பலா பட்டறை: பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??

பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??





1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பலாபட்டறை 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பாதி இல்லை!. வித்தியாசமா பெயர் வைக்கனும் அப்படிங்கறது தமிழ் வலையுலகில் ஒரு சொம்பிரதாயமாய் இருப்பதால் மனதில் தோன்றிய இந்தப் பெயரை வைத்தேன். (ஆமாம். உங்கள் உண்மையான பெயர் என்ன என்ற கேள்வி இல்லையே?? )


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வார்த்தையை கூகிளில் சர்ச் செய்தால் என்ன வருகிறது என்று போன வருடம் நவம்பர் மாதம் தேடியபோது தமிழில் இவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டாவது நாளில் நானும் ஆரம்பித்துவிட்டேன். ஹி ஹி..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் நானும் எறும்பு ராஜகோபாலும் இருக்கும் போட்டோவை. கேபிள்ஜி கொத்து பரோட்டாவில் போட்டு சிறு குறிப்பு வரைந்தார். வலைச்சரத்தில் தண்டோராவாக இருந்த மணிஜீ மற்றும் திரு.வானம்பாடிகள் அவர்கள் என்னை அறிமுகம் செய்தார்கள். அப்படியே மெல்ல பதிவர் சந்திப்புகள், உரையாடல் அமைப்பின் உலக திரைப்பட நாட்களின் சந்திப்புகள், பின்னூட்டங்கள் என்று மெல்ல நண்பர்கள் வட்டம் பெருகியது.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

முக்கால்வாசி சொந்த விஷயங்கள்தான் எழுதினேன். அடுத்தவர் விஷயங்கள் தெரிந்திருந்தும் ஏதும் எழுதினதில்லை. விளைவு பழைய தோழிகள் யாரும் வலையுலகில் இல்லை என்பது தெரிந்தது. (பின்ன கலர் கலரா என் போட்டோவ எதுக்கு போடறேன்னு நினெச்சீங்க?:)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் எழுதும்போது பொழுது போகிறது. நிறைய சம்பாதித்துள்ளேன் ( நட்புகளை/தமிழை/எண்ணங்களை/வாசிப்பை )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று. பட்டறை கவிதைகள் என்ற ஒன்றில் கவிதைகள் என்று நான் கூறிக் கொள்பவைகளை பலாபட்டறையில் நான் வெளியிட்டவைகளை மீண்டும் சேமித்து வைத்துக்கொள்கிறேன். போக பிரதி எடுக்க வேர்ட்பிரஸ்ஸிலும் ஒன்று உள்ளது. (எல்லாமே தமிழ்தாங்க!)


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிரமிப்புதான் நிறைய!!. கோவம் என் மீதுதான். இவங்க மத்தியில் நீயும் எழுதறியே என்று என் மனசாட்சி அடிக்கடி என்னைக் கேள்வி கேட்கும்:)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் கமெண்ட் போட்டவர் திரு.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன். முதலில் தொடர்பு கொண்டு பாராட்டியவர் என்றால் கேபிள்ஜிதான். நிச்சயம் இரண்டுமே
 மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும் :)) (சந்தோஷமா ஹாலி?)

மற்றபடி என்னையும் ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டு (சகித்துக்கொண்டு!?) பின்னூட்டமிடும், போனில் பேசும், மெயில் செய்யும் நண்பர்களுக்கும். திரட்டிகளுக்கும் என் நன்றியும், மகிழ்ச்சியும். எல்லாரும் நல்லா இருங்க மக்களே அம்புட்டுத்தேன். :)))

--

டிஸ்கி: இடுகை தேத்த உதவிய விதூஷ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!.




.

60 comments:

Riyas said...

ம்ம்ம் நல்ல பதில்கள் நறுக்குன்னு இருந்தது..

Riyas said...

அட நான் தான் முதலாவதா அப்போ "வட" எனக்குத்தான்

Vidhoosh said...

மனசை தேத்திக்கிறேன். வோட்டு போட்டாச்சு.

///மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும்////

முக்கியமான சில கேள்விகள் இருக்குங்க. இங்கியே கேட்டுகறேங்க.

ரசிகர் கடுதாசு பத்தி ஏன் எதுவுமே சொல்லாம மறச்சுட்டீங்க?

ஊரைவிட்டே ஒதுங்கி கூடாரத்தை அண்டை மாநிலத்துக்கு மாத்தினதுல ஏதோ இரகசிய காரணம் இருக்குன்னு பேசிக்கிறாங்களே? அப்டிங்களா?

போட்டோவில் நரைச்சது தெரிலையே? என்ன ஹேர் டை யூஸ் பண்றீங்க?

எல்லாரும் நல்லா இருங்கன்னு வாழ்த்தறீங்க? இதுக்கு என்ன அர்த்தம்?

சகித்து கொண்டுதான் இருக்கோம் அப்டீங்கறது சரிதான். ஆனா நண்பர்களா இருக்கோம்னு யார் சொன்னாங்க..?

எல்லாமே தமிழ்தான் அப்டீன்னு சொல்றீங்க. ஜிமெயில் லாகின் பண்ணும்போதும் தமில்லையே டைப்புவீங்களா?

பட்டறை கவிதைகளை பலா பட்டறையிலேயும் பிரசுரிக்கிறீங்க? பாவம்.. பிரிண்டிங் இன்க் செலவினங்களை எப்படி சமாளிக்கிறீங்க ?

மூக்கு இருக்குன்னு எப்போதும் cm தாத்தா மாதிரி கருப்பு கண்ணாடி போடறீங்களே? கண்ணு தெரியுமா?

கேபிள்ஜிதான் பாராட்டினார் என்பதற்காக டக்கீலாவை அநியாயத்துக்கு புகழ்ந்தீங்களே? அம்பது அம்பதா ஆயிரம் பேரை ஏமாத்தினத்துக்கு நன்றிக் கடன் காரணமா?

//மனசாட்சி அடிக்கடி என்னைக் கேள்வி கேட்கும்/// உங்களுக்கு மனசாட்சி இருந்தா எழுதுவீங்களா? எதுக்கு கலர் கலரா பொய் சொல்றீங்க?

///அடுத்தவர் விஷயங்கள் தெரிந்திருந்தும் ஏதும் எழுதினதில்லை///
மத்தவங்க கிட்ட சொல்லாம மறைக்கரத்துக்கு மெனெக்கெட்டு அடுத்தவர் விஷயங்களை எதுக்கு தெரிஞ்சுக்கணும்? அப்போ அவ்ளோ நேரம் வெட்டியா இருக்கீங்களா?

//நான் எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை//

அப்போ இந்த பதிவெல்லாம் யாரு எழுதிக் கொடுத்தது?

///மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும்////
எல்லாக் கேள்வியையும் இங்கேயே கேட்டாச்சு. மெயில் அனுப்பிய கேள்வியையும் இங்கேயே கேட்டுக்கிறேன்.

மங்சிங் கேட்ட கேள்விக்கு பதில் தெரியுமா?

'பரிவை' சே.குமார் said...

//எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10.//



ahaa open voice....

ellaa pathilum super shankar...

தமிழ் உதயம் said...

இதற்குக்கு மேல் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள எதுவுமே இல்லாத அளவுக்கு, அங்க அடையாளங்கள் தவிர்த்து எல்லாமே சொன்ன விதம் அழகு.

vasu balaji said...

இந்த தாடி வைக்கிறதும் எடுக்கிறதுக்குமான ரகசியம் என்னன்னு சொல்லலையே?:))

க.பாலாசி said...

//
எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும் :)) //

நல்லா குடுக்கிறாய்ங்கப்பா டீட்டெய்லு....

Chitra said...

பட்டறையில் பதில்கள் Superb! :-)

க.பாலாசி said...

//(பின்ன கலர் கலரா என் போட்டோவ எதுக்கு போடறேன்னு நினெச்சீங்க?:)//

அதானே பார்த்தேன்... முன்னாடியே சந்தேகம் இருந்துச்சு... :-))

ஜில்தண்ணி said...

பட்டறை அண்ணே பட்டய கிளப்பிட்டீங்க

இந்த டீட்டெயிலு இப்போதைக்கு போதும் :)

Vidhya Chandrasekaran said...

@விதூஷ்

\\மங்சிங் கேட்ட கேள்விக்கு பதில் தெரியுமா\\

பர்முடா ட்ரையாங்கள் மர்மத்திற்கு ஒப்பானது:))

அப்புறம் நீங்களும் அவங்க ஹிட் லிஸ்ட்ல சேர ரொம்பவே முயற்சி பண்றீங்க போல:)))

ஷங்கர் சார்
பதிவு சூப்பர்:))

dheva said...

//எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும் :)) //

உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்க்கு... வாழ்த்துக்கள் பாஸ்!

VISA said...

.//டிஸ்கி: இடுகை தேத்த உதவிய விதூஷ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!.//

அதே அதே

சிநேகிதன் அக்பர் said...

பட்டறையில் கொடுத்து பட்டை தீட்டியமாதிரி பதில்கள்.

Prasanna said...

//பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??
//


எதுக்கு இத்தனை படி.. படிப்படியா முன்னுக்கு வந்தவர்னு சொல்றீங்களா?
அப்புறம் அதை பட்டவர்னு மரியாதையாக மாற்றி விட்டதை கவனித்து விட்டேன் :)

CS. Mohan Kumar said...

Liked:

Your post &

Vidhoosh comment!!

பிரபாகர் said...

ரொம்ப எதிர்ப்பார்த்தேன், சாதாரணமாய் சொல்லியிருக்கீங்க (ஒரு சேஞ்சுக்காகத்தான், பாராட்டியே ரொம்ப போர் அடிக்குது சேம் பிளட்...)

பிரபாகர்...

எறும்பு said...

தானைத்தலைவி விதூஷின் கேள்விக்கு பதில் சொல்லவும்.

:)

எறும்பு said...

//பிரபாகர் said...

ரொம்ப எதிர்ப்பார்த்தேன், சாதாரணமாய் சொல்லியிருக்கீங்க (ஒரு சேஞ்சுக்காகத்தான், பாராட்டியே ரொம்ப போர் அடிக்குது சேம் பிளட்...)

பிரபாகர்...///

போரடிக்குதுன்னா சும்மா திட்டுங்க இல்ல லேட்டஸ்ட் வழக்கப்படி துப்புங்க. ஷங்கர் ரெம்ப நல்லவர். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு

எறும்பு said...

//
மங்சிங் கேட்ட கேள்விக்கு பதில் தெரியுமா?//

அது என்ன கேள்வி?

எறும்பு said...

//அப்போ இந்த பதிவெல்லாம் யாரு எழுதிக் கொடுத்தது?//

விதூஷ் தெரியுமா அவர், இவருக்கு சின்ன வயசுலையே நண்பர்

:)

எறும்பு said...

//அப்புறம் நீங்களும் அவங்க ஹிட் லிஸ்ட்ல சேர ரொம்பவே முயற்சி பண்றீங்க போல:)))//

வித்யா நம்ம எல்லாம் சேர்ந்து முயற்சி பண்ணினா அது சீக்கிரமே நடந்துரும்.
விதூஷ்காக இது கூட செய்ய மாடீங்களா?

எறும்பு said...

//அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் நானும் எறும்பு ராஜகோபாலும் இருக்கும் போட்டோவை. கேபிள்ஜி கொத்து பரோட்டாவில் போட்டு சிறு குறிப்பு வரைந்தார்//

ஹி ஹி நெல்லுக்கு பாயுறது கொஞ்சம் என்னை போன்ற பூச்சிக்கும்
:)

எறும்பு said...

//ஊரைவிட்டே ஒதுங்கி கூடாரத்தை அண்டை மாநிலத்துக்கு மாத்தினதுல ஏதோ இரகசிய காரணம் இருக்குன்னு பேசிக்கிறாங்களே? அப்டிங்களா?//

அதுவும் ராத்திரியோட ராத்திரியா நடந்தது. அப்பவே எனக்கும் டவுடுதான்
:)

எறும்பு said...

விதூசின் ரெண்டாவது கேள்விக்கும் முதல் கேள்விக்கும் சம்பந்தம் உண்டா
?????

ஹேமா said...

இந்தக் கேள்வி பதில்களைத்தான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லி வச்சாங்களோ !

ஜோதிஜி said...

எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும் :)) (சந்தோஷமா ஹாலி?)

என்னடா ஒரு சுவராஸ்மே இல்லாம இருக்குதேன்னு நினைச்சேன்.

தல டச். சிரிப்பை அடக்க முடியவில்லை ஷங்கர்........

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதில்கள்...

நேசமித்ரன் said...

நல்ல பதில்கள் ..

மறைவற்ற சொற்கள் மனதின் கண்ணாடி

தலைப்பின் குறும்பு ரசனை :)

Anonymous said...

நல்ல பதில்கள் . உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கி :)

பா.ராஜாராம் said...

அருமை இன்டு டூ! (விதூஸ் கமெண்ட்டையும் சேர்த்து) :-))

Cable சங்கர் said...

விதூஷ்.. ஷ்ஹ்ஷ்ஷ்ஷ்.... கர்ர்ர்ர்ர்..

Thenammai Lakshmanan said...

சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. //

எந்தத் தோழியாவது ட்ரெஸ் சப்பல் வாங்கித்தர அளவு கேட்டாங்களா சங்கர்...:)))))))))))))))))

Vidhoosh said...

@வித்யா: அப்பிடியே பஸ்ஸ புடிச்சு ஓடிடு.. இல்லேன்னா JEEVAN பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்

@எறும்பு: அவ்ளோதானா

@கேபிள் சங்கர்: இது barcode ஷங்கரை கும்ம மட்டும்தான். அவரை வந்து பதில் சொல்லச் சொல்லுங்க.

Vidhoosh said...

@கேபிள் சங்கர்: டக்கீலா விமர்சனம் தயாராகிட்டு இருக்கு..

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

இது நல்லா இருக்கே!!!

கமலேஷ் said...

எல்லாமே நேரடியான நறுக்கான பதில்..சாட்சாத் சங்கர் ஸ்டைல் .

பாலா said...

// மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும்//

//சட்டை 42/பாண்ட் 38//


மூச்சடக்கியே... 38-ஆ?????

====

விதூஷின் கேள்விகளோடு இதையும் சேர்த்துக் கொள்ளவும்.

உயரம்...?
நிறம்...?
ஜாதி...?
கை வச்ச பனியனா/வைக்காத பனியனா?
சுடர்மணி??

பாலா said...

கச்சேரியை இங்கனயே வச்சிக்கலாமா?? :)

பாலா said...

//38 வயதின் ஆரம்பத்தில் //

ஏங்க.. மொத மொதல்ல போன்ல பேசும்போது.. என்னை விட சின்னப் பையன்னு இல்ல சொன்னீங்க???

அடப்பாவிகளா! சீக்கிரம் ‘நடிகை’யாக வாழ்த்துகள்!! :) :)

Vidhya Chandrasekaran said...

@விதூஷ்

கேவிஆர் ஜீவன் இழந்து போனது பத்தாதா. நான் வேறயா.

Unknown said...

வானம்பாடிகள் ஐயாவுக்கு அப்தில் சொல்லுங்க சங்கர்..

ஜெட்லி... said...

பலா'ன' னா என்ன ணா??

செ.சரவணக்குமார் said...

ஏன் இந்தக் கொல வெறி ஷங்கர்ஜி..

இம்புட்டு நேர்மையான ஆளா நீங்க..

இப்படியே உண்மையாப் பேசிட்டிருந்தா ஒரு விசா ரெடி பண்ணி சவுதிக்கு கடத்திட்டு வந்திருவேன் என எச்சரிக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்தலான பதில்கள்.. ரொம்ப நல்லாருக்கு..

Radhakrishnan said...

எளிமையாக எழுதும்போது எல்லோர் மனதிலும் நிறைந்துவிடுகிறது. அருமை ஷங்கர்.

சீமான்கனி said...

//எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10.//

சூப்பர் ஷங்கர்ஜி...சுருக்கமா நான் ஒரு ஹீரோ மாதிரினு சொல்லி முடிச்சிருக்கலாம்...

நாடோடி said...

ப‌தில்க‌ள் அனைத்தும் சுவ‌ர‌ஸ்யமா இருந்த‌து... வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி..

butterfly Surya said...

உங்கள் பாணி பதில்கள் நச்.

நாளைக்கு போன் பேசுகிறேன்.

Priya said...

யதார்த்தமான பதில்கள் ஷங்கர். ஆனா கடைசியில் //சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10//... ஹி ஹி ஹி:)

Paleo God said...

@ரியாஸ்: வாங்க. மிக்க நன்றி! :)

@விதூஷ்:
1) ரசிகர் கடுதாசி பத்தி இடுகை ஏற்கனவே போட்டிருக்கேன்.
2)ஊரை விட்டு ஏன் ஒதுங்கினேன்னும் ஏற்கனவே இடுகை போட்டிருக்கேன்.:)
3)தலை நரைக்கத் துவங்கிவிட்ட அப்படின்னுதாங்க போட்டிருக்கேன். நிச்சயமா டை யூஸ் பண்ணமாட்டேன்.
4)எல்லாரும் நல்லா இருங்கன்னுதான் அர்த்தம்..:)) என்னையும் சேர்த்து!
5)சரி சகோதரியாவே இருந்துட்டுப் போங்க! :)
6)ஜிமெயில்ல லாகின் பண்ணும்போது தமிழ்லதாங்க பண்றேன். ஆனா எர்ரர் மெஸ்ஸேஜ் வருது. அதனால ஆங்கிலம் :)
7)மகாகவி எப்படி சமாளிச்சாரோ அப்படித்தான்..:)
8)பகல்ல ஓரளவுக்கு பசுமாடு தெரியிதுங்க:)
9)தமிழ்ல வலைபக்கம் வைத்துக்கொண்டு சான்ஸ்க்ரிட் சுலோகம் எழுதறீங்களே அது படிக்க வர்றவங்கள ஏமாத்தவா? விஷயம் இருக்குன்னுதானே. அதுமாதிரிதான் டக்கீலாவும். (கேபிளே சிங்கையில் படிச்சி மயங்கி விழுந்தது கணக்கில வராது!!) :)
10)ஏங்க இருக்கறதுனாலதானே அது கேள்வி கேட்குதுன்னு சொல்றேன். (மனசு கேட்க்க மாட்டேங்குதுங்க அதனாலதான் எழுதறேன்:)
11)ஏங்க அல்லாரும் நான் இன்னார் இன்னார்னு யூசர் ஐடிலேர்ந்து,பஸ், இடுகை, கமெண்ட்டுன்னு வித விதமா போட்டு சொல்றாங்க வெட்டியா சொல்ற விஷயங்கள் வெட்டியா இருக்கும்போது படிக்கறது தப்பாங்க? :)
12)விண்டோஸ் + NHM :)
13)அதானே இது? :))

(இதுக்காகவே தொடர் எழுதக் கூப்பிட்டீங்க போல! )

@சே.குமார்: நன்றிங்க குமார்.:)

@TVR: நன்றி சார்.:)

@தமிழ் உதயம்: மிக்க நன்றிங்க:)

@வானம்பாடிகள்: நீங்களுமா சார்? :) மழிக்க நேரமில்லாத அளவுக்கு எழுத்து என்னை ஆட்கொண்டுவிட்டது!! (அவ்வ்வ்..)

@க.பாலாசி: பிஸினஸ் எதிக்ஸ் பாலாசி! :)

@சித்ரா: நன்றி சித்ராஜி!:)

@பாலாசி: சந்தேகமே வேண்டாம். அதேதான். :))

@ஜில்தண்ணி: நன்றி யோகேஷ்

@வித்யா: அவங்க ஏற்கனவே
ரவுடிதாங்க! :) மிக்க நன்றி! :))\

@தேவா: நன்றி பாஸ்!:))

@விசா: அதே அதே! :))

@அக்பர்: ஹா ஹா மாற்றப்பட்டதுங்க! :)) நன்றி அக்பர்:)

@மோகன் குமார்: நன்றி மோகன் ஜி!:)

@பிரபாகர்: நன்றி சேம் ப்ளட்:))

@எறும்பு: சொல்லிட்டங்க. / என்னது துப்பனுமா? ஒரு மார்க்கமாதான் அலையுதீரு:) / இது தெரியாமயா தானைத் தலைவி கட்சில சேர்ந்தீங்க?:)
/யாருங்க?/ நீங்கதான் நெல்லு நாந்தான் புல்லு:)/ பகல்ல லாரி வராது பாஸ் அதான் ராத்திரி:)

@ ஹேமா: ஹி ஹி:)

@ஜோதிஜி: ஆமாங்க அவரு லொள்ளு இருக்கே? :))

@சங்கவி: நன்றிங்க சங்கவி:))

@நேசமித்திரன்: மிக்க நன்றிங்க நேசன்::)

@சின்ன அம்மிணி: நன்றிங்க:))

@பா.ராஜாராம்: நன்றிண்ணே:))

@கேபிள்: சரி சரி:))

@தேனம்மை: ஹா ஹா இல்லீங்களே ஜி! :))

@நாளைப் போவான்: நன்றி நண்பா:))

@கமலேஷ்: நன்றி நண்பரே:))

@ஹாலிபாலி: பாலா தொப்பை சைஸ் அது! :)/5.9/வீட்டிஷ்/ஆண்/ரெண்டும்/யாருங்க அவங்க?:)) %% அப்ப நீங்க 40+ இல்லையா? :)

@கே.ஆர்.பி.செந்தில்: சொல்லிட்டேன் செ.:))

@ஜெட்லி: அது ஹாலி பாலியோட
புதுப்பேரு தம்பி! :))

@செ.சரவணக்குமார்: சேவல் பண்ணைக்கு நான் வர்லைங்க! :))

@ஸ்டார்ஜன்: நன்றிங்க ஸ்டார்ஜன்:))

@ராதாக்ருஷ்ணன்: நன்றிங்க ராகி:)

@சீமான்கனி: அப்பா உங்க
ஒருத்தருக்காவது புரிஞ்சிதே! நன்றி கனி:))

@நாடோடி: நன்றி ஸ்டீபன்:)

@பட்டர்ஃப்ளை சூர்யா: தல ஊர்லதான் இருக்கீங்களா? :)

@ப்ரியா: ஹி ஹி நன்றிங்க டீச்சர்:))

வால்பையன் said...

//பதில்கள் நறுக்குன்னு இருந்தது.//


ரொம்ப கடிச்சிட்டாருன்னா சொல்றிங்க!

:)

R.Gopi said...

ஷங்கர்.....

நல்லா எழுதி இருக்கீங்க.....

நிறைய எழுதறீங்க.... தோழமைகளும் பாராட்டுகிறார்கள்.. அப்புறம் என்ன, கேபிளார் மாதிரி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியது தானே!!!

மரா said...

@ எறும்பு
////ஊரைவிட்டே ஒதுங்கி கூடாரத்தை அண்டை மாநிலத்துக்கு மாத்தினதுல ஏதோ இரகசிய காரணம் இருக்குன்னு பேசிக்கிறாங்களே? அப்டிங்களா?//

அதுவும் ராத்திரியோட ராத்திரியா நடந்தது. அப்பவே எனக்கும் டவுடுதான்
:)//

அண்ணே நீங்களும் யாரோ ஒரு பிரபல பதிவரும் அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போய் நல்லா வயிரு முட்ட தின்னதா விதூஷ் சொன்னாங்களே!

King Viswa said...

//அப்ப நீங்க 40+ இல்லையா? :) //

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவின் வாஸ்கோடகாமா, பாகிஸ்தானின் காந்தி, தென்னாபிரிக்காவின் ஒபாமா என்று பல பட்டங்களை கொண்ட எங்கள் இளம் சிங்கம் ஹாலிபாலாவை இப்படி கிண்டல் செய்யும் விதத்தில் உள்ள இந்த கமெண்ட்டை உடனடியாக நீக்காவிடில் உங்கள் வீட்டின்முன் புட்டு + லட்டு சாப்பிடும் போராட்டம் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இப்படி எல்லாம் கமென்ட் போட்டால் எங்கள் இளம் சிங்கம் இமேஜ் டேமேஜ் ஆகும், பல லட்சம் இளம்பெண்கள் அவரின் பதிவை படிக்க மாட்டார்கள் என்று நினைப்பா? நடக்கவே நடக்காது.

நல்ல வேலை, இந்த கமென்ட் தமிழில் இருக்கிறது. இதுவே ஸ்பானிஷ் மொழியில் நீங்கள் கமென்ட் போட்டு இருந்தால் ஸ்பானிஷ் தூதரிடம் இருந்து உங்களுக்கு கொலை மிரட்டலே வந்திருக்கும்.

எறும்பு said...

//அண்ணே நீங்களும் யாரோ ஒரு பிரபல பதிவரும் அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போய் நல்லா வயிரு முட்ட தின்னதா விதூஷ் சொன்னாங்களே!//

தம்பி "பூரி" இன்னும் வரலை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இயல்பான பதில்கள். இந்தப்பதிவில் இருக்கிற உங்க புகைப்படம் தான் நல்லாருக்கு சகோ!

ரோஸ்விக் said...

அண்ணே நிறைய விபரம் தெரிஞ்சுச்சு...
இன்னும் கொஞ்சம் தேவை.... (ஏதோ என் பங்குக்கும் கேக்குறேன்)
உயரம் எவ்வளவு?
வெண்ணை என தலைப்பிட்டு எழுதுவதன் நோக்கம் என்ன?
.
.
.
இது மாதிரி நிறைய இருக்கு... அப்பறம் நேரம் கிடைக்கும்போது கேக்குறேன்... :-))

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் ,நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. //

நிறைய விடயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஹ ஹ ஹா