பலா பட்டறை: 07/01/2010 - 08/01/2010

வெண்ணை 0.11 (லாஜிக் மீறும் கதைகள் - கடப்பாறை நீச்சல்!)



போன முறையே சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கில்ல. சரி தலைப்ப ஒருக்க நல்லா படிச்சிட்டு உள்ளார போலாம்..!

முகிலனும் நானும் நயாகரா ஃபால்ஸ்க்கு சனிக்கிழமையானா எண்ணை தேச்சி குளிக்கப் போவோம். ரெண்டுபேருக்குமே நீச்சல் தெரியாது. முகிலனுக்கும் அருவி மேலேர்ந்து டைவ் அடிக்கனும்னு ஆசை. எனக்கு அருவி பக்கத்துல போகனும்னாலே அலர்ஜி.

ஒருக்கா ஜான்ஸி அக்காகிட்ட வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேன். ஜான்ஸி அக்கா தெரியுமில்ல நம்ம விஜயசாந்தி கீரோயின் இருக்காங்களே அவங்க மாதிரி நெம்ப தெகிரியமான பார்ட்டி. அக்கா அருவில டைவ் அடிக்கறதுல கில்லாடி.

”என்னா சங்கரு நீச்சல் போட்டி வெச்சிக்கலாமா? இக்கரையிலேர்ந்து அக்கரை?”

அப்படின்னு கேட்டப்பதான் வெனையே ஆரம்பிச்சிது. ஒரு பெண்ணிடம் தோற்கக்கூடாதென்ற ஆண்டாண்டுகாலமாய் இருந்த ஆணவ அணுக்கள் வீராப்பாய் போட்டிக்கு சரி என்றது. முகிலன் என் கையை பிடித்து இழுத்தபோது கூட நான் என் முடிவில் தீர்மானமாய் இருந்தேன்.

”சரி என்ன ஸ்டைல்?” ஜான்ஸி அக்கா கேட்டபோதுதான் எனக்கு மண்டைக்குள் வெயில் அடித்தது..

”கடப்பாறை நீச்சல்” என்று சொல்லி காசித் துண்டால் முகம் துடைத்து புருவம் உயர்த்திப் பார்த்தபோது ஜான்ஸி அக்கா முகம் நான் எதிர் பார்த்த படியே குழம்பிப்போயிருந்தது.

”அதென்னா கடப்பாறை நீச்சல் இங்லீஷ் பேர தமிழ்ல சொல்றியா என்ன?”

”இல்லையே” என்றேன்.

”சரிக்கா வர்ற ஞாயித்துக்கிழம வெச்சிக்கலாம் போட்டிய.” என்று சொல்லிவிட்டு முகிலனுடன் புல்லட்டில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன்,

”க்ளக்” என்று முகிலன் சிரித்தபோது முகிலனுக்கும் புரிந்துவிட்டதாய் எனக்குப் பட்டது.

 ”சரி உனக்குள்ளயே வெச்சிக்கோ. ஞாயித்துக்கிழம நாம சாரி நாந்தான் கெலிக்கறேன் என்ன? ஆமா இப்ப எங்க முகிலு போறோம்.”

”மெட்ரோக்கு.! விசா வற்றாப்ல” என்று முகிலன் சொன்னபோதுதான் எனக்கு விசாவின் நினைவே வந்தது, ஆஹா இனி ஞாயிறு களை கட்டிடும்.

”அட மறந்தே போச்சு! ஆமா விசாவ எங்க தங்க வெக்கறது. தோட்டவீட்லயா?”

”இல்ல, விசாவுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது, அதனால நம்ம கூடவே தங்கிடட்டும்.” எனக்கும் அது சரியென்றே பட்டது. ஏனென்றால் நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு பக்கத்தில்தான் லேடீஸ் காலேஜும், ஹாஸ்டலும் இருந்தது. பெண்களைப் பார்த்தால்தான் எழுத்தாளருக்கும் கதை எழுத வரும் என்று தோன்றியது. என்னது யார் எழுத்தாளரா விசாவை நாங்க அப்படித்தான் அழைக்க ஆரம்பித்தோம், அது தனிக் கதை, அதை பிறகு பார்க்கலாம்.

--

”டாமிட்..”.

நான் விசாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகிலன் கோக் வாங்க சென்றிருந்ததால். வரவேற்க நான் முதலில் செல்ல வேண்டி இருந்தது.

 ”விசாகூல்டவுன் இப்ப என்னாச்சு?”

”என்ன சங்கர் நீங்களே இப்படிக் கேட்கலாமா?” கையில் வைத்திருந்த போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரில் அங்காடித்தெரு என்று ஒளிர்ந்துகொண்டிருந்தது.

மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் 555 புகைந்து கொண்டிருந்தது. ஆழ இழுத்த விசாவை நான் வெறித்தேன். ’கேபிள்’ என்று பனியனில் எழுதி இருந்த ஒரு மெக்ஸிகோகாரி விசாவைப் பார்த்து சிரித்தபடி சென்றாள்..

”இந்தப் பெண்ணா?” என்றேன்.

இல்லை என்று உள்ளே பழம் விற்றுக் கொண்டிருந்த வடக்கூர் பெண்ணைக் காட்டி ”அவ சாரிய ஒருத்தன் பூட்ஸ் காலால மெதிச்சிட்டான். அவன் கால எடுக்கற வரைக்கும் அவ ஒண்ணுமே சொல்லாம நின்னுக்கிட்டிருந்தா **** ஒரு குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூடவா காமிக்ககூடாது.”

திரும்பவும் கூல்டவுன் என்றால் அந்த நட்சத்திர வார்த்தை எனக்கும் வருமென்று தோன்றியது. நான் முகிலனுக்காக காத்திருந்தேன்.

--

”ஆமா யார்கூட போட்டி ஞாயித்துக்கெழம?” என்று விசா கேட்பதற்கும் வாழை பழத்தோல் எங்கள் மீது விழுவதற்கும் சரியாக இருந்தது. புல்லட்டின் மேற்கூரையை மூடாமல் வண்டியோட்டிக்கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன். சரியாக தோல் விசாவின் மடியில் விழுந்திருந்தது. அந்த நட்சத்திர வார்த்தை வருமென்று எதிர்பார்த்த எனக்கு புன்னகை தெரிந்தது ஆச்சர்யமாக இருந்தது.

“ என்னதான் சூப்பர் டைவர்ன்னாலும் பழம் உரிச்சிக்கிட்டே இப்படி வண்டியோட்டக்கூடாதுங்கோவ்..” என்று முகிலன் எதிர்காற்றையும் மீறி பக்கத்து வண்டியைப் பார்த்து சொல்லியபோதுதான் கவனித்தேன். அட ஜான்ஸி அக்கா! புல்லட்டின் முள் சரியாக 150 மைல் காண்பித்தது.

 எங்க போறீங்க? என்ற என் சைகைக்கு டி ஓ என்ற சைகை பதிலாகக் கிடைத்தது. அடுத்த பழத்தை உரித்தபடியே அக்கா பறக்க ஆரம்பித்துவிட்டார். டிஓ டொரோண்டோவா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

நான் விசாவைப் பார்த்தேன். சீரியஸாக குமுதத்தில் த்ரிஷாவின் படத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்தது விசாவின் விரல்கள். எழுத்தாளனின் பிரசவ வேதனையை நான் பார்க்க இயலாது வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

--

ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நயாகரா கேட்டில் நின்று கொண்டிருந்தோம். நான், ஜான்ஸி அக்கா, விசா, முகிலன் வாட்ச்மேன் உள்ளே விட மாட்டேனென்று அக்காவை திட்டிக்கொண்டிருந்தார்.

 ”ப்ளடி மேல் சாவனிஸ்ட்” என்று விசா பல்லைக் கடிக்க ஆரம்பிக்க எனக்கு வில்லங்கமாய் ஏதேனும் நடக்குமோ என்று பல்லி உள்ளே கத்த சுருதி சேர்த்துக்கொண்டிருந்தது. எப்பொழுதும்போல முகிலன் ஐபோன் எடுத்து படமெடுக்க ஆயத்தமானபோது..

அக்கா என்னிடம் திரும்பி ”இன்னிக்கு இது வேலைக்காவாது போல சங்கரு. சரி போகட்டும் போட்டிய ரத்து பண்ணிடலாம். ஆனா அதென்ன கடப்பாறை நீச்சல்? எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடேன்.”

”சாரிக்கா அத வெச்சித்தான் நான் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கப்போறேன்” என்றேன். அக்கா புன்னகைத்தபடியே சரி பொழைச்சிப்போ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு லேட்டஸ்ட் ஃபெர்ராரியில் ஏறி 7 நொடிக்குள் புழுதியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு காணாமல் போனார்.

”நீயெல்லாம் ஆணாதிக்கவாதிய்யா..” என்ற விசாவை நான் புருவம் சுறுக்கிப் பார்த்தேன். இப்பொழுதும் வீடியோ ரொம்ப முக்கியமா முகிலன்? என்று மனதில் கேட்டுக்கொண்டே. ”நான் என்ன பண்ணினேன் விசா?” என்றேன். ”ஏன் அந்த கடப்பாறை நீச்சலை ஜான்ஸி அக்காவுக்குச் சொல்லி அவங்க ஒலிம்பிக்ல மெடல் வாங்கக்கூடாதா?” என்று கேட்டு முடித்த விசாவிடம், புல்லட்டின் டிக்கியில் வைத்திருந்த கடப்பாரையை எடுத்துக் காட்டி

”நல்லா கவனமா பார்த்துக்க விசா, இதுதான் கடப்பாறை நீச்சல்” என்றபடியே கடப்பாரையை தெளிந்த அந்த ஆற்று நீரில் போட்டேன். அது ’சொய்ங்’ என்று அடியில் போய் படுத்துக் கொண்டது.

”என்னாது இது” என்று அதிர்ந்த விசாவிடம் ”இந்த கடப்பாறைக்குத் தெரிந்த நீச்சல்தான் எனக்கும் தெரியும்” என்றேன்.

முகிலன் அப்பொழுதும் ஐ போனில் வீடியோ எடுத்தபடியே. என்னைப் பார்த்து அவ்ளோதானா கண்டினியூ உண்டா?? என்று கேட்டது

”****** ” என்ற விசாவின் சத்ததில் பிசிறாகவே காதில் விழுந்தது.


--

குறிப்பு: இது காலஹாரி இலக்கிய(!)  முறையில் எழுதப்பட்ட புனைவு. நானும் முகிலனும் டியூஷன் படிக்க செஷெல்ஸ் போனபோது நினைவு படுத்தி எழுதினோம். முதலில் வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும். போகப் போகப் பழகிடும்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதுதான் முடிவென்று சுலபமாய் ஊகிக்கமுடியும். ஆனால் நடுவில் வரும் திருப்பங்கள் நிச்சயமாய் எழுதும் என்னால் கூட ஊகிக்க முடியாது. நீங்களும் முயற்சி செய்யுங்கள். காலஹாரி கதைகள் எழுத முகிலனையும் விசாவையும் மேடைக்கு அழைக்கிறேன்.

நன்றி! :))



.

பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??





1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பலாபட்டறை 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பாதி இல்லை!. வித்தியாசமா பெயர் வைக்கனும் அப்படிங்கறது தமிழ் வலையுலகில் ஒரு சொம்பிரதாயமாய் இருப்பதால் மனதில் தோன்றிய இந்தப் பெயரை வைத்தேன். (ஆமாம். உங்கள் உண்மையான பெயர் என்ன என்ற கேள்வி இல்லையே?? )


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வார்த்தையை கூகிளில் சர்ச் செய்தால் என்ன வருகிறது என்று போன வருடம் நவம்பர் மாதம் தேடியபோது தமிழில் இவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டாவது நாளில் நானும் ஆரம்பித்துவிட்டேன். ஹி ஹி..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் நானும் எறும்பு ராஜகோபாலும் இருக்கும் போட்டோவை. கேபிள்ஜி கொத்து பரோட்டாவில் போட்டு சிறு குறிப்பு வரைந்தார். வலைச்சரத்தில் தண்டோராவாக இருந்த மணிஜீ மற்றும் திரு.வானம்பாடிகள் அவர்கள் என்னை அறிமுகம் செய்தார்கள். அப்படியே மெல்ல பதிவர் சந்திப்புகள், உரையாடல் அமைப்பின் உலக திரைப்பட நாட்களின் சந்திப்புகள், பின்னூட்டங்கள் என்று மெல்ல நண்பர்கள் வட்டம் பெருகியது.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

முக்கால்வாசி சொந்த விஷயங்கள்தான் எழுதினேன். அடுத்தவர் விஷயங்கள் தெரிந்திருந்தும் ஏதும் எழுதினதில்லை. விளைவு பழைய தோழிகள் யாரும் வலையுலகில் இல்லை என்பது தெரிந்தது. (பின்ன கலர் கலரா என் போட்டோவ எதுக்கு போடறேன்னு நினெச்சீங்க?:)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் எழுதும்போது பொழுது போகிறது. நிறைய சம்பாதித்துள்ளேன் ( நட்புகளை/தமிழை/எண்ணங்களை/வாசிப்பை )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று. பட்டறை கவிதைகள் என்ற ஒன்றில் கவிதைகள் என்று நான் கூறிக் கொள்பவைகளை பலாபட்டறையில் நான் வெளியிட்டவைகளை மீண்டும் சேமித்து வைத்துக்கொள்கிறேன். போக பிரதி எடுக்க வேர்ட்பிரஸ்ஸிலும் ஒன்று உள்ளது. (எல்லாமே தமிழ்தாங்க!)


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிரமிப்புதான் நிறைய!!. கோவம் என் மீதுதான். இவங்க மத்தியில் நீயும் எழுதறியே என்று என் மனசாட்சி அடிக்கடி என்னைக் கேள்வி கேட்கும்:)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் கமெண்ட் போட்டவர் திரு.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன். முதலில் தொடர்பு கொண்டு பாராட்டியவர் என்றால் கேபிள்ஜிதான். நிச்சயம் இரண்டுமே
 மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும் :)) (சந்தோஷமா ஹாலி?)

மற்றபடி என்னையும் ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டு (சகித்துக்கொண்டு!?) பின்னூட்டமிடும், போனில் பேசும், மெயில் செய்யும் நண்பர்களுக்கும். திரட்டிகளுக்கும் என் நன்றியும், மகிழ்ச்சியும். எல்லாரும் நல்லா இருங்க மக்களே அம்புட்டுத்தேன். :)))

--

டிஸ்கி: இடுகை தேத்த உதவிய விதூஷ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!.




.

வெண்ணை 0.10(எந்திரன் - லாஜிக் மீறும் கதைகள்)




2010/07/21 09:45

ஓட்டேரி, நாலு சாலை சந்திப்பு. பிள்ளையார் கோவில். சிறிய கழிவு நீர் பாலத்தின் அருகில்,..

பாருங்க ரைட்டர் விசா எழுதினத படிச்சீங்களா??

ஆமா அந்த 10 வயசு பையன் லாஜிக் இடிக்கிதே

அதில்லய்யா, அது ரொம்ப முக்கியமா இப்ப? நான் கான்செப்ட் பத்தி சொன்னேன்.

மொத்தக் கூட்டமும் சுய நலமாவே எழுதறாங்க யோசிக்கறாங்க. சர்க்கிள் ஆஃப் லைஃப் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல?

கரெக்ட். நான் ரொம்ப டீப்பா அவங்க திங்கிங்ல போயிட்டேன். ஆனாலும் எனக்கு ஒரு டவுட்.

சொல்லுங்க.

நோய்லேர்ந்து இயற்கை சீரழிவு வரைக்கும் எல்லாத்துக்கும் ஒரு சேஃப் நெட் கண்டுபிடிச்சிடுறாங்களே? சைன்ஸ வெச்சிக்கிட்டு..

ஹா ஹா அதான் இவங்க வீக்னஸே. எத்துனையோ கோடி வருஷமா சுனாமி வருது. இவ்ளோ கம்யூனிகேஷன் வெச்சிருந்தும் என்னத்தப் புடுங்கினாங்க?

என்ன சொல்ல வற்றீங்க?

அதாவது, பழச மறந்துட்டாங்க. சைன்ஸ் ஒரு போதை. இவங்க எப்ப காசு பணம்னு ஒன்னு கண்டு பிடிச்சாங்களோ அப்பவே வியாபார புத்தி முழிச்சிகிடிச்சு, சைன்ஸ்ல சம்பந்தப்படாத மத்த எல்லாமும் அதனோட உள்ளுணர்வுகள அப்படியே காப்பாத்தி வெச்சிகிட்டு இருக்கு பார்த்தீங்களா? அதனோட சைக்கிள் சரியா இருக்கு. இவனுங்கதான் நேரங்காலம் இல்லாம ஆடிக்கிட்டு இருக்காங்க. சைன்ஸோட மைனஸ் பாயிண்ட்டே அத வியாபாரம் ஆக்கினதுதான்.

ஆனாலும் இவங்க கண்டுபிடிச்சத வெச்சே இவங்க அழிஞ்சிகிட்டுத்தானே இருக்காங்க. ரயிலு, பஸ்ஸு, கப்பல், விபத்து, கரண்ட், ஷாக், சாராயம், சிகரெட், எய்ட்ஸ்.. புரட்சி, குண்டு வெடிப்பு, கடவுள், மதம் ஆனாலும் புரொடக்‌ஷனுக்கும், அழிவுக்கும் ரேஷியோ நிறைய வித்தியாசம்.

ஹுக்கும் இவங்க மட்டுமா அழியறாங்க, அதுக்குள்ள இந்த உலகத்துல எத்தனை அழிவுகள சுலபமா நடத்திடறான். இருந்தாலும் ‘காட் மஸ்ட் பி க்ரேஸி’ படம் எடுத்ததும் இவனுங்கதான்னு நினைக்கும்போது சிரிப்புத்தான் வருது.

கிர்ர்ர்

கண்ட்ரோல் ரூம்லேர்ந்து மெஸ்ஸேஜ் வருது..

T7 என்ன அப்டேட்.

சார் இது வேலைக்கு ஆவாது. டோட்டல் க்ளோப் சுத்தியாச்சு. ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மாத்தி யோசிக்கறாங்க. மத்தவங்கள்லாம் ஒரே குட்டை தான். ஐ மீன் சுய நலம்.

என்ன பண்னலாம்.

ஒரே ஒரு வழிதான் இருக்கு சார்.

என்ன?

காண்ட்ராசெப்டிவ் சிப்ஸ். எல்லா விதத்துலயும் கலந்து விட வேண்டியதுதான். இப்ப இருக்கறவங்களோட இந்த மனித இனம் முடிஞ்சிடும். அடுத்த முறை கொஞ்சம் டியூன் அப் பண்ணி ப்ரொடொக்‌ஷன் பண்ணிடலாம். ஆனா..

என்ன?

அடுத்த முறை கொஞ்சம் பக்காவா ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணனும் சார். புராணம், இதிகாசம், டெர்ரிடரி கடவுள்கள் இதையெல்லாம் நிறைய ஓட்டை இருக்கு..


சரி T7 பண்ணிடலாம். நான் என்ன கண்டேன் இவங்க கப்பல் எடுத்துக்கிட்டு ஊர் ஊரா போய் கலப்பாங்கன்னு. போக இவ்ளோ மூளை அளவும் வேஸ்ட்னு இப்பத்தான் புரியுது. ஆமாம் நம்மளப் பத்தி ஏதாவது ஆராய்ச்சி பண்றாங்களா?

இல்ல சார். கம்ப்யூட்டர் வெச்சிக்கிட்டு இன்னும் சோம்பேறி ஆகிட்டாங்க. ரோபோட்ல கொஞ்சம் பரவாயில்ல ஆனா எல்லாமே அவங்களுக்காகவே சிந்திக்கறாங்க. அதனால ரோபோட்டும் அவனுங்கள மாதிரிதான் இருக்கும். இவங்கள இங்க ப்ரொடக்‌ஷன் பண்ணினதே நாமதான் அப்படிங்கறது இவங்க கண்டுபிடிக்கவே முடியாது.

சரி சிப்ஸ் இன்னிக்கு ராத்திரி உங்களுக்கு டெலிவரி ஆகும். 

--

எக்ஸலண்ட்

அப்பா இது இயற்கைக்கு முரண்பாடா இருக்கே.

நோ நோ அப்படி இல்லை மை சன். இனி மனித இனம் உருவாக மனிதர்கள் தேவை இல்லை. இதோ இந்த இரண்டு ரொபோக்களை நமக்கு வேண்டிய டிஎன்ஏ குறியீடுகளில் செட் பண்ணினா குழந்தைகளை தயாரித்துக்கொள்ளலாம்.

எப்ப தயாரிச்சீங்கப்பா இந்த ரொபோக்களை.

தயாரிக்கலம்மா, வாங்கினேன்.

யார்கிட்டேர்ந்து..

ஓட்டேரி கஜாகிட்டேர்ந்து.

எப்படின்னு கேக்கமாட்டேன். எவ்ளோ கொடுத்தீங்க?

500 ரூவா..

--

T7 கிட்டேர்ந்து மெஸ்ஸேஜ் வந்திருக்கு சார்..


சிப்ஸ் கிடைச்சிதாமா? 


சிப்ஸோட சைண்டிஸ்ட் ரேவன்கிட்ட மாட்டிக்கிட்டாங்க. நம்ம ஆளுங்கள வெச்சே. மனித ப்ரொடக்‌ஷன் ஆராய்ச்சி நடத்தப்போறாங்களாம். இப்ப என்ன சார் பண்றது.


கடவுளுக்கு லைனப் போடு..


யெஸ்..

கடவுளே உங்கள கண்டு பிடிச்சிடுவாங்க போல இருக்கு!

வாட்? என்ன நடந்துது?

@#$%%% ... இதுதான் நடந்துது. நம்ம ரொபோங்க பவர் அதிகம் எப்படியோ மாட்டிக்கிட்டாங்க. ப்ரொடக்‌ஷன் ஆரம்பிச்சா நாளைக்கு 500 கோடி விழும். ரொம்ப கவலையா இருக்கு. இப்ப என்ன பண்ணலாம். கடவுளே?

முட்டாளுங்களா.. மொதல்ல உங்க ஆளுங்கள அந்த சிப்ஸ தின்னச்சொல்லி மெஸ்ஸேஜ் அனுப்புய்யா சீக்கிறம்!!




நீதி: நீ என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரியே தீர்மானிக்கிறான்
 

--

(தலைப்ப ஒருதரம் படிச்சிட்டு கமெண்ட் போடுங்க மக்கா!!)




.

ஏழாம் உலகம்..





ஏழாம் உலகம்..


நல்லவை தீயவை என இவ்விரண்டுமே ஒரே ஓட்டைப் படகில் பிரயாணம் செய்பவைதான். ஆறறிவே அதற்கு வண்ணம் தீட்டுகிறது. இனிப்பு தடவுகிறது. விளம்பரம் செய்கிறது, விற்பனை செய்கிறது. தானே அந்த ஓட்டைப் படகென்று அறியாமல் பிரயாணம் செய்கிறது. மூழ்கிப் போகிறது.

எல்லா உயிர்க்கும் வாழ்தல் என்பது அடிப்படை ஆசைதான். உணவுக்கான சண்டைகளும், கொலைகளும் எல்லா உயிர்களுக்கும் பொது.  ஆனால் பிச்சை எடுத்தல் என்பது மனித இனத்துக்கே சொந்தம். அது தனித்துவமானது. ஆத்திகம், நாத்திகம், மேலும் எல்லா இசங்களும் இதில் அடிபட்டுப்போகும்.  சரி போகட்டும். வேறு வழி இல்லை. உணவு வேண்டும். உயிர் வாழ்தல் முக்கியம் என்ன செய்யலாம் என்று யோசித்தது ஆறறிவு. தன் இரை வரும் வழியில் காத்திருந்து அடித்துப் பசியாறும் விலங்குகளைப் போல பாவங்கள் சுமந்து வரும் மனிதர்களை, இரக்கங்கள் சுமந்து வரும் மனிதர்களைக் குறி வைத்துக் காத்திருந்தது.

ஒப்பீடும் ஆறறிவின் நீட்சியல்லவா? சும்மா வருமா இரக்கமும்? பரிவும்?
அங்கஹீனமும், அருவருப்புகளும், கதறல்களும் மனித இரக்கத்தின் ஊற்றல்லவா?

குறிபார்த்து அடித்தது. யார் கோவிலுக்கு வருவார்கள்? கடவுளுக்கு நன்றி சொல்பவர்களா? கோரிக்கை வைப்பவர்களா? எது முதலில் நன்றியா? கோரிக்கையா? கோரிக்கைகளுக்கு விலை உண்டு. பயத்திற்கு விலை உண்டு.

தர்மம் என்று அதற்குப் பெயர்.

அம்மா சாமி தர்மம் போடுங்கம்மா!

--

இந்த உலகில் பிச்சை எடுக்காதவர் என்று எவரேனும் உண்டா? பிச்சை போடுங்கம்மா. தர்மம் போடுங்கம்மா என்றழைப்பவரை நாம்
பிச்சைக்காரர்களாக்கிவிட்டோம் மற்றவர்களை வேறு பெயர்களில் அழைக்க ஆரம்பித்து விட்டோம். நாமே இயற்கையிடம் கையேந்தும் பிச்சைகள் என்பதனை சுலபமாய் மறந்தோமே அதுபோல.

இந்த நாவல் அது போல பிச்சை எடுக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அதன் குரூரத்தை, வேதனையை, அவர்களை கவனமாய் பாதுகாக்கும் மனிதர்களை, அவர்களுக்கு நம்மை விட்டா யார் இருக்கா? என்ற இரு பக்கத் தத்துவ சூட்சுமத்தை பக்கம் பக்கமாய் அலசுகிறது.

எழுத்துக்களின் வலிமை என்பது இதுதான். அதுவே ஆச்சர்யமும். கொக்கோகம் கிளர்ச்சி செய்யும். குறி நிமிர்த்தும், வெறி ஏற்றும். காதலெனில் போதை வரும், மோனம் வரும் ஆனால் அவைகளில் விஸ்தரிப்பு முக்கியம் நீட்டி முழக்கிச் சொல்லும்போது, நகாசு வேலைகள் முக்கியம் அப்பொழுதுதான் அது வாசிப்பவரைக் கவரும். ஆனால் இந்தப் புத்தகத்தில் அது இல்லை. உள்ளது உள்ளவாரே சொல்லப் பட்டிருக்கிறது. இல்லை கேட்கப்பட்டிருக்கிறது. எந்த மெனக்கெடலும் இல்லாமல் நீ இதில் யார்? பிச்சை எடுப்பவனா? எடுக்க வைப்பவனா? கூட உதவி செய்பவனா? என்னும் சுய தேடல் உள்ளுக்குள் நம்மை அறியாமலேயே விதைக்கப் படுகிறது. படிக்கும்பொழுது இல்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள் அது முளைவிடும் எண்ணங்கள் தின்று கேள்விப் பூக்கள் சொறியும். அதுவே இதன் வெற்றி.

இதில் வரும் போத்திவேலுப் பண்டாரத்தைப் பார்த்து கோவப் பட முடியுமா? உடலின் குறைகளுக்கேற்றவாறு விலை பேசி மனிதர்களை விற்று, வாங்கி தொழில் நடத்தி வருமானம் பார்க்கும் அவனுக்கும் மூளையின் நிறை/குறைகளுக்கேற்ப எண்களில் மதிப்பிடப்படும் மார்க்ஷீட்டினடிப்படையில்/ அனுபவத்தின் அடிப்படையில் வேலை தரும்.பெறும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? மொத்த உயிரினங்களின் சாட்சியாய் சொல்லவேண்டுமெனில் ஒரு மரத்தை அறுத்து மேசை நாற்காலி செய்த என்னைவிட போத்திவேலு ஒன்றும் மோசமில்லை.


--

எல்லையில்லாத ஆகாசப் பெருவெளியும், அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே! ஆனாலும் நான் எனது என்ற சுய மோகம் பிடித்த மனது ஏறி மிதித்து காணாமல் போகும் பலவற்றில் இவர்களின் வாழ்க்கையும் ஒன்று. கடவுளை கல்லால் வடித்தவன் நிச்சயம் புத்திசாலிதான் இல்லையென்றால் மிதிப்பதுவும் வணங்குவதும் ஒரே கல்லென்ற உணர்வு என்றோ வந்திருக்குமே?

இதெல்லாம் படிக்கவேண்டுமா என்றால். ஆம் நிச்சயம் படிக்கவேண்டும். யோசிக்கத் தெரிந்த உயிர்களின் கசடுகள் கிளறப் படவேண்டும். அப்பொழுதுதான் யோசிக்கப் படாதவைகள் வெளிவரும் கூடவே தெளிவும். தெரியும்தானே உலகப் பேரழகிக்கும் உதிரப் போக்கும், மல ஜலமும் உண்டு. வாசனை திரவியங்களுக்கோ அற்பாயுசு!

--



மிதிப்பதுவும் அதுவே
வணங்குவதும் அதுவே
என்றறியாத மனிதக்கூட்டம்
கோவில் சுற்றி
காசு கொடுத்து
சிறுநீர் கழித்து
கவனமாய் குதிகால் கழுவியது
சனி பிடிக்காமலிருக்க..

கடவுளை முதலில்
கல்லால் வடித்தவன்
சிரித்துக் கொண்டிருந்தான்..!



--

ஒரு நன்றி: இந்தப் புத்தகம் நண்பர் ரோமியோ அவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டது!! :))

விலை: ரூ.150/- கிழக்கு பதிப்பகம்.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்



.