பலா பட்டறை: என்னமோ எழுதுகிறேன்...

என்னமோ எழுதுகிறேன்...





பார்வை இன்றி
ஒலி கேட்க முடியாதவனுக்கு

கடவுளும், வேதங்களும்
ஸ்பரிசத்தை தீட்டாக்கும்போது

உங்கள் மொழியும் என் மொழியும்
என்னத்தை கிழித்துவிடும்?

கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு

உருவமில்லாத மனமோ
நிறங்களைச் சூடிக்கொள்கிறது..


--


வாடா பேராண்டி

வாஞ்சையுடன் கன்னம் தடவும்
கண்தெரியாமல் போன என் பாட்டி

கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

--

ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் உன்
வழியனுப்புதல்கள்..

எதுவும் சொல்லமுடியாது
என்பதறிந்தே இருக்கிறது நம் காதல்

உன் முகம் மறைந்து பிம்பமாய்
மாறும் கணம்தோறும்...

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..


.

36 comments:

பாலா said...

முடியலீங்க... வலிக்குது.!! :)

Paleo God said...

ஹாலி,

எனக்கும்தான், Come back soon! :))

Unknown said...

ஏதாவது சொல்லலாம்தான்
கண்களை மூடி 'ஆழ '
யோசிக்கையில்
ஒரே
நிசப்தம் ......

தமிழ் உதயம் said...

மூன்று கவிதையுமே நன்றாக இருந்தது.

சாந்தி மாரியப்பன் said...

என்னமோ எழுதறேன்னு சொல்லி என்னமா எழுதறீங்க!!!. நல்லாருக்கு.

ஈரோடு கதிர் said...

ரொம்ப கனக்குதுங்க

ஈரோடு கதிர் said...

//கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு//

இது டாப்

dheva said...

//ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் உன்
வழியனுப்புதல்கள்..

எதுவும் சொல்லமுடியாது
என்பதறிந்தே இருக்கிறது நம் காதல்

உன் முகம் மறைந்து பிம்பமாய்
மாறும் கணம்தோறும்...

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..
//



நான் தொலைந்தே....போய் விட்டேன்...சங்கர்! சூப்பர்

Chitra said...

கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..


..... அருமை.
(பி.கு. எனக்கு நல்லா புரியுற மாதிரி எல்லாக் கவிதைகளும் இருக்கே..... எங்கேயோ something is wrong)

நசரேயன் said...

அடங்க மாட்டீங்களா ?

சீமான்கனி said...

//கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு//


பாட்டி பாசம்... கா..கா காதல் எல்லாமே அழகு...ஷங்கர் ஜி...கலக்குறீங்க....

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒவ்வொரு வரியும் அர்த்தங்கள் செறிந்தவைகள்.. உங்க எண்ணக்கவிதை ரொம்ப நல்லாருக்கு ஷங்கர்.

சிநேகிதன் அக்பர் said...

முத்துக்கள் மூன்று.

vasu balaji said...

/நசரேயன் said...
அடங்க மாட்டீங்களா ?//

இது உங்களுக்கே ஓவரா தெரியல அண்ணே:))

சபாஷ் ஷங்கர்:) அருமை

ஹேமா said...

//கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு//

தெறித்த சிந்தனை.
மூன்றுமே நல்ல கவிதைகள் ஷங்கர்.

நாடோடி said...

மூன்று க‌விதையும் ந‌ல்ல‌ இருக்கு ச‌ங்க‌ர்ஜி..

Prasanna said...

ரெண்டாவதும் மூணாவதும் ரொம்ப பிடிச்சுருக்கு..

பி.கு. அந்த போட்டோ photoshop-இல் மாற்றப்பட்ட உங்கள் போட்டோ (இப்படிக்கு, அதே வருங்கால CBI)

:)

புலவன் புலிகேசி said...

முதலாவது நச் தல...

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:) kavithaigalin sutchamam purigirathu.... :)

எல் கே said...

//கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்../
மூன்றும் மூன்று முத்துகள்
//(பி.கு. எனக்கு நல்லா புரியுற மாதிரி எல்லாக் கவிதைகளும் இருக்கே..... எங்கேயோ something is wrong)//
repeatttt

CS. Mohan Kumar said...

மனது தனிப்பட்ட காரணங்களால் கனமா இருக்கு. உங்க கவிதைகள் இன்னும் அதை கூட்டுது. குறிப்பா பாட்டி கவிதை..

creativemani said...

1. Super
2. Soopper
3. Sooopppeeerrrr

:)

Vidhoosh said...

நல்ல வேளை. நேத்து பாத்துட்டு என்ன சொல்றதுன்னு தெரியாம திகைச்சு இருந்தேன்.

///On May 6, 2010 11:04 AM , அன்புடன்-மணிகண்டன் said...

1. Super
2. Soopper
3. Sooopppeeerrrr

:)
////
அப்டியே repeat


வர வர ரொம்ப ஜாஸ்தியாத்தான் போச்சு எழுத்தின் கனம்.

அந்தப் பேனாக்கு இன்க் போட்டாச்சா?? இல்லை அப்படியே காலியா இருக்கா?

Ashok D said...

மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..

:)

VISA said...

முதல் கவிதை அசாத்தியம்

நட்புடன் ஜமால் said...

கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு]]

விலாசுதுங்க வார்த்தை

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க... தொடருங்கள்...

மரா said...

//ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..
//
இதுதான்னே கவிதையின் உச்சம்.செம ஃபார்ம்ல இருக்கீங்க.செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பிய கவுஜ என்னாச்சு?

பத்மா said...

மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

நல்லா இருக்கு

ரோஸ்விக் said...

//என்னமோ எழுதுகிறேன்...//

என்னமா எழுதுகிறீர்...!!!!

மிக அருமை அண்ணே...

ரோஸ்விக் said...

ஆமா... மேல இருக்குற ஹீரோ நடிச்ச ஹிந்தி படம் எப்போ ரிலீஸ் ஆகுது??

'பரிவை' சே.குமார் said...

ஏதோ எழுதுகிறேன்....


என்னமாய் எழுதுகிறீர்கள் ஷங்கர்.

கவிதைகள் அருமை.

தொடரட்டும்.

இரசிகை said...

3-me superb....:)

thalaippula avaiyadakkam jaaaaaaaaasththiyaa theriyuthy:)

vaazhthukkal!

Paleo God said...

ஆதரவிற்கு மிக்க நன்றி!!

@ பிரசன்னா : அதே!! அதே!! :)

நசரேயன் said...

//என்னமோ எழுதுகிறேன்..//
நாங்களும் என்னமோ படிக்கிறோம்

நசரேயன் said...

//ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் உன்
வழியனுப்புதல்கள்..//

ரெண்டு இட்லி ஒரு வடை

//
எதுவும் சொல்லமுடியாது
என்பதறிந்தே இருக்கிறது நம் காதல்
//

சொல்ல முடிஞ்சா அது என்னவா இருக்கும்

//
உன் முகம் மறைந்து பிம்பமாய்
மாறும் கணம்தோறும்...//

பேய் இருக்கிறது என்கிற உண்மை தெரிய வருகிறது ?

//
ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..
//

போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க ?