பலா பட்டறை: ஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1

ஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1


ஆண்ட்ராய்ட் செல்பேசிகள்.




ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்? அண்ட்ராய்ட் போன், ஆப்பிள் ஐபோன், விண்டோஸ் போன். இதில் எதை வாங்குவது? 

சரி, முதலில் ஸ்மார்ட் போன் என்றால் என்ன? 

இண்டெர்நெட் வசதி பரவலாக்கப்பட்டபிறகு, செல்பேசிகள் வெறுமனே நீ நல்லா இருக்கியா? நாசமாப் போனியா? என்ற குசலம் விசாரிப்புகளுக்கும், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற அதிமுக்கிய தகவல் பறிமாற்ற எஸ் எம் எஸ் குறுஞ்செய்திகளையும் தாண்டி அருமையான எஃப் எம் ரேடியோவாகவும், எம்பி3 ப்ளேயராகவும் மெதுவாக அடைந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து ஒரேயடியாக, சாட்டிலைட் மேப், அட்டகாசமான ஸ்டில்/வீடியோ கேமரா, ஹை டெபினிஷன் வீடியோ, ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங், நேரடி 3ஜி வீடியோ கான்ப்ரன்ஸ், இண்டெர்நெட் ப்ரவ்ஸிங் என்று உள்ளங்கையளவு கம்ப்யூட்டராகவே ஆகிவிட்டது. இதற்கு ஒரு பெயர் வைக்கவேண்டாமா? அதுதான் ஸ்மார்ட்போன்.

ஆஹா, வந்ததுபார் யுகப்புரட்சி என்று செல்பேசி தயாரிப்பாளர்களும் அடித்து ஆடத்துவங்கினார்கள். ஏற்கனவே கோலோச்சிக்கொண்டிருந்த ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது, தொடுதிரை வசதி, பல விதமான பயனுள்ள அப்ளிகேஷன்கள், செக்யூரிட்டி, வேகம் என்று சவால்விடமுடியாத உச்சத்தில் இருந்தது.

அன்று இந்தியாவில் இண்டு, இடுக்கெல்லாம் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்தது நோக்கியா. அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டமான சிம்பியனில் நோக்கியா என்ன தருகிறதோ அது தரும் விலையில் மக்களும் வாங்கி அதில் என்ன இருக்கிறதோ, அதை சூப்பரோ, சூப்பர் என்று புளகாங்கிதம் அடைந்துகொண்டிருந்த நேரத்தில்தான், ஆண்ட்ராய்ட் என்னும் புதிய ஓப்பன் ஸோர்ஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கூகிளால் அசிர்வதிக்கப்பட்டு  சாம்சங் கம்பெனியால் முன்னெடுக்கப்பட்டு வித விதமான மாடல்களில் ஆப்பிளின் ஐபோன் வசதிகளுக்கிணையாக ஆனால் குறைந்த விலையில் மார்க்கெட்டில் நோக்கியாவையும் அதன் சிம்பியனையும் அடித்து ஆட ஆரம்பித்தது.




ஹெச்டிசி, சோனி, மோட்டரோலா, எல்ஜி போன்ற பிற கம்பெனிகளும் கூடவே சேர்ந்துகொள்ள ஸ்டார்ட் மீஜிக் என்று எங்கு பார்த்தாலும் ஆண்ட்ராய்ட் மாயை. ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால் ஆண்ட்ராய்ட் மூலம் உலகமே உங்கள் கையில் என்னும் அளவிற்கு சற்றொப்ப 5000 ரூபாயிலிருந்து போன்கள் விற்கப்பட ஆரம்பித்ததும், தகத்தகாய 3ஜி சிம்மைப் போட்டுக்கொண்டு மக்கள் இண்ட்டெர்நெட்டில் சீன் போட ஆரம்பித்து இதோ உங்க போன் ஐசிஎஸ்ஸா? ஜெல்லி பீனா என்று கேட்கும் அளவிற்கும், ஐயோ கொல்றாய்ங்க என்று ஆப்பிள் கேஸ் போட்டு சாம்சங்கை கோர்ட்டுக்கு இழுக்கும் அளவிற்கும் ஆண்ட்ராய்ட் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது என்றால் மிகையில்லை என்று எழுதினால் அது க்ளிஷேவாக இருந்தாலும் இதுவே உண்மை.      

சரி சார், எனக்கு நம்பர் போட்டு பச்சை பட்டனை அமுக்கி மிஸ் கால் குடுக்கத் தெரியும், சிகப்பு பட்டனை அமுக்கி காலை கட் செய்யத் தெரியும். ஒன் நியூ மெஸ்ஸேஜை ஓப்பன் பண்ணி 45கோடியே 50 லட்சம் விழுந்த லாட்டரி எஸ் எம் எஸ்ஸை வைத்துக்கொண்டு எங்கே போய் பணம் வாங்குவது என்று குழம்பி குபேரனுக்கு நன்றி சொல்லி யாருக்கும் தெரியாமல் ஐஎஸ்டி போட்டு அந்த நைஜீரியாக்காரனை நம்பத் தெரியும். ப்ளூ டூத் ஆன் பண்ணி அனுஷ்கா போட்டோவை அடுத்தவரிடமிருந்து வாங்கி ஸ்க்ரீன் சேவராக வைத்துக்கொள்ளத் தெரியும், எவண்டி உன்னப் பெத்தான் என்று ரிங் டோன் வைக்கத் தெரியும். பிறகு எதற்கு எனக்கு ஆண்ட்ராய்டும், ஸ்மார்ட் போனும் என்கிறீர்களா? நல்லது இதோடு எஸ்கேப் ஆகி அந்த நைஜீரியா எஸ் எம் எஸ டிலிட் பண்ணிட்டுப் போய் புள்ள குட்டியப் படிக்க வைங்க. 

--

சூப்பரா இருக்கும் சார் ஆண்ட்ராய்டுன்னு சொன்னானேன்னு வித்தவன நம்பி வாங்கினேன், ஒரு இழவும் புரியல, எங்க தொட்டாலும் சிலுத்துக்குது என்று புலம்பும் ஆண்ட்ராய்ட் போனை அது விற்ற பெண் அழகாக இருந்ததிற்காகவோ, கூடவே நான்ஸ்டிக் கடாய் ப்ரீயாகக் குடுத்தார்கள் என்பதற்காகவோ அறியாமல் வாங்கிய ஞானப்பழமா நீங்கள் ? உங்களுக்காகத்தான் சார் இந்த இடுகை, வாங்க எதோ எனக்குத் தெரிஞ்சத உங்களுக்கும் சொல்றேன்.

ஆண்ட்ராய்ட் என்பது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருள். விண்டோஸ் மென்பொருளில் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ்7.  போல இதற்கும் வெர்ஷன்கள் உண்டு. ஆனால் கட்டுப்பாடுகள் இல்லை, அதாவது ஆண்ட்ராய்ட் பற்றிய ஞானம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு அவசியமான ஒரு அப்ளிகேஷனை நீங்களே உருவாக்கி உங்கள் போனில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

ஏப்ரல் 30, 2009 ல் கப் கேக் 1.5 என்ற பெயரில் ஆரம்பித்து , டோனட், எக்லேய்ர், ஜிஞ்சர் ப்ரெட், ஹனிகோம்ப், ஐஸ் க்ரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன்  என்று நாக்கைச் சப்புகொட்டும் பெயர்களை தன்னுடைய ஒவ்வொரு வெர்ஷனுக்கும் கொண்டு பலவிதமான முன்னேற்றங்களுடன் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது ஆண்ட்ராய்ட்.


போன்களின் ஹார்ட்வேரை குறுகக் குறள் போன்று குறுக்கிச் செய்து பல ஜால வித்தைகளை ஏற்ற ஏற்ற இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரும் வெர்ஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது.



8 மெகாபிக்ஸல் கேமரா (பின் பக்கம்) 1.2 மெகாபிக்ஸல் கேமரா (முன்புறம் வீடியோ காலிங்கிற்காக) 5இன்ச் அளவிற்கான கண்ணைப் பறிக்கும் தொடுதிரை (டச் ஸ்க்ரீன்), மெமரி கார்ட் பொருத்தும் வசதி, இரண்டு சிம்கார்டுகள் பயன் படுத்தும் வசதி, ஜிபிஎஸ், அருமையான மைக், தெளிவான ஸ்பீக்கர், ஹெச்டி வீடியோ சினிமாவை தங்கு தடையில்லாமல் பார்க்கும் வசதி, நீங்கள் பேசுவதை அப்படியே புரிந்துகொண்டு திரையில் டைப் பண்ணும் வசதி, ஓரிடத்தில் நீங்கள் எடுத்த போட்டோவை வீடியோவை உடனே யு ட்யூபிலோ, உங்கள் ப்ளாக்கிலோ, ஜி மெயில், கூகிள் ப்ளஸ்ஸிலோ, ட்விட்டரிலோ இன்ன பிற சமூக தளத்திலோ உடனே அப்லோட் செய்யும் வசதி, நாசமா நீ போனியா தெருவாக இருந்தாலும் கூகிள் நேவிகேஷனில் டைப் செய்துவிட்டு காந்தக் கண்ணழகா லெப்ட்ல திரும்பு ரைட்ல திரும்பு என்று அழகாக செல்லுமிடத்திற்கு வழிகாட்டும் மேப் வசதி, தட்காலில் சீட் இருக்கிறதா? இப்பொழுது நான் எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறேன், அல்லது எதிர் பார்க்கும் ரயில் எப்பொழுது வரும், இப்பொழுது எங்கே வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்கள், சச்சின் ரிட்டையர் ஆகிவிட்டாரா என்று உடனே சொல்லும் செய்தித் தளங்கள். அனைத்துக் கிரிக்கெட்டையும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கும் வசதி (ஃப்ரீயாத்தாங்க) தாண்டவம் படம் டிக்கெட்டை ஆண்டவனுக்கு முன்னாடியே ஆன்லைனில் புக் பண்ணி தியேட்டரிலுருந்தே விமர்சனம் எழுதும் வசதி, பேஸ் புக்கில் எத்தனை பேர் நம்மை லைக் போட்டு ஹீரோ ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதி, செந்தமிழில் வணக்கம் நலமா இனிய விடுமுறை நாள் வாழ்த்துகள் என்று விநாயக சதுர்த்திக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, இணையம் துணை கொண்டே உலகெங்கும் இருக்கும் நண்பர்களுடன் இலவசமாகப் பேசும் வசதி, உங்கள் ஏரியாவில் இன்றைக்கு எவ்வளவு வெயில் அளவு, நாளைக்கு மழை வருமா, போன்ற வானிலைச் செய்திகள், பலவிதமான வீடியோ பைல்களையும் பார்க்கும் வசதி, பலவிதமான விதங்களில் போட்டோ எடுக்க உதவும் கேமரா அப்ளிகேஷன்கள். 

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ என்று யாராவது சொன்னால் உடனே குறித்து வைத்துக்கொண்டு கரெக்ட்டாக அந்த நாளில் சைலன்ஸராக வந்து என்னா சார் கிழிச்சீங்க? என்று நினைவுபடுத்தும் காலண்டர் வசதி, குறிப்புகள், போன்  வீட்ல சமைக்கும்போது சாம்பார்ல போன் உழுந்துடுச்சி மச்சி நம்பர் குடேன் என்று கதறவைக்காமல் அத்தனையையும் கூகுள் சர்வரில் ஏற்றி பாதுகாக்கும் வசதி, திகட்டத் திகட்ட விளையாட்டுகள், இசைக் கருவிகள், படம் வரைய, பாட்டுப்பாட, ஸ்ஸ்ஸ் ஸப்பா சும்மா இல்லை சார் ஐந்துமில்லியன் அப்ளிகேஷன்கள் வாங்க பழகலாம் என்று கொட்டிக்கிடக்கிறது.     
  

அத்தனையும் வேண்டாம் தேவையானதைப் பார்ப்போம். எனக்குத் தெரிந்ததை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நெற்றிக்கண்ணைத் திறந்து குற்றமெல்லாம் கண்டுபிடிக்காமல் உங்களுக்குத் தெரிந்ததை நீங்களும் பகிருங்கள்.

அதுவரை ஆண்ட்ராய்ட் என்றால் என்ன? 


டிஸ்கி: ஆஹா ஆண்ட்ராய்ட் பற்றி ஒரு பெரிய சாப்ட்வேர் இன்ஜினியர் எழுதறாரே என்று என்னை நம்பும் உங்களைப் போல நானும் ஒரு அப்பாவி செல்போன் யூஸர்தான், இதில் புலி எல்லாம் கிடையாது, காசு குடுத்து பந்தாவாக வாங்கிவிட்டு பேந்த பேந்த முழித்து, அங்கே இங்கே பீராஞ்சு ஓரளவு கற்றுக்கொண்டு எனக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்லி ஒரு பதிவும் நாலு ஓட்டும், நாப்பது ஹிட்ஸும் தேத்தலாமே என்றுதான் எழுதுகிறேன். ஹி ஹி.

அடுத்து

என்ன மாடல் வாங்கலாம்?
தமிழில் படிப்பது எப்படி?
தமிழ் டைப்புவது எப்படி?
உங்கள் போனையே வைபை மோடமாக மாற்றுவது எப்படி?
ஆண்ட்ராய்ட் போன் பால் குடிக்குமா? 

இன்னும் பல சுவாரஸ்யங்களுடன்..


(தொடரும்..)

18 comments:

vasu balaji said...

swipe ரைட்டிங்க சொல்லாம விட்டீங்களே எஜமான். :). செமையா இருக்குஜி. அடிச்சி ஆடுங்க.

Unknown said...

அண்ணே பந்தாவா ஆரம்பிச்சு இப்படி முடிச்சுட்டீங்களே

ராம்ஜி_யாஹூ said...

அடிச்சு ஆடுங்க
ஆனால் நீங்கள் கூறும் கைபேசி இணைய வசதிகள் (ரயில் சினிமா டிக்கட்டுகள், பேஸ்புக், ட்விட்டர்)
ஆகியவை நோக்கியா சிம்பியான் இலும் உண்டே.
ஆண்ட்ராயிடில் உள்ள கூடுதல் வசதிகள் குறித்து எழுதினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்

vinthaimanithan said...

ஆண்ட்ராய்டு பாமரன் ஆவலோடு தொடர்கிறேன்...

ராம்ஜி_யாஹூ said...

தினமும், பேஸ்புக், ட்விட்டர் , வலைப் பதிவு, கூகிள் ப்ளஸ் மட்டுமே
இணையத்தில் பயன் படுத்தும் என் போன்றவர்க்கு
அதிக விலையுள்ள ஆண்ட்ராய்ட் கைபேசி பயனா (rs.16000)
அல்லது அதில் பாதி விலை உள்ள sim enabled டேப்லேட்கள் போதுமா.(rs.4300)

டேப்லேட்களைத் தாண்டி கைபேசி யில் உள்ள பயன்களையும் முடிந்தால் எழுதவும்

திவாண்ணா said...

வரேன் வரேன் வந்து நிதானமா படிக்கறேன்.

semmalai akash said...

அருமையான அலசல். கலக்கல் பதிவு. இதுபோல் மேலும்மேலும் தொடருங்கள், நானும் உங்களை பின்தொடர்ந்து தெரிந்துக்கொல்கிறேன்.

ஜோதிஜி said...

வரிக்கு வரி விட முடியாத வாசிப்பு நடை. செமை. இது போல எழுதுவதைப் பார்த்து நம்மால ஏங்கத்தான் முடியும். மாத்திரை பிசியைப் பற்றி எழுதவும்.

முரளிகண்ணன் said...

சூப்பர் தலைவரே

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம் கலக்கல்... தகவல்களுக்கு நன்றி...

பட்டிகாட்டான் Jey said...

அருமை, எளிமையாக விளக்கிஉள்ளீர்கள்.

தொடருங்கள் தொடர்கிறோம்.

நான்றி

த.ம. 4

எல் கே said...

அடிச்சு ஆடுங்க

உணவு உலகம் said...

சுவாராசியமாய் சென்றது ஜி.

Dino LA said...

அருமை

ஜெட்லி... said...

super annae... naanum rendu vaaram aachu vaangi oru elavum puriyala... memory card kku eppadi edukkara photo vai save panrathu???num therla...

krish said...

அருமை,அடுத்த பதிவை ஆவலுடன்,நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

interesting shankar ji......

அ. வேல்முருகன் said...

தேவையான தகவல்கள், பகிர்ந்தமைக்கு நன்றி