாம் உங்களுக்கு எழுத முடியுது?” ம்ருதுளா அவளுக்காய் நானெழுதிய குறிப்பென அறியாது அதை வெறும் கவிதையாகவே வாசித்த ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டே

”அது .. வந்து.. ஒரு ஃபீலிங் ம்ருதுளா எப்படி சொல்றது, ரசிச்சி பார்க்கும் சில விஷயங்களின் வெளிப்பாடுதான் இந்த மாதிரி. உதாரணம் உங்க பேர் மாதிரி சிலது கேட்கும்போதே உள்ள இடறும்.”

அவள் கண்களை இன்னும் அகல விரித்து என்னைப் பார்த்தாள். என் பேர் அவ்ளோ அழகா? என்ற சுய நலக்கேள்வியை மட்டும் அந்த பார்வை கேட்டது.

”இந்த கவிதை நோட்டை நான் எடுத்துட்டுப்போய் முழுசும் படிச்சிட்டு தரட்டுமா?”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாது முழித்தேன். காதல் கவிதைகள் அதில் நிறைய இருக்கிறது. ஆனால் நான் எந்த பெண்ணையும் காதலித்ததில்லை. ம்ருதுளா மட்டுமே என்னை மிகவும் சலனப்படுத்தியவள். வெறும் கவிதையாய் படிப்பாளா? இல்லை, ’உங்க லவ்வர் ரொம்ப லக்கிங்க அவங்க பேர் என்ன? எனக்கு இண்ட்ரட்யூஸ் பண்ணி வைய்யுங்களேன்’ என்று கேட்டுவிடுவாளோ? என்று தோன்றியது. ஆனால் அழகான பெண்கள் அருகிலிருக்கும்போது மனசும், நாக்கும் நாம் சொல்வதை எங்கே கேட்கிறது?.

”ஓ தாராளமா? படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.”

”தேங்க் யூ’” அந்த யூ’வை கொஞ்ச நேரம் இழுத்தவள் எப்போது பை’ சொன்னாள் எப்போது கிளம்பிச்சென்றாள் என்ற எதுவும் தெரியாது அப்படியே அமர்ந்திருந்தேன்.

மனசு வேகமாய் எழுதத் தொடங்கியது..

நீ கொடுத்துச்
சென்ற
வளையலை போலவே
விட்டுச்சென்ற
ரோஜாவை போலவே
என்னையும்
விட்டுச்சென்றாய்
உன் நினைவுகளுக்கு
மத்தியில்

தனியாய்.....

---

”சொல்லுங்க ம்ருதுளா. எதுக்கு இங்க வரச்சொன்னீங்க?”

வைதேகி ஃபால்ஸ்க்கு இவளுடன் நான் மட்டும் வந்ததை நம்ப முடியாமல் அவள் முகத்தை விலக்கி பின்னால் பார்த்தேன். மாட்டு வண்டி மட்டுமே தத்தித் தத்தி உருண்டு செல்லும் அந்த மணல் வழியில் என்னையும் அவளையும் சேதாரமில்லாது, கீழே தள்ளி மானத்தை வாங்காது கொண்டுவந்து சேர்த்த அந்த பச்சை நிற டீசல் புல்லட் எங்கள் இருவருக்கும் சாட்சியாய் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது.

”ரொம்ப அழகா இருக்குங்க இந்த இடம். கொஞ்சம் தண்ணில போய் நிற்கலாமா?”

”அய்யய்யோ வேண்டாம் ம்ருதுளா ரொம்ப வழுக்கும். இந்த பாறைல உட்கார்ந்துகிட்டு அப்படியே கால் நனைச்சிக்கிங்க.”

நான் திரும்பவும் ”சொல்லுங்க ம்ருதுளா. எதுக்கு இங்க வரச்சொன்னீங்க?”

”கரெக்‌ஷன்’ இங்க போலாம்னு சொன்னேன்.” சிரித்தாள். நானும் சிரித்துக்கொண்டே ”சரி விஷயம் சொல்லுங்க.”

”இல்ல இந்த. மாதிரி சூழ் நிலையில உங்களுக்கு என்ன தோணும்? ஐ மீன் என்னைப் பத்தி என்ன தோணும்? யாருமில்லாத இந்த ஆற்றங்கரையில், ஜிலீரென்ற தண்ணீரில் கால் நினைக்கும் பரவசத்தில், பறவைகளின் ஒலிகளில் ஒரு கவிஞனுக்கு என்ன தோன்றும்? என்னை மாதிரி ஒரு பொண்ணு அருகிலிருக்க என்ன தோணும்? அத தெரிஞ்சிக்க எனக்கு ஆசை. அதனாலதான் இங்க போலாம்னு உங்கள கூட்டிகிட்டு வந்தேன்.”

நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா? உனக்கு சப்ஸ்ட்டூட்டே கிடையாது, ஏதோ ஒரு தமிழ் படத்தின் நாயகியைப்பார்த்து சொல்லும் வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது.

நான் தயங்குவதைப்பார்த்து..

”ப்ளீஸ்” மீண்டும் அந்த ஸ்ஸை இழுத்தாள் எனக்கு வாயில் வரிகள் விழ ஆரம்பித்தது.

ஒருத்தருமில்லா
தீவிற்கு
ஓடிப்போகவேனும்
நீயும் நானுமாய்
தேடிச்சிலர்
வந்திடினும்
நாடகம் நடத்திடுவோம்
நாமங்கு இல்லையென்று
ஒரு நாளேனும்
ஒருத்தருமில்லா
தீவிற்கு
ஓடிப்போகவேனும்
நீயும் நானுமாய்.

”வாவ்..” அவள் செல்போனை எடுத்து டயல் செய்யாமலேயே, ”ஹேய்.ஆனந்த். நான் சொல்லல ஹி ஈஸ் எ ஜீனியஸ்னு இப்ப கேட்டீங்கள்ல இங்க வாங்க.” நான் முழித்தேன் யார் ஆனந்த்? இவள் யாரைக் கூப்பிடுகிறாள்? என்ன நடக்கிறது இங்கே? ஜீன்ஸ் பேண்ட்டில் மண்ணோடு ஒருவன் வந்தான். வடக்கூர்காரன் போல.

”ஹாய் ஐ ஆம் ஆனந்த். ம்ருதுளாவோட பாய் ஃப்ரென்ட். நானும் உங்க கவிதைகளுக்கு இப்ப ரசிகனாயிட்டேன். வெரி நைஸ் டு மீட் யூ” என்றான் ”ஆனா எப்படி பாஸ் கீழ விழாம வண்டி ஓட்டிக்கிட்டு வந்தீங்க?”

பாய் ஃப்ரெண்ட்?? எனக்கு ஏனோ புறா நினைவு வந்தது.

”எங்க லவ்வுக்கு உங்க உதவி தேவை,” ஆனந்த் ஆரம்பித்தான். புறாவேதான் கண்ணெதிரே நிற்கும் இருவரின் பிம்பங்களைத்தாங்கிய மனசின் நினைவு சிலேட்டை உள்ளுக்குள் அழித்துக்கொண்டிருந்தேன். ம்ருதுளா தவிர மற்றெல்லாமும் அழிந்து கொண்டிருந்தது.

--
”சாரி ஆனந்த் நான் வரலை. ஈவ்னிங் ஃபளைட் பிடிச்சி டெல்லி போய் ரிஷிகேஷ் போறேன். குருஜி வரச்சொல்லி இருக்கார்.”

”ஹும்ம் சாமியாராவே ஆயாச்சா? ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்ல, கவிதை எழுதற நேரத்துக்கு க்ராஸ்கட் ரோட் போய் நின்னிருந்தா, இன்னேரம் ரெண்டு கொழந்தையோட செட்டில் ஆயிருக்கலாம்.”

ஏழாவது ஸ்ட்ரீட் எக்ஸ்டன்ஷனில் ரயில்வே க்ராஸ் தாண்டி, ரூட்ஸ் கம்பெனி இடப்புறத்தில் சங்கனூரில் என்,ஆர்.ஐ வாலிபர் வெட்டிக்கொலை என்ற செய்தி தினசரிகளில் வருவதை விரும்பாது, மூக்கின் நுனியை கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ’ஷாந்தமு லேதா சவுக்கியமு லேது’ச்ச என்ன தியானம் பண்ணினாலும் இந்த பாழாய்ப்போன சினிமா டயலாக் எங்கயாவது நினைவுக்கு வந்துவிடுகிறது.

”ஓகே சாமியார். அப்ப உங்க இஷ்டம். நானும் இப்பல்லாம் கவிதை எழுதறேன் தெரியுமில்ல அதுல ம்ருதுளாவுக்கு ரொம்ப சந்தோஷம்..”

நான் அவனை வெறித்துப்பார்த்தேன். ”அப்படியா என்ன கவிதை?”


கூடலுக்கு பின்னுள்ள
நிமிடங்கள் ஞானி ஆக்குகின்றன
பேரழகியாய் இருந்தாலும்
வெறும் பெண்ணாய் பார்க்க முடிகிறது..

கையில் தடி கொண்டு, காவி உடையில்
பெண் போகம் வேண்டாம் என்று சென்ற
முனிவரிடம் சொல்ல ஆசை..

உங்களை போன்ற உத்தமர்கள் பிறக்கவாவது
நாங்கள் கூடவேணும்...

இது இறை கட்டளை.



ரிஷிகேஷை கேன்சல் செய்துவிட்டு க்ராஸ்கட் ரோட் போய்விடலாமா? மனசு கேட்டுக்கொண்டிருந்தது.


--

41 comments:

Prasanna said...

//ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்ல, கவிதை எழுதற நேரத்துக்கு க்ராஸ்கட் ரோட் போய் நின்னிருந்தா//

குறுக்கால வந்ததும் இல்லாம, அட்வைஸ் வேற பன்றானா.. பாவம் தான் :)

Ashok D said...

முதல் கவிதையும்.. கடைசி கவிதையும் அருமை ஷங்கர். ஆரம்பத்தில் படித்த கவிதைகளை போல fresh :)

சைவகொத்துப்பரோட்டா said...

//க்ராஸ்கட் ரோட் போய்விடலாமா?//

இன்னும் கிளம்பலையா?
சீக்கிரம்..........:))

AkashSankar said...

நல்லா இருந்துச்சு... நிஜ கதையா...

VISA said...

ஜில் ஜில் கவிதைகளோடு கதை....ம்...

vasu balaji said...

ஒரு மார்க்கமாத்தான்யா போய்க்கிருக்காங்க. நல்லாருக்கு ஷங்கர்.

நாடோடி said...

க‌விதையுட‌ன் கூடிய‌ க‌தை ந‌ல்லா இருக்கு ஷ‌ங்க‌ர்ஜி..

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு ஷங்கர்ஜி. மிக ரசித்தேன்.

Unknown said...

ஜம்முனு இருக்கு ஷங்கர்ஜி...

-முகிலன்ஜி

மதுரை சரவணன் said...

//
”ரொம்ப அழகா எழுதறீங்களே, எப்படி இதெல்லாம் உங்களுக்கு எழுத முடியுது?” ம்ருதுளா அவளுக்காய் நானெழுதிய குறிப்பென அறியாது அதை வெறும் கவிதையாகவே வாசித்த ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டே
// eppadingka ippadi. asaththureengka. vaalththukkal.

சாந்தி மாரியப்பன் said...

மனசார ரசிச்ச இடுகை இது.பின்றீங்களே ஷங்கர். keep it up.

அப்றம், அந்த போட்டோவுல இருக்குறவங்கதான் க்ராஸ்கட் ரோட்ல இருக்காங்களா :-))))))))

ஹேமா said...

கவிதைகளை
மிகவும் ரசித்தேன் ஷங்கர்.

Chitra said...

கவிதைகளையும் கதையோட சேர்த்து மாலையாய் தொடுத்து - அட, இதுவும் அழகா இருக்கு!

நிலாமதி said...

கதையோடு சேர்ந்த கவிதை .....அழகாய். பூவும் நாரும் போல இருக்கிறது.அந்தமாலை உங்களுக்கே. வாழ்த்துக்கள்.

shortfilmindia.com said...

சம்திங் மிஸ்ஸிங் சங்கர்.. லைட்டாக போய்விட்டது..:)

கேபிள் சங்கர்

ஈரோடு கதிர் said...

அட்றா சக்க...


பின்னீட்டீங்க

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஷங்கர். :-)

'பரிவை' சே.குமார் said...

ஜில் கவிதைகளோடு கதை... நல்லா இருந்துச்சு... நிஜ கதையா..?

naaivaal said...

//கூடலுக்கு பின்னுள்ள
நிமிடங்கள் ஞானி ஆக்குகின்றன
பேரழகியாய் இருந்தாலும்
வெறும் பெண்ணாய் பார்க்க முடிகிறது//

thala chancea illa illa ,

romba neram itha pathi yosokka vachiteenga

Anonymous said...

கவிதையெல்லாம் உங்க சொந்த சரக்கா. பாராட்டுக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ந‌ல்லா இருக்கு ஷ‌ங்க‌ர்

மரா said...

’சுறா’ டிக்கெட் வாங்கித் தாரேன் இதுக்கு!

ரிஷபன் said...

பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா நண்பரே.. மிக நன்றாக வந்திருக்கிறது..

புலவன் புலிகேசி said...

வடை போச்சே....

எறும்பு said...

அது முடிஞ்சு போன விஷயம்,மிருதுளாவை பற்றி எழுத மாட்டேன்னு சொன்னீங்க..மனசு கேக்கலயோ.
;)

சிநேகிதன் அக்பர் said...

கதைக்கு இடையே வந்த வி ரொம்ப நல்லாயிருக்கு சங்கர்.

சங்கர் said...

இட்லி, சாம்பார் இட்லி, தோசை, மசால் தோசை, நெய் ரோஸ்ட், பேப்பர் ரோஸ்ட், ஆப்பம், இடியாப்பம், ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், தக்காளி ஊத்தப்பம்,...........

ஸ்வாமி ஓம்கார் said...

கோவையில் நான் இருக்கும் பொழுது எதுக்கு ரிஷிகேஷ் வரை போகனும் :)

வெல் ரிட்டர்ன்...!

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு.

நிலாரசிகன் said...

//

இடதும், வலதுமாகவே
இருக்கிறது
வாழ்க்கை .

நன்றாய்
திரும்பி நின்று
வலதை இடமாகவும்..
இடதை வலமாகவும்..

மாற்றிவிட
முனைந்த போதும்

இடதும் வலதுமாகவே
இருக்கிறது
வாழ்க்கை.
//
மொக்கை லேபிளின் கீழ் வந்தபோதும் இக்கவிதை அதிகம் ஈர்த்தது ஷங்கர்
:)

Vidhoosh said...

அட!!! சும்மா நல்லாருக்குன்னு சொல்லிட்டு போக மனசே இல்லீங்க...




















வேற வார்த்தையும் கிடைக்க மாட்டேங்குது ... கலாய்ச்சு எழுதலாம்னு ...பாத்தா.. :))

நட்புடன் ஜமால் said...

எத்தனை (bhavam)பாவங்கள் செய்ய வேண்டியிருக்கு ஒரு கவிஞருக்கு.

நீங்களே காதலனாய்(நினைத்து கொண்டு) எழுதிய கவிதைகள், காதலன் என்று ஒருவர் வந்து அவராகவும் தாங்களே எழுதும் கவிதை

எத்தனை பரிமாணங்கள் ...

வலிகளிக்கு :(

வரிகளுக்கு :) :)

பத்மா said...

வலியுடன் கூடிய வரிகள் .
வரிகளில் தெரியும் ஏக்கம்
ஏக்கத்தில் பிறந்த கதை
கதையில் வாழும் காதல்
காதலை வேண்டும் நீங்கள்
உங்களை புகழும் நாங்கள்

Romeoboy said...

சூப்பர் பாஸ் .. ரொம்ப நாளுக்கு அப்பறம் ரொம்ப ரசிச்சு படிச்சேன் ..

prince said...

//கையில் தடி கொண்டு, காவி உடையில்
பெண் போகம் வேண்டாம் என்று சென்ற
முனிவரிடம் சொல்ல ஆசை..// பிரமாதம்!! சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிருக்கீங்க

அன்புடன் அருணா said...

கவிதைக் கதை ரொம்ப அழகு!

க.பாலாசி said...

//கவிதை எழுதற நேரத்துக்கு க்ராஸ்கட் ரோட் போய் நின்னிருந்தா, இன்னேரம் ரெண்டு கொழந்தையோட செட்டில் ஆயிருக்கலாம்.”//

பின்னூட்டம் 1:
நான் ஏன் காதல் கவிதை எழுதுறதில்லன்னு இப்ப தெரிஞ்சிருப்பீங்க..

பின்னூட்டம் 2:
ஏங்க க்ராஸ்கட் ரோட்ல நிறைய குழந்தைகள் இருக்கா!!

பின்னூட்டம் 3:
செட்டில் ஆனப்பெறவும் கடைசி கவிதையத்தான எழுதுவீங்க...

பொது:
செம...செம....செமத்தியா இருக்குங்க...

Gangaram said...

Miga nerthiyaga yelutha patta sirugathai.. Valthukkal...

Thenammai Lakshmanan said...

மிக அருமை சங்கர்..:))

Paleo God said...

வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி நண்பர்களே!! :))

Lenin P said...

அடேங்கப்பா.. செம பதிவு. எப்படிங்க இப்படி எல்லாம்?


கொண்டாட குதூகலிக்க...நமக்கான ஓரிடம் - www.narumugai.com

அன்புடன்,
நறுமுகை.காம்