பலா பட்டறை: பேக் வித் எ பேங்........!!

பேக் வித் எ பேங்........!!

.மாத்திரை போட்டேன் டாக்டர்

என்ன மாத்திரை ?

மாத்திரை பேரு சட்னு நியாபகம் வரல டாக்டர். நீங்களும் போடனும் புது உலகமே விரியும். எல்லார் உடம்பிலையும் மனசுன்னு ஒன்னு படம் காமிக்குமே இங்கே உடலே மனசாகிப் பறக்கும். பூமியெல்லாம் பஞ்சுப் பொதிபோல நீங்களும் ஒரு பஞ்சின் இழைபோல பறப்பீர்கள் டாக்டர். ட்ரை பண்றீங்களா?

ரூபன் அதெல்லாமே ஒரு இல்லூஷன். நீங்க சாப்பிட்ட மாத்திரை என்பது ஒரு லாகிரி வஸ்து. ட்ரக் அது மூளையைக் குழப்பமடையச்செய்யும் ஒரு வகையான கெமிக்கலா இருக்கலாம்.. ஹெல் லாட் ஆஃப் சைட் எஃபெக்ட்ஸ் உங்க உடம்ப நாசம் பண்ணிடும். ஒரு ஐஐஎம் டாப்பர் நீங்க ஏன் இதெல்லாம் எடுத்துக்கனும்.

களவும் கற்று மற டாக்டர். ஸ்கூல் படிக்கும்போது பாங்கு போட்டிருக்கேன். பச்சையா சின்னதா கோலிகுண்டு சைஸ்ல ஒரு நார்த் இன்டியன் பீடாகாரன் கொடுத்தான். என்னய்யா இதுன்னா சிவபிரசாதம்ன்னான். உண்மையிலேயே அன்னிலேர்ந்துதான் சிவனையே எனக்கு ரொம்பப் பிடிச்சிப்போச்சு. பால்கோவால வெச்சி ஒரு உருண்டை சாப்ட்டா போதும் அவதார் மாதிரி ஒரு திவ்ய தேசம் ஒரு 24 மணி நேரம் காரண்டி. 

ஓக்கே. நவ் லிசன் ரூபன். மனித வாழ்க்கையில் முழித்துக்கொண்டு செயலாற்றுவது என்பது ஒரு குறுகிய காலம்தான். அதை இப்படியெல்லாம் போதையில் கழித்தால் அதுவும் இவ்வளவு சின்ன வயசுல டூ பேட். என்னால நல்ல மருந்துகள் கொடுத்து ட்ரீட்மெண்ட் தர முடியும். ஆனா உங்க ஒத்துழைப்பு என்பது இல்லாமல் எந்த மருந்தும் வேலை செய்யாது. 

டாக்டர் சந்தோஷம்தானே வாழ்க்கை. எல்லாருமே அதற்குத்தானே வாழ்கிறார்கள். எனக்கு இதுதான் சந்தோஷம் இதிலென்ன தப்பு. 

நியாயப் படுத்தி பேசனம்னா என்னவேணாலும் பேசலாம் ரூபன். சீரியல் கொலைகாரனுக்கு கொலை செய்வது சந்தோஷம். அதற்காக அதையும் உங்க நியாயப் படுத்தலில் சேர்த்துக்குவீங்களா? யோசியுங்க. இங்கே சந்தோஷம் என்பது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையுமாக இருக்கனும். 

பட் டாக்டர் ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். நான் யாரையும் துன்புறுத்தவில்லை. ஐ ஆம் ஹார்ம்லெஸ். ஜஸ்ட் லிவிங் மை லைஃப்.

யூ ஆர் ராங். உங்களால உங்க ஃப்ரென்ட்ஸ் பாதிக்கப் பட்டிருக்காங்க. அவங்க பேரன்ட்ஸ் நொந்து போய் இருக்காங்க. யூ அல்மேஸ்ட் கில்ட் ஒன் ஆஃப் தெம் யூ நோ.

வாட் யூ மீன் டாக்டர்.


சீ ஹியர் என்று டாக்டர் எனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டரைத் திருப்பினார். CAM09 என்ற ஒரு சதுரம் செவ்வகமானது, ஒரு பெண் முகத்தில் மாஸ்க், ஆங்காங்கே ஒயர்கள்  பொருத்திக்கொண்டிருந்தார் ஒரு டாக்டர் காமரா சூம் செய்ய யார்? ஓ மை காட் காமினி

யார்னு தெரியிதா? 

டாக்டர் இது காமினி யெஸ்

அவளுக்கு என்னாச்சி என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் ரூமிலிருந்து டாக்டர் வெளியேறினார். 

ஒஹ் காட் டாக்டர் அவள காப்பாத்தனும் ஏன் குதிக்கறா

இது ஒரு வகையான சைட் எஃபெக்ட் எல்லாம் நீங்க அவளுக்குத் தெரியாம கொடுத்த ட்ரக்கோட விளைவுகள். பட் காமினிய குணப் படுத்திடலாம் ரொம்ப மைல்ட் சிசி தான் உள்ல போயிருக்கு.

ஆனா அவ டிப்ரெஷன்ல இருந்தா டாக்டர். அவங்க மாமாவும் அவர் பையனும் அவளோட சொத்துக்காக அவள டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்ததா என்கிட்ட சொன்னா. நான் ட்ரக்ஸ் யூஸ் பண்றது அவளுக்குத் தெரியுமே.

யா ஒரு வகையில அவளுக்கு டார்ச்சர் கொடுத்த ரெண்டு பேரையும் நீங்க கொடுத்த ஏதோ ட்ரக்ஸ அவங்களுக்கு கொடுத்து காமினி அல்மோஸ்ட் தன்னைக் காப்பாத்திகிட்டா.. கெட்டதிலயும் ஒரு நல்லது..

புரியல டாக்டர்

டாக்டர் மீண்டும் வேறொரு கேமராவினை மானிட்டரில் காண்பித்தார்

இரண்டு தனித்தனி ரூமில் காமினியின் மாமா பரந்தாமனும், அவர் மகன் சிவாவும்

 
சிவா சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தான். காமினியின் போட்டோ ஒன்று அங்கே இருந்தது. கைவிரல்களால் துப்பாக்கி செய்து..


அடுத்த பக்கத்தில் மாமா பரந்தாமன் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். ஊசியுடன் நர்ஸ் வருவதைப் பார்த்து ..

ஹா ஹா நான் சத்தம் போட்டு சிரித்தேன். 

உங்களுக்கு இதெல்லாம் தமாஷா இருக்கா ரூபன்..

எக்ஸாட்லி டாக்டர்

வாட் யூ மீன்

ஐ மீன் அந்த மாத்திரை பேர் கேட்டீங்களே அதான் டாக்டர் அது

எது

தமாஷ்.. தமாஷ் மாத்திரை அதுதான் அது பேரு. ஹா ஹா 

டாக்டர் இண்டர்காமை எடுத்து நர்ஸ் கம் டு மை ரூம் என்றார்.

எனக்கு டாக்டர் ரூமிலிருந்த சிவபெருமான் படம் கொஞ்சம் கொஞ்சமாய் அவுட் ஆஃப் போகஸ் ஆகிக்கொண்டிருந்தது.

(தலைப்பு டிஸ்கி: சரியான முதுகு வலி அதான். வேறெதுனா நினெச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பல்ல. ஆயுத பூஜைக்காவது பட்டறைக்கு பூஜை போடனுமில்லையா அதுக்குத்தான் இந்த இடுகை.  நண்பர்கள் எல்லோருக்கும் நாளைமுதல் பின்னூட்ட டொக் டொக் ஆரம்பம் :)
(போட்டோ டிஸ்கி : ஹி ஹி..:-)


.

29 comments: