பலா பட்டறை: ஏழாம் அறிவு!

ஏழாம் அறிவு!





போதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர்ந்து  சீனாவின் ஒரு எல்லையோர கிராமத்தை அடைகிறார். அங்கே செல்லும்போது அவர் மட்டும்தான் சிகப்பு உடை அணிந்திருக்கிறார். மற்ற மக்கள் சாதாரண கலரிலேயே உடை அணிந்திருக்கிறார்கள் (குறியீடாக இருக்கலாம்) 

அந்த கிராம மக்களை எப்படி போதி தர்மர் கவர்கிறார். ஷாலின் டெம்பிள் எப்படி இவரை கடவுளாக வணங்குகிறது. காஞ்சீபுரம் இட்லி தெரிந்த தமிழர்களுக்கு போதிதர்மாவை ஏன் தெரியவில்லை? சரி, 1600 வருடங்களுக்கு முன்பாக அவர் இங்கிருந்து கொண்டு சென்ற குங்பு கலை சீனாவில் பேமஸ் ஆன அளவிற்கு ஏன் இங்கே ஆகாமல், இட்லியும், பட்டுப்புடவையும் அதை அமுக்கிவிட்டது? விடை தேடத்துவங்குகிறார்கள் தமிழ் உணர்வு, தமிழன், மஞ்சள், வேப்பிலை பேட்டண்ட் இத்யாதி இத்யாதி..

வெறுமனே போதிதர்மர் தமிழர், அதனால் மக்களே, நாமதான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கண்டுபிடித்தோம், வாங்க பழகலாம் என்று படம் எடுத்தால் மக்கள் பார்ப்பார்களோ? என்னமோ? என்று போதி தர்மாவின் டிஎன்ஏ, சூர்யாவின் 6பேக், பாம்பே சர்க்கஸ், ஸ்ருதிஹாசன், தமிழை குரங்கு என்று திட்டும் ப்ரொபசரை கெட்ட வார்த்தையில் திட்டும் ஸ்ருதி (செம அப்ளாஸ் பாஸ்) புக்கெட் தீவு சாங், குத்து சாங், குங்பூ பைட், கிராபிக்ஸ், பறக்கும் கார்கள் என்று உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குக் கொடுத்த நோட்டீஸ் போல இறங்கி வந்து அடி அடி என்று அடித்திருக்கிறார்கள். 

பொதுவாக ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ரஷ்யாவை சகட்டுமேனிக்கு கிரிமினலாக்கி ஹீரோ அவர்களை அழிப்பது போல படங்கள் பார்த்திருக்கிறோம். அது கொரியா மற்றும் வியட்நாமாகக்கூட பரிணாம வளர்ச்சிகள் அவ்வப்போது அடைந்திருக்கிறது. நமது தமிழ் படங்களில் கேப்டன் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதி என்று காட்டப்படும் திடகாத்திரவில்லனை பக்கம் பக்கமாக வசனம் பேசி தலைக்குமேலே காலை எத்தி உதைத்து தாய் நாட்டைக் காப்பாற்றி இருக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வில்லன் சீனா. எனவே குங்பூ மற்றும் சிட்டி ரொபோவிற்கு கொஞ்சம் கம்மியாக வித்தைகள் தெரிந்த சீன வில்லன். நோக்கிக்கோ என்று நோக்கு வர்மத்திலேயே நோக்கி நோக்கி நொங்கெடுக்கிறார்.

அப்புறம் ஸ்ருதி ஹாசன். நல்ல வரவு. சொந்தக்குரலில் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்பா அளவிற்கு இல்லாமல் கொஞ்சம் பாலீஷ் போட்டுப் பேசி இருக்கிறார். ஒரு அழகான அழுகைக் காட்சியும் அவருக்கு இருக்கிறது. பாடல்கள் என்று நாம் நினைக்கும் போதே ஆலம்பனா நான் உங்கள் அடிமை என்றவாரே உடனே வஞ்சனை இல்லாமல் வருகிறது. சூர்யா கமல் சார் பெண் என்று பட்டும் படாமல் ஜோடி போட்டு டூயட் பாடி இருக்கிறார்.

இன்னும் பல விஷயங்களை நீங்கள் தியேட்டரில் சென்று காணலாம்.

அவ்ளொதான் பாஸ் இந்தப் படம் பற்றிய பகிர்தல். மிச்ச மீதியெல்லாம் மற்ற சினிமா விமர்சன ஜாம்பவான்கள் எழுதுவார்கள். என்னதான் எழுதப்போறாங்கன்னு நானும் படிக்க ஆவலோடு இருக்கிறேன். :)


முடிவாக : 

அப்புறம் ஸ்டிவன் ஸெகல் என்று ஒரு குடுமி வைத்த ஹாலிவுட் நடிகர் இருக்கிறார் வெறும் கைகள் கொண்டு அவர்போடும் சண்டை அவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக தேவையான இடங்களில் மட்டும் நிச்சயம் இடம்பெறும் அது எனக்குப் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல். அதற்காகவாவது அவர் போதி தர்மருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.


சூர்யா போதி தர்மர் வேடத்திற்கு கச்சிதமாக உழைத்திருக்கிறார். படமாக்கிய விதம் மிக அருமை. சிறிது தாமதமாகச் சென்றாலும் இந்தக் காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.

இந்தப் படத்திற்கான ஒரு பேட்டியில் படம் பார்த்துட்டு வர்றவங்களுக்கு படம் மனசில நிக்கனும் என்று சூர்யா சொல்லி இருந்தார். ஆமாம் எனக்கு போதி தர்மரைப்பற்றி அறிந்துகொள்ள ஷாலின் டெம்பிளும், 36சேம்பரும் தராத ஒரு ஆவலை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கிறது. அதற்காகவாவது ஏழாம் அறிவுக்கு நன்றி!

.

11 comments:

ஜோதிஜி said...

ஷங்கர் அவசரத்தில் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கின்றேன்.

சேகர் எழுதியிருப்பது நன்றாக வந்துள்ளது.

மழைக்குள் தீபாவளியா?

settaikkaran said...

ரைட்டு! :-)

Shanmugam Rajamanickam said...

அதுக்குள்ளே படம் பாத்துட்டீன்களோ

Shanmugam Rajamanickam said...

அதுக்குள்ளே படம் பாத்துட்டீன்களோ

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கெட்ட வார்த்தையில் திட்டும் ஸ்ருதி (செம அப்ளாஸ் பாஸ்) //
அழகான பெண் அசிங்கமா திட்டினா அப்ளாஸ். என்ன கொடும இது.
நீங்க என்ன தீபாவளிக்கு தீபாவளி தான் போஸ்ட் போடுறீங்க.ரொம்ப நாள் ஆச்சுதே!
தங்கள் வாழ்விலும் வளம் பெருக இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துக்கள் !!

Kumky said...

ரைட்டு...

(நடுநிலையான கமெண்ட்டுங்க பாஸு..)

R.Gopi said...

ஷங்கர் ஜி...

நல்லா தான் விமர்சனம் பண்ணி இருக்கீங்க...

நொந்த மனச தேத்திக்க “வேலாயுதம்” படம் பாருங்க...

செ.சரவணக்குமார் said...

வேலாயுதம் இன்னும் பார்க்கலையா ஜி.

மாதேவி said...

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

mcckrishna said...

கருந்தேளனின் வாசகர்களே ,சினிமாவில் நடக்கும் காப்பியடிக்கும் துரோகத்தைக்கண்டு பொருக்காமல் ,INTERNATIONAL CRIMINAL கருந்தேளனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களே. குற்றமே செய்யாமல் இருக்கும் அவதார புருசனா இந்த கருந்தேலன். இவன் திருட்டு டிவிடில் படம் பார்க்காதவனா, நெட்டில் டவுன்லோடு செய்து படம் பார்க்காதவனா. இவன். தன்னை எவனாவது திட்டி எழுதிவிடுவான் என்று பயந்து சைபர் கிரைம் ,பாப்பா கிரைம் என்று புருடாவிட்டும் இவர் பல படங்கள் மீது கேசு போட்டு விட்டேன் என்று காமடி புருடாவுட்டுக்கொண்டும் திரியிறாண். எவன் எது சொன்னாலும் நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டம் போல் இல்லாமல்.சுயமாக சிந்திக்கவும் .தமிழக நீதிமன்றங்களில் இன்னும் விசாரிக்காத கேசுகள் ஓரு கோடிக்கு மேல். போலிஸ் ஸ்டசனில் கமிசன் வெட்டாமல் எந்த கேசையும் தொட்டுக்கூடபார்க் மாட்டார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களூக்கு இந்த கருந்தேள்ன் போன்ற காமடி பீஸ்சுக்கு பதி சோல்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிறாமல்.நாட்டின் முக்கிய பிரச்சனகளுக்கு உங்களது ஆதரவை நீட்டுங்கள். சினிமாவ உங்களுக்கு முக்கியாம். அது நல்லா இருந்தால் ஓடும் நல்லா இல்லை என்றால் ஓடாது. சினிமா என்பது ஆர்ட் அல்ல சினிமாவில் புதுசு என்று எதுவும் கிடையாது .சினிமா என்பது கிராப்ட். வெட்டி ஒட்டறரது தா.அதைப்பத்தி ஆராய்ச்சி தேவையில்லை. பொலப்ப் பாருங்க

ADMIN said...

எனது வலையில் இன்று:

தமிழ்நாடு உருவான வரலாறு

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!