பலா பட்டறை: அல்வாவோட ராவுகள்!

அல்வாவோட ராவுகள்!


.

திரு நெல்வேலியில் பதிவர் உணவு உலகம் திரு.சங்கர லிங்கம் அவர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். நெல்லையில் உணவு சுகாதாரத்திற்காக சிறப்பான பல முயற்சிகள், அதிரடி ரெய்டுகள் போன்றவற்றால் முடிந்த அளவு சுகாதாரமான உணவு பொதுமக்களுக்குக் கிடைக்க ஆவன செய்துகொண்டு இருக்கும் அதிகாரியான அவர் உணவு கலப்படம் பற்றி விளக்கிய பல செய்திகள் பகீர் ரகம். 

சாதாரண கரும்புச்சாற்றில் கூட சாக்ரீன் கலப்பு, உபயோகித்த டீத்தூளை மறுசுழற்சி செய்து (இதுதான் சைனா டீ போல!)மக்களுக்கு கொடுப்பது. பழங்கள் பழுக்க வைக்க கார்பைட் கற்கள், அழுகிய காய்கறிகள் சல்லிசாக வாங்கி ஓட்டல்களில் பதார்த்தமாக்குவது, அதேபோன்று கெட்டுப்போன பழங்களை வாங்கி ஜீஸ் போட்டுக் கொடுப்பது, முக்கியமாக சுகாதாரமின்றித் தயாரிக்கப்படும் திடீர் இட்லி, தோசை மாவு இன்னும் வியாபாரிகளின் பணத்தாசைக்காக மக்களை நோயாளிகளாக்கும் கொடூரங்கள் கேள்விப்படும்போது என்னமாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் என்ற சலிப்பே மிஞ்சியது. சென்னையிலும் இது போன்ற அதிகாரிகளும் இருக்கிறார்கள் ஆனா பரவலாக ஏதும் செய்திகளைக் காணோம். ஹும்ம் என்ன செய்ய 15000 கோடி டர்ன் ஓவர் கும்பெனி டாஸ்மாக்கிலேயே சுகாதாரம் தாரைவார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் என்னத்தைச் சொல்ல?

சமீபத்தில் தமிழக அரசு நடத்திய சென்னை சுற்றுலாப் பொருட்காட்சியில் ஒரு லிட்டர் மினரல் தண்ணீர் பாட்டில் விலை ரூ.22/- யார் கேட்பது? மக்கள் நாமம் வாழ்க!

சரி அல்வா விஷயத்திற்கு வருவோம்!

திரு நெல்வேலியில் நாங்கள்தான் ஒரிஜினல் என்று அக்மார்க் டூப்ளிகேட் அல்வாக்கள் நிறையக் கிடைக்கின்றது. இரண்டு கடைகள் தவிர்த்து சில வித்தியாசங்களுடன் அதே பெயரில் விற்கப்படும் போலி அல்வாக்கள் அதிகம். சரி ஒரிஜினல் அல்வா என்னவிதமாகத் தயாரிக்கப் படுகிறது?
                                                      அல்வா கிண்டப் படும் காட்சி!                        

சம்பாகோதுமை, தாமிரபரணித் தண்ணீர், கைப் பக்குவம் இதுதான் ஃபார்முலா. சம்பாகோதுமையில் பாலெடுத்து, புளிக்கவைத்து, சர்க்கரை தண்ணீர் கலந்து, சற்றேறக்குறைய 23 மணி நேரங்கள் ஊறவைத்து, 1 மணி நேரம் அடுப்பில் கிண்டி கடைசியில் முந்திரி தூவி இறக்கி மறு நாள் விற்பனை செய்கிறார்கள். 
                                             தயாரானவுடன் அல்வா சுடச்சுட ரெடி
                                                           




கைகளால் கிண்டாமல் மிஷின் வைத்து செய்வது ஒரு முறை, பாரம்பரிய முறைப்படி கைகளாலும் விறகடுப்பாலும் செய்வது மற்றொறு முறை. சம்பா கோதுமை விலை அதிகம் என்பதால் சாதா கோதுமையில் கலர் எஸென்ஸ் சேர்த்து ஒரிஜினல் போல பாவ்லாவில் விற்பது பரவாலான முறை. க்ரைண்டர் போல ஒன்றில் கீழே பர்னர்கள் வைத்து மிதமான தீயில் கிண்டிக்கொண்டே இருப்பது போன்ற வடிவமைப்பில் மிஷினில் கைப் பக்குவ ரேஞ்சிற்கு டெக்னாலஜி தூள் பறக்கிறது.:))

டிஸ்கி: தலைப்பு விளக்கம் நைட்ல அல்வா சாப்ட்டா கிட்னிக்கு நல்லதாம்!

மீண்டும் சந்திப்போம்!

20 comments:

Jackiesekar said...

தலைப்பு செமை.. பரங்கிமலை ஜோதி நினைப்புக்கு வேற வந்துச்சி

இரகுராமன் said...

//சமீபத்தில் தமிழக அரசு நடத்திய சென்னை சுற்றுலாப் பொருட்காட்சியில் ஒரு லிட்டர் மினரல் தண்ணீர் பாட்டில் விலை ரூ.22/- யார் கேட்பது? மக்கள் நாமம் வாழ்க//

//அல்வாவோட ராவுகள்//

நல்லா வக்கிறீங்க டைட்டில் :P :P

எறும்பு said...

//முகியமாக //

// நிறையக் கிடிக்கின்றது//

ராத்திரி நிறைய அல்வா சாப்பிட்ட மாதிரி தெரியுது :))

sakthi said...

தலைப்பு செம ::))

'பரிவை' சே.குமார் said...

Title Super... Alwa pakkumpothey aval varukirathu...

யுவா said...

'மேலே' உள்ளவர்கள் சொன்னமாதிரி, சட்டென்று க்ளிக்கிட்டு பதிவைப் படிக்க தூண்டும் தலைப்பு. ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்ம்... அல்வா தகவல் சூப்பர். வீடியோ எனக்கு லோடாகல.

தினேஷ் ராம் said...

Papasha, கிண்டிட்டீங்க மன்னிக்கணும் கலக்கிட்டீங்க அல்லது ஏதோ பண்ணிட்டீங்க.

மொத்தத்தில் அருமை. :D

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

kalakkalaana raavukal...

உணவு உலகம் said...

ஆனா, நீங்க அல்வா சாப்பிட்ட இரவு ரயில்ல போய்க்கிட்டு இருந்தீங்களே?

Unknown said...

//தமிழக அரசு நடத்திய சென்னை சுற்றுலாப் பொருட்காட்சியில் ஒரு லிட்டர் மினரல் தண்ணீர் பாட்டில் விலை ரூ.22/- யார் கேட்பது? மக்கள் நாமம் வாழ்க!//

அண்ணே பதில் மரியாதை...

ஜோதிஜி said...

அல்வாப் பற்றி படம் வரைந்து பாகம் குறித்த ஷங்கரை என்ன செய்வது என்று குழந்தைகளிடம் கேட்டுச் சொல்கின்றேன்(?)

Chitra said...

சூடான நெல்லை அல்வா, வாழை இலையில் வைத்து சாப்பிடும் நாளை நினைச்சுப் பார்க்க வச்சுட்டீங்களே!

நட்புடன் ஜமால் said...

சாதா கோதுமையில் கலர் எஸென்ஸ் சேர்த்து ஒரிஜினல் போல பாவ்லாவில் விற்பது பரவாலான முறை

:P

நசரேயன் said...

அடுத்த முறை தலைப்பு வைக்க கஷ்டமா இருந்தா சொல்லி அனுப்புறேன்

சுரேகா.. said...

நல்லா கிண்டியிருக்கீங்க! ஸாரி...சொல்லியிருக்கீங்க! :)

வாட்டர் பாட்டில் மட்டுமில்லை...இன்னும் நிறைய இருக்கு!

Anisha Yunus said...

ippavum alvaa kodukkaliyengnnaa?

பாலா said...

கமெண்ட் க்ளேர் அடிக்குதே..? வொய் மச்சி?

துபாய் ராஜா said...

அடுத்த தடவை நெல்லை வரும் / வந்து போகும்போது " அரிவாள் கூட இரவுகள் " பதிவு எழுதற மாதிரி பண்ணிடுவோம்.

உணவு உலகம் said...

பின்ன, என்ன ராஜா,
நெல்லை, அல்வாவிற்கு மட்டுமல்ல, அரிவாளுக்கும் பிரசித்தி பெற்றதுதானே!

Paleo God said...

வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி! :))