பலா பட்டறை: மந்திரப் புன்னகை - இது விமர்சனமா??

மந்திரப் புன்னகை - இது விமர்சனமா??

.

என்ன பலா நைட்டே படத்தப் பத்தி ரிவ்யூ எழுதிடுவீங்கதானே? கேட்ட பிரபல பதிவரைப் பார்த்து திரும்ப சொன்னேன் ஏன் படம் பார்த்தா ரிவ்யூ எழுதனுமா?

இல்ல அண்ணன் உண்மைத்தமிழன் கஷ்டப்பட்டு எல்லாரையும் கூப்பிட்டு முக்கியமா பதிவுலக நண்பர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ அரேஞ் பண்ணி இருக்காரு, குடும்பத்தோட வரலாம்னு ரொம்ப முயற்சி எடுத்திருக்கார் அதனால..

ஹலோ நானா அவர கஷ்டப்படச்சொன்னேன்? ஸ்பெஷல் ஷோ போடச்சொன்னேன்? கஷ்டப்பட்டு படம் பார்க்க வந்திருக்கனே நான் பாவமில்லையா?? சரி அத விடுங்க ஏதோ டிசம்பர் 15ம் தேதி நீங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறீங்களாமே? 

ஏங்க சத்தமா பேசறீங்க?

ஏம்ப்பா கல்யாணம்தானே பண்ணிக்கப்போற லிவிங்டுகெதர் இல்லையே? அப்படியே இருந்தாலும் சத்தமா கேக்கறதுல என்ன தப்பு? மெதுவா கேட்டாலும் சத்தம் வராதா என்ன? 

இங்கிதமே தெரியல பலா உங்களுக்கு! 

இங்கிதம்னா என்னங்க? கல்யாணம் செஞ்சிக்கப்போறத ரகசியமா செய்யறதா? அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுக்காவது தெரியுமா? 

ஏய்ய்ய்ய்ய்ய்ய் என்று அந்தப் பிரபலப் பதிவர் அருவா தூக்குவதற்கு முன்பாக கட்.

இந்தப் படம் இது போன்ற ஒரு கேரக்டரைச் சுற்றித்தான் ஆரம்பிக்கிறது. உள்ளதை உள்ளபடியே பேசும், பேச விரும்பும் நாயகன். முகமூடிகள் தேவைப்படாத, அதை மாட்டி யோக்கியன் என்று காண்பித்துக்கொள்பவரைக் கேள்விகேட்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். முதல் பாதி முழுவதும் முகமூடிகளுடன் படம் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துகொண்டே வரும் வசனங்கள். கூடவே வழக்கம் போல சந்தானம் :))

இது போன்ற மனிதர்களைக் காண்பது அரிது. ஒருவேளை பைத்தியம் என்று சொல்லி எங்காவது சங்கிலி போட்டு கட்டிவைத்திருகிறார்களோ என்னமோ? ஆனாலும் பாருங்கள் இது எல்லோருக்குள்ளும் நிகழும் ஒன்றுதான். நீயா நானாவில் ஒரு ஷோவில் பார்த்திருக்கிறேன் அழகான பெண்கள், ஆண்கள் பெண்களைப் பார்த்து கேள்வி வரும் நீங்கள் ஏன் அழகாக உடை உடுத்துகிறீர்கள்?. பதில் பசங்கள அட்ராக்ட் பண்ணத்தான். 99% இது உண்மையாக இருக்கலாம் ஆனால் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ உத்துப் பார்த்தால் போச்சு! ஆணின் ஜெண்டில்மேனை பெண் உடைப்பாள், பெண்ணின் கேரக்டரை ஆண் உடைப்பான். அழகாய் நிற்கும் பெண்ணின் அல்லது ஆணின் உடையை ஹேர் ஸ்டைலை சூப்பரா இருக்குங்க, யூ லுக் பியூட்டிஃபுல் என்று சொல்ல முடியவே முடியாது. ஆனால் மனசு சொல்லிவிடும். மனசு சொல்வதை வாயாலும் சொல்கிறார் ஹீரோ. அதிலும் வழக்கமான க்ளிஷேக்கள் உடைக்கப்பட்டு படம் பைபாஸில் பயணித்து மேம்பாலம் ஏறி நகர நெரிசலில் சிக்கப்போகும் முதல் சிக்னலில் இடைவேளை.

இரண்டாம் பாதியில் அந்த கேரக்டரை காம்ப்ரமைஸ் செய்து வழக்கமான சினிமா க்ளிஷேக்களை நிரப்பி ஜஸ்டிஃபிகேஷன் செய்திருக்கிறார்கள்.   


படத்தில் (என்னை) கவர்ந்த அம்சங்கள்:

பலரின் முகங்களைக் காட்டும் டைட்டில்

வசனம்

சந்தானம். 

அல்ட்ரா ஸ்லோமோஷன் பேக்கிரவுண்டில் அந்தப் பாடல்.

கரு. பழனியப்பன் நடிப்பு - எறும்பு ராஜகோபால் கூட கேட்டார் ரொம்ப ஃப்ளாட்டா நடிச்சிருக்காரே. ஆனால் இந்தப் படத்தில் அந்த கேரக்டருக்கு வேறு யாரைப் பொருத்திப்பார்ப்பது? எல்லா பிரபல நடிகர்களின் க்ளிஷேக்களும் நமக்கு மனப்பாடம் ஆகிவிட்ட நிலையில் அவர் நடித்திருப்பது சரிதான். விக்ரம் என்றார் மணிஜீ (ராவண வதமே போதும்) இதற்கு படத்தில் சந்தானம் சொல்லும் ஒரு வசனம் பொருந்தும். பில்டிங் டிசைன் பற்றிய ஒரு கூட்டத்தில் டிசைன் டிஃப்ரெண்ட்டா இருக்கனும் என்று சொல்லும்போது சந்தானம் சொல்வார் சார் எல்லாரும் இப்ப டிஃப்ரண்ட்டாதான் கட்டறாங்க நாம சாதாரணமாவே கட்டுவோம் அதுவே டிஃப்ரெண்ட்டா தெரியும். 

முதல் பாதி கேரக்டரை ஏன் டெவலப் செய்து படம் முழுதும் காட்டமுடியவில்லை? எதற்கு வழமையான ஒரு காம்ப்ரமைஸ் என்று யோசிக்கும்போது சினிமாவின் ஃபார்முலாக்களும் வியாபார குண்டு சட்டிகளும் நினைவுக்கு வருகிறது. அரைத்த மாவை அரைக்கும் மொக்கைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் பதிவர்களாலேயே நிரம்பியிருந்த அந்தத் திரை அரங்கம் சிரிப்பால் பல முறை அதிர்ந்தது அதற்கு சாட்சி.

ஜெட்லி கார்னர்”

ரெஜிஸ்டர் மேரேஜ் பதிவர் ஹீரோயினை திரையில் பார்த்துவிட்டு என் காதில் கேட்டார், இதுதான் தேவதையா? நான் சொன்னேன் எல்லா வதைகளும் தே என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது.

நெருடல் : அவ்ளோ பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் சைட்டில் ஒரு பீகாரியைக் கூட காணமுடியவில்லை.!!

அண்ணன் உண்மைத் தமிழன் தயாரிப்பாளர் கெட்டப்பில் கெத்தாக வந்திருந்தார். பதிவர்கள் குடும்பத்தோடு வரவில்லையே என்று குறைபட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கம்போல பதிவர் சந்திப்பும் நடந்தது. :))


அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுக்கும் பதிவர்களை மதித்து, அழைத்து திரையிட்ட கரு.பழனியப்பன் அவர்களின் அன்பிற்கும், நன்றிகள்! :))


.

13 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jetli corner super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

aanaalum kusumpu jaasthi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு வார்த்த என்னை கூப்டிருக்கலாம்

Romeoboy said...

முழுக்க நிறைகளை மட்டுமே எழுதியது போல இருக்கே பாஸ் .. உண்மையை சொல்லுங்க கரு.பழனியப்பன் இயக்குனராகவே இருந்து இருக்கலாம் தானே .

Rajagopal.S.M said...

:))

Rajagopal.S.M said...

//ரெஜிஸ்டர் மேரேஜ் பதிவர் //

Arrangement yellam panniyacha?

எல் கே said...

:)))

vasu balaji said...

இந்த எறும்பால நீங்க கெட்டுப் போனீங்களா. இல்ல உங்களால அவரு கெட்டுப் போனாரா. ரெண்டு பேரு அலப்பறையும் தாளலடா சாமி.:))

Thenammai Lakshmanan said...

அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுக்கும் பதிவர்களை மதித்து, அழைத்து திரையிட்ட கரு.பழனியப்பன் அவர்களின் அன்பிற்கும், நன்றிகள்! :))
// வலைப்பதிவர்களை பிரிவியூவுக்கு அழைத்த கரு பழனியப்பனுக்கும். சரவணனுக்கும் நன்றிகளும்.. வாழ்த்துக்களும்.. பெண் பதிவர் யாரும் வந்திருந்தாங்களா சங்கர்..

நான் என் ப்லாக்கில் ஞாயிறு படம் பார்த்து திங்களன்று விமர்சனம் போட்டுள்ளேன் .. அதனால் வரவில்லை..

மரா said...

உங்க பதிவு படம் பார்க்க தூண்டுகிறது :)

Ramesh said...

மந்திரப் புன்னகை - இது விமர்சனமா??

ஆம் இதுதான் விமர்சனம்.. பெரும்பாலானவர்கள் விமர்சனம் என்ற பெயரில் கூறுவது கதை.. இந்தப் படம் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன்.. இடைவேளை ட்விஸ்டை விமர்சனம் என்ற பெயரில் பலரும் வெளிப்படுத்திவிட்டதால் கொஞ்ச நாளைக்கு இந்தப்படம் பார்க்க வேண்டாம் என நினைத்திருக்கிறேன்..

ஆனால் உங்கள் விமர்சனம் அருமையாக இருக்கிறது..

ஈரோடு கதிர் said...

||எறும்பு ராஜகோபால் கூட||

அதென்ன கூட... (எதும் உள்குத்து)

விமர்சனம் நைஸ்!

ஸ்வர்ணரேக்கா said...

விமர்சனத்தை ஆரம்பித்த விதம் நல்லாயிருக்கு....