ஒரு பரதேசியின் பயணம் 6 - சபரிமலை.
நான்காவது முறையாக சபரிமலை செல்லும் வாய்ப்பு இந்தமுறை மணிஜி மூலமாகக் கிட்டியது. மாலை போட்டு, விரதம் இருந்து சென்ற 18ம் தேதி மதியம் வைகை எக்ஸ்ப்ரஸில் நான், மணிஜி, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் கிளம்பினோம். சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில், அங்கிருந்து பேரூந்து மூலம் குமுளி, அங்கிருந்து பம்பா சென்று மலை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது எங்கள் திட்டம்.
20 நாட்களுக்கு முன்பாக, கேரள போலீஸால் அறிமுகப்படுத்தப்பட்ட விர்ச்சுவல் க்யூ முறை பற்றி வாசு சொன்னார். அந்தத் தளத்தில் 19ம் தேதி காலை 5 மணி வரிசைக்காக முன்பதிவு செய்திருந்தோம்.
![]() |
தகவல் நிலையங்களும், அப்பல்லோ சிகிச்சை மையமும் |
![]() |
மரக்கூட்டம் - விர்ச்சுவல் க்யூ பிரியும் இடம். |
![]() |
விர்ச்சுவல் க்யூ சாமிகளும், சாதா சாமிகளும் |
சன்னிதாதத்திற்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய ஷெட்டில் இந்தக் கூட்டத்தை தனித்தனியே வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களாக படியேற்றி பதினெட்டாம் படிக்கு அனுப்புகிறார்கள், ஒரு குழு தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி முடித்த உடன் அடுத்த குழு அனுப்பப் படுகிறது, இதனால் காலதாமதமானாலும் நெரிசலின்றி அனைவரும் பதினெட்டுப் படி ஏறி சாமிதரிசனம் செய்ய முடிகிறது. இந்த கூப்பன் திட்டத்தால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் எங்களுக்கு மிச்சமானது, 7.30க்கு பம்பையிலிருந்து ஏறத்துவங்கி 10.50க்கெல்லாம் தரிசனம் முடிந்து வெளியே வந்துவிட்டோம். அதே நேரம் இந்த கூப்பன் இல்லாமல் ஏறியவர்கள் 4மணிக்குப் பிறகே தரிசனம் காணமுடிந்தாக கூறக்கேட்டோம்.
சபரிமலை சில வருடங்களிலேயே மிகப்பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது,.
பம்பையிலிருந்து சன்னிதானம் வரை கழுதைப் பாதைவழியே சிமெண்ட் கொண்டு சாலை அமைத்து ட்ராக்டர் ஓட்டுகிறார்கள்,
சபரியில் குமியும் குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் இன்னும் பிறவற்றை உடனுக்குடன் பம்பைக்கு கொண்டு செல்வதற்கும், பம்பையிலிருந்து சபரிக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பல ட்ராக்டர்கள் சென்று வந்த வண்ணம் இருக்கின்றன.
பம்பையிலிருந்து சன்னிதானம் வரை கழுதைப் பாதைவழியே சிமெண்ட் கொண்டு சாலை அமைத்து ட்ராக்டர் ஓட்டுகிறார்கள்,
![]() |
சேகரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் எமன்கள் |
![]() |
அவசர சிகிச்சைக்காக |
![]() |
சுடுவெள்ளம் |
![]() |
ஓக்ஸிஜன் பார்லர் |
அப்படியும் மயங்கிய ஓரிரு பக்தர்களை உடனுக்குடன் ஸ்ட்ரெச்சரில் முதலுதவிக்காக அழைத்துச் சென்றதையும் கண்டோம். தெளிவாக உடல்நிலை பரிசோதித்துப் பின்னரே மலை ஏறுங்கள் என்று அனைத்து மொழியிலும் அறிவித்தும் சிலர் இவ்வாறு மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். பக்தி தாண்டி மலைஏற்றம் என்பது மனதும் உடலும் சம்பந்தப்பட்டது.
![]() |
சரங்குத்தி |
![]() |
டோலி சார், டோலி |
இத்தனைக்கும் அருமையாக பாதை போட்டு வழிநெடுக எல்லா வசதிகள் கிடைத்தும் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதுதான் கொடுமை.
![]() |
நீலிமலையிலிருந்து ஒரு பார்வை |
![]() |
நினைவில் காடுள்ள மரம் |
மாலை 5 மணிக்கு வண்டி எடுத்து 6.30க்கெல்லாம் ஒரு ஓட்டலில் நிறுத்தி சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நடத்துனர் கூறியவுடன் கேட்டால் கிடைக்கும் சங்க உறுப்பினரான மணிஜி தட்டிக்கேட்க ஆரம்பித்துவிட்டார், ஒத்தாசைக்கு நானும் TNSTC வெப்சைட்டை ஓப்பன் செய்து புகார் அளிக்க நம்பரைத் தேடினேன், இதைக் கண்ட நடத்துனர் உடனே, சாமி நீங்க எங்க சொல்றீங்களோ அங்க நிப்பாட்டறேன் என்று கூறி, சிப்ஸ் வாங்க குமுளியிலும் சாப்பாட்டிற்காக வழியில் ஓர் இடத்திலும் நிறுத்தி அதிகாலை 3 மணி சுமாருக்கு திண்டுக்கல் கொண்டுவந்து சேர்த்தார். ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்)
![]() |
நீரும் ஞானும் பின்னே பம்பாவும்.. |
பின்குறிப்பு:
விர்ச்சுவல் க்யூ ஒரு நல்ல திட்டம். மலைக்குச் செல்பவர்கள் அவசியம் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவும்.
விவரங்களுக்கு:
http://www.sabarimalaq.com/
http://www.sabarimalaq.com/
மலையாள மனோரமா சார்பில் சபரிமலை பற்றி ஒரு ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டு இருக்கிறார்கள். பார்க்கிங் வசதி, முக்கிய தொலைபேசி எண்கள், வெதர், கூட்ட அளவு, கோவில் நடை திறக்கும்/பூஜா நேரங்கள் போன்றவைகளுடன் சபரிமலை செய்திகளும் அடங்கி இருக்கிறது, சிறப்பான முயற்சி,
தமிழ்நாடு அரசுப் பேரூந்து நிருவனத்தின் வெப்பேஜில் குறிப்பிட்ட தொடர்பு எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை என்றே வருகிறது. பேரூந்திலும் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக வேலை செய்யும் புகார் எண்களை கையில் வைத்துக்கொண்டால், அராஜகம் செய்யும் நடத்துனர், ஓட்டுனரிடமிருந்து தப்பிக்கலாம். சும்மா இல்லை சார், சொளையாக 750 ரூபாய் வாங்கிக்கொண்டு 6.30க்கு இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளுங்கள் அல்லது பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் வேறு எங்கும் நிற்கச் சொல்லி எங்களுக்கு ஆர்டரில்லை என்று கூசாமல் ஓசி பரொட்டா பார்சல் வாங்கிக்கொண்டு சொல்கிறார்கள்.
முடிந்தால் ரயிலிலேயே முன்பதிவு செய்து சென்று வருவது உத்தமம்.
கேரள அரசாங்கத்தின் சமீபத்திய அதிரடி சோதனைகளுக்குப் பிறகு மலையில் உணவு வகைகள் ஓரளவு நன்றாகவே கிடைக்கிறது.
நன்றி, வணக்கம்.
சாமியே சரணமையப்பா. :))