பலா பட்டறை: பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??

பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பலாபட்டறை 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பாதி இல்லை!. வித்தியாசமா பெயர் வைக்கனும் அப்படிங்கறது தமிழ் வலையுலகில் ஒரு சொம்பிரதாயமாய் இருப்பதால் மனதில் தோன்றிய இந்தப் பெயரை வைத்தேன். (ஆமாம். உங்கள் உண்மையான பெயர் என்ன என்ற கேள்வி இல்லையே?? )


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வார்த்தையை கூகிளில் சர்ச் செய்தால் என்ன வருகிறது என்று போன வருடம் நவம்பர் மாதம் தேடியபோது தமிழில் இவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டாவது நாளில் நானும் ஆரம்பித்துவிட்டேன். ஹி ஹி..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் நானும் எறும்பு ராஜகோபாலும் இருக்கும் போட்டோவை. கேபிள்ஜி கொத்து பரோட்டாவில் போட்டு சிறு குறிப்பு வரைந்தார். வலைச்சரத்தில் தண்டோராவாக இருந்த மணிஜீ மற்றும் திரு.வானம்பாடிகள் அவர்கள் என்னை அறிமுகம் செய்தார்கள். அப்படியே மெல்ல பதிவர் சந்திப்புகள், உரையாடல் அமைப்பின் உலக திரைப்பட நாட்களின் சந்திப்புகள், பின்னூட்டங்கள் என்று மெல்ல நண்பர்கள் வட்டம் பெருகியது.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

முக்கால்வாசி சொந்த விஷயங்கள்தான் எழுதினேன். அடுத்தவர் விஷயங்கள் தெரிந்திருந்தும் ஏதும் எழுதினதில்லை. விளைவு பழைய தோழிகள் யாரும் வலையுலகில் இல்லை என்பது தெரிந்தது. (பின்ன கலர் கலரா என் போட்டோவ எதுக்கு போடறேன்னு நினெச்சீங்க?:)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் எழுதும்போது பொழுது போகிறது. நிறைய சம்பாதித்துள்ளேன் ( நட்புகளை/தமிழை/எண்ணங்களை/வாசிப்பை )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று. பட்டறை கவிதைகள் என்ற ஒன்றில் கவிதைகள் என்று நான் கூறிக் கொள்பவைகளை பலாபட்டறையில் நான் வெளியிட்டவைகளை மீண்டும் சேமித்து வைத்துக்கொள்கிறேன். போக பிரதி எடுக்க வேர்ட்பிரஸ்ஸிலும் ஒன்று உள்ளது. (எல்லாமே தமிழ்தாங்க!)


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிரமிப்புதான் நிறைய!!. கோவம் என் மீதுதான். இவங்க மத்தியில் நீயும் எழுதறியே என்று என் மனசாட்சி அடிக்கடி என்னைக் கேள்வி கேட்கும்:)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் கமெண்ட் போட்டவர் திரு.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன். முதலில் தொடர்பு கொண்டு பாராட்டியவர் என்றால் கேபிள்ஜிதான். நிச்சயம் இரண்டுமே
 மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10. மற்ற டீஈஈட்டெயில் வேண்டுவோர் மெயில் செய்யவும் :)) (சந்தோஷமா ஹாலி?)

மற்றபடி என்னையும் ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டு (சகித்துக்கொண்டு!?) பின்னூட்டமிடும், போனில் பேசும், மெயில் செய்யும் நண்பர்களுக்கும். திரட்டிகளுக்கும் என் நன்றியும், மகிழ்ச்சியும். எல்லாரும் நல்லா இருங்க மக்களே அம்புட்டுத்தேன். :)))

--

டிஸ்கி: இடுகை தேத்த உதவிய விதூஷ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!.
.

61 comments: