பலா பட்டறை: வெண்ணை 0.10(எந்திரன் - லாஜிக் மீறும் கதைகள்)

வெண்ணை 0.10(எந்திரன் - லாஜிக் மீறும் கதைகள்)




2010/07/21 09:45

ஓட்டேரி, நாலு சாலை சந்திப்பு. பிள்ளையார் கோவில். சிறிய கழிவு நீர் பாலத்தின் அருகில்,..

பாருங்க ரைட்டர் விசா எழுதினத படிச்சீங்களா??

ஆமா அந்த 10 வயசு பையன் லாஜிக் இடிக்கிதே

அதில்லய்யா, அது ரொம்ப முக்கியமா இப்ப? நான் கான்செப்ட் பத்தி சொன்னேன்.

மொத்தக் கூட்டமும் சுய நலமாவே எழுதறாங்க யோசிக்கறாங்க. சர்க்கிள் ஆஃப் லைஃப் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல?

கரெக்ட். நான் ரொம்ப டீப்பா அவங்க திங்கிங்ல போயிட்டேன். ஆனாலும் எனக்கு ஒரு டவுட்.

சொல்லுங்க.

நோய்லேர்ந்து இயற்கை சீரழிவு வரைக்கும் எல்லாத்துக்கும் ஒரு சேஃப் நெட் கண்டுபிடிச்சிடுறாங்களே? சைன்ஸ வெச்சிக்கிட்டு..

ஹா ஹா அதான் இவங்க வீக்னஸே. எத்துனையோ கோடி வருஷமா சுனாமி வருது. இவ்ளோ கம்யூனிகேஷன் வெச்சிருந்தும் என்னத்தப் புடுங்கினாங்க?

என்ன சொல்ல வற்றீங்க?

அதாவது, பழச மறந்துட்டாங்க. சைன்ஸ் ஒரு போதை. இவங்க எப்ப காசு பணம்னு ஒன்னு கண்டு பிடிச்சாங்களோ அப்பவே வியாபார புத்தி முழிச்சிகிடிச்சு, சைன்ஸ்ல சம்பந்தப்படாத மத்த எல்லாமும் அதனோட உள்ளுணர்வுகள அப்படியே காப்பாத்தி வெச்சிகிட்டு இருக்கு பார்த்தீங்களா? அதனோட சைக்கிள் சரியா இருக்கு. இவனுங்கதான் நேரங்காலம் இல்லாம ஆடிக்கிட்டு இருக்காங்க. சைன்ஸோட மைனஸ் பாயிண்ட்டே அத வியாபாரம் ஆக்கினதுதான்.

ஆனாலும் இவங்க கண்டுபிடிச்சத வெச்சே இவங்க அழிஞ்சிகிட்டுத்தானே இருக்காங்க. ரயிலு, பஸ்ஸு, கப்பல், விபத்து, கரண்ட், ஷாக், சாராயம், சிகரெட், எய்ட்ஸ்.. புரட்சி, குண்டு வெடிப்பு, கடவுள், மதம் ஆனாலும் புரொடக்‌ஷனுக்கும், அழிவுக்கும் ரேஷியோ நிறைய வித்தியாசம்.

ஹுக்கும் இவங்க மட்டுமா அழியறாங்க, அதுக்குள்ள இந்த உலகத்துல எத்தனை அழிவுகள சுலபமா நடத்திடறான். இருந்தாலும் ‘காட் மஸ்ட் பி க்ரேஸி’ படம் எடுத்ததும் இவனுங்கதான்னு நினைக்கும்போது சிரிப்புத்தான் வருது.

கிர்ர்ர்

கண்ட்ரோல் ரூம்லேர்ந்து மெஸ்ஸேஜ் வருது..

T7 என்ன அப்டேட்.

சார் இது வேலைக்கு ஆவாது. டோட்டல் க்ளோப் சுத்தியாச்சு. ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மாத்தி யோசிக்கறாங்க. மத்தவங்கள்லாம் ஒரே குட்டை தான். ஐ மீன் சுய நலம்.

என்ன பண்னலாம்.

ஒரே ஒரு வழிதான் இருக்கு சார்.

என்ன?

காண்ட்ராசெப்டிவ் சிப்ஸ். எல்லா விதத்துலயும் கலந்து விட வேண்டியதுதான். இப்ப இருக்கறவங்களோட இந்த மனித இனம் முடிஞ்சிடும். அடுத்த முறை கொஞ்சம் டியூன் அப் பண்ணி ப்ரொடொக்‌ஷன் பண்ணிடலாம். ஆனா..

என்ன?

அடுத்த முறை கொஞ்சம் பக்காவா ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணனும் சார். புராணம், இதிகாசம், டெர்ரிடரி கடவுள்கள் இதையெல்லாம் நிறைய ஓட்டை இருக்கு..


சரி T7 பண்ணிடலாம். நான் என்ன கண்டேன் இவங்க கப்பல் எடுத்துக்கிட்டு ஊர் ஊரா போய் கலப்பாங்கன்னு. போக இவ்ளோ மூளை அளவும் வேஸ்ட்னு இப்பத்தான் புரியுது. ஆமாம் நம்மளப் பத்தி ஏதாவது ஆராய்ச்சி பண்றாங்களா?

இல்ல சார். கம்ப்யூட்டர் வெச்சிக்கிட்டு இன்னும் சோம்பேறி ஆகிட்டாங்க. ரோபோட்ல கொஞ்சம் பரவாயில்ல ஆனா எல்லாமே அவங்களுக்காகவே சிந்திக்கறாங்க. அதனால ரோபோட்டும் அவனுங்கள மாதிரிதான் இருக்கும். இவங்கள இங்க ப்ரொடக்‌ஷன் பண்ணினதே நாமதான் அப்படிங்கறது இவங்க கண்டுபிடிக்கவே முடியாது.

சரி சிப்ஸ் இன்னிக்கு ராத்திரி உங்களுக்கு டெலிவரி ஆகும். 

--

எக்ஸலண்ட்

அப்பா இது இயற்கைக்கு முரண்பாடா இருக்கே.

நோ நோ அப்படி இல்லை மை சன். இனி மனித இனம் உருவாக மனிதர்கள் தேவை இல்லை. இதோ இந்த இரண்டு ரொபோக்களை நமக்கு வேண்டிய டிஎன்ஏ குறியீடுகளில் செட் பண்ணினா குழந்தைகளை தயாரித்துக்கொள்ளலாம்.

எப்ப தயாரிச்சீங்கப்பா இந்த ரொபோக்களை.

தயாரிக்கலம்மா, வாங்கினேன்.

யார்கிட்டேர்ந்து..

ஓட்டேரி கஜாகிட்டேர்ந்து.

எப்படின்னு கேக்கமாட்டேன். எவ்ளோ கொடுத்தீங்க?

500 ரூவா..

--

T7 கிட்டேர்ந்து மெஸ்ஸேஜ் வந்திருக்கு சார்..


சிப்ஸ் கிடைச்சிதாமா? 


சிப்ஸோட சைண்டிஸ்ட் ரேவன்கிட்ட மாட்டிக்கிட்டாங்க. நம்ம ஆளுங்கள வெச்சே. மனித ப்ரொடக்‌ஷன் ஆராய்ச்சி நடத்தப்போறாங்களாம். இப்ப என்ன சார் பண்றது.


கடவுளுக்கு லைனப் போடு..


யெஸ்..

கடவுளே உங்கள கண்டு பிடிச்சிடுவாங்க போல இருக்கு!

வாட்? என்ன நடந்துது?

@#$%%% ... இதுதான் நடந்துது. நம்ம ரொபோங்க பவர் அதிகம் எப்படியோ மாட்டிக்கிட்டாங்க. ப்ரொடக்‌ஷன் ஆரம்பிச்சா நாளைக்கு 500 கோடி விழும். ரொம்ப கவலையா இருக்கு. இப்ப என்ன பண்ணலாம். கடவுளே?

முட்டாளுங்களா.. மொதல்ல உங்க ஆளுங்கள அந்த சிப்ஸ தின்னச்சொல்லி மெஸ்ஸேஜ் அனுப்புய்யா சீக்கிறம்!!




நீதி: நீ என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்
 

--

(தலைப்ப ஒருதரம் படிச்சிட்டு கமெண்ட் போடுங்க மக்கா!!)




.

30 comments:

CS. Mohan Kumar said...

Welcome back Shankar!!

VISA said...

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

VISA said...

ஓட்டேரி நரி பேர்ல போடு................

VISA said...

//“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”//
மீ த குழப்பம் அன்ட் மீ த தெளிவு அன்டு மெ த எஸ்கெப்

Unknown said...

எனக்கு இன்னும் சிப்ஸ் (உருளைகிழங்கு) வந்து சேரலை...

Cable சங்கர் said...

என்னை பத்தி ஏதோ உள்குத்து இருக்கிறாப்புல இருக்கே.. வெண்ணைய்யில..:)

'பரிவை' சே.குமார் said...

//(தலைப்ப ஒருதரம் படிச்சிட்டு கமெண்ட் போடுங்க மக்கா!!)//

athu sari... ithuthaan kathaiyaa...?

பின்னோக்கி said...

நல்லாயிருக்கு சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.

Paleo God said...

@மோகன்: வாங்கஜி. நன்றி! :)

@விசா: ஹா ஹா.. (3 கமெண்ட்டா சுய நலவாதி!:)

@கே.ஆர்.பி: அது எதுக்குங்க உங்களுக்கு? :)

@கேபிள்: உங்களுக்கில்லாததா தல! (எவ்ளோ குத்தினாலும் தாங்குவீங்களே! :)

@ சே,குமார்: ஆமாங்க! :)

@ பின்னோக்கி: ரொம்ப நன்றிங்க :)

Prasanna said...

சூப்பரப்பு.. கிட்டத்தட்ட உங்கள் சிந்தனை போன்று தான்.., Matrix, The Thirteenth Floor போன்ற Sci-fi படங்கள் வந்திருக்கு..

விக்னேஷ்வரி said...

ஏதோ புரிஞ்சும், புரியாத மாதிரியும் இருக்கு.

Anonymous said...

விக்னேஷ்வரி சொன்னதுதான் நான் சொல்றதும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

புரியுது..ஆனா..புரியலே

நாடோடி said...

த‌லைப்பை ப‌டிச்சிட்டேன்... க‌மெண்ட் போட்டுட்டேன் ஷ‌ங்க‌ர்ஜி..

Vidhoosh said...

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு எழுத அழைப்பு வச்சுருக்கேன். முடிஞ்சா எழுதுங்க. சரியா.

வால்பையன் said...

நல்லாயிருக்கு சிப்ஸ்!

vasu balaji said...

உம்மாச்சி காப்பாத்து. தெரியாம கேட்டுட்டேன் வெண்ணெய் என்னாச்சுன்னு. :)). நல்லாருக்கு ஷங்கர். ஆனா 25-30 வருஷத்துக்கு முன்னாடி டெமன் சீட்னு ஒரு படம் வந்தது. சத்யம் பால்கனில நானும் என் நண்பன் 2 பேர் மட்டும். மொத்தமா ஒரு 20 பேர் வந்திருந்தா அதிகம். அப்புறம் ஒரு தூக்கு தூக்கிச்சி 50 நாளுக்கு மேல. கிட்டதட்ட இந்த கான்ஸப்ட்தான்:)

ஜோதிஜி said...

முதல் ஆஜர். வணக்கத்த வச்சுக்குறேன்.

என்ன பங்களாளிய காணோம். தல ராத்ரி வருவாரா?

மறுபடியும் வர்றேன்.

Unknown said...

நான் எழுதின கதையில நீதிக்கும் கதைக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லிக் காட்டுறீங்களா சங்கர்ஜி?

பாலா said...

//பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு எழுத அழைப்பு வச்சுருக்கேன். முடிஞ்சா எழுதுங்க. சரியா//

ஜிங்குச்சா.. ஜிங்குச்சா...!!

முற்பகல் கமெண்ட் போட்டால்.. இப்பல்லாம்.. பிற்பகல்லயே மாட்ரேஷன் நடந்துடுதாம்!!!!

சவாலா வுடுறீங்க??? முடிஞ்சா விதூஷின் சவாலுக்கு பதில் சொல்லுங்க.

------
//என்ன பங்களாளிய காணோம். //

நான் தூங்கும் போது பதிவெழுதி எல்லாரும் தப்பிச்சிக்கறீங்க. ஒபாமா கிட்ட ஒரு மனு கொடுக்கணும்.

பிரபாகர் said...

ரெண்டு மூனு தபா படிச்சேன் சேம் பிளட்... அந்த அளவுக்கு.... குழப்பமா இருந்துச்சி!... கடைசியா... வெண்ணெய், நல்லாருக்கு.

பிரபாகர்...

க.பாலாசி said...

காலையிலேயே படிச்சேன். கொஞ்சம் கஷ்டம்தான் புரிஞ்சிக்க.. நல்ல டாப்பிக்..

ஹேமா said...

புரிஞ்சுபோச்சு !

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

புதுக்கவிதையா இருக்கு...அதான் சகோ புரியல.

ஜில்தண்ணி said...

கேபிள் அண்ணே
வெண்ண செமயா இருக்கு :)

கடவுளுக்கு ஒரு கால போடு :) செம

கலக்குங்கன்னே

சீமான்கனி said...

பயங்கரமான சிந்தனையா இருக்கு ஷங்கர்ஜி...."அவரு"க்கும் இந்த பகிர்வுக்கும் ஏதும் சம்பந்தமா ???இருந்தாலும்...வெண்ணை வெண்ணைதான்...சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க

சீமான்கனி said...

பயங்கரமான சிந்தனையா இருக்கு ஷங்கர்ஜி...."அவரு"க்கும் இந்த பகிர்வுக்கும் ஏதும் சம்பந்தமா ???இருந்தாலும்...வெண்ணை வெண்ணைதான்...சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க

பனித்துளி சங்கர் said...

அதிக நாட்களுக்கு பின் நண்பரின் பதிவை வாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி . சிறப்பான பதிவு நண்பரே தகுந்த நீதி மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி .

செ.சரவணக்குமார் said...

// நாடோடி said...

த‌லைப்பை ப‌டிச்சிட்டேன்... க‌மெண்ட் போட்டுட்டேன் ஷ‌ங்க‌ர்ஜி..//

ஹி ஹி... நானும் அப்பிடித்தான்.

ஜோதிஜி said...

இது பலான பட்டறை அல்ல,


ஏன் பாலா இதை நீங்கள் படித்தீர்களா?