பலா பட்டறை: பச்சைக் கலரு ஜிங்குச்சா!!

பச்சைக் கலரு ஜிங்குச்சா!!



ஜெமினி மேம்பாலத்தின் அருகில் இருக்கும் அமெரிக்கன் கான்ஸுலேட் உள்ளே போகும்போதெல்லாம் அதிசயப்பட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடுப்புச் சுவர் தாண்டி புகையும் பரபரப்புமான வாகனப் பேரிரைச்சலில் அமைதியான பசுமையான ஒரு சூழ் நிலை அங்கே நிலவும். அமெரிக்கா காரன் மூளையே மூளைதான் என்று நினைத்ததுண்டு. 

எதிரிலேயே ட்ரைவ் இன் ஹோட்டல் இருந்தாலும் பல்வேறு மார்கெட்டிங் மக்களின் சலசலப்பான் நிறைந்து வழியும் அந்த இடம் பெரிய மரங்களுடன் நிறைய நிழல்களுடன் சூழ் நிலை ரசிக்க இயலாது உண்வு ருசிக்காகவும் ஒரு சந்திப்பின் இடமாகவே நின்றுவிட்டது. உட்லண்ஸ் மூடப்பட்டு அங்கே பூங்கா ஒன்று வரப்போகிறது என்று கேள்விப்பட்டதும் வேலை நிமித்தம் உட்லன்ஸில் பல சந்திப்புகளை நிகழ்த்திய என்னைப் போன்றவர்களுக்கு அது பேரதிர்ச்சிதான். குறிப்பாக நிறைய மார்கெட்டிங் மக்களுக்கு அது மிக முக்கியமான மீட்டிங் பாயிண்ட். உட்லண்ஸ் பூட்டியபிறகு அந்த இடத்தையே நான் பார்க்காமல் கடந்துவிடுவேன். ஜனவரியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோதுதான் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்து செம்மொழிப் பூங்காவென ஆகியிருப்பது கண்டு சரி உள்ளே போய் பார்த்துவிடலாமென்று சென்றால் ஒரு பெரிய ஆச்சர்யம். மிக அற்புதமான அழகான இடமாக அது மாறி இருந்ததுதான். இம்மாதிரியான ஒரு இடத்தில் இப்படி ஒரு பூங்கா என்பது பெரிய விஷயம். மெதுவாய் ஒரு நடை செல்லலாம். அமைதியாய் ஒரு புத்தகம் படிக்கலாம், வெறுமனே மனிதர்களையோ செடிகளையோ பார்த்துக்கொண்டிருக்கலாம் அவ்வளவு அழகான ஒரு சூழ் நிலை.





 ஆனாலும் பெரிய குறைகள் இருக்கத்தான் செய்கிறது, எல்லா செடி, மர வகைகளுக்கு பெயர் பலகைகள் எழுதப் படவில்லை. கள்ளிச் செடிகளில் ஐ லவ் யூ என்று எழுதுபவர்களுக்கு 6 மாத கடும் காவல் தண்டனையே தரலாம், வாசனைச் செடிகளைக் கொண்ட ஒரு தோட்டத்தில் என்ன என்ன செடிகள் இருக்கின்றது என்பதே தெரியவில்லை. வெளி நாட்டு அழகு செடிகளோடு நமது பாரம்பர்ய மூலிகைச் செடிகளும் வளர்க்கலாம், குறைந்த பட்சம் அரசாங்கமே அங்கே ஒரு நர்சரி வைத்து செடிகளை விற்பனை செய்யலாம். மக்களுக்கு இயற்கை மேலும் மரங்களின் மேலும் ஒரு ப்ரேமை உண்டாகும். நல்லதொரு மழை நாளில் அங்கே இருக்க ஆவல்:)) நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக சென்று வாருங்கள். மேலதிக புகைப் படங்கள் நண்பர் சுகுமார் சுவாமி நாதனின் வலை மனையில்.

--

சமீபத்தில் கோவை சென்ற போது ஈஷா யோக மையம்/தியான லிங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான சூழலில் அமைந்த இந்த இடத்தில் லிங்க பைரவி என்ற அம்மனையும், 20 அடி ஆழத்திற்கு மேல் உள்ள சதுர வடிவ கிணறு போன்ற அமைப்பில் ஒரு பாதரச லிங்கத்தையும், தூண்கள் இல்லாத மிகப் பெரிய கூரையின் நடுவில் தியான லிங்கத்தையும் அமைத்திருக்கிறார்கள். மிக அமைதியான சூழ் நிலை, முக்கியமாக தியான லிங்க அமைப்பிற்குள் எவ்வளவு சிறிய சப்தமும் மிகப் பெரிய ஒலி அதிர்வைத் தருகிறது. அந்த கட்டிட அமைப்பு மிக அற்புதம். 




மிகப் பெரிய காளையின் சிலை ஒன்றும் வைத்திருக்கிறார்கள். பாரம்பரியக் கோவில்கள் அமைப்பு ஒரு வகை என்றால் இது போன்ற கார்பொரேட் கோவில்களின் அமைப்பு வேறு விதம். கண்களின் காட்சியே கற்பனையின் உணவென்பதால் எல்லாம் மாயை உள்ளே சென்று ஆக்கிரமித்து பிரமிப்பைத் தந்த மாயையே உன்னதமென்கிறது மனது. அந்த வகையில் இந்த இடம் மீண்டும் வரத்தூண்டும் ஒரு இடம் :)) குறிப்பிட்ட மதமில்லாது யார் வேண்டுமானாலும் வரலாம் உணரலாம் என்று இங்கே அறிவித்திருப்பதால் கோவை செல்லும்போது ஒரு முறை அந்த சூழலை அனுபவித்து விட்டு வாருங்கள். 

--

கோவை சென்றபோது வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கும் சென்று சில செடிகள் விதைகள் வாங்கி வந்தேன். மிகப் பெரிய பல ஏக்கர் பரந்த இடத்தில் சிறப்பான பராமரிப்புடன் இருக்கிறது. திசு வளர்ப்பிலான வாழைக் கன்றுகள் விற்பனை செய்கிறார்கள். வாழைத் தோட்டங்களில் மிகச் சிறப்பாக விளையும் வாழையின் கன்றிலிருந்து திசு வளர்ப்பு மூலம் நூற்றுக்கணக்கான கன்றுகள் டூப்ளிகேட் செய்யப் படுகின்றன இத்தனை சீப்பு கேரண்டி என்று சொல்லி விற்கப் படுகிறது. தென்னை போன்ற சில மர வகைகள் தவிர்த்து பிறவற்றை இது போன்று காப்பி செய்ய இயலும் என்று ஒரு தனியார் திசு ஆராய்ச்சி கழக உரிமையாளரிடம் பேசியபோது தெரிந்துகொண்டேன். அவர்களின் கன்றுகளை வாங்கி பெரிய குலைகள் தள்ளிய மரங்களுடன் விவசாயிகள் நிற்கும் புகைப்படங்களைக் காண்பித்தார். எல்லாம் இயற்கை விவசாயமா என்றேன், நோ நோ பூச்சி மருந்துதான் என்றார் :((

--

வால்பையன் அருண் நடத்தும் ஹோட்டலிலுக்குச் சென்று அவரையும் பிலாலையும் சந்தித்தேன். திருப்பூரில் ஜோதிஜி அவர்களைச் சந்திக்க முயன்றும் என்னுடைய மகனின் உடல் நிலை காரணம் சந்திக்க இயலாது போய்விட்டது, குடும்ப பாரங்கள் இல்லாது கோவை, திருப்பூர், ஈரோடு ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும். :))

--

வீட்டில் காய்கறித்தோட்டம் போடுவதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆறு பேர் குடும்பத்திற்கு 4 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ அவரைக்காய், 2 கிலோ பாவக்காய், 6 கிலோ சேப்பங்கிழங்கு, 1 கிலோ முள்ளங்கி, முள்ளு கத்தரிக்காய், எண்ணெய் கத்தரிக்காய், சிகப்பு தண்டு கீரை, அரைக் கீரை  கிடைத்தால் என்ன செய்வது? :)) 
                                                          முதல் அறுவடை!

பரீட்சார்த்த முறையில் பீட்ரூட்டும் முட்டைக் கோஸும் ( செம்மொழிப் பூங்காவிலேயே விளையிதுங்க!!) போட்டிருக்கிறேன். பார்க்கலாம்.:))


23 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஈஷா யோக மையம்/தியான லிங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது//

என் வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டு ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டீங்களே...

அடுத்த முறை வரும் போது சொல்லுங்க....

சக்தி கல்வி மையம் said...

உங்க பதிவை படிக்கும் போது பூங்காவினுள் சென்றுவந்த உணர்வு தருகிறது.. நன்றி...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

Paleo God said...

@ சங்கவி அப்படியா தல! :( அடுத்த முறை கண்டிப்பா கால் பண்றேன்! :)

@வேடந்தாங்கல் - கருன் : வாங்க! பேரே மயக்குதே! :))

vasu balaji said...

ம்கும். உங்க வீட்டு பக்கத்துல திருவள்ளூர் போற வழியிலயும் ஒரு தியான லிங்கம் இப்படி பெருசா இதே எஃபெக்டோட இருக்கறது தெரியாதே:))
/4 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ அவரைக்காய், 2 கிலோ பாவக்காய், 6 கிலோ சேப்பங்கிழங்கு, 1 கிலோ முள்ளங்கி, முள்ளு கத்தரிக்காய், எண்ணெய் கத்தரிக்காய், சிகப்பு தண்டு கீரை, அரைக் கீரை கிடைத்தால் என்ன செய்வது? :)) /
பதிவர் சந்தை ஆரம்பிச்சிடுங்க பாஸ்:))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வான்ம்பாடிகள்
பதிவர் சந்தை ஆரம்பிச்சிடுங்க பாஸ்:))))
//

நக்கல்ண்ணே உங்களுக்கு..

ஹா.ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வால்பையனின் அருண் நடத்தும் ஹோட்டலிலுக்குச் சென்று அவரையும் பிலாலையும் சந்தித்தேன்.
//

சாப்பாடி எப்படி இருந்துச்சு பாஸ்.. அதான் முக்கியம்...ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சங்கவி said...

//ஈஷா யோக மையம்/தியான லிங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது//

என் வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டு ஒரு வார்த்தை சொல்லாம போயிட்டீங்களே...
//

இன்னா சார் அநியாயமா கீது.. நானும் அங்கனதான் இருந்தேன்...!!

Paleo God said...

பதிவர் சந்தையா?? சூப்பர் ஐடிய சார்! :))

@ பட்டா: சாப்டலைங்க :( அடுத்த முறை ரவுண்டு கட்டவேண்டியதுதான் :))

settaikkaran said...

நீண்ட நாட்களாக பார்க்க விரும்பும் ஒரு இடம் - செம்மொழிப் பூங்கா! ஆவல் அதிகரித்து விட்டது. :-)

MANO நாஞ்சில் மனோ said...

பசுமை பசுமை உங்க எழுத்தும் படங்களும்...

க ரா said...

நீங்க கடைசியா சொல்லிருக்கற மேட்டர்தான் உங்க மேல பொறாமய வரவழைக்குது குருஜீ... இன்னும் இருக்கன்குடி மாரியம்ம்ன் பத்தி நீங்க எழுதுல.. அதுக்குள்ள அத ஸ்கிப் பன்னிட்டு கொங்கு நாட்டு சைடு ஒடிட்டீங்க...

ஈரோடு கதிர் said...

ஈரோடு வாங்க ரவுண்ட் அடிக்கலாம் :)))

Chitra said...

நெல்லை அல்வா சாப்பிட்ட பின், பதிவுகள் அடிக்கடி எழுத ஆரம்பித்து இருக்கீங்க... சூப்பரு!

Chitra said...

Fresh vegetables - பக்கத்து வீடுகளில், பண்ட மாற்று முறைக்கு வழி இல்லையாங்க?

மரா said...

நல்லா ஊர் ஊரா சுத்துங்க. போன மாசம் திருநெல்வேலி, இந்த மாசம் கோவை, அடுத்டு எங்க ராசா ? நப நப :-)

சாந்தி மாரியப்பன் said...

//வீட்டில் காய்கறித்தோட்டம் போடுவதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆறு பேர் குடும்பத்திற்கு 4 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ அவரைக்காய், 2 கிலோ பாவக்காய், 6 கிலோ சேப்பங்கிழங்கு, 1 கிலோ முள்ளங்கி, முள்ளு கத்தரிக்காய், எண்ணெய் கத்தரிக்காய், சிகப்பு தண்டு கீரை, அரைக் கீரை கிடைத்தால் என்ன செய்வது?//

ஜூப்பரு..

ஹேமா said...

வீட்டுத் தோட்டம் செய்வதில் இப்படி ஒரு கஸ்டம் இருக்கிறதோ.என் அப்பா சொல்வதையும் கேட்டிருக்கிறேன் !

நட்புடன் ஜமால் said...

வீட்டில் காய்கறித்தோட்டம

Interesting

Paleo God said...

சேட்டைக்காரன்: கண்டிப்பா போய் பாருங்க :)

மனோ : நன்றிங்க :)

இராமசாமி: இருக்கன்குடி எழுதிடறேன் (கதையா!) :))

கதிர்: கண்டிப்பாங்க :))

சித்ரா: ஆமாங்க :)) பண்டமாற்று முறையெல்லாம் இல்லீங்க அக்கம் பக்கத்துல ஃப்ரீயா கொடுத்துடவேண்டியதுதான்! :))

மரா: அடுத்து பாம்பே & அந்தமான்! :))

அமைதிச்சாரல்: நன்றிங்க! :))

ஹேமா: ஆமாங்க அதுலயும் ஒரு கணக்கு வெச்சி வெளெச்சா சரியா இருக்கும்னு நினெக்கிறேன். :))

ஜமால்: சவுக்கியமா தல! :))

டக்கால்டி said...

Pagirvukku nandri

உணவு உலகம் said...

பச்சையில் ஆரம்பித்து,பகிர்வில் முடிச்சுடீங்களே!அசத்தல். தொடரட்டும் உங்கள் பயணம்.

ஜோதிஜி said...

மின் அஞ்சலில் சேமித்து வைத்து இப்போது தான் உள்ளே வர முடிந்தது. எனக்கு என்ன ஆச்சரியம் வந்த இடத்தில் இத்தனை அவசரம் அவஸ்த்தைகளுக்கு மத்தியில் இத்தனை விசயங்களா?

கெட்டீடீடீ தானுப்பு நீங்க.

குழந்தைகள் தான் அதிகமாக எதிர்பார்த்து கேட்டார்கள்.

Paleo God said...

@டகால்டி: நன்றிங்க :))
@FOOD : நன்றிங்க :))

@ஜோ: மன்னிக்கனும். அடுத்தமுறை சந்திப்பு உறுதி! :)