பலா பட்டறை: வெண்ணை 0.11 (லாஜிக் மீறும் கதைகள் - கடப்பாறை நீச்சல்!)

வெண்ணை 0.11 (லாஜிக் மீறும் கதைகள் - கடப்பாறை நீச்சல்!)



போன முறையே சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கில்ல. சரி தலைப்ப ஒருக்க நல்லா படிச்சிட்டு உள்ளார போலாம்..!

முகிலனும் நானும் நயாகரா ஃபால்ஸ்க்கு சனிக்கிழமையானா எண்ணை தேச்சி குளிக்கப் போவோம். ரெண்டுபேருக்குமே நீச்சல் தெரியாது. முகிலனுக்கும் அருவி மேலேர்ந்து டைவ் அடிக்கனும்னு ஆசை. எனக்கு அருவி பக்கத்துல போகனும்னாலே அலர்ஜி.

ஒருக்கா ஜான்ஸி அக்காகிட்ட வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேன். ஜான்ஸி அக்கா தெரியுமில்ல நம்ம விஜயசாந்தி கீரோயின் இருக்காங்களே அவங்க மாதிரி நெம்ப தெகிரியமான பார்ட்டி. அக்கா அருவில டைவ் அடிக்கறதுல கில்லாடி.

”என்னா சங்கரு நீச்சல் போட்டி வெச்சிக்கலாமா? இக்கரையிலேர்ந்து அக்கரை?”

அப்படின்னு கேட்டப்பதான் வெனையே ஆரம்பிச்சிது. ஒரு பெண்ணிடம் தோற்கக்கூடாதென்ற ஆண்டாண்டுகாலமாய் இருந்த ஆணவ அணுக்கள் வீராப்பாய் போட்டிக்கு சரி என்றது. முகிலன் என் கையை பிடித்து இழுத்தபோது கூட நான் என் முடிவில் தீர்மானமாய் இருந்தேன்.

”சரி என்ன ஸ்டைல்?” ஜான்ஸி அக்கா கேட்டபோதுதான் எனக்கு மண்டைக்குள் வெயில் அடித்தது..

”கடப்பாறை நீச்சல்” என்று சொல்லி காசித் துண்டால் முகம் துடைத்து புருவம் உயர்த்திப் பார்த்தபோது ஜான்ஸி அக்கா முகம் நான் எதிர் பார்த்த படியே குழம்பிப்போயிருந்தது.

”அதென்னா கடப்பாறை நீச்சல் இங்லீஷ் பேர தமிழ்ல சொல்றியா என்ன?”

”இல்லையே” என்றேன்.

”சரிக்கா வர்ற ஞாயித்துக்கிழம வெச்சிக்கலாம் போட்டிய.” என்று சொல்லிவிட்டு முகிலனுடன் புல்லட்டில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன்,

”க்ளக்” என்று முகிலன் சிரித்தபோது முகிலனுக்கும் புரிந்துவிட்டதாய் எனக்குப் பட்டது.

 ”சரி உனக்குள்ளயே வெச்சிக்கோ. ஞாயித்துக்கிழம நாம சாரி நாந்தான் கெலிக்கறேன் என்ன? ஆமா இப்ப எங்க முகிலு போறோம்.”

”மெட்ரோக்கு.! விசா வற்றாப்ல” என்று முகிலன் சொன்னபோதுதான் எனக்கு விசாவின் நினைவே வந்தது, ஆஹா இனி ஞாயிறு களை கட்டிடும்.

”அட மறந்தே போச்சு! ஆமா விசாவ எங்க தங்க வெக்கறது. தோட்டவீட்லயா?”

”இல்ல, விசாவுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது, அதனால நம்ம கூடவே தங்கிடட்டும்.” எனக்கும் அது சரியென்றே பட்டது. ஏனென்றால் நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு பக்கத்தில்தான் லேடீஸ் காலேஜும், ஹாஸ்டலும் இருந்தது. பெண்களைப் பார்த்தால்தான் எழுத்தாளருக்கும் கதை எழுத வரும் என்று தோன்றியது. என்னது யார் எழுத்தாளரா விசாவை நாங்க அப்படித்தான் அழைக்க ஆரம்பித்தோம், அது தனிக் கதை, அதை பிறகு பார்க்கலாம்.

--

”டாமிட்..”.

நான் விசாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகிலன் கோக் வாங்க சென்றிருந்ததால். வரவேற்க நான் முதலில் செல்ல வேண்டி இருந்தது.

 ”விசாகூல்டவுன் இப்ப என்னாச்சு?”

”என்ன சங்கர் நீங்களே இப்படிக் கேட்கலாமா?” கையில் வைத்திருந்த போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரில் அங்காடித்தெரு என்று ஒளிர்ந்துகொண்டிருந்தது.

மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் 555 புகைந்து கொண்டிருந்தது. ஆழ இழுத்த விசாவை நான் வெறித்தேன். ’கேபிள்’ என்று பனியனில் எழுதி இருந்த ஒரு மெக்ஸிகோகாரி விசாவைப் பார்த்து சிரித்தபடி சென்றாள்..

”இந்தப் பெண்ணா?” என்றேன்.

இல்லை என்று உள்ளே பழம் விற்றுக் கொண்டிருந்த வடக்கூர் பெண்ணைக் காட்டி ”அவ சாரிய ஒருத்தன் பூட்ஸ் காலால மெதிச்சிட்டான். அவன் கால எடுக்கற வரைக்கும் அவ ஒண்ணுமே சொல்லாம நின்னுக்கிட்டிருந்தா **** ஒரு குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூடவா காமிக்ககூடாது.”

திரும்பவும் கூல்டவுன் என்றால் அந்த நட்சத்திர வார்த்தை எனக்கும் வருமென்று தோன்றியது. நான் முகிலனுக்காக காத்திருந்தேன்.

--

”ஆமா யார்கூட போட்டி ஞாயித்துக்கெழம?” என்று விசா கேட்பதற்கும் வாழை பழத்தோல் எங்கள் மீது விழுவதற்கும் சரியாக இருந்தது. புல்லட்டின் மேற்கூரையை மூடாமல் வண்டியோட்டிக்கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன். சரியாக தோல் விசாவின் மடியில் விழுந்திருந்தது. அந்த நட்சத்திர வார்த்தை வருமென்று எதிர்பார்த்த எனக்கு புன்னகை தெரிந்தது ஆச்சர்யமாக இருந்தது.

“ என்னதான் சூப்பர் டைவர்ன்னாலும் பழம் உரிச்சிக்கிட்டே இப்படி வண்டியோட்டக்கூடாதுங்கோவ்..” என்று முகிலன் எதிர்காற்றையும் மீறி பக்கத்து வண்டியைப் பார்த்து சொல்லியபோதுதான் கவனித்தேன். அட ஜான்ஸி அக்கா! புல்லட்டின் முள் சரியாக 150 மைல் காண்பித்தது.

 எங்க போறீங்க? என்ற என் சைகைக்கு டி ஓ என்ற சைகை பதிலாகக் கிடைத்தது. அடுத்த பழத்தை உரித்தபடியே அக்கா பறக்க ஆரம்பித்துவிட்டார். டிஓ டொரோண்டோவா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

நான் விசாவைப் பார்த்தேன். சீரியஸாக குமுதத்தில் த்ரிஷாவின் படத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்தது விசாவின் விரல்கள். எழுத்தாளனின் பிரசவ வேதனையை நான் பார்க்க இயலாது வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

--

ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நயாகரா கேட்டில் நின்று கொண்டிருந்தோம். நான், ஜான்ஸி அக்கா, விசா, முகிலன் வாட்ச்மேன் உள்ளே விட மாட்டேனென்று அக்காவை திட்டிக்கொண்டிருந்தார்.

 ”ப்ளடி மேல் சாவனிஸ்ட்” என்று விசா பல்லைக் கடிக்க ஆரம்பிக்க எனக்கு வில்லங்கமாய் ஏதேனும் நடக்குமோ என்று பல்லி உள்ளே கத்த சுருதி சேர்த்துக்கொண்டிருந்தது. எப்பொழுதும்போல முகிலன் ஐபோன் எடுத்து படமெடுக்க ஆயத்தமானபோது..

அக்கா என்னிடம் திரும்பி ”இன்னிக்கு இது வேலைக்காவாது போல சங்கரு. சரி போகட்டும் போட்டிய ரத்து பண்ணிடலாம். ஆனா அதென்ன கடப்பாறை நீச்சல்? எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடேன்.”

”சாரிக்கா அத வெச்சித்தான் நான் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கப்போறேன்” என்றேன். அக்கா புன்னகைத்தபடியே சரி பொழைச்சிப்போ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு லேட்டஸ்ட் ஃபெர்ராரியில் ஏறி 7 நொடிக்குள் புழுதியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு காணாமல் போனார்.

”நீயெல்லாம் ஆணாதிக்கவாதிய்யா..” என்ற விசாவை நான் புருவம் சுறுக்கிப் பார்த்தேன். இப்பொழுதும் வீடியோ ரொம்ப முக்கியமா முகிலன்? என்று மனதில் கேட்டுக்கொண்டே. ”நான் என்ன பண்ணினேன் விசா?” என்றேன். ”ஏன் அந்த கடப்பாறை நீச்சலை ஜான்ஸி அக்காவுக்குச் சொல்லி அவங்க ஒலிம்பிக்ல மெடல் வாங்கக்கூடாதா?” என்று கேட்டு முடித்த விசாவிடம், புல்லட்டின் டிக்கியில் வைத்திருந்த கடப்பாரையை எடுத்துக் காட்டி

”நல்லா கவனமா பார்த்துக்க விசா, இதுதான் கடப்பாறை நீச்சல்” என்றபடியே கடப்பாரையை தெளிந்த அந்த ஆற்று நீரில் போட்டேன். அது ’சொய்ங்’ என்று அடியில் போய் படுத்துக் கொண்டது.

”என்னாது இது” என்று அதிர்ந்த விசாவிடம் ”இந்த கடப்பாறைக்குத் தெரிந்த நீச்சல்தான் எனக்கும் தெரியும்” என்றேன்.

முகிலன் அப்பொழுதும் ஐ போனில் வீடியோ எடுத்தபடியே. என்னைப் பார்த்து அவ்ளோதானா கண்டினியூ உண்டா?? என்று கேட்டது

”****** ” என்ற விசாவின் சத்ததில் பிசிறாகவே காதில் விழுந்தது.


--

குறிப்பு: இது காலஹாரி இலக்கிய(!)  முறையில் எழுதப்பட்ட புனைவு. நானும் முகிலனும் டியூஷன் படிக்க செஷெல்ஸ் போனபோது நினைவு படுத்தி எழுதினோம். முதலில் வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும். போகப் போகப் பழகிடும்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதுதான் முடிவென்று சுலபமாய் ஊகிக்கமுடியும். ஆனால் நடுவில் வரும் திருப்பங்கள் நிச்சயமாய் எழுதும் என்னால் கூட ஊகிக்க முடியாது. நீங்களும் முயற்சி செய்யுங்கள். காலஹாரி கதைகள் எழுத முகிலனையும் விசாவையும் மேடைக்கு அழைக்கிறேன்.

நன்றி! :))



.

32 comments:

சீமான்கனி said...

Ai vadai....

King Viswa said...

டைட்டிலே சுண்டி இழுக்குதே?

King Viswa said...

சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் கலஹாரி தெரியும், அது என்னங்காணும்வோய் காலஹாரி?

King Viswa said...

கொய்யால...............




முழு கதையையும் படித்ததும் இப்படித்தான் எழுத வருது.

சீமான்கனி said...

லாஜிக் இல்லன்னு சொல்லிட்டு..........என்ன இது ஷங்கர் ஜி... :)

Paleo God said...

@கனி வெண்ணை வடை எப்பூடி? :)

@கிங்விஸ்வா: தலைப்ப படிங்க தல!. அதேதான் (பாலைவனச் சோலைன்னா படிக்க வருவீங்களா என்ன?) :))

King Viswa said...

சரி விடுங்க.

நீங்க கதை சொன்னதாலா நான் மூணு கேள்வி கேக்குறேன்: முதல் கேள்வி: சகோதர வாஞ்சியும் ஜீவ காருண்யமும் பூண்டு, சன்னியாசியின் மந்திரக்கோலை அபகரித்து, இகபரம் புகழ மண்ணுலகை ஆளும் மன்னவன் இருக்கின்றானா? இறந்துவிட்டானா? அவன் யார்?

இரண்டாம் கேள்வி: மண்ணுலகில் பெண்ணாக பிறந்து ஆண் வேடம் பூண்டு, அமைச்சர் தொழில் புரிந்து, பஞ்ச வஞ்சியர்களை மனம் செய்து கொள்வதாக கவர்ந்து வரும்போது, அப்பெண்களை சிறைகொண்ட சன்னியாசியை அடித்து துரத்திய அறிவை இருக்கின்றாளா? இறந்து விட்டாளா? அவள் யார்?

மூன்றாவது கேள்வி: சன்னியாசிக்கு உதவிய சுதாவும், ஆகாத மதியும் உயர்ந்து நிற்கின்றார்களா? இறந்து விட்டார்களா? அல்லது சுதாமதி என்னது?

King Viswa said...

தல,

//தலைப்ப படிங்க தல!. அதேதான் (பாலைவனச் சோலைன்னா படிக்க வருவீங்களா என்ன?//

தலைப்பை ஒன்னுக்கு ரெண்டு தரம் படிச்சுட்டு வந்தாலும் இப்படியே. இருந்தாலும் இது ரொம்ப ஓவர்.

Paleo God said...

@ விசாவுக்கு பதில் விஸ்வாவ கூப்பிட்டிருக்கலாமோ? :)) ஐய்யா இப்பத்தான் வெண்ணை காச்சி முடிச்சேன் உங்க கேள்விக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ணத்தான் விக்ரம் பாலா ஹாலிவுட் போயிருக்கார். தா இப்ப வரும்.. :))

King Viswa said...

//விசாவுக்கு பதில் விஸ்வாவ கூப்பிட்டிருக்கலாமோ?//

பட் வை திஸ் கொலைவெறி? ஆள விடுங்க சாமியோவ், நான் அப்பீட் ஆகிக்குறேன்.

பனித்துளி சங்கர் said...

இன்றைய வெண்ணையை அதிகமாகவே உருக்கி இருக்கீங்க போங்க . நல்ல இருக்கு தல .

நசரேயன் said...

// முகிலனுக்கும் அருவி மேலேர்ந்து
டைவ் அடிக்கனும்னு ஆசை//


கேட்க ஆள் இல்லை என்பதற்காக என்ன வேணாலும் சொல்லுறதா ?

நசரேயன் said...

//முகிலன் வாட்ச்மேன்//

எம்புட்டு நாளா நடக்கு ?

Unknown said...

கடப்பாரை நீச்சலிடிக்கும் வெண்ணை (?). இந்தக்கதையில் லாஜிக் மீறுன மாதிரி தெரியலையே...

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஜான்ஸி அக்காவ சந்திக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்...


ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த சிலிர்ப்பு..

பெண்கள் னாலே மல்டி டாஸ்கிங் தான் என்பதை சிறப்பாக சொல்லிவிட்டீர்கள்...

இருந்தாலும் அக்கா வண்டி ஓட்டும்போது வாழைப்பழ தோலை போட்ட உங்களை என்ன செய்யலாம்.?..

ஆணாதிக்கமேதான்.:)

Unknown said...

வக்கீல் நோட்டிஸ் வாங்க தயாரா இருங்க பாஸூ.

சாந்தி மாரியப்பன் said...

//அவ்ளோதானா கண்டினியூ உண்டா?? என்று கேட்டது//

நாங்களும் இதையே கேக்கிறோம் :-)))

தராசு said...

))))))))

நாடோடி said...

குழும‌த்துல‌ ந‌ட‌ந்த‌ க‌மெடியை ப‌டிக்காத‌வ‌ங்க‌ளுக்கு ச‌த்திய‌மா இது புரியாது ஷ‌ங்க‌ர்ஜி...:))))))))

vasu balaji said...

என்ன வெச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே. நான் படத்தைச் சொன்னேன். படத்தைச் சொன்னேன்.:))

Chitra said...

படத்துல "லாஜிக்", மாறி இருக்கிறதே.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சூப்பர் தேர்வு!
கதை விடுறதுல கில்லாடி ஆச்சே.... :-)

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

ore nerathula rendu vaarthai!!

'WoW'
'Mudiyala'

:D

பின்னோக்கி said...

ஓ.. இது தான் கடப்பாறை நீச்சலா ?. தகவலுக்கு நன்றி.

மத்த படி, நயாகரால நீச்சல் அடிக்க முடியாத வருத்தம் இருக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

இன்றைய வெண்ணையை அதிகமாகவே உருக்கி இருக்கீங்க போங்க . நல்ல இருக்கு

சிநேகிதன் அக்பர் said...

லாஜிக் இல்லாகதைகள் நல்லாயிருக்கு சங்கர்.

VISA said...

அய்யா ராசா சிரிச்சு மாளல. அதுவும் பழம் உரிச்சுகிட்டே புள்ளட் ஓட்டுறதும் 150 வேகம் சான்ஸே இல்ல. அது நிச்சயம் ஜான்ஸி ராணி ஒருத்தரால தான் முடியும்.

ஹேமா said...

ஷங்கர்...படத் தெரிவு அருமை.கதையிலயும் லாஜிக் இருக்கிற மாதிரித்தானே இருக்கு !

Vidhoosh said...

குழுமத்துலேர்ந்து unsubscribe பண்ணிட்டேன்... பாதி வரைக்கும் நடந்ததெல்லாம் தெரியும். LOL :))

அப்புறம், இதை படிச்சு யூகிச்சு கொண்டேன்.. என்னவோ நடத்துங்க

Vidhoosh said...

இந்த விசா-வோடல்லாம் சேராதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே. அம்மா கிட்ட பேசி வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்.

vels-erode said...

“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!” எனும் உங்க சப்-டைட்டிலை நியாயப் படுத்திவிட்டது...........இந்த அநியாயக் கதை.

Karthick Chidambaram said...

thalippulaya jamin vaangunaa eppadi ...?

No logic ?!? - neenga cinemaavukku kathai elutha redy aagunga ...

கலகலப்ரியா said...

வணக்கம் ஷங்கர்ஜி...

ஒரு எழவும் புரியலை... விளக்கம் ப்ளீஸ்... (நான் ஒன்னும் கவுஜைக்கு விளக்கம் கேக்கலையே..)