பலா பட்டறை: மலையாளக் கரையோரம்..

மலையாளக் கரையோரம்..


கபேயில் பிரம்மாண்ட பதிவர் சந்திப்பு முடிந்து நான், மணிஜி, அகநாழிகை வாசு, செல்வம் காரில் பொள்ளாச்சி நோக்கிக் கிளம்பினோம். வழியெல்லாம் வாசு மற்றும் மணிஜியின் போன் ஒலித்துக்கொண்டே இருந்தது எப்ப வருவீங்க எப்ப வருவீங்க கேட்டுக்கொண்டிருந்த அந்த மகானுபாவன் நம்ம கும்க்கியார். 

ழ கபேயில் 


ரவு சுமார் 1.30 அளவில் பிக் அப் செய்து பொள்ளாச்சி சேரும்போது காலை 8.30. ரூம் எடுத்து காலை உணவை ஒரு பிரபல பஸ்ஸர் வீட்டில் (மிக அழகான வீடு:) உண்டுவிட்டு (மெனு-சந்தகை + அரிசி பருப்புச் சோறு + சப்பாத்தி + மோர் + பறித்து சில நாட்களே ஆன பேரீச்சம் பழங்கள்) வால்பாறை செல்வதற்கான 
ப்ளானில் இறங்கினோம். பல வருடங்களுக்கு முன்பு சென்ற/கண்ட பொள்ளாச்சி வேறு. இப்பொழுது ஊரே பளபளப்பு கூடி மிக அழகாக இருந்தது. 

நாலடியார்கள்


மங்கி ஃபால்ஸ்

மிக அழகழகான வீடுகள். நாங்கள் சென்றபோது க்ளைமெட்டும் மிக அருமையாக இருந்தது. நன்றி கூறி விடைபெற்று வால்பாறை செல்லும் வழியில் குரங்குஅருவியில் ஒரு குளியல் போட்டுவிட்டு கும்க்கியார் வளைத்து, வளைத்து வண்டி ஓட்ட ஒரு கட்டத்தில் சாலையே தெரியாத அளவிற்கு பனியும் மேகமூட்டமும் அப்பிக்கொண்டிருந்தது.
வால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவு


கொண்டை ஊசி வளைவுகளில் குன்ஸாக ஓட்டிக்கொண்டே வால்பாறை வந்தபோது மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. மூன்றாம் மாடியில் அறை எடுத்து குளிரை கம்பளியில் தடுத்து தூங்கி எழுந்தால் லேசான சாரலுடன் வாங்க பழகலாம் என்று வால்பாறை அழைத்தது. 

வால்பாறையில் ஒரு டீ எஸ்டேட்


வால்பாறை டு அதிரம்பள்ளி வழியில்

திரம்பள்ளி நீர்விழ்ச்சிக்கு வால்பாறை வழியாக செல்லும் இடமெல்லாம் தமிழக எல்லை வரை தேயிலைத் தோட்டம். அடுக்கடுக்காக பச்சை நிறம் மட்டும் கொண்டு வரைந்த ஒரு மாடர்ன் ஓவியம் போல ஒவ்வொரு மலைச் சரிவிற்கும், ஒவ்வொருவிதமான வடிவம் கொண்டு பார்க்கும்போதே மனது 
லேசாகியது. வார்த்தைகள் இட்டு நிரப்ப முடியாத ஒரு குதூகலம் எல்லோர் மனதிலும். சரியாக தமிழ்நாடு எல்லை முடிந்து கேரள செக்போஸ்ட் ஆரம்பிக்கும்போது, வண்டியையும் வண்டி ஓட்டுபவரையும் முழு சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 

”ட்ரிங்ஸ் அடிச்சிட்டுண்டோ”
          ”இல்ல சார்”
         ”ஹாங் அடிச்சா தா அங்க நோக்கு தவுசண்ட் ருப்பீஸ் ஃபைனானு”
(செக்போஸ்ட் அருகிலேயே கன கச்சிதமாக போலீஸ் ஸ்டேஷன்.
தெய்வத்திண்ட சொந்தம் நாட்டில் வேறு தீர்த்தங்களுக்கு அனுமதி இல்லையாம். )
தெய்வத்திண்ட நாட்டில், ஒரு காட்டில் கஜாக்கா தோஸ்த்ஸ்


பிக்சர் இன் பிக்சர்

பார்டர் தாண்டியதும் அது வேறு உலகமாகிவிட்டது. தேயிலைத் தோட்டம் என்பது காட்டை அழித்து மனிதன் உருவாக்கிய பணப்பயிர். இங்கே காட்டைக் காடாகவே வைத்திருக்கிறார்கள். யாரோ ஒருவரின் ஒரு கோப்பைத் தேனீருக்காக எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது ஓங்கி உளகளக்கும் மரங்களிலும், பூச்சிகள், பறவைகளின் ஒலிகளிலும், சாலையில் சிதைந்து கிடந்த யானைகளின் சாணங்களிலும் தெரிந்தது. ஊருக்குள் வந்து துவம்சம் செய்யும் அவற்றின் மேல் கோபம் கொள்ளுதல் ஆறாம் அறிவின் உச்சகட்ட வக்கிரம் என்பது புரிந்தது. 

எப்படி இந்த மரத்த விட்டு வெச்சிருக்கானுவ?

ழி நெடுக அடர்ந்த காடு, கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்களுக்கு சாலை குண்டும் குழியுமாக இருந்தது. 

செல்லும் வழி நெடுக பரவலாக மழை. கும்க்கி எங்கேனும் யானை தெரிகிறதா என்று இரண்டு பக்கமும் பார்த்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். . 

”யானைங்க கூட்டமா வந்தா என்னங்க பண்றது?”
”வாலப் பிடிச்சி கடிச்சா அதுங்க பயந்து ஓடிப் போயிடுமாம்”

சிகரெட் சித்தர் - அட்டேன்ஷன்!


சீட்டுக்குலுக்கிப் போட்டதில் செல்வம் பெயர் வந்தது. அவரும் தயாராகவே இருந்தார்.     

னால் யானைகள்.? ம்ஹும்ம்! கனத்த மனதுடன் அதன் சாணங்களை மிதித்து ஆதி மனித எச்சத்திற்குத் தீனி போட்டுவிட்டுக் கிளம்பினோம். 

சாலக்குடிக்கு 30 கிலோ மீட்டருக்கும் முன்னால் வருவது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அதற்கும் முன்னால் நாங்கள் வந்த அந்த அடர் காட்டுவழிப்பாதை முடியும் இடம் வாழச்சல். வளைந்து நெளிந்து செல்லும் அகலமான ஆறு, கரையோரம் ஒரு சேட்டனுடைய ஹோட்டல், கேபிள்ஜி சைசில் அரிசிச்சோறு, அதே ஆற்றில் தூண்டிலில் உனவுக்காகச் சிக்கி உணவான மீன் வறுவல். ஹோவென்ற மழை. மதிய உணவை மாலையில் முடித்து அழகான அந்த ஆற்றங்கரையில் காலார நடந்து, காரெடுத்து நாங்கள் சென்ற இடம் அதிரப்பள்ளி.

நிறைய வீடுகளை ரிசார்ட்டுகளாக மாற்றி வைத்துள்ளார்கள். நாங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரவு நெடுநேரம் இலக்கியப் பணி ஆற்றிவிட்டு. காலையில் அருவிக்குச் சென்றோம். 

தரனனா.... திரனனா.... திரனா!

வாழ்வில் மறக்கமுடியாத சில மணித்துளிகளில் இந்த அருவியைக் கண்டவாறே உட்கார்ந்திருந்ததைச் சொல்லலாம். ஆறு அமைதியாக வந்து அந்தப் பள்ளத்தாக்கில் ஆக்ரோஷமாக விழுந்து வெண்பஞ்சு துகள்களாக நீர்த்திவலைகளை மேல் நோக்கித் தள்ளும் அமைதிக்கும் ரெளத்திரத்திற்குமான அந்த விளிம்பில், எதுவுமே யோசிக்க முடியாத ஒரு ஏகாந்தம் மனதில் ஏறும். குளிக்கவோ கூப்பாடுபோடவோ மனம் நாடவில்லை. அங்கே வந்த பெரும்பாலானவர்கள் அருவியின் பிரம்மாண்டத்தில் வாயடைத்துப் போய் அமைதியாக நிற்பதைப் பார்த்தேன். 

நீயெல்லாம் மசிறுக்குக்கூடச் சமானமில்லை என்று இயற்கை அழுத்தம் திருத்தமாக மனிதனைப் பார்த்துச் சொல்லுவதைப்போல எனக்குத் தோன்றியது. இதுவரை இந்த அருவியைக் காணாதவர்கள் ஒருமுறையாவது இங்கே சென்றுவரவேண்டும் என்பது என் வேண்டுகோள். வால்பாறை வழியே சென்றுவருவது இன்னும் அற்புதமாக இருக்கும்.

நன்றி! :-)

சில விவரங்கள்::

34 comments:

ILA (a) இளா said...

சும்மா தெரிஞ்சிக்கத்தான். படங்கள்ல இருக்கிறவங்க எல்லாம் யாரு?

க ரா said...

கிளாஸ் ரைட்டிங்கானு குருஜீ:))

க ரா said...

எவ்வளவ்வுதான் முக்கி பிடிச்சாலும் போட்டோல தொபபை நல்லாவே தெரியுது குருஜீ....

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் சுவாரஸ்யமான எழுத்து, படங்கள் அருமை

Paleo God said...

@இளா: இரண்டாம் படம் மணிஜி, அகநாழிகை வாசுதேவன், செல்வம், நான். :))

@ இராம்ஸு : நன்னி! :)

மணிஜி said...

சிஷ்யண்டா நீ:-))

Paleo God said...

இராம்ஸு எல்லாம் உங்க ஆசிர்வாதம் :)
நன்றிங்க ராம்ஜி:))

Paleo God said...

@மணிஜி : குருவே :))

சுரேகா.. said...

நல்ல பகிர்தல் !! குடுத்துவச்ச மகராசன்..! ஊர் ஊரா சுத்துறீங்க!! :)

CS. Mohan Kumar said...

யோவ் அநியாயமா இருக்கு. எங்கே போனாலும் என்கிட்டே சொல்றதில்லை. கூப்பிடுறதில்லை. உங்க கூட டூ

ஷர்புதீன் said...

அண்ணே அந்த தொப்பை லைட்டா தெரியுதே, போட்டோ எடுக்கும்போது கொஞ்சம் எக்கி இருக்கலாமோ!

Chitra said...

நீங்களும் மணிஜி சாரும் இரட்டையர்களா? ஒரே மாதிரி கெட் அப்ல இருக்கீங்களே .... ஹி,ஹி,ஹி,ஹி...

Chitra said...

கலக்கல் location ..... அசத்தல் படங்கள்..... நல்ல பதிவு..... நடுவுல...நடுவுல... மானே தேனே.... எல்லாம் போட்டுக்கோங்க... நன்றி. :-)))

மணிஜி said...

ஹலோ..அமெரிக்கா...அநியாயம்:-))

Cable சங்கர் said...

mhummmm

ILA (a) இளா said...

மணிஜி அண்ணே.. என்னத்தான் அமெரிக்கான்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.

நேர்ல பார்க்காததுனால சட்னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. உங்களைத்தெரியும், வாசு தெரியும்.. மீதி ரெண்டு பேர்ல யார் யார்னு தெரியல. அதான். அதுவுமில்லாம படம் போட்டா பாகம் குறி... சீ சீ பேர் போடறதுதானே வழக்கம் :)

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல்.. படங்களும் பகிர்வும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல் பதிவு

Paleo God said...

@சுரேகா - :))

@மோகன் குமார்: தல கடைசி நேர தட்கால் புக்கிங் என்னோடது :)) அடுத்த ட்ரிப் போட்டுடலாம்:)

@ஷர்புதீன்: எக்கினதுபோக மிச்சம் (மிச்சமேவான்னு மைண்ட்வாய்ஸ் கேக்குது:)

@சித்ரா: டீச்சர் :))))))))

@மணிஜி: பாருங்க மணிஜி என்னைய மாதிரி பெரிசையெல்லாம் உங்களோட கம்பேர் பண்றாங்க :))

@கேபிள்ஜி : ஹுக்கும்! :)

@இளா: மெனக்கெட்டு மெரினாவுக்கு வந்து பக்கத்துல உக்காந்து பேசின என்னத் தெரியாதுன்னுட்டீங்க. ரைட்டு! :))

@அமைதிச்சாரல்: நன்றிங்க :))

@T.V.ராதாகிருஷ்ணன்: நன்றி சார்:))

மரா said...

அசத்தல்.. படங்களும் பகிர்வும்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வாங்க பழகலாம் என்று வால்பாறை அழைத்தது. // ஹா ! ஹா!
ஆறாம் அறிவின் உச்சகட்ட வக்கிரம் // அற்புதமான விஷயம்
அவரும் தயாராகவே இருந்தார். // எதுக்கு யானை வாலை கடிக்கிறதுக்கா?
நகைச்சுவையை முந்திரி போல் அங்கங்கே தூவி அழகாக எழுதப் பட்ட பயணக் கட்டுரை.

Raju said...

டீ-ஷர்ட்டேல்லாம் ஓகேதான்!
தொப்பையைக் கொறைங்க யூத்து.
:-)

உணவு உலகம் said...

அற்புதமான பகிர்வு. அதுக்கு தமிழ்மணம் ஏழு என் பதிவு.

உணவு உலகம் said...

ஒரு பயணம், ஒரு பகிர்வு. மறுபடியும் பயணம், மறுபடியும் பகிர்வு. சூப்பர்.

விஜி said...

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் அந்த வழியில் ரோடு முழுதும் அடர்ந்த மரங்களாகவும் வழியே தெரியாமல் இருட்டாகவும் இருந்தது பகலிலேயெ.. இப்பவும் அப்படித்தான் இருக்கா?

அதிரம்பள்ளி பால்ஸ் கீழ இறங்கி போயி பார்க்கலையா? மணிரத்னம் இருந்தாலும் இருந்திருப்பார் அங்க :)

உண்மைத்தமிழன் said...

என்னைய விட்டுட்டுப் போறதுக்கு உனக்கு எப்படி ராசா மனசு வந்தது..?

Murugeswari Rajavel said...

படங்களும்,பதிவும் அருமை.

துபாய் ராஜா said...

கெட்டப்பை மாத்தி..... செட்டப்பை மாத்தி .... ம்ம்ம்ம் ....கலக்குங்க.... கலக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

good writtingk style

அம்பாளடியாள் said...

கலக்கல் பகிர்வு. புகைப்படங்களுடன்கூடிய உங்கள்
பகிர்வைக்கண்டு இரசித்தோம் நன்றி பகிர்வுக்கு.

Unknown said...

சூப்பர் .. செல்வம்

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பயணம், உங்களுடன் பயணித்தது போல இருந்தது, அருமையா விவரிச்சிருக்கீங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா கடைசியில யானை விரட்டுச்சா இல்லையா...?

MANO நாஞ்சில் மனோ said...

Chitra said...
கலக்கல் location ..... அசத்தல் படங்கள்..... நல்ல பதிவு..... நடுவுல...நடுவுல... மானே தேனே.... எல்லாம் போட்டுக்கோங்க... நன்றி. :-)))//



பதிவை படிக்கும் போது நானே சொல்லனும்னு நினச்சேன் நீங்க சொல்லிட்டீங்களா ஹே ஹே ஹே ஹே...