ஹும்ம் - 1
சென்ற வாரக்கடைசியில் பெங்களூரு சென்றிருந்தேன். பெண்களைவிட அழகாக நிறைய மரங்கள், புத்துக்குலுங்கும் செடிகள் ஊரெங்கும், வீடெங்கும் காணக்கிடைக்கிறது. ஏன் பெங்களூரு நல்ல இதமான குளிர்ச்சியும் மழையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பது புரிகிறது.
ஹும்ம் - 2
அபரிமிதமான சாஃப்ட்வேர் கம்பெனிகள் வளர்ச்சிக்குத் தக்க சாலை வசதிகள் ஏதும் சிறப்பாக இல்லை, முக்கி முனகி மெட்ரோ தயாராகிக் கொண்டிருக்கிறது . ஒரு சிக்னலிலிருந்து முதல் கியர் மாற்றி அடுத்த கியர் போடுவதற்குள் அடுத்த சிக்னல் வந்துவிடுகிறது. சரியாக சிக்னல் இருக்கும் இடத்திலேயே ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் (எதுக்குங்க?!) பின்னாடியே சுனாமி துரத்துவதுபோல் சிக்னலை மதிக்காமல் நாலா பக்கமும் முந்தத் துடிக்கும் வாகனங்கள்.
ஹும்ம் - 3
ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே மெஜஸ்டிக் பஸ் நிலையம் ஆனால் சாலையைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. சரி என்று சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் ஆண்களுடைய கற்புக்கே கேரண்டி இருக்காது போல!.
ஹும்ம் - 4
கேரளாவில் தனிவீடுகள் சிறப்பாகவும் அழகாகவும் கட்டப்படுகிறதென்றால், பெங்களூருவில் அடுக்ககங்கள் அழகாக இருக்கிறது. ரசித்து டிஸைன் செய்திருக்கிறார்கள் (நான் கண்டவரையில்) என்னங்க இப்படிக்குளிருதே என்றால் இன்றைக்கு வெயில் கொஞ்சம் ஜாஸ்தி என்று பதில் வருகிறது (ஹும்ம்!).
ஹும்ம் - 5
ஒரு உயர்ரக நாயை வளர்ப்பதைவிட சிரத்தையாக வளர்த்தால் மட்டுமே போனால் போகட்டும் என்று இங்கே சென்னையில் பூக்கும் ரோஜாக்கள் பெங்களூரில் வஞ்சமில்லாமல் பூக்கின்றது. அடுக்ககங்களில்கூட குறைந்தபட்சம் இரண்டு தொட்டிகளிலாவது செடிகள் வளர்க்கிறார்கள்.
ஹும்ம் - 6
மேலும் தினசரியில் படித்த இரண்டு விஷயங்கள், கழுதைப் பால் வியாபாரம் நன்றாக நடக்கிறதாம். குழந்தைகளுக்கு தருவதற்காக காரில் வந்து வாங்கிக் கொண்டு போகிறார்களாம்.
பன்னேர்கட்டா Zooவில் சிங்கமும், சிறுத்தையும் நோயால் இறந்து போயிருக்கின்றன.
ஹும்ம் - 7
பெங்களூரு எக்ஸ்ப்ரஸில் சென்றபோது வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 10/-
பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் வந்தபோது (அப்பாடி தலைப்புக்கு வந்துட்டேன்) வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 14/- 40 % விலை அதிகமாக விற்கிறார்கள். விசாரித்தால் மாமூலாக வருபவர்களுக்குத் தெரியும் சார் என்று பதில் வந்தது. டெய்லி 4 ரூவா அதிகம் கொடுத்து மாமூலா பஜ்ஜி தின்றாங்களா என்று கேட்டேன். "சூடா பஜ்ஜி என்று நகர்ந்துவிட்டார்" மசால் தோசையும் இதே கொள்ளைதான். ஆனால் காபியும் டீயும் அதே ரூபாய் 5/- ஏன் 7 ரூபாய்க்கு விற்கவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஹும்ம் - 8
வரும்போது தம்பியிடமிருந்து பல டாக்குமெண்டரிகளை காப்பி செய்து வந்தேன். பிபிசி மற்றும் நேஷனல் ஜியாக்ரபியில் காண்பிக்கப் பட்டவைதான் என்றாலும், Inside the Human Body, Bermuda Triangle மற்றும் பனாமா கால்வாயில் கப்பல்கள் செல்வது போன்றவைகள் எந்தவித விளம்பர் இடையூறும் இல்லாமல் பார்க்கும்பொழுது பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக ஹாங்காங்கில் கடலில் கட்டப்பட்ட விமான நிலையம் அங்கிருந்து நகருக்கு வரும் சாலைகள், கடலுக்கு அடியில் வரும் சுரங்க சாலைகள், மிக உறுதியான (டைபூன் எனப்படும் புயல்களை தாங்கக்கூடிய) தொங்கு பாலங்கள், மிகக் குறுகிய காலத்தில் (பிரிட்டிஷ், சீனாவிற்கு ஒப்படைப்பதற்குள்) கட்டி முடித்த விதம் என்று மிகவும் சிறப்பான ரசித்த டாக்குமெண்ட்ரியும் ஒன்று மேலதிக விவரங்கள். என்னது காமன் வெல்த்தும் கல்மாடியுமா? லூஸ்ல விடுங்க பாஸ் அதெல்லாம் மெகா சீரியல் கேட்டகிரி டாக்குமெண்ட்ரியில் வராது!
--
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் நடத்திய மாடியில் தோட்டம் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்புக்குப் போயிருந்தேன். மிக பயனுள்ள தகவல்கள் கிடைத்தது. நஞ்சில்லா காய்கறிகள், மலர்கள் மற்றும் அழகுச்செடிகள் வளர்ப்பு பற்றிய விளக்கங்கள் அறியக் கிடைத்தது. மாடியில் வெயிலை வெறுமனே அறுவடை செய்வதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப அழகான சிறிய தோட்டம் அமைக்கலாம். பாலிதீன் பைகள், மரச்சட்டங்களாலான அமைப்பில் கீரைகள் வளர்ப்பு, அழகுச்செடிகள் போன்றவை வளர்த்து சுவையான காய்கறிகளோடு, மனதிற்கும் உடலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் இதமான ஒரு சூழ்நிலை அமைக்க முடியும் - மனமிருந்தால் மார்கபந்து!!
இதுமட்டுமில்லாமல் மூலிகைப் பயிர் வளர்ப்பு, மசாலா பொருட்கள், காளான் வளர்ப்பு, பால் பொருட்கள் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, உடனடி உணவுப் பொருட்கள் தயாரிப்பு, போன்சாய் செடி வளர்ப்பு என்று 23 தலைப்புகளும் அதற்கு மேலுமாய் பல பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களும் வழங்குகிறார்கள்.
மேலதிக விவரங்கள் வேண்டுவோர்:
பேராசிரியர் மற்றும் தலைவர்.
நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்,
புதிய எண்-44, 6-வது அவென்யூ, அண்ணா நகர்,
சென்னை - 600 040. தொ,பே - 26263484, 42170506.
பல்கலைக் கழக இணைய தளம் : www.tnau.ac.in
தகவல் உதவி திரு.வின்சென்ட் (மண், மரம், மழை, மனிதன்)
--
மீண்டும் சந்திப்போம். நன்றி. :)
27 comments:
இதை படித்ததும் பெங்களூர் போனமாதிரி ஓர் உணர்வு...
அடுத்த தடவை போகும்பொது சொல்லுங்க, சப்வேல நான் கூட வர்றேன்.
நான் கூட என் புகழ் பரப்ப நீயும் சேர்ந்துட்டியோன்னு நினைச்சேன்...
ஹும்ம்
//ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே மெஜஸ்டிக் பஸ் நிலையம் ஆனால் சாலையைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. சரி என்று சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் ஆண்களுடைய கற்புக்கே கேரண்டி இருக்காது போல!..//
உண்மையான பெங்களூருவின் தோற்றம் இதுவே. பெங்களூரின் மகாத்மா காந்தி ரோட்டையும் கோரமங்களா ஃபோரமையும் விட்டு அல்சூர் மற்றும் அதனருகில் உள்ள இடங்களை பார்த்தால்தான் உண்மையான பெங்களூர் தெரியும். இருந்தாலும் வானிலை காரணங்களுக்காகவும் இயற்கையின் அழகுக்காகவும் திரும்ப போகும் ஆசை தரக்கூடிய ஊர் அது :)
எங்களுக்கும் ஒரு free ட்ரிப் பெங்களூர்க்கு போய்விட்டு வந்தது போல இருக்குது!
நைஸ் பாஸ் !
:)
டாக்குகளை எடுத்து வைங்க தல அதே டீக்கடையில் வாங்கிக்கறேன்
:))
சேகர் சொன்னமாதிரி நினைத்துக் கொண்டு தான் உள்ளே வந்தேன்.
தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்
//ஜாக்கி சேகர் said...
நான் கூட என் புகழ் பரப்ப நீயும் சேர்ந்துட்டியோன்னு நினைச்சேன்.//
தெய்வமே, உங்கள் கொள்கையை பரப்ப ஒரு கூட்டமே (அயல்நாட்டு கிளை உட்பட )இருக்கும்பொழுது ஷங்கர் எம்மாத்திரம்.
:))
//சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் ஆண்களுடைய கற்புக்கே கேரண்டி இருக்காது போல!.//
ஹே மிஸ்டர், ஏற்கனவே உங்களுக்கு ஒரு வில்லங்க வாசகர் கடிதம் வந்தது. இப்ப சுரங்கப்பாதைல போனா உங்கள குறி வைக்கிறாங்க.
What is happening man?
இதை படித்ததும் பெங்களூர் சென்று சுத்தி பார்த்ததை போன்ற உணர்வு உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை ஓடி ஓடி என்னை பரவசப்படுத்துகிறது..
:)
பெங்களூரில் ஆரம்பித்து சென்னையில் முடித்து வைத்த உங்கள் உத்தி பிரமீப்பூட்டுகிறது.
வழக்கமாக உங்கள் புகைப்படத்தை போடுவீர்கள், இந்த முறையும் உங்கள் புகைபடத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.
:)
Very interesting details about Bengaluru.
Sema.....
சுவாரஸ்யம்..!
//சரியாக சிக்னல் இருக்கும் இடத்திலேயே ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் (எதுக்குங்க?!)///
சிக்னல் இருக்கும் இடங்களில் ஸ்பீட் ப்ரேக்கர் இருக்க வேண்டும் என நினைத்தது உண்டு..! சிக்னல் விழும் கடைசி நிமிடங்களில் முந்தி விட வேண்டும் என அவசர கதியில்
இயங்கும் வாகனங்கள் சில,பல இடங்களில் விபத்தினை உண்டாக்கி இருக்கின்றது. சிக்னலை முழுமையாக கடை பிடிக்க அங்கே
வேகத்தடை இருப்பது நல்லது என தோன்றுகிறது..!
can the documentaries be shared?
i too thought Its was Jackie shekhar. Writing style also very similar and nice writeup. Thankful for the roof garden info. I love it.
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
ஜாக்கி பேர மாத்திட்டாரோன்னு டவுட் ஆகிட்டேன்.
ஆஹா ! ஒரு புதையலையே எடுத்து வந்திருக்கிறீர்கள். பெங்களூர் க்ளைமேட் ஒரு காலத்தில் அற்புதமாக இருந்தது. இப்பொழுதும் சென்னையிலிருந்து சென்றால் அருமையான க்ளைமேட்தான் :)
//பெங்களூரு சென்றிருந்தேன். பெண்களைவிட அழகாக நிறைய மரங்கள், புத்துக்குலுங்கும் செடிகள் ஊரெங்கும்//
நீங்க என்ன போலி சாமியாரா ஹீ ஹீ
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
ரொம்ப நல்லாயிருக்கு...
நல்ல விசயங்கள் நல்லாவே இருக்கு.
வணக்கமுங்க..
@ சங்கவி : நன்றி பாஸ்! :)
@ கும்மி: ஹா ஹா ரைட்டு :))
@ ஜாக்கி : பிருந்தாவன்ல அந்த காஞ்ச பஞ்ஞி தின்னும்போதே இதுதான் தலைப்புன்னு முடிவு பண்ணிட்டேன் :))
@ நசரேயன்: டேங்ஸ் :)
@ இராமசாமி : டேங்ஸ் :)
@ அன்னு: கரெக்ட்டும்மா :)
@ சித்ரா: நன்றிங்கோவ் :)
@ நேசமித்ரன்: தல உங்களுக்கில்லாததா :)
@ வானம்பாடிகள் : நன்றி சார் :)
@ ஜோதிஜி: நீங்களுமா??:))
@ வெடிகுண்டு : நன்றிங்க வெங்கட் :)
@ எறும்பு: அதானே? :))
@ வெறும்பப : நன்றிங்க :)
@ மோகன் குமார்: நன்றிஜி:)
@ விசா: டேங்ஸ் வாத்யார்:)
@ தமிழ் அமுதன் : நன்றி பாஸ். ஆனாலும் அதெல்லாம் மதிக்கறதே இல்ல :(
@ முருகப்பன் : கண்டிப்பாங்க. உங்களால டவுன்லோட் பண்ணமுடியும்னா amaderforum.com இதுல ட்ரை பண்ணுங்க.
@ sowri : Thanks :)
@ அந்நியன் : சரிங்க.
@ பின்னோக்கி: சரியாச் சொன்னீங்க. :))
@ பிரசன்னா: ஹா ஹா :)
@ சே.குமார்: நன்றிங்க குமார் :)
@ தாராபுரத்தான்: வணக்கங்க :))
Post a Comment