பலா பட்டறை: பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு - பாம்பு பண்ணை

பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு - பாம்பு பண்ணை

பாம்பு என்றால் - பொது புத்தி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் பற்றிய எனது பார்வையை இந்த இடுகையில் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்ட படியே என் வீட்டுத் தோட்டத்திலும் சுற்றி உள்ள இடங்களிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் அப்படி கண்ணில் தென்பட்ட ஒரு பாம்பு குட்டியை ( நல்லா படிங்க குட்டி பாம்பு) பிடித்து ஒரு 2 லிட்டர் கோக் பாட்டிலில் அடைத்து மூடியில் துளையிட்டு கிண்டி ஸ்னேக் பார்க்கிற்கு எடுத்துச்சென்றேன். அது என்ன வகை என்று அறிந்து கொள்ள எனக்கு ஆசை இருந்தது.

அங்கே நான் திரு. சிவகுமார் (Environmental Education Officer) அவர்களை சந்தித்தேன்.  நான் கொண்டு சென்றிருந்த அந்த பாம்பு குட்டியினை குழந்தையை கையாள்வதைப்போன்று மெதுவாய் வெளியே எடுத்து அது பற்றி விளக்கினார். மேலும் பல விஷயங்களைப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் சொன்னார்.

அவற்றில் சில: 

பாம்புகாளால் கடி பட்டவர்கள் அதிகமாக இறப்பது மாரடைப்பினால். காரணம் பயம். விஷம் அடுத்த கட்டம்தான். விஷமில்லாத பாம்பு கடித்தாலும் பயத்தினால் மாரடைப்பு வந்து இறப்பவர்களும் அதிகம்.

விஷ பாம்பு கடித்தால் கடிபட்டவரை அதிகம் அலட்டாமல் வைத்திருப்பது விஷம் இரத்தத்தில் கலப்பதை தாமதமாக்கும். உடனடியாக விஷ முறிவு மருந்து கொடுத்து அவரை மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றால் காப்பாற்ற முடியும்.

இராயப்பேட்டை மருத்துவமனையில் பாம்பு கடிக்கான சிறப்பு சிகிச்சை வசதிகள் இருக்கிறது.     

இதை அவர் கூறும்பொழுது நான் தற்பொழுது இருக்கும் கிராமத்திற்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கும் சுமார் 40 கிலோமீட்டர்கள் இருக்கும் நிலையில் கடிபட்ட ஒருவரை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றால் கூட 1 மணி நேரம் ஆகும் நிலையில் ஏன் பாம்புகள் அதிகம் இருக்கும் கிராமப் புறங்களில் இது போன்ற வசதிகள் செய்யாது நகரின் மையத்தில் விஷப்பாம்புகள் அறவே அற்ற இடத்தில் அரசாங்கம் சிகிச்சை மையத்தை வைத்திருக்கிறது என்று கேட்டேன்.

அதை ஆமோதித்த அவர். பெரும்பாலான தனியார் மருத்துவ மனைகளில் பாம்புகடிக்கான விஷமுறிவு மருந்து கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென்பது அரசாங்க உத்தரவென்று கூறினார். 

ஒரு விஷ முறிவு மருந்து (வயல்) கிட்டத்தட்ட 500/- ரூபாய் மதிப்புள்ளது. விஷம் உடலில் சென்ற அளவு பொறுத்து எவ்வளவு வயல்கள் உடலில் செலுத்தப்படும் என்பது தீர்மானிக்கப் படுகிறது. எனவே கடிபட்டவருக்கு உடனே விஷ முறிவு மருந்து அளித்து மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும்போது அவரைக் காப்பாற்ற முடியுமென்றார்.  மேலும் கிராமப்புறங்களில் குளிர்சாதனப் பெட்டி வைத்துள்ளவர்கள் இந்த மருந்தினை வைத்திருந்தால் கடிபட்டவர்களுக்கு ஊசி போடத்தெரிந்தவர்கள் மூலமாக அதைச் செலுத்தி முதலுதவி செய்து உடனே மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று காப்பாற்ற முடியுமென்றும் கூறினார். 

மேலும் நமது நாட்டில் நான்கு வகையான விஷப் பாம்புகளுக்கும் சேர்த்து ஒரே விதமான விஷ முறிவு மருந்தே இருப்பதால் இதில் குழப்பமடைய வாய்ப்பில்லை. 

சாதாரண தண்ணீர்ப்பாம்பையே கிராமப்புரங்களில் அடித்து துவைத்து காயப்போட்டு எரிக்குமளவுக்கு விழிப்புணர்ச்சி இருக்கிறதே இதற்கு பாம்புப் பண்ணையின் பங்கு என்ன என்று கேட்டதற்கு பல பள்ளிக்கூடங்களை தொடர்புகொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாம்புகளைப்பற்றிய அதன் வாழ்வுமுறைகள்/ விளக்கங்கள் அளித்துக்கொண்டு இருப்பதாகக் கூறினார். 

பாம்புகள் வராமல் இருக்க வளர்க்கப் படும் செடி இன்ன பிற முறைகள் பற்றி கேட்டதற்கு அவைகள் இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே இருப்பதாகவும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சில இரசாயணங்கள் உபயோகப் படுத்தப்படுவதாகவும் ஆனால் அவை நம் நாட்டு பாம்பு இனங்களுக்கு சரி வராது என்றும் தற்பொழுதைக்கு பாம்புகளைப் பற்றி புரிந்து கொள்ளுதலே சிறப்பான வழி என்றும் விளக்கினார்.

தற்பொழுது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று பொதுமக்களுக்கு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழே அந்த மின்னஞ்சலை அப்படியே கொடுத்துள்ளேன். அதன் படி தொடர்பு கொண்டு நண்பர்கள் பயனடையவும், தெரிந்தவர்களுக்கும் சொல்லவும்.



Dear Sir,

Greetings from Chennai Snake Park.

Nice that you visited snake park with a young Striped Keelback snake. I am really happy to know your interest in this charismatic animal group and your passion towards going with nature in general.

We have a snake awareness programme for general public in snake park premises. I am happy to share this news and expect like-minded people from your end to attend this programme. Please find the attached file for the detail. Please share with more people interested in such programme.

Thanking you,

Regards
S. Sivakumar
Chennai-600022.
Tamil Nadu.
--------------------------------------------------------------------------------------------------------------------------

FOR THE INFORMATION OF THE PUBLIC 
      It is proposed to conduct awareness programmes on snakes for the members of the public at the Chennai Snake Park on the 1st Saturday of every month from 11.00 a.m. to 1.00 p.m. 
  • The programme will be as follows:
      11.00 a.m. to 11.20 a.m.   - Demonstration of live snakes
      11.20 a.m. to 11.45 a.m.   - Visit to the snake enclosures and other
                    reptile enclosures 
      11.45 a.m. to 12.30 p.m.   - Power Point Presentation on snakes  
      12.30 p.m. to 1.00 p.m.  - Question and answer session 
  • Admissions to the Snake Park and the Programme will be free. 

  • Light refreshments will be served.

  • The maximum number of participants will be restricted to 40 for each programme.  The applicants will be selected on a first-come-first-served basis.  Intimations will be sent to the selected applicants by post.  Selected applicants should bring the intimation with them for identification.
  • Applications with contact address / email to be handed over to Mr.S.Sivakumar, Environmental Education Officer, Chennai Snake Park, Rajbhavan Post, Chennai 600 022. Ph.: 2235 3623 email : cspt1972@gmail.com

நன்றி நண்பர்களே! :))

18 comments:

Unknown said...

அந்தப் பாம்பு எந்த ப்ராண்டுனு கடைசி வரைக்கும் நீங்க சொல்லவேயில்லையே?

Paleo God said...

@முகிலன் : Striped Keelback snake அப்படின்னு தெளிவா மெயில்ல சொல்லி இருக்காரே. நீங்க எப்ப அண்ணன் ஸ்ஸ்ஸ்னேக் பிரபா மாதிரி கொமெண்ட் போட ஆரம்பிச்சீங்க? :)))

ஜோதிஜி said...

நண்பா ரொம்ப மெனக்கெட்டுருப்பது புரியுது. ஆனா கடைசி வரைக்கும் ஒரு உண்மையை சொல்லமா விட்டு விட்டீங்களே?

சீறிவரும் பாம்பை நம்பு சிரித்து வரும்........... நம்பாதே என்பதற்கு அவர் எதுவுமே சொல்லவில்லையே(?)

Paleo God said...

ஜோ: கேட்டேங்க. ரெண்டையும் நம்பவேண்டாம் உங்கள நீங்க நம்பினாப் போதும்னு சொல்லிட்டாரு! :)))

சங்கர் said...

பாம்பாட்டி பரமானந்தா வாழ்க :)

ஹுஸைனம்மா said...

//பயத்தினால் மாரடைப்பு வந்து இறப்பவர்களும் அதிகம்//

:-(((

கேன்ஸர் போலவே, பாம்புக்கடியையும் “பிழைக்க முடியாத” வியாதியாக் காட்டற நம்ம தமிழ்ப்படங்களும் ஒரு காரணமோ இதுக்கு?

தமிழ்நாட்டு பாம்புப் பண்ணை இப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சியெல்லாம் நடத்துகிறார்களா? ஆச்சர்யம்; மகிழ்ச்சி.

நல்ல தகவல்கள். நன்றி.

Unknown said...

எனக்கு இங்கிலிபிஸ் படிக்கத் தெரியாதுங்களே..

CS. Mohan Kumar said...

நீங்க பாம்பை பிடிச்சு பாட்டிலில் போட்டது எப்படி? கடிக்கலையா? பயம் இல்லையா? டிரைனிங் இல்லாம எப்படி இதெல்லாம்!!

vasu balaji said...

பாம்பு ஷங்கர் வாழ்க:). இந்த குட்டிப் பாம்பைப் பிடிக்கவா இம்புட்டு நாள் காணாமப் போனீங்க:). பாம்புக்கு பிரசவலீவா:))

Unknown said...

பாம்புகள் பொதுவாக மனிதர்களைக்கண்டால் விலகிவிடும், நாம்தான் அதன்மேல் பயந்து அதனை கொன்றுவிடுகிறோம். பொதுவாகவே பாம்புகள் மனிதர்களுக்கு நன்மையே செய்கிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு,,

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்கள். நன்றி.

க ரா said...

நல்லதுங்னா... மிக்க நன்றி :)

மரா said...

அன்பின் பலா,
தங்கள் இயற்கை,விலங்குகள் குறித்த கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.பணிச்சுமை காரணமாக கொமெண்டுகள் போட முடியவில்லை. நல்லதொரு பணி செய்து வருகிறீர்கள். தொடர்க.வாழ்த்துக்கள்.நன்றி.

ஈரோடு கதிர் said...

பாம்பைப் பிடித்துக்கொண்டு, பண்ணைக்குப் போனது ஆச்சரியமான ஒன்று!

பாராட்டுகள்

CS. Mohan Kumar said...

என் கேள்விக்கு எங்கே பதில்???? மற்றவங்களுக்கும் பதில் சொல்லலை ம்ம்

Paleo God said...

@ சங்கர் : :))

@ ஹுசைனம்மா: நன்றிங்க! :)

@முகிலன்: சரிங் பாண்டியரே:))

@ மோகன் குமார்: மெதுவாய் ஒரு கொம்பால் அழுத்தி பாட்டிலை அருகில் கொண்டு சென்றவுடன் அதுவே உள்ளே சென்றுவிட்டது. ஆயினும் இது ஆபத்தானதுதான் ( நமக்கும் பாம்புக்கும்) :))

@ வானம்பாடிகள் : ஆமா சார் :)))

@ கே.ஆர்.பி: சரிதான் செந்தில் :))

@ சே.குமார்: நன்றிங்க குமார் :))

@ இராமசாமி: நன்றிங் :))

@ மரா: எல்லாம் உங்க ஆசிர்வாதம் :))

@ கதிர் : நன்றிங்க கதிர் :))

@ மோகன் குமார்: இணையம் பக்கமே வரமுடியலைங்க அதான் தாமதம் :))

ஜீவன்சிவம் said...

Nice. Very interesting and useful.

g said...

//@ மோகன் குமார்: மெதுவாய் ஒரு கொம்பால் அழுத்தி பாட்டிலை அருகில் கொண்டு சென்றவுடன் அதுவே உள்ளே சென்றுவிட்டது. ஆயினும் இது ஆபத்தானதுதான் (நமக்கும் பாம்புக்கும்) :))//

"யான் பெற்ற இன்பம் பெருகுக இவ்வையகம்" ஒரு விஷயத்தை மட்டும் கடைசி வரைக்கும் மறைத்தே வருகிறீர்கள். முழுக்க முழுக்க தாங்கள் ஒரு சுயநலவாதி என இதன்மூலம் நான் அறிகிறேன்.