பலா பட்டறை: காமினி (சவால்-சிறுகதை)

காமினி (சவால்-சிறுகதை)

.

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) "காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

மீண்டும் அந்தக் குறிப்புகளடங்கிய மின் திரையைப் பார்த்தான் பூவராகன்.

"நிச்சயமா இது 'ஸ்வா' அனுப்பிய செய்திதானா? "

"யெஸ் சார். நம்ம சிஸ்டத்துல மட்டுமே இதப் பார்க்க முடியும். எக்ரிப்டேட் டெக்னாலஜி. "

"ஏன் துண்டு துண்டா இருக்கு மெஸ்ஸேஜ்? இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் வந்திருக்கா?"

"நோ சார். இடையில என்ன நடந்திருக்குன்னு தெரியல. சாட்லைட் மூலமாகவும் தொடர முடியல. சம்திங் ராங்."

"சரி ஆரம்பத்திலேர்ந்து வந்த மெஸ்ஸேஜ் எல்லாத்தையும் தாங்க."

"சாரி சார். இதுதான் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட். பீட்டா ஸ்டேஜ்"

"ஓ முதல் கோணலே முற்றும் கோணலா? ம்ம் லெட்ஸ் ஸ்க்ராட்ச்"

--

"சொல்லுங்க பூவராகன்."

"சார் காமினி ஒரு அண்டர்கவர் ஏஜெண்ட். ஆனா அவங்க ஹூயூமன் கிடையாது."

"வாட்? யூ மீன் அவங்க ரொபோவா?"

"பாதி நோ சார். அவங்க ஒரு ஹூமன் & ஏப் ஃபியூஷன் க்ளோன். சுருக்கமா குரங்கையும் மனிதனையும் சேர்த்து செஞ்ச டிவைஸ். சிந்திக்கும் திறனுக்காக மனிதனும், தற்காப்பு ஆபத்தை எதிர்கொள்ள/தாக்க குரங்கின் திறன்களும் கலக்கப் பட்ட ஒரு பெண். அதுமட்டுமில்லை அவங்க சாட்லைட்டால் இணைக்கப் பட்ட ஒரு நடமாடும் கம்ப்யூட்டர். எந்த ஸ்கேனராலும் கண்டுபிடிக்க முடியாது. ஷீ லுக்ஸ் லைக் எ பர்ஃபெக்ட் வுமன். பட் நிஜத்தில் ஒரு டிவைஸ். "

"அப்ப ஸ்வா?"

"அதுவும் ஒரு ஸ்பை டிவைஸ்தான் சார். அதாவது காமினியோட கண்கள். அவை வீடியோவிற்கு பதிலாக செய்திகளாக ட்ரான்ஸ்மிட் செய்கிறது. கிட்டத்தட்ட எஸ் எம் எஸ் மெஸ்ஸேஜ் மாதிரி. ஆனாலும் அதிலும் இப்பொழுது ஏதோ கோளாறு. துண்டு துண்டாக வருகிறது. இப்பொழுது அதுவும் இல்லை. "

"ஸ்ஸ் இந்த சைண்டிஸ்டுங்க தொல்ல தாங்கலப்பா. சம்பாதிக்க வக்கில்லாதவன் வத வதன்னு புள்ளைங்களப் பெத்துக்கறமாதிரி, மானாவாரியாக் கண்டுபிடிச்சி நம்ம உசிர எடுக்க வேண்டியது. கொசுவ அழிக்க மருந்து இல்ல, இதுல கொரங்க வெச்சி பிசைஞ்சிருக்கானுவ. சரி இப்ப என்னப் பண்ணப் போறீங்க பூவராகன்.."

"ஜோசியம் சார்."

"வாட்.??"

--

"வெல்டன் காமினி"
காமினி டாக்டரைப் பார்த்து சிரித்தாள்.

"அப்ப பூவராகனும்.."

"யெஸ் என்னை மாதிரிதான் போல டாக்டர். அவர் பார்க்கும் எல்லாமே எனக்கும் மெஸ்ஸேஜா வருது. ஸொ ஐ நோ ஆல் தேர் மூவ்ஸ்.."

காமினி கிடத்தப் பட்டிருந்த அந்த கட்டிலின் அருகில் சிவாவிற்கு ஒவ்வொரு மெஸ்ஸேஜாக வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் குழம்பி இருந்தான். நிறைய டென்ஷனாக இருந்தான். ஒரு முடிவோடு எழுந்தான்.

காமினி சிவாவை அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

--

பீப்.. பீப்.. யெஸ் என்னை மாதிரிதான் போல டாக்டர் அவர் பார்க்கும் எல்லாமே எனக்கும் மெஸ்ஸேஜா வருது. ஸொ ஐ நோ ஆல் தேர் மூவ்ஸ்..

"க்ரேட் ஒர்க் பூவராகன். டிவைஸ் சரியா வேலை செய்யிது. இப்ப ட்ரான்ஸ்மிட் டைம் கொஞ்சம் அட்வான்ஸ் பண்ணவேண்டி இருக்கும். நிச்சயமா இது சக்ஸஸ் ஆகும். லெட்ஸ் வாட்ச் சிவா க்ளோஸ்லி"

"இப்ப நான் என்ன பண்ணனும்?." பூவராகன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார்.

"சிம்பிள் பூவராகன் இப்ப நீங்கதான் காமினி சோ.. யூ நோ வாட் டு டூ"

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, 
வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

பூவராகன் குதித்து வேகமாய் ஓடுவதை அடுத்த அறையிலிருந்து அரை டஜன் விஞ்ஞானக் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன.
--

"காமினி. இப்படிக் காட்டிக்கொடுத்துவிட்டாளே. எவ்வளவு கஷ்டப் பட்டு உருவாக்கினேன். இப்படி நாட்டுக்கு நல்லது செய்யவா? என்னையே வேவு பார்க்க என்னுடைய கண்டுபிடிப்பேவா? வேறு வழியில்லை. வேறு ஒன்று தயாரித்துக் கொள்ளலாம். அடுத்தமுறை குரங்கை மிக்ஸ் பண்ணக்கூடாது. அநியாயத்துக்கு நல்ல ஜென்மங்களாக இருக்கிறது."

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

--

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

"நாடு போற்றும் சைண்டிஸ்ட் சிவாவோட பொண்டாட்டின்னா சும்மாவா சார்.. அப்படியே பொணத்துமேல விழுந்து அவங்க கதறின கதறல டிவி சீரியல் எடுக்கறவங்களே பார்த்து குறிப்பெடுத்துக்கிட்டாங்கன்னா பார்த்துக்குங்க. எண்டோஸ்கோப்பி ஸ்டைல்ல மூக்கு வழியாவே ட்யூப் வெச்சி வைரத்த மறைச்சி எடுத்துகிட்டு வந்துட்டாங்க."

"ஹேண்ட்ஸ் அப். உங்க எல்லாரையும் கைது செய்யறேன். இந்த இடத்தச் சுத்தி போலீஸ் இருக்கு. யாரும் தப்ப முடியாது. "

காமினி என்று புருவத்தைச் சுறுக்கிய பரந்தாமனைப் பார்த்து காமினி தன் முகத்தைக் கழற்றினாள்.

"சாரி நான் பூவராகன்."

--

"ஓ இதுதான் அவங்க ப்ளான் இல்லையா? என்றார் பரந்தாமன். "

"ஆமாம் சார். அவங்களவிட அந்த டிவைஸ அட்வான்ஸா செட் பண்ணும்போது ஆச்சர்யமா அது எதிர்காலத்துல நடக்கறத அப்படியே மெஸ்ஸேஜா சொல்லிடுது. "

"ஆனாலும் நான் அந்த டைமன்ட் எல்லாத்தையும் காமினிய வெச்சே கடத்தறேன் பார். ஆனா முதல்ல அந்த பூவராகவன புடிச்சிக்கிட்டு வாங்கய்யா என்றார் பரந்தாமன்."

--

"க்ரேட் பூவராகன்". எந்தச் சம்பவங்களும் நடக்காமலேயே, அது நடக்கப் போவதை டிவைஸ் மூலமா கணிச்சி குற்றவாளிங்களைப் பிடிச்சிட்டீங்க. இதுல பரந்தாமன் ஒரு டைமண்ட் கடத்தல்காரந்தான். ஆனா சிவாதான் ரொம்ப டேன்ஜர். இவன மாதிரி ஆளுங்களாலதான் நம்ம நாட்டுக்கே ஆபத்து.  

"ரொம்ப புகழறீங்க டாக்டர் சார். முள்ள முள்ளாலதான் எடுக்கனும். அதனாலதான் நானே அந்த டிவைஸ பொறுத்திக்கிட்டேன். அதனால நானும் அதுபோல ஒன்னுன்னு நினைச்சிட்டாங்க. என்கிரிப்ஷன எடுத்ததும் அவங்களுக்கு ஆக்ஸஸ் ஈஸி ஆக்கினதும் டிவைஸ நம்பி அவங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டாங்க. எல்லாமே ரெக்கார்ட் ஆயிடிச்சி. ஸ்ட்ராங் எவிடென்ஸ். தூக்கத்துல மலைமேலேர்ந்து விழறமாதிரி கனவுகண்டு படுக்கையிலேர்ந்து எழுந்திருப்போமே அந்த மன நிலை வெச்சித்தான் கொஞ்சம் குழப்பினேன். வொர்கவுட் ஆயிடிச்சி. எல்லாம் டீம் வொர்க். உங்களுக்கும் இதில் க்ரெடிட் இருக்கு. பை தி வே ஹவ் ஈஸ் காமினி டாக்டர்?

"ஓஹ் இப்பத்தான் அங்கேர்ந்து வர்றேன். நத்திங். ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்லை. ஐ திங் இட்ஸ் ஓவர்."

டாக்டர் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.

--

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

--

'பீப்'..'பீப்' பூவராகன் மின் திரையைப் பார்த்தார்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

"ஓஹ் நோ காப்ஸ்"

பூவராகன் எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தார்.

--

'பீப்'.'.பீப்' காமினி மின் திரையைப் பார்த்தாள்..

டாக்டர் அகன்றதும் பூவராகன் எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தார்.


சிரிப்போடு, காமினி இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தாள்.



(!!)
--



23 comments:

VISA said...

:)

க ரா said...

முத தடவ படிச்சு முடிச்சுட்டேன்.. இன்னும் ஒரு ரெண்டு தடவயாது படிக்க்கனும் போல...

Anisha Yunus said...

ஷங்கர்ண்ணா,

ஆஹா...மறுபடியும் மறுபடியும் குழப்புறீங்ணா. சரி மறுபடி முதல்ல இருந்து படிக்கறேன்.

King Viswa said...

இப்படியும் எழுதலாமோ?

சூப்பர்.

Unknown said...

Kavithai thaan appidinna kathaiyumaa. Thangala samy.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

நேசமித்ரன் said...

கான்செப்ட் நல்லாருக்கு தல !!!

ப்ளோ தான் டெஸ்ட் ட்ராக் ரேஞ்சுக்கு இருக்கு :)

Unknown said...

இந்த முயற்சி நல்லாத்தான் இருக்கு .. பரிசலின் பரிசு உங்களுக்கே கிடைக்க வாழ்த்துக்கள் ...

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்குன்னு சொல்ல ஆசைதான்...
ஆனா வேகமா செல்ல வேண்டிய கதை மெதுவாக நகர்வது போல் தெரிவதை தவிர்க்க முடியவில்லை...

Chitra said...

ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க.... வாங்க.... வாங்க....

பின்னோக்கி said...

அட.. மொத மூணு லைன்லயே கதையோட விதிகளை முடிச்சுட்டீங்களே.. கலக்கல் ஐடியா.

thiyaa said...

super

thiyaa said...

அருமை

thiyaa said...

அருமை

நட்புடன் ஜமால் said...

செம அப்ரோச் ‘தல’

ருத்ர வீணை® said...

ரைட்டு..
(2) (1)(4) (5) (3) (6) (8) (10) (7) (9)

புரியுது
இப்போதான்
நாளா
இதத்தான்
இத்தனை
யோசனை
எழுதி
போல
செஞ்சி
இருக்கீங்க

.......
எப்பூடி....

Thenammai Lakshmanan said...

என்ன சங்கர் ஒரே கலக்கலா இருக்கு..அருமை.. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்..

ஹேமா said...

முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள் ஷங்கர்.

R.Gopi said...

தலீவா.........

இன்னமும் நெறைய தபா பட்சா தான் புர்யும்னு நெனக்கறேன்...

நெர்ய தபா பட்சு புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்...

R. Gopi said...

ஏதோ இன்கம் டாக்ஸ் புக்கப் பிரிச்சு வெச்ச மாதிரி இருக்கே, ஒண்ணும் புரியல

Asiya Omar said...

கதை அருமை.

aru(su)vai-raj said...

when I finished reading this story, I understood your "title captions"

அப்பாதுரை said...

உழைப்பு தெரியுது. வாழ்த்துக்கள்.
கொஞ்சம் இருங்க.. தலை சுத்தி நின்ன பிறவு திரும்ப வந்து படிக்குறன்.