பலா பட்டறை: அல்வா!!

அல்வா!!


.

சிங்கம் பட்டி கல்லிடையிலிருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ள அழகிய ஊர். 

ஜமீன் அரண்மனையைச் சுற்றி ஊர் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் ஒரு பெரிய தர்பார், 
                                                                         நடை பாதை
அதைத்தாண்டி ஒரு அழகிய நடை பாதை வழியே நேராகச் சென்றால் ஒரு நந்தவனம் இடது பக்கத்தில் விருந்தினருடன் களிக்க ஒரு க்ளப், நேரே செல்லாமல் வலது பக்கம் சென்றால் உள்ளடங்கிய அந்தப் புரம். 

அந்தப் புரத்தின் மெயின் நுழைவாயில் கதவு அழகான வேலைப் பாடுகளுடன் மிகவும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு யானைகளை வைத்து மோதினாலும் அசைந்து கொடுக்காது போல!. 
                                                               அந்தப்புரக் கதவு
                         
பெரும்பாலான பழைய காலத்து வீடுகளில் இம்மாதிரி மிக கனமான கதவுகள், உத்திரங்கள் பார்த்திருக்கிறேன். இன்றளவும் அவை கட்டிடங்களைத் தாங்கி நிற்கின்றன. இன்றைக்குக் கட்டப்படும் வீடுகளில் ஆறு மாதத்தில் 

“இது என்னங்க செவுத்துல க்ராக் விடுது?”

“அது ஒன்னுமில்ல சார் ஏர் க்ராக், பூசினா சரியாயிடும்”

வீடுகட்டுபவன் தான்தான் க்ராக் என்று நாம் விளங்கிக்கொள்வதற்குள் பூசிவிடுவார்கள்! technology so much iproved! எனக்கு வீட்டு மாடியில் மஞ்சம்புல் வேய்ந்த ஒரு கூரை போட ஆசை என்ன வெயில் அடித்தாலும் மிகவும் குளிர்ச்சியாக வைக்கும். நான் வசிக்குமிடத்தில் கேட்டபோது அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை. குடிசைன்னா தென்ன ஓலைதான் அதென்ன மஞ்சம்பில்லு என்றார்கள். இப்பொழுது ஓடு பதிப்பது கூட ஃபேஷனாகிவிட்டது. கிராமங்களில் வீடென்றால் கான்க்ரீட் அல்லது தென்னம் ஓலைதான் :( 

சரி விஷயத்திற்கு வருவோம். சிங்கம் பட்டி ஜமீந்தார் இன்னும் அந்த அரண்மனையில்தான் வாசம். 

                               தற்பொழுதைய ஜமீன்தாரின் இளமைக்காலப் படம்   

நாங்கள் சென்றபொழுது கம்பீரமாக அவர் அமர்ந்து அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். டிஸ்டர்ப் செய்யாது சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். சிங்கம்பட்டி செல்லும் வழியெங்கும் பசுமை, பசுமை மேலும் பசுமை, வாய்க்காலிலெல்லாம் கேட்பாரற்று விளைந்துகிடக்கிறது சேம்பு. ஆயிரக்கணக்கான மாடுகளுடன் வசித்த அந்த சிங்கம்பட்டி மக்களுக்கு அன்றைக்கு பெரும் மேய்ச்சல் நிலமாக இருந்தது மணிமுத்தாறு டாம் உள்ள புலிகளின் சரணாலயமான வனப் பகுதிதான். 

                                                ராஜ ராஜன் ஒற்றை நாற்று நடவு
மிகவும் செழிப்பான அந்த மலைப் பகுதி தவிர்த்து மற்ற அனைத்தும் விளை நிலங்களாக உள்ளதால் மக்களுக்கு அந்த மலை சார்ந்த காடே மாடுகளுக்கான இயற்கைத் தீவனம். பல்லுயிர் பெருக்கத்திற்கும், புலிகளுக்கு உணவாகவும் அந்த மாடுகள் இருந்திருக்கின்றன. வனத்துறை, அணை கட்டியதால் உண்டான பாதுகாப்பு போன்றவைகளால் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப் படாது தற்பொழுது பல்லாயிரமாகப் பெருகி இருக்கவேண்டிய நமது நாட்டு மாடுகள் காலி! பன்றியின் குணங்களையுடைய சீமைப் பசுவின் ஏழரைப் பால் குடித்து ஜூப்பர் என்று கூவிக்கொண்டிருக்கிறோம். அதன் சாணியும், கோமியமும் நில வாழ் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு லாயக்கற்றது. நமது பாரம்பரிய திமில் கொண்ட கரவை இனங்கள் வெளி நாட்டில் இன்றும் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டுவருகிறது. வெறும் மேய்ச்சலின் மூலம் அதிக பால் தரக்கூடிய பாரம்பரிய ரகங்கள் அழித்து அதிக தீவனம், நோய் தாக்குதலுக்கு ஆளாகும் மருந்து தேவைப்படும் சீமை ரகங்கள் இன்று நம்மை ஆள்கிறது. ராஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும் அது வெளிப்பட்டது. மாடுகள் அதிகம் இருந்ததால் வெண்ணையும், மோரும், தயிருமாக விற்றுச் செழித்திருக்கின்றது ஊர். 
                                    துபாய் ராஜாவின் பூர்வீக வீடு மாடியிலிருந்து

சிங்கம்பட்டியில் அழகான ஒரு முருகன் கோவில், பின்புறம் தாமிரபரணி ஆறு என்று அமர்க்களமான லொக்கேஷனுக்குக் கூட்டிச் சென்றார் ராஜா. வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தால் இங்கேதான் கூட்டிவந்து பேசிக்கொண்டு இருப்போம் நேரம்போவதே தெரியாதென்று அவர் சொல்லியபோது. வெறும் ஆற்றின் சலசலப்பும், பறவைகளின் ஒலியும் மட்டுமே சூழலாயிருந்த அந்த இடம் ஏறக்குறைய சொர்க்கம்!

                                                             ஜமீன் லச்சினை

கோவிலின் வாயிலில் ஒரு கைகூப்பிய சிலை. அவர்பெயர் தூக்குதுரை என்றார் ராஜா. அவரும் சிங்கம்பட்டி ஜமீன்தான் ஆங்கிலேயரை எதிர்த்தவர், பல மொழிகள் சரளமாய் பேசக்கூடியவர், ஆங்கிலேயரிடம் பிடிபட்ட தனது சகாவை மீட்கச் சென்று கைகலப்பில் ஒரு ஆங்கிலேயரைக் கொலை செய்தபோது ஆற்றில் தொலைத்த தனது கத்தியைத் தவறவிட்டுஅதன் மூலம் அவர்களால் பிடிபட்டு தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டு என்ன நடந்தது என்பதைச் சொல்லியதை அப்படியே கேளுங்கள்! 

“உங்களுக்கு சாவதற்குமுன் எதாவது கடைசி ஆசை இருக்கிறதா?”

“ஆம்”

“என்னவென்று சொல் நிறைவேற்றுகிறேன்”

“உன் பொண்டாட்டி கூட ஒர் இரவு”

அது வேலைக்காவாது என்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்!!

(ஊர்வலம் தொடரும்..)

டிஸ்கி : ஆனது ஆகிப்போச்சு அடுத்த இடுகைல அல்வா கொடுக்கறேன்!! :))


.

21 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான படங்களுடன், அழகான கட்டுரை...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு கட்டுரையும், படங்களும் சொர்க்கத்தின் சோலை, சோலையின் சொர்க்கம்....சூப்பர் மக்கா...

ஆர்வா said...

நேரில் போய் பார்த்த மாதிரியான உணர்வை தருகிறது உங்கள் எழுத்து.. தூக்கிலிடுவதற்கு முன் சொன்ன டயலாக் "நச்"

செ.சரவணக்குமார் said...

சூப்பர் ஷங்கர். அருமையான பதிவு. கூடவே வந்தது மாதிரி இருந்தது(நிஜமாவே).

'பரிவை' சே.குமார் said...

அழகான படங்களுடன் அருமையான பதிவு.

vasu balaji said...

/மஞ்சம்புல் வேய்ந்த ஒரு கூரை போட ஆசை என்ன வெயில் அடித்தாலும் மிகவும் குளிர்ச்சியாக வைக்கும். நான் வசிக்குமிடத்தில் கேட்டபோது அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை./

போன எடத்துல ஒரு ஃபோட்டோ புடிச்சாறது.

/தாமிரபரணி ஆறு என்று அமர்க்களமான லொக்கேஷனுக்குக் கூட்டிச் சென்றார் ராஜா. வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தால் இங்கேதான் கூட்டிவந்து பேசிக்கொண்டு இருப்போம் நேரம்போவதே தெரியாதென்று அவர் சொல்லியபோது. வெறும் ஆற்றின் சலசலப்பும், பறவைகளின் ஒலியும் மட்டுமே சூழலாயிருந்த அந்த இடம் ஏறக்குறைய சொர்க்கம்!/

இதை எங்க கண்ணுல கூட காட்டக் கூடாதா?

/டிஸ்கி : ஆனது ஆகிப்போச்சு அடுத்த இடுகைல அல்வா கொடுக்கறேன்!! :))/

இதுக்கும் மேலையா? இது பொன்மலை அல்வாவ விட மோசமா இருக்கே:))

Unknown said...

நல்லதொரு பயணம்
அருமை

பொன் மாலை பொழுது said...

தெரியாத நிறைய செய்திகள் . நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இன்னமும் நம் தமிழ் நாட்டிலேயே நிறைய இருகிறதே?!
அழகான பதிவு. தொடருங்க.

VISA said...

நான் உங்களுக்கு கமென்ட் போடாம அல்வா கொடுக்குறேங்கறத கமென்ட் போடாம எப்படி சொல்றது.

க ரா said...

நெட் கனக்‌ஷன் சரி ஆய்ருச்சா குருஜீ :)

சாந்தி மாரியப்பன் said...

// மஞ்சம்புல் வேய்ந்த ஒரு கூரை//

கோரப்புல்லும் இதுவும் வெவ்வேறா.. இல்லை ரெண்டும் ஒண்ணா?. ஒரு ஃபோட்டோ எடுத்துருக்கப்டாது???

Chitra said...

அடுத்த முறை ஊர் பக்கம் போகும் போது, பார்க்க வேண்டிய இடங்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகுதே....

கபீஷ் said...

//அதன் சாணியும், கோமியமும் நில வாழ் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு லாயக்கற்றது. நமது பாரம்பரிய திமில் கொண்ட கரவை இனங்கள் வெளி நாட்டில் இன்றும் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டுவருகிறது. // :((
news to me. Thanks for sharing.

உணவு உலகம் said...

அல்வா கொடுக்கவே தினம் அல்வாவா?

உணவு உலகம் said...

டூ லடே! எறும்பு அப்பா, சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்காக இரண்டு நாள் ஆபீசுக்கும், ப்ளாக்கிற்க்கும் லீவு.

Anisha Yunus said...

ahaa...padikka padikka inga vantha pin evlomiss panrennu theriyuthungnnaa.... pch... so beautiful photos. train / bus route, appadiye raja sir veettu adress ellamthanthidunga adutha thadavi use aagum engalukku ... :)

துபாய் ராஜா said...

அருமையான தொகுப்பு. பல்லாயிரம் வருட பழமை, சிறப்பு கொண்ட சிங்கம்பட்டி வரலாற்றை அரிய புகைப்படங்கள், அதிக தகவல்களுடன் எழுதி கொண்டு இருக்கிறேன் . அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனது "சிங்கம்பட்டி சரித்திரம்" படைப்பிற்கு உங்களது இந்த பதிவு ஒரு முன்னுரையாக உள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி.

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் துபாய் ராஜாவிற்கும்.

சாமக்கோடங்கி said...

நானும் அயன் சிங்கம்பட்டிக்கும், ஜமீன் சிங்கப்பட்டிக்கும், மணிமுத்தாறு அணைக்கும், மற்றும் அருவிக்கும் போய் உள்ளேன்.. ஆனால் இந்த அரண்மனையை விட்டு விட்டேனே.. அழகான தகவல்கள் அண்ணே.. அங்கே போன ஒரு உணர்வு..

பாலா said...

//அது வேலைக்காவாது என்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்!//

இட் டிபண்ட்ஸ் யு நோ! லிபரல்ஸ், ஸ்விங்கர்ஸ் மாறி கேள்வி கேட்டவன் இருந்திருந்தா..???

Paleo God said...

அனைவருக்கும் மிக்க நன்றி. :))

@ வானம்பாடிகள் - சார் கண்டிப்பா ரெண்டையும் போட்டோ எடுத்துப் போடறேன் :))

@ உணவு உலகம் - மிக்க நன்றி சார் :))

@ துபாய் ராஜா - சீக்கிறம் எழுதுங்க :)

@ சுண்டெலி - யெஸ் இட் டிபெண்ட்ஸ், ஐ மீன் த கொஸ்டின்! :))