பலா பட்டறை: இரண்டாம் பாவம்....

இரண்டாம் பாவம்....



அமைதியாய் உலகத்தையும், பரந்த வெளியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாயிரம் சிந்தனைகள் மனதினுள்ளே புயலாக அடித்துக் கொண்டிருந்தது.  அடுத்தது என்ன செய்யப்போகிறேன்? எப்படி வாழ்வு நகர்த்தப்போகிறேன்? நானும், வெறுமையும் நேருக்கு நேர் உட்கார்ந்திருந்தபோது. கற்றுக்கொடுக்கப்பட்டவை எல்லாமே குப்பையாகிப்போனது.

என்னால் எதுவும் செய்யமுடியாத முடிவின் ஆரம்ப ஆட்டம் தொடங்கியதை விருப்பு வெறுப்பின்றி வெறுமனே எதிர்கொள்ள முடியாத அளவுக்கு சக்தியற்றுப்போயிருந்தேன். அன்பினால் என்னை அரவணைத்தவர்கள் அதிகமில்லை என்றாலும், தாயில்லாமல் தாயாகவும் இருந்த தந்தையை நினைக்க நினைக்க துக்கம் பொங்கியது.

"நல்லா படி. நல்லா வருவ. துரோகமும் குரோதமும் வேண்டாம். "

"சரிப்பா."

"நீ எதுவேண்டுமானாலும் ஆகிக்கொள் அதில் மனிதனாய் இருக்க முடியுமா என்பது மட்டுமே உன் சரி பார்த்தலாய் இருக்கட்டும். "

பாதிரியாய் இறை தொண்டில் என்னை பார்க்க அவர் ஆசைப்பட்டாலும், துரித கதியில் மனிதர்களைக் கொல்லும் ராணுவத்தில் நான் சேர்ந்தது நாங்கள் இருவருமே எதிர்பார்க்காதது. அபரிமிதமான படிப்பும், மூளை உபயோகமும் என்னை அங்கே இணைத்துவிட்டது. ஒருவேளை இப்போது நான் இருக்கும் இந்த நிலைமைக்கும் என்னுடைய பாவச் செயலே காரணமோ?

மீண்டும் கண்கள் பிரபஞ்சத்தில் நிலை குத்தியது. அப்பா உலகைக் சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டார். நான் ராணுவத்தில் பல பரிசோதனைகளில் பங்கேற்றுக்கொண்டிருந்தேன். உடல் தசைகளின் வலிமையை அணு அணுவாய் பரிசோதிக்கும் ஒரு செயற்கை நீர் தொட்டியின் ஆழத்தில் பிராணவாயு குழாயில் ஏற்பட்ட பிரச்சனையின்போது பதட்டத்தில் மெதுவாய் மேலே வரவேண்டிய வழிமுறையை கைவிட்டு அவசர அவசரமாக வெளிவந்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில், மெல்லக் கண் விழிக்கும் போது காதலாய் அருகிலிருந்த ஜெனீபருக்கு நான் பரிசளிக்க வேண்டிய மோதிரத்தை இதோடு நூறாவது முறையாகப் பார்த்துவிட்டேன்.

நாடகம் முடியப்போகிறது. எப்போது என்பதே கேள்வி. அடுத்தது என்ன என்பதை யார் அறிவார்? இதோ இந்த உலகத்தில் மறுபடி எங்கேனும் நான் பிறக்கக்கூடும். மனிதனாகவோ மற்ற எதுவாகவோ. அல்லது இல்லாமலும் போகலாம். இருப்பதைக்கண்டுபிடித்து பெயர்கள்வைத்த அறிவியல், என் முடிவை தோல்வி என்று ஒப்புக்கொள்ளாமல் சோதனையில்  தவறென்று வாதிக்கும். தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளும் இந்த உலகத்தின் நானும் என்னை இந்த நிலையில் வைத்து காட்சிப்பொருளாக்கி இருக்கும் விஞ்ஞானமும் வாயெல்லாம் மிட்டாய் பிசுபிசுப்பில் கையில் பலூன் கொண்டு ராட்டினம் பார்க்கும் குழந்தையே அன்றி வேறல்ல என்ற எண்ணம் தோன்றியவுடன் என்னுடைய கடைசி சிரிப்பு முகத்தில் வந்து போனது.      

ஜன்னலிலிருந்து பார்வையை கணினிப் பக்கம் திருப்பினேன். நீலமாய் இருக்கும் பூமிப்பந்தினை மொத்தமாய்க் கடல் முழுங்கி விட்டிருந்தது. எவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத ஒரு கோரத் தாண்டவம். இவ்வளவு நாள் இந்த நீர் இந்த உலகில் எங்கு இருந்தது? யாரிடம் நான் போய் கேட்பேன்? விடை தெரியாத கேள்வியை மனதில் சுமந்தபடியே என்னை சுமந்து கொண்டு இந்த பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது இந்த வின்வெளி ஓடம்.

இவை எதுவும் அறியாது உறங்கும் கேப்ஸ்யூலிலிருந்து "ஹாய் ஷான்" மிதந்தபடியே வந்த ஜெனியை பிடித்தபடியே அந்தரத்தில் மண்டியிட்டு, கணினியை மறைத்து  மோதிரம் காட்டி...                    



"வில் யூ மேரி மீ" என்றேன்.



கையை விரித்தவள் கையில் ஒரு ஆப்பிள் iPod இருந்தது.



.

49 comments:

மணிஜி said...

வாவ்..

vasu balaji said...

ஜெனி ipod காலத்துலயே போய் சேர்ந்துட்டாங்களா? ipod போய், iphone versions எல்லாம் வந்து, ipad vanthu இப்போ iphone 4gகு வெயிட்டிங்ல:))..சும்மா டமாசு. எங்க ஆளக் காணோம்?

Unknown said...

சொல்லுங்க .....

ஈரோடு கதிர் said...

அசத்தல்

அன்புடன் நான் said...

வித்தியாசமா இருக்குங்க.

பா.ராஜாராம் said...

superb!!

தலைப்பிற்கு ஒரு சபாஷ், ஷங்கர்! :-)

ஹேமா said...

//"நீ எதுவேண்டுமானாலும் ஆகிக்கொள் அதில் மனிதனாய் இருக்க முடியுமா என்பது மட்டுமே உன் சரி பார்த்தலாய் இருக்கட்டும். "//

நானும் சொல்றேன் ஷங்கர்.

பாலா said...

என்ன.. எழவு.. ஒன்னும் புரியலையே??!!!

Cable சங்கர் said...

repetu.. hollywoodbala:)

சிநேகிதன் அக்பர் said...

அருமையான புனைவு சங்கர்.

dheva said...

திருத்தமாய் எழுதும் நான் ரசிக்கும் மிகச் சில பதிவர்களில் நீங்களும் ஒருவர் சங்கர்! அசத்தல் தலைப்பும் ஆப்பிள் ஐ போட் முடிவும்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Superb.

Unknown said...

அந்த ஆப்பிள் ஐ-பாட்க்குள்ள என்ன இருந்தது?

:)))

நல்ல புனைவு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா....

மீண்டும் ஒரு அசத்தலான பதிவு....

Prasanna said...

அப்போ அவர்களுக்கு விஞ்ஞானம்தான் கடவுள்.. கரெக்டா :)

பிரபாகர் said...

நல்லா வந்திருக்கு சேம் பிளட்! என்ன சொல்ல வந்திருக்கீங்கன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு. போன்ல கேட்டுக்கறேன்!

பிரபாகர்...

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!! "பாவம்" சுவராசியமாய்தான் இருக்கு.

Vidhoosh said...

பொறந்ததுதான் முதல் பாவம் அப்டீங்கறீங்களா? இல்லை தண்ணிக்குள்லேந்து தப்பிச்சதா..??

கலக்கல் எழுத்துங்க ஷங்கர். அப்பாகிட்ட நீங்க எழுதுவதை எல்லாம் படிச்சு காண்பிக்கிரீங்களா? அதைவிடவா சாகித்ய அகாடெமி எல்லாம் பெருசு.. ரொம்ப அருமையாக இருக்குங்க. :-)

டேய் ஹரி.. தம்பி இங்க வாடான்னு கூப்பிட்டு கூப்பிட்டு, பாத்துகிட்டு இருக்கும் போதே விடு விடுன்னு வளர்ந்து விட்ட குட்டி பையனை எல்லோரும் அலுவலகத்தில் சார் சார்-ன்னு கூப்பிடும்போது ஏதோ ஒரு மகிழ்ச்சி வருமே, அது போல இன்னிக்கும். :-)

எறும்பு வரலையா..? :))

ருத்ர வீணை® said...

இப்படியெல்லாம் புரியாத மாதிரி எழுதுனா நிறைய பின்னூட்டம் வரும் போலருக்கு.. ஹீ..ஹீ..ஹீ..

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Radhakrishnan said...

முதலில் படித்தபோது எனக்கு எழுத்தின் சாரம் என்னவென புரிந்து கொள்ளமுடியவில்லை. பின்னூட்டங்களைப் படித்தபோது பலரும் பாராட்டி இருப்பது கண்டு மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். ஏனோ மீண்டும் புரியவில்லை.

ஆனால் எனக்கு உங்கள் எழுத்து பிடித்து இருந்தது. எழுதிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அழகிய தமிழ். தந்தைக்கான அக்கறை தெரிந்தது. தண்ணீரில் தொலையும் பூமி தெரிந்தது.

இப்படித்தான் யோசித்துக் கொண்டே எழுதுகிறேன். தண்ணீரில் தொலையும் பூமி என எழுதியதைப் படிக்கிறேன், அட எனக்கு இப்பொழுது எழுத்திற்கான சாராம்சம் மிகவும் அழகாய் புரிந்து விட்டது.

ஆப்பிள் பாட் அதி அற்புதம்.

செ.சரவணக்குமார் said...

மெருகேறியிருக்கும் உங்கள் எழுத்தை வெகுவாய் ரசித்தேன்.

VISA said...

VOWWWWWWW!!!!

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமா இருக்குங்க.

எறும்பு said...

வாவ்.. வாவ்..

எறும்பு said...

//எறும்பு வரலையா..?//

வந்துட்டேன் ..

எறும்பு said...

//கலக்கல் எழுத்துங்க ஷங்கர்.//

வயித்த கலக்குற மாதிரி எழுதுறாரா?

வ பு அ....??!!

எறும்பு said...

//பா.ராஜாராம் said...

superb!!

தலைப்பிற்கு ஒரு சபாஷ், ஷங்கர்! //

தலைப்ப தவிர மத்தது எல்லாம்??

;)

எறும்பு said...

//ipod போய், iphone versions எல்லாம் வந்து, ipad vanthu இப்போ iphone 4gகு வெயிட்டிங்ல//

அய்யா, லேட்டஸ்ட் டெக்னாலஜி பத்தி தெரிய சங்கரு உங்கள மாதிரி யூத் இல்லையே!
:)

எறும்பு said...

//என்ன.. எழவு.. ஒன்னும் புரியலையே??!!!//

எழவா ... புரியலையா.. அப்ப
எழக்கியவாதி ஷங்கர் வாழ்க வாழ்க

:)

சாந்தி மாரியப்பன் said...

இரண்டாம் ஏவாள் கொடுத்த ஆப்பிள் ஐ பாடில் என்னதான் இருந்தது? :-))))

நட்புடன் ஜமால் said...

அந்த iPod அவங்க கொடுக்க வந்த பரிசா ...

சாமக்கோடங்கி said...

புரிந்ததோ இல்லையோ... ஷங்கரின் தமிழ் நன்றாக மெருகேறி ஜொலிக்கிறது...

நான் கொஞ்சம் மக்கு... மறுபடியும் போய்ப் படிக்கிறேன்...

நன்றி...

சாமக்கோடங்கி said...

ஆதாம் ஏவாள் கதை மறுபடியும் தொடருகிறதோ....?

அனு said...

இவ்வளவு பேருக்கு புரிஞ்சிருக்கு...

எனக்கு மட்டும் தான் புரியலயா??

பாலா said...

///இவ்வளவு பேருக்கு புரிஞ்சிருக்கு...

எனக்கு மட்டும் தான் புரியலயா?///

பதிவைத்தான் படிக்கலை. கமெண்டையுமா??? ;)

ஜெய்லானி said...

பாதி புரியுது , அப்ப நான் தெளிவாதான் இருக்கேன்.

ரோஸ்விக் said...

அண்ணே தமிழ் நடை நல்லாயிருக்கு... ஆனா எனக்கு என்ன மேட்டர்-னு புரியலண்ணே!

அனு said...

//
//இவ்வளவு பேருக்கு புரிஞ்சிருக்கு...

எனக்கு மட்டும் தான் புரியலயா?//

பதிவைத்தான் படிக்கலை. கமெண்டையுமா??? ;)
//

அதான் 'இவ்வளவு பேருக்கு புரிஞ்சிருக்கு'னு சொன்னேனே.. ஸோ, கமெண்ட்-டையும் படிச்சுட்டேன்னு தானே அர்த்தம்.. உலகம் அழியுதுன்றாங்க, ஆதாம் ஏவாள்-ன்றாங்க, அப்பிள்ன்றாங்க, பாவம்ன்றாங்க.. Reference-க்கு பைபிள கூட படிச்சு பாத்துட்டேன்.. எல்லாமே தலைக்கு மேல போகுது :(

ம்ம்ம்.. நேத்து இருட்டுல படிச்சதால ஒழுங்கா புரியல போல இருக்கு.. வெளிச்சத்துல ஒரு தடவை நல்லா படிச்சு பாக்குறேன்..

டிஸ்கி: கமெண்ட்ஸ் படிச்ச அப்புறம் தான் நான் தனி ஆள் இல்லன்னு புரிஞ்சது.. ;)

Ahamed irshad said...

Super..b

அனு said...

ஐ.. எனக்கும் புரிஞ்சுடுச்சு.. நானும் ரௌடி தான்..

@Hollywood Bala
நீங்க போட்ட கமெண்ட்-ட ஷங்கர் போட்டதுன்னு நினைச்சு பதில் கமெண்ட் போட்டுட்டேன்... நீங்களும் நம்ம category தானா?? (in past tense)

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

ரிஷபன் said...

சுவாரசியமா விஞ்ஞானக் கதை படிச்சு ரொம்ப நாளாச்சு..

Jerry Eshananda said...

Eve Teasing.

Jerry Eshananda said...

சங்கர் பதிவை ரசித்தேன்,அப்புறம் இந்த கதையவே கொஞ்சம் டெவலப் பண்ணி தமிழ்,தெலுகு ,ஹிந்தில உங்களை ஹீரோவா போட்டு படமெடுக்கலாமா?

க.பாலாசி said...

நான் டூலேட்டா வந்திட்டேன்...

அசத்தல்...உங்களுக்கே உரியதன்மையில்....

Paleo God said...

@மணிஜீ:: நன்றி தலைவரே! :)

@வானம்பாடிகள்: ஹி ஹி நன்றி சார்! (வெளியூர் பயணம்)

@பாலவாசகன்: நன்றிங்க! :)

@செந்தில்:: சொல்லிட்றேன்ங்க! :)) நன்றி!

@ஈரோடு கதிர்: நன்றிங்க கதிர்::)

@சி,கருணாகரசு: நன்றிங்க தோழர் :))

@பா.ரா: மிக்க நன்றிண்ணே! :))

@ஹேமா:: சரிதாங்க சகோ.! நன்றி :))

@ஹாலிபாலி:: கரெக்ட்டா புரிஞ்சிகிட்டீங்க பாலா! :))

@கேபிள்ஜி: ரீவைண்டு ஹாலிபாலி! :))

@அக்பர்:: நன்றிங்க அக்பர்:))

@தேவா: மிக்க நன்றிங்க தேவா! :))

@ஜெஸ்வந்தி:: நன்றிங்க சகோ! :))

@முகிலன்:: மிக்க நன்றி முகிலன்! :)) அது அடுத்த பார்ட்!! :)

@T.V.ராதாகிருஷ்ணன்:: மிக்க நன்றி சார்:))

@சங்கவி:: நன்றி நண்பா:))

@பிரசன்னா:: நீங்க சொன்னா சரிதான்! :)) ஆனாலும் வேறு கோணத்தில் சிறப்பாய் எனக்கு முன்பே நீங்கள் எழுதி இருப்பதையும் பாராட்டுகிறேன்.

@பிரபாகர்:: ரைட்டு சேம் ப்ளட்:)) மிக்க நன்றி!:)

@சை.கொ.ப. மிக்க நன்றிங்க! :))

@விதூஷ்:: நன்றிங்க சகோதரி (என்னது சாகித்திய - என்ன வெச்சி காமெடி கீமெடி எதாவது??? அவ்வ்வ்வ்வ்வ்)

Paleo God said...

@ருத்ரவீணை::ரைட்டு:)) மிக்க நன்றி!!

@தலைவன்: சீக்கிறம் ஓட்டுப்பட்டை போட்டுடறேங்க (கவர் வர்லியே) :)

@வெ.இரா: மிக்க நன்றிங்க!! :)

@செ.சரவணக்குமார்:: மிக்க நன்றி நண்பா! :))

@எறும்பு: க.க.க.போ..ங்கள்!! எழக்கியவாதி - மிக்க நன்றி!! :))

@அமைதிச்சாரல்:: கரெக்ட்டா கேட்டீங்க!! :)) அடுத்த பார்ட்ல சொல்றேங்க! :)

@நட்புடன் ஜமால்:: இல்லைங்க பாட்டு கேட்டுகிட்டு இருந்தாங்க! :))

@பிரகாஷ்:: அதே! மறுபடி தொடர்கிறது. கற்பூரம்யா நீ!! :))

@அனு: எனக்கும்தாங்க! :)

@ஹாலி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

@ஜெய்லானி:: வாங்க. ரைட்டு! :))

@ரோஸ்விக்: சுனாமி பார்த்த உங்களுக்கே புரியலன்னா?? அச்சச்சோ!! :))

@அனு: உங்க பின்னாடி ஹாலிவுட்டே இருக்குங்க!!

@அஹமது இர்ஷாத்:: நன்றிங்க அஹமது! :))

@அனு: இப்ப எனக்கு சுத்தமா புரியல! :))

@ஷர்புதீன்:: உங்க விஷயத்துல மட்டும் கரெக்ட்டா இருங்க! :))

@ரிஷபன்:: மிக்க நன்றி ரிஷபன்! :))

@ஜெரி ஈசானந்தன்:: மிக்க நன்றி வாத்யார்!
ஏங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு எழுதி இருக்கேன். ஒன்லி அமெரிக்கா ப்ளீஸ் ! :))

@க.பாலாசி:: நன்றி பாலாசி! :))