பலா பட்டறை: கைப்புள்ள.. (சுமாரான சவால் சிறுகதை)

கைப்புள்ள.. (சுமாரான சவால் சிறுகதை)


மெதுவாக ஆழ இழுத்துப் பற்றவைத்த சிகரெட்டின் புகை உள்ளே நுழைந்து ஒரு தள்ளாட்ட மெஸ்ஸேஜை மூளைக்கு அனுப்பியது. ஒரு மாதத்திற்கும் மேலாக சிகரெட் பிடிக்காமல் இருந்தது காரணமா?
.
ச்சே.., இதுவல்ல முக்கியம். மீண்டும் நேற்று இரவெல்லாம் படித்ததை நினைவுக்குக் கொண்டுவந்தேன். ம்ஹும்ம் ஒரு இழவும் கோர்வையாக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பேசாமல் விவசாயமே பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அவனவன் அமெரிக்கா சம்பளத்தையெல்லாம் விட்டுவிட்டு ஆடும் மாடும் வளர்க்க ப்ரோஜெக்ட்டோடு அலைகிறார்களாம். அய்யோ பாழாய்ப்போன நான் படித்ததெல்லாம் தவிர மற்றதெல்லாம் மண்டைக்குள் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறது?
.
கடைசி இழுப்பை சூடாக உதடு வேக அடித்துவிட்டு, எக்ஸாம் ஹாலில் முதலாவதாக நுழைந்தேன். காலியாக இருந்த ஹாலின் ஜன்னலோரத்தில் வெவ்வேறு நிறங்களில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த காகிதப்பூக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது என் டெஸ்கின் அடியிலிருந்து மொபைல் போன் சத்தம் கேட்டது.
.
என்ன இது? யாருடையது இது? இங்கே எப்படி வந்தது? ஒரு எழவும் புரியாமல், போனை ஆன் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசித்த வேளையில் ..
திடீரென்று 4 பேர் உள்ளே நுழைந்து தாங்க் காட்.. என்றவாறே
”பாஸ் இது எங்க போன் தான். காலைல ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கும்போது மறந்து விட்டுட்டுப் போயிட்டோம்.” என்று சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.
.
படம் பேர் என்ன நண்பா?
.
”கைப்புள்ள..”
.
ஹும்ம் பேசாமல் விஸ்காமே எடுத்திருக்கலாமோ? என்று மீண்டும் மனசு விவசாயத்திலிருந்து சினிமாவிற்குத் தாவியது. சம்பாத்தியம் தாண்டி ஏதோ ஒரு அடையாளம் வேண்டியே நான் எனக்குள் அலைகழிகிறேன் என்று என் மேலேயே வெறுப்புவந்தது. மீண்டும் காகிதப் பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெறும் நிறத்தை மட்டும் கொண்டு வாசமுமில்லாமல் இருக்கும் இந்தச் செடி ஏன் முட்களைக் கொண்டு தன்னைக் காத்துக்கொள்கிறது என்று கேள்வி எழுந்தது.
.
ஒவ்வொருவராக எக்ஸாம் ஹால் நிரம்பத்துவங்கிய நேரம்..
.
எக்ஸ்கியூஸ்மி இன்னைக்கு என்ன எக்ஸாம்? என்று அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து என் பக்கத்து பெஞ்சில் உட்கார்ந்த பெண்ணைக் கேட்டேன்.

ஒரு ஏலியனைப் பார்ப்பது போல என்னை அவள் பார்த்தாள். இந்த மாதிரி படிக்கிற பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி செட்டிலாயிடலாமா? என் மனது அடுத்த கிளை தாவத் துவங்கியது!
-@-

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

இந்த மாதிரி படிக்கிற பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி செட்டிலாயிடலாமா? என் மனது அடுத்த கிளை தாவத் துவங்கியது!//

ஹா ஹா ஹா ஹா அப்போ வேலை சொலிக்கு போராமாதிரி இல்லை போல ஹி ஹி...

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
இந்த மாதிரி படிக்கிற பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி செட்டிலாயிடலாமா? என் மனது அடுத்த கிளை தாவத் துவங்கியது!//

ஹா ஹா ஹா ஹா அப்போ வேலை சொலிக்கு போராமாதிரி இல்லை போல ஹி ஹி...
--rePEATU,,,:)

Unknown said...

நல்ல இருக்குனா..
கொஞ்சம் நீண்டு இருக்கலாம்

உணவு உலகம் said...

அழகிய கதைக்களம்.

ஷைலஜா said...

இன்னும் கொஞ்சம் கதையை நீட்டிருக்கலாமே ...கொஞ்சம் புதுமுயற்சி இது நல்லா இருக்கு.