பலா பட்டறை: வெண்ணை (0.16 தே(ரா)ர்தல் - சவண்டி ராஜா)

வெண்ணை (0.16 தே(ரா)ர்தல் - சவண்டி ராஜா)


.


*அருமையான மனுஷன்*
என்னா ஒரு நாலஞ்சு கொலை பண்ணி இருக்காரு அவ்ளோதான்

*பெண்ணினத்தையே பெருமைப் படுத்தியவர்*
ஒண்ணு ரெண்டுபேர கற்பழிச்சிருக்கலாம் இதெல்லாம் ஒரு விஷயமா?

*கறை படியாத கைகளுக்குச் சொந்தக்காரர்*
அட எவ்ளோவேணா அடிச்சிருக்கட்டும் உன் பாக்கெட்லேர்ந்தா துட்டு எடுத்தாரு?

*அரசு நிலத்தைக் கொள்ளை அடித்தார்*
உன் பத்திரம், பத்திரம்.

*ஏங்க நீங்களாவது நல்லாட்சி தருவீங்களா?*
அவங்க கொடுத்தாங்களா? அவங்கள நீ கேட்டியா?

அரிசி ஒரு ரூவாய்க்கு இந்த உலகத்துல

ஏங்க அரிசி மட்டும் வெச்சிக்கிட்டு என்னா செய்யறது பருப்பு, எண்ணெய் அட கீரை கட்டு என்னா விலெ விக்குது?

இதெல்லாம் எப்ப? எனக்குத் தெரியாதே? ஏன் நீங்க போராட்டம் நடத்தல?

???

அரசாங்க ஊழியர்களுக்கு எவ்ளோ நன்மை செஞ்சிருக்கோம் தெரியுமா?

ஏங்க அங்க லஞ்சம் கொடுக்காம காரியம் ஆவுற துறைங்க கம்மி அவங்களுக்குப் போய்

என்னது லஞ்சமா? நீங்க ஏன்யா கொடுத்தீங்க? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கறதுதானே?

எதுக்கு?? மின்சார சுடுகாட்டுல லஞ்சம் கொடுக்கவா?

எத்துனை லச்சம் மக்கள் இலவச டிவியால் பொது அறிவு வளர்கிறார்கள்  தெரியுமா?

எங்களுக்கு இன்னும் டிவியே தரலைங்க.

போய் போராட்டம் நடத்துங்கப்பா! இங்க ஏன் வந்து கேக்கறீங்க.


அர்ஜண்ட்டுக்கு ஒண்ணுக்கு வந்தா போறதுக்கு அண்ணா சாலை தலைமைச் செயலகத்துல ஆரம்பிச்சி கத்திப்பாரா வரைக்கும் எத்தனை பொதுக் கழிப்பிடம் இருக்குங்க எஜமான்??

எத்தினி டாஸ்மாக்குன்னு கேளுய்யா? அட இந்த தேர்தல்ல இன்னும் எவ்ளோ இலவசம் தரப்போறோம் தெரியுமா? ஒண்ணுக்குப்போறதெல்லாம் ஒரு விஷயமாய்யா?


கிட்டத்தட்ட இப்படியெல்லாம்தான் வரப்போகின்ற தேர்தலைப் பற்றி நியாயம் கற்பிக்கப் படுகிறது! எங்கே செல்கிறோம்/செலுத்தப் படுகிறோம் என்று புரிகிறதா என்று தெரியவில்லை. 



எந்த அரசியல்/கட்சி வியாதிகளுக்கும் நான் சப்போர்ட் இல்லை. தொலை நோக்குப் பார்வை இல்லாத, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத, இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் அடிமைப் படுத்தி மக்களை திட்டமிட்டு கூட்டுக் களவாணியாக்கும் இந்த வன்செயல் அரசியல் மொழி விளையாட்டு, ஊதிய உயர்வு, ஜாதி போற்றுதல், பொய்யுரைகள் என்று எக்குத்தப்பாக மக்களை முட்டாள்களாக்குகிறது:(( 

யார் வந்தாலும் மக்களுக்கு நல்ல குடி தண்ணீர், சாலை வசதி, கல்வி, சுகாதாரம், வீடு, விவசாய மேம்பாடு, பாதுகாப்பு, மின்சாரம், தொழில் செய்ய ஊக்குவிக்கும் போக்கு, வனப் பாதுகாப்பு, இயற்கை மேம்பாடு, மாசுக் கட்டுப்பாடு, கலப்படப் பொருட்கள் தடை, குழந்தைகள் பாதுகாப்பு, முதியோருக்கான மரியாதை/பாதுகாப்பு. மழை நீர் சேமிப்பின் அவசியம், மரம் வளர்ப்பு, ஏரி, குளம், ஆறு நீர் நிலைகளைக் காத்தல், கழிவு நீர் அகற்றம்/சுத்திகரிப்பு, லஞ்சத்தை அடியோடு வேரறுத்தல், கேணத்தனமாக மக்களை முட்டாள்களாக்கும் சீரியல்கள் தடை, நுகர்வோர் பாதுகாப்பு, அவரவர் மத நம்பிக்கைகளுக்கான் மரியாதை, தரமான ரேஷன் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, சிறப்பான போக்குவரத்து வசதிகள், புற நகர் விரிவாக்கம், கிராமப்புர மேம்பாடு, அனைத்து தர மக்களுக்கும் அடிப்படை வசதிகள் போன்றவைகளைத் தர முன் வரப்போவதில்லை. ஏன்? 

இத்துனை வருடங்களாக இதைக்கூடச் செய்ய முடியாதவரெல்லாம் ஒரு தலைவரா? 

இதெல்லாம் கொடுப்பதற்கு செவ்வாய் கிரகத்தை விற்று ஒன்றும் பணம் புரட்டத் தேவையில்லை. இவையெல்லாம் மக்களுக்குக் கிடைப்பின் அவர்கள் ஆர அமர யோசித்து சிறப்பானவர்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்ற ஒரே பயம்தான். இதற்கு ஒரே வழி ஓடவிடுவது தண்ணீருக்காக லாரியின் பின்னே ஓடுவதிலிருந்து, ரேஷன் அட்டை மாற்றுவதுமுதல் ஓடிக்கொண்டே இருக்கிறான் தமிழன். அதுவும் லஞ்சத்தால் போடப்பட்ட குண்டும் குழியுமான சாலைகளில் முதுகெலும்பு ஒடிந்து! அவனுக்குக் கிடைக்கும் கொஞ்ச நேர அவகாசத்திலும் தலைவிரிகோல சீரியல்களும் ,டாஸ்மாக்கும், தடைபட்ட மின்சாரமும், தேனொழுகும் இலவச அறிவிப்புகள் என மரத்துப்போகும் ஊசிகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

இலவசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களே..

இங்கே யாரும் இலவசத்துக்காக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கவில்லை! எந்த மானியமும் இல்லாமல் விலை நிர்ணயம் செய்துதான் பாருங்களேன். அப்பொழுதுதானே தெரியும் உங்கள் நல்லாட்சியின் லட்சணங்கள்! 

எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீன அரசியல் விளையாட்டுகளால் தமிழகத்தை அரித்துக்கொண்டிருக்கும் புற்று நோய் இன்னும் என்னென்ன காவுகளைத் தர காத்துக்கொண்டிருக்கிறதோ????


டிஸ்கி: 

01)இன்றைக்கு இந்தியா - ஆஸ்திரேலியா குவாட்டர் பைனல் மதியம் 2.30  
      மணிக்கு, காணத்தவறாதீர்கள். 

02) நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

.

9 comments:

vasu balaji said...

டிஸ்கி சூப்பர்:)

ஷர்புதீன் said...

ஒண்ணும் பண்ண முடியாது, தல

உணவு உலகம் said...

//*அருமையான மனுஷன்*
என்னா ஒரு நாலஞ்சு கொலை பண்ணி இருக்காரு அவ்ளோதான்//
என்ன லேசா சொல்லீட்டீங்க!

Chitra said...

எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீன அரசியல் விளையாட்டுகளால் தமிழகத்தை அரித்துக்கொண்டிருக்கும் புற்று நோய் இன்னும் என்னென்ன காவுகளைத் தர காத்துக்கொண்டிருக்கிறதோ????


........அதை பத்தி யாருக்கு கவலை? கிரிக்கெட் ஸ்கோர் என்ன?

பனித்துளி சங்கர் said...

////எத்துனை லச்சம் மக்கள் இலவச டிவியால் பொது அறிவு வளர்கிறார்கள் தெரியுமா?


எங்களுக்கு இன்னும் டிவியே தரலைங்க.
/////////////

சிரிப்பதா ,சிந்திப்பதா என்று தெரியவே இல்லை தல . எப்பொழுதுதான் மாறப்போகிறதோ இலவசத்திற்காக கையேந்தும் நமது சமுதாயம் !

செ.சரவணக்குமார் said...

டிஸ்கி தாங்க ரொம்பப் பிடிச்சிருக்கு.

ரோஸ்விக் said...

அண்ணே இந்த ஒரு பதிவுக்காகவே பிலிப்பைன்-ல இருந்து 10 பெண்களை அழைத்துவந்து உங்களுக்கு முத்தம் இலவசமாக வழங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன் :-)

சாமக்கோடங்கி said...

//என்னது லஞ்சமா? நீங்க ஏன்யா கொடுத்தீங்க? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கறதுதானே?

எதுக்கு?? மின்சார சுடுகாட்டுல லஞ்சம் கொடுக்கவா?//

விசில் சத்தத்துடன் கூடிய கைதட்டல் அண்ணனின் வரிகளுக்காக...

Paleo God said...

அனைவருக்கும் மிக்க நன்றி! :))