பலா பட்டறை: 02/01/2010 - 03/01/2010

வெளிசம்..(முற்றும்.)

முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்..


இத்தோட முடிஞ்சுது...:))


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
"என்னம்மா பண்ணிகிட்டு இருக்க"


"ம்ம் ஒரு யோசனை, என்னோட டீன் ஏஜ் பத்தி"


"ஹைய், சொல்லும்மா, நீ ரொம்ப ஃப்ரெண்ட்லிதான். ஆனா இது நீ சொல்லாதது"


"ம்ஹும் அவ்வ்ளோ சுவாரஸ்யமா அம்மாவோட டீன் ஏஜ் கேக்க.."


"பின்ன நானும் டீன்’ல நீங்க என்னல்லாம் பண்ணினீங்கன்னு சொன்னா ஒரு ஜாலி"


"நீ டீனா? கழுத 19 முடியப்போகுது"


"ஒஹ்ஹ் மா!.. ஸ்டில்ல், நான் டீன். ஸோ ப்ளீஸ்.."


"ஓகே. நானும் சில விஷயங்கள் சொல்லனும்னுதான் நினச்சேன்,"


"ஏம்மா சஸ்பென்ஸா பேசற, யாரையாவது லவ் பண்ணினீங்களா? சொல்லு சொல்லு.."


"ஆமா.. உங்கப்பாவ.."


"ச்ச.. போர்மா நீ.., அப்பாவ லவ் பண்ணாம வேற யாரையாவது லவ் பண்ணினீங்களா? நோ.. லைய், ப்ளீஸ் சொல்லுங்க"


”இல்ல கண்ணு அப்பாவ மட்டும்தான்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அன்னிக்கு நீ எப்போவும் சொல்வியே, இன்னிக்கு கூட கேட்டியே, அந்த பெரிய பூ போட்ட நீல சாரி.. அதைத்தான் நான் முதல் முதலா கட்டிக்கிட்டு உங்கப்பாவ பார்க்க போனேன், அப்போ அவர் இருந்தது தாம்பரம், நான் இருந்தது காளிகாம்பாள் கோவில் கிட்ட, பீச்லேர்ந்து ரயில் பிடிச்சு என்ன என்னமோ கனவுகளோட நான் பார்க்க போய்க்கிட்டிருந்தேன். அன்னிக்கு நல்ல கூட்டம் வேற, எப்படி என் காதல சொல்றதுன்னு எனக்குள்ள ஒரு பெரிய போராட்டம் உள்ளுக்குள்ள நடந்துகிட்டு இருந்தது, சுற்றுப்புறம் மறந்த சூழல், ஏதோ நினைவில் நான் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டேன், ஆனா அந்த கூட்டத்துல சில பேர் என்ன தொட்டு சில்மிஷம் பண்ணி, அருவெறுக்க வெச்சிட்டாங்க.”   


"ஓஹ் மை காட், நீங்க என்ன பண்ணினீங்கம்மா"


"என்ன பண்ன முடியும்? ஒண்ணும் பண்ணல, அவங்க என்னோட யோசனையையும், கூட்டத்தையும் பயன்படுத்தி உடளவுலயும் மனசளவுலையும் நோகடிச்சிட்டாங்க. தாம்பரத்துக்கு முன்னாடி அவங்க இறங்கிட்டு, வண்டி தாம்பரம் நின்னதும், நான் மவுனமா ஒரு பென்ச்ல உட்கார்ந்தேன், என்ன என்னமோ யோசனைகள், ஆம்பளைங்க மேல அப்படி ஒரு வெறுப்பு, எல்லாரையும் வெறுத்தேன், இப்பகூட வார்த்தைகள் வரலை, அப்பதான் அப்பா என் கிட்ட வந்தார், ஹலோ சொன்னார், எதாவது சாப்பிடலாமான்னு கேட்டார், அவ்வளவு நேரம் அவரை விரும்பி என்னன்னெமோ யோசிச்ச எல்லாமே அந்த சம்பவத்துல காணாம போய், சாரி எனக்கு காதல் எல்லாம் வேண்டாம், ஆம்பிளைங்க மேல எனக்கு ஒரு நம்பிக்கையுமில்லை, உங்களையும் ஒரு ஓநாயாத்தான் பார்க்கிறேன். மன்னிக்கனும்னு சொல்லி அடுத்த ட்ரெயின்ல பீச்சுக்கு போக உக்காந்துட்டேன்.."


"அப்பா என்ன சொன்னார்? கோவிக்கலையாம்மா உங்கமேல"


"அப்பா என்ன நடந்துதுன்னு கேட்டார் நானும் சொன்னேன், கூடவே என்ன சமாதான படுத்தவேண்டாம் என் அபிப்ராயம் இனி மாறாது ப்ளீஸ் விட்டுட்டு போய்டுங்க அப்ப்டீன்னுட்டேன்.."


"இவ்ளோ லவ்லியா இருக்கற நீங்களா அப்படி சொன்னீங்க? ஐ டோண்ட் பிலீவ் திஸ் மம்.. அப்பா பாவம். "


"ஆமாம்மா அவர் பாவம்தான் இல்லைன்னா...


இல்லைன்னா..?? என்னம்மா சொல்லவற்றீங்க..??


” உன்ன தத்தெடுத்து வளர்க்கும்போது என்ன பார்த்து என்னோட தன்னம்பிக்கை பார்த்து, ஒரு நல்ல நட்பா உன்னை வளர்க்க என்னை அவர் தேடி விஷயம் சொல்ல வந்தது தெரியாம, நான் அவர காயப்படுத்தி இருக்க மாட்டேன்.."


"வாட் தத்தெடுத்தீங்களா?? என்னையா? என்ன சொல்றீங்க??"


"சாரி குட்டி உங்கப்பா உன்னை ஒரு ஆஸ்ரமத்திலேர்ந்து தத்தெடுத்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு யோகி, கல்யாணம், குடும்ப வாழ்க்கை இதெல்லாம் விட மனித அன்புக்காக ஏங்கிய ஒரு ஜீவன். அவரை நான் காயப்படுத்தினது, அவருக்கு கேன்ஸர் வந்து சாகறதுக்கு முதல் நாள் எப்படியோ என்னை வரவெச்சி உன்னை என்கிட்ட தரும்போதுதான் தெரிந்தது.  
நான் உன்னை பார்க்கும்போது உனக்கு 3 வயசு, 
ஐய்யய்யோ தப்பு பண்ணிட்டேனே, சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஐ லவ் யூ சொல்லிடலாம்னு மறு நாள் அவர பார்க்க போனப்ப சடலமாத்தான் பார்க்க முடிந்தது. "


"ஐ கான்ட் பிலீவ் திஸ், "


"இல்லம்மா இது உன் வயசுக்கு நான் சொல்லனும், அது சட்டமோ, தார்மீகமோ எனக்கு தெரியாது ஆனா எப்படியும் இது உனக்கு தெரிய வேண்டியது, நான் சொல்லிடனும், இல்லைன்னாலும் எப்படியாவது தெரிய வரும் அதுக்கு நானே சொல்லிடலாமில்லையா? இப்ப உங்க காலம் வேற விதமானது. நிச்சயம் நீ என்னை மாதிரி முட்டாளில்லை, பரி பூரண சுதந்திரம் உனக்கு தந்திருக்கேன், குட்டி, இது ஒரு ஸ்டேட்மெண்ட்தான், இத கேட்டுட்டு விட்டுடு நான் உன் அம்மா, அந்த படத்துல இருக்கறது உன் அப்பா, வெரி சிம்பிள், எப்படி உன்கிட்ட சொல்ல ஆரம்பிக்கனும்னு இருந்தேன், ஃபைன் எப்படியோ சொல்லிட்டேன். சொல்லு நீ என் செல்லம்தானே? அம்மா மேல, கோவம் இல்லையே,,ஹேய் போன் அடிக்கிது பார், பேசு அப்பறம் இத பத்தி பேசலாம், ரிலாக்ஸ் டியர்.. நான் காபி போடறேன்..உனக்கும் எனக்கும்..ஓக்கே"""ஹலோ"

"ஹேய் நாந்தான் என்னாச்சு இன்னிக்கு என் பர்த்டே, எதோ உங்கம்மாவோட லக்கி சாரி கட்டிக்கிட்டு, லவ்யூ சொல்ல வர்ரேன்னு சொன்னியே வெய்ட்டிங் ஸ்வீட்டி,, கம் ஃபாஸ்ட், எல்லாரும் வைய்ட்டிங்.."

"சாரிடா இது ஒத்து வராது, ஜஸ்ட் ஃபெர்கெட் இட்"

"வாட்??"

"யா ஐம் நாட் லவ்விங் எனிஒன்.. எனிமோர்.. பை.      "
     
"யார்மா ??"

"நத்திங் மம்மி.. "

"ஹேய் யாரது.. நத்திங்..? பாய் ஃப்ரெண்ட்டா? அம்மாகிட்ட சொல்ல மாட்டியா?"

"ஆமாம்மா..பாய் ஃப்ரெண்ட்தான் லவ் யூன்னு சொன்னான், இன்னிக்கு சொல்றேன்னேன்,”

"என்னங்க இங்க பாருங்க உங்க பொண்ணு லவ் பண்ணப்போறாளாம்’

’வாட்? லவ்வா/ நம்ம குட்டியா ஈஸ் இட்.."

"ஐய்யோ அப்பா!.., அம்மா... "

"சொல்றேன்னுதான் சொன்னேன். இன்னும் சொல்லல. ஆனா சொல்லப்போவதுமில்லை? "

"வொய்? என்னாச்சி? "

"இல்லப்பா இன்னும் என்னை குழந்தையாவே வெச்சிருக்கீங்க, நீங்க ஃப்ரெண்ட்லிதான், ஆனா வெளி உலகம் வேற, சில விஷயங்கள் சாதாரணமா பலருக்கு தெரியறது. மத்தவங்களுக்கு அப்படி இல்லை, இதோ இந்த புக்ல இருக்கற இந்த கதையும் அப்படித்தான். நான் என்னப்பத்தி புரிஞ்சிக்கணும்னு ஏதோ உள்ள சொல்லுது இத படிச்சதுக்கப்புறம், சாரி இது உங்களுக்கு சாதாரண கதையா இருக்கலாம் எனக்கு அப்படி சொல்ல தெரியல.."

"இன்னும் முழுசா கூட படிக்கலையேடி, முக்கா புத்தகம் படிச்சி அப்படியென்ன வேதம் கிடச்சிது? என்னங்க இவ இப்படி பேசறா?"

"இல்லம்மா நாம் முழுசா படிச்சா அது கதையாகிடும் சில விஷயங்கள் நாமா உணர்ந்துகிடறது நல்லது. நானே உணர்ந்துகொள்கிறேன்."

"சரிம்மா இட்ஸ் யுவர் சாய்ஸ், ஐ அம் ப்ரொவ்ட், ஓகே. அப்பா இருக்கேன். பட் உனக்கு சங்கடம் ஏதும் வந்தா அப்பாவ தயங்காம கூப்பிடு, எதுவா இருந்தாலும் நான் உன் ஃப்ரெண்ட்."

"தாங்ஸ்ப்பா..."

”ஸ்வா தமிழ் கதையெல்லாம் படிப்பீங்களா?? மண்டை காய வைக்குது என்ன கதைங்க இது?”


”ஹலோ நான் யாரையாவது லவ் பண்றீங்களான்னு கேட்டேன்.. அதுக்குள்ள என் ஹேண்ட்பேகை துருவியாச்சா??”


உண்மையை சொல்வதா? வண்டு குடையத்தொடங்கி இருந்தது. ரத்தம் வந்து என்னை கண்டு பிடித்த்..


”பல்லவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? ”


”பல்லவி ம்ஹ்ர்ர்ம்ம் ஓ யா பல்லவி என்ன பிரச்சனை? ஒன்னுமில்லையே? வொய்?”


”சண்முகவடிவேல் தயவு செய்து என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். பல்லவியும் நீங்களும் காதலித்தது உண்மைதானே? ”


”ஹேய் என்னதிது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்,, இத்தனைக்கும் எல்லார் முன்னாடியும் சொன்ன விஷயம் அது. யெஸ் நாங்கள் காதலித்தோம். ஸோ வாட்? நீங்க யாரு எஃப்.பி.ஐ? சி.பி.ஐ? இண்டர்போல்..”


ஸ்வா சிரித்தாள் கொஞ்சம் சப்தமாய்


பொதுவாய் இந்த மாதிரி ஹோட்டல்கள் வித்தியாசமானவை நிறைய காசு கொடுத்து சுதந்திரமில்லாத அடிமை இடம், ஒரு ஸ்பூன் எடுப்பதிலிருந்து, நாப்கின் உபயோகிப்பது வரை, பேசும் சப்தங்களின் அளவுகள், உடை நேர்த்தி முதல் எல்லாமே இயல்பான ஒரு சுதந்திரத்தை தடுக்கும். அவள் சிரித்தது நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்தது. நான் சங்கடமாய் உணர்ந்தேன். அவளையே பார்த்தேன்.


”யெஸ் ஸ்வா காதலித்ததும் காதலித்துக்கொண்டிருப்பதும்”


”ஸ்டில் யு லவ் பல்லவி?”


”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும்  அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.
 அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”


”தெரியல, நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..”


”ஷான்.”.


”இல்லைங்க சண்முகவடிவேல்..” திரும்பவும் சிரித்தாள்...


”வாட் எவர்..”


”இப்ப நான் சொல்றேன் ஐ லவ் யூ”


“வேண்டாம் குத்தி கிழிக்காதீங்க, போதும் நான் பல்லவியையே கல்யாணம் பண்ணிக்கிறேன்”


“பட் ஐ லவ் யூ”மீண்டும் சிரித்தாள் எனக்கு கையில் கிடைப்பதை வைத்து அவளை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடலாம் என்று தோன்றியது.


ஆனால் விதி வலிது, வாய் வேறு விதமாய் சொல்லியது


” நான் உன்னை முதலில் பார்த்தவுடனே மனசுக்குள் சொல்லிட்டேன் ஸ்வா”


ஹும்ம் இப்படித்தான் என் சிக்கல்கள் ஆரம்பித்தன.. என்ன பல்லவியா ??அவளிடமும் இவளை பற்றி சொல்ல வேண்டும்,


அன்று பெசென்ட் நகர் பீச்சில் பல்லவியும் இப்படித்தான் ஆரம்பித்தாள்


”ஷான் நீங்க காயுவ (காயத்ரி) லவ் பண்ணினீங்களா??? ”


”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும் அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.


”அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”


”தெரியல,” நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..


”ஐ லவ் யூ ஷான்..”


நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது.  
  
பின்குறிப்பு: கதை இப்படித்தான் போகும் என்று புரிஞ்சிடிச்சிங்க என்று சொல்பவர்களுக்கு ( நான் உட்பட ) இந்த கதை சமர்ப்பணம்..:)))) கதைக்கு உதவிய திரு.பிரபாகர், திரு.முகிலனுக்கு நன்றி.:)     


மரணமில்லா இறப்புகள்..றந்து போன யாரோ சிலரின்
துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்
உயிர் வாழ்கிறதென் கவிதைகள்
இறந்து போனவனை தாங்கி வந்த
வரிகளை உயிரோடு
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்
பொருள் இல்லாவிடினும்,
சுவை இல்லாவிடினும் இறந்தவனின்
குறிப்புகளாய் இறந்தவனைப்பற்றிய
சோகங்கள் தாங்கி இனி இறக்கப்போகும்
எவனாவது வாசிக்கக்கூடும், அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்
என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு...

கிரிக்கெட் தொடர்பதிவு..நர்சிம் அன்புடன்(?) தொடரச் சொன்னதால் இந்தப் பதிவு.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய   அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------
1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : ஸ்ரீகாந்த், ஹேய்டன், கங்குலி , வால்ஷ், ஸ்டீவ் வாக், சேவாக், மித்தாலி ராஜ்,.

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : அஃப்ரிடி, (திறமையை வீணாக்குவதால்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : பாட்ரிக் பாட்டர்சன், ஆலன் டொனால்ட், ப்ரெட் லீ,  .

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : நெஹ்ரா, சிரீசாந்த், ஸ்டூவர்ட் ப்ராட்
 (இப்படியா ங்கே ன்னு ஆறு சிக்சர் அடிக்க விடுவ? )

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வெங்கடேஷ் பிரசாத்..

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : எம்.எல்.ஜெய்சிம்ஹா,  டக்ளஸ் மெரில்லியர்,

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : நாந்தான்.,

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, ஜெயசூர்யா, சயீத் அன்வர், கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன்

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : சடகோபன் ரமேஷ்

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி

13. பிடித்த ஆல்ரவுண்டர் : கபில்தேவ், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,
 .
14. பிடித்த நடுவர் : ஷெப்பர்ட். பில்லி பொவ்டன், சைமன் டாஃபில்

15. பிடிக்காத நடுவர் : நம்மாளுதாங்க, இலங்கைக்கு எதிரா கோவால ஜடேஜா ஆடும்போது அவுட்னு விரல் தூக்கி ’டக்குனு’ தொப்பிலயே தலை சொறிஞ்சி இல்லைன்னுட்டார், பேர் நினைவில்லை.

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ,டோனிகிரேக், பேரி ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : அருண்லால் (கரி நாக்கு:), மணீந்தர் சிங், (எல்லா அச்சி, கிலாடி சுந்தர் ஷாட்’ டும்)

18. பிடித்த அணி : இந்தியா, ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி : சீனா.

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- பிடித்த அணிகள்தான்.

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- எதுவுமில்லை.

22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, கபில்தேவ், தோனி (மச்சம்யா), ஸ்மித் .

23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்

24. பிடித்த போட்டி வகை :டெஸ்ட் மேட்ச்

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : நானும் சேவாக்கும்.:)

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : சேவாக் .

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : பிராட்மென்,கபில்தேவ்.. ஸ்டீவ்வாக்.

நன்றி நர்சிம்.:-)

தொடர அழைக்க..

பிரபாகர் (வாழ்க்கை வாழ்வதற்கே)

மீன்துள்ளியான்,

நிலா ரசிகன்.

வேறு யாருக்காவது விருப்பமிருப்பின் அவர்களும்..:)


.

வெளிசம்..


.


லை அல்வாவை சுடச்சுட ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டால் வழுக்கிக்கொண்டு போகுமே அப்படி ஒரு குரலில், 


”ஹாய் ஐ ஆம் ஸ்வா..” 

வள் கை நீட்டியபோது சத்தியமாய் எனக்கு தெரியாது, அவள்தான் என்னுடைய வருங்கால காதலிகளில் ஒருவள் என்று!. அப்போ மொத்தம் எத்தனை என்கிறீர்களா? மொத்தம் இரண்டு பேர்தான், ஆனால் படிப்பு முடித்து திருநெல்வேலியிலிருந்து ரயிலேறி சென்னை மாநகர் வந்து எக்மோரை பிரமிப்பாய் பார்த்த நாளெல்லாம் நானே எரேசர் (ரப்பர் என்று சொல்லக்கூடாது என்று தினேஷ் முதல்முறை அமெரிக்கா போனபோது சொல்லிக்கொடுத்தான்) வைத்து மனதிலிருந்து அழித்து மாதங்களாயிற்று. 

.சி.ஆர் சாலையில் இருக்கும் ரகசிய டிஸ்கொதேக்கள் முதல், நியூயார்க்கின் அழுக்கான, ஆங்கிலம் தெரியாது, முதுகு வளைத்து பறிமாறும் சைனா டவுன் வரைக்கும் எனக்குத்தெரியும். உபயம் - நான் கற்ற கணிணி மொழி, அது தந்த வேலை, அந்த வேலை நிமித்தம் நான் பயணித்த நாடுகள், சந்தித்த மனிதர்கள், ஏகப்பட்ட பெண் நண்பிகள் இரண்டே இரண்டு காதலிகள். 

”ஓ ஹாய் .. ஐ ம் ஷான்,”

ண்முகவடிவேலன் என்று சொன்னால் எந்த பெண் திரும்பிப்பார்ப்பாள்? அதுவும் நான் சாஃப்ட்வேர் எஞ்சினியர், கூட வேலை செய்வதெல்லாம் தேவதைகள், ஒரு சீனப்பெண்ணை வேறு நெட்டில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். 'வோ அய் நி' என்று மாண்டரின் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ன் பெயரைக் கேட்டதும் முகத்தின் இரு புருவங்களையும் சுருக்கி உதட்டோரம் சிரித்தவள். 

”ஒரு காபி சாப்பிடலாமா?” 

ப்போதும் கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது திடீரென தண்ணீரிலிருந்து ஒரு மீன் உங்கள்மீது தூண்டில்போட்டால்...?! அவள் கேட்டதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். என்ன இவள் என்னையே போட்டு வாங்குகிறாளா? இரை சுலபமா, ஷன்முகவடி...ச்சே..ஷான் மச்சம்டா உனக்கு..

”ஓ யெஸ், கான்டீன் போலாமா? இல்லை.” 

“ ஹவ் அபொட் தாஜ் ?”  

சிரித்துக்கொண்டே உள்ளே பல் கடித்தேன், இல்லை இவள் ஏதோ முடிவோடுதான் வந்திருக்கிறாள், பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, பெயர் மட்டும் சொல்லி காபி சாப்பிட தாஜ் போகலாம் என்றால் என்னமோ உதைக்கிறது! ஒரு வேளை பல்லவி இவளிடம் ஏதாவது சொல்லி இருப்பாளா என்னைப்பற்றி.


 ல்லவி?? காஷ்.. அவளை பிறகு யோசிக்கலாம். 

“பயப்படாதீங்க நான் வேணா ’பே’ பண்ணிடறேன்” 

மீண்டும் சிரித்தாள். இவள் தூண்டில் இல்லை. என்னைச் சாய்த்த நங்கூரம். அது புரிய வெகு நாளாயிற்று. ஆனால் அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. 

”ஹேய் நான் ஜஸ்ட் ஒரு ப்ரோஜக்ட் கால் பத்தி நினெச்சேன், ஃபைன்.. நோ ப்ரோப்ளம்.. அப்சல்யூட்லி” வார்த்தைகள் மாற்றி நான் வழிவது எனக்கே தெரிந்தது. 


ஷான் கவனம்’ ஒற்றைக்கால் கொக்காய் நிற்கச்சொல்லி உள்ளுக்குள் ஆதாம் பல்லி கத்திக்கொண்டிருந்தது.

“லெட்ஸ் கோ”

ன் முன்னே (டொக்)(டொக்)ந்(டொக்)தா(டொக்)ள். ஹை ஹீல்ஸ், ஜீன்ஸ், ச்சிக் டாப்ஸ், பெர்ஃபெக்ட் வளைவுகள், தலைமுடி..வாவ் இவ்வளவு நீளமான முடி அடர்த்தியாய் கருப்பாய், சீராய் நான் பார்த்ததே இல்லை.


 உங்களுக்கு பிடித்த பிட்ஸ்ஸா நீங்கள் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால்.. ச்சே.. சரியான சாப்பாட்டு ராமனாகிவிட்டேன், ஒரு அழகான பூங்கொத்து விலாசம் தவறி உங்களுக்கு டெலிவரி ஆனால், அய்யோ எப்படி சொல்வது அவளை அதற்குள் லிஃப்ட் உள்ளே நுழைந்து ‘பேஸ்மென்ட்தானே’ என்றபடி (-1) பட்டனை அழுத்தினாள்.


ப்போதுதான் கவனித்தேன், அவள் வலது கையில் அந்த ஆறாவது விரல். அதிலிருந்த தக்குனியூண்டு நகத்துக்கும் பெயர் சொல்ல இயலா நிறத்தில் ஒரு வர்ணம் பூசி இருந்தாள். அந்த் லிஃப்ட் என்னையும் அவளையும் அப்படியே மேலே பிய்த்துக்கொண்டு போய் விடாதா என்றபடிக்கு அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது. 

(தொடரும்)குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில். கதை பெயர் காரணம். கதை சாதாவா இருந்தாலும் பெயர் கொஞ்சம் நவீனமா இருக்கட்டுமேன்னுதான்...:-)).

--------------
நண்பர்களே..

திரு.ஆரூரன் விசுவநாதன் தனது கொங்கன் பக்கத்தில் பதிவிட்டுள்ள கீழுள்ள இடுகையை படித்து, கண் குறைபாடுள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்/பயன் பெறவும். மிக்க நன்றி.:)

சாமக்கோடங்கி..

உங்களுக்கு பிரகாஷ் என்ற சாமக்கோடங்கி தெரியுமா? மிக குறைந்த அளவே எழுதி இருந்தாலும் (11 இடுகைகளும், 112 பின்னூட்டங்களும்) மிக அருமையான பதிவுகள் அவர் எழுதி உள்ளார். கார்பன் சுவடுகள் என்ற பதிவு மிகவும் முக்கியமான ஒன்று மொத்தம் 5 பாகங்கள். தயவு செய்து படித்து, உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்த சிறிய வயதில் சுற்றுச்சூழலின் அக்கரை நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆதரவும் பின்னூட்டமுமே, இவர்களுக்கு மேலும் இது போன்ற பதிவுகள் எழுதத்தூண்டும். நான் காணும் புதிய மற்றும் சுவாரஸ்யமான, ஊக்கங்கள் தேவைப்படும் பதிவர்கள் பற்றி அவ்வப்போது எழுத விருப்பம். நீங்களும் செய்யலாம். நானும் அப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன்தான். 

-------------
கவுஜ + டிஸ்கி ::


ஒரு நடைபாதையின் மதிலருகில்
என்னின் தவம் கலைத்த கிழவி,
வைத்த உலைக்காய் என்னை
காவல் வைத்த வேளையில்
எங்கிருந்தோ வந்த காகமொன்று
மின் கம்பியிலமர்ந்து உலை உலர
காத்திருந்தது, காகத்தை காவல் வைத்து
பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்தேன்
நன்றாய் மழிக்குமென்று விற்றவன் சொன்னான்..
மழிக்குமாவென்று எவனோ கேட்டான் 
ஒரு பூனையை தேடி அலைகிறது என் கண்கள்
மழித்துப்பார்த்துவிட்டு இந்த கவிதை முடிக்கவேண்டும்..

---


நான் பதிவு எழுதாமல் போவதை விட, இவர் போன்றவர்கள் பதிவெழுதாமல் போனால் நிச்சயம் இழப்புதான். ஆதரவு தாங்க மக்களே.:)    

விரைவில் ஒரு காதல் (சற்றே பெரிய) சிறு கதை வரவிருக்கிறது, 

ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி!.

.

உதப்பி..பலா பட்டறை அப்படின்னா என்ன என்று எல்லாரும் கேட்கவே இதென்ன வம்பா போச்சுன்னு சரி நம்ம பேர்லயே இருந்திடலாம்னுதான் என் பெயரையே வெச்சேன். ஆனா இப்ப ஒரு புது பேர் எனக்கு கிடச்சிருக்கு ‘சொம்பு தூக்கி மற்றும் அரை வேக்காடு :) சரி இதை சொன்னவர் முழுசா வெந்தவரா? என்பது எனக்குத் தெரியாது, அவரின் முழுமையான இடுகைகள் நான் படித்ததில்லை. இத்தனைக்கும் நான் சம்பந்தப்பட்ட வலைப்பக்கத்தில் வெறும் எழுத்தின் நிறம் மட்டும் சொன்னேன் (அப்போது எனக்கான ஒரு நல்ல வலைப் பக்க வடிவம் தேடிய நேரம்!) அடுத்த பதிவில் அவர் மாற்றிய எழுத்தின் நிறம் நன்றாக இருந்ததால், இப்ப படம் தெளிவாய் தெரிவதாய் (எழுத்தை) சொல்லி இருந்தேன் இதற்கும் அவர் எழுதிய பதிவுக்கும் (கருத்துக்கும்)  எந்த சம்பந்தமும் இல்லை.

 உலகின் எனக்கு தெரிந்த எல்லா விஷயங்கள் பற்றியும் எனக்கென்று ஒரு கருத்து இருக்கிறது அது வெந்ததை வைத்து நான் எவ்வளவு வெந்திருக்கிறேன் பார் நீ வேகவே இல்லை என்று சொல்லுமளவுக்கு நான் வெந்தவனல்ல.

நிற்க! போன பதிவில் கேபிள்ஜியும், ஸ்வாமி ஓம்காரும் டெம்ப்ளேட் மாற்றச்சொல்லி இப்போது மாற்றிப்பார்த்தால் (இவர்கள் வெந்தவர்களா என்று எனக்குத்தெரியாது:), அட இதுவும் அவரின் பக்கமும் ஒன்று போலவே (இப்போ டெம்ப்ளேட் வடிவமைத்தவர் சொம்பு தூக்கியா? ) சரி இதுவும் எவ்வளவு நாளுக்கென்று தெரியவில்லை நண்பர் சிவராமனும் கமென்ட் போட முடியவில்லை என்று சொன்னார், இந்த பக்கமும் தொல்லை என்றால் மாற்றிவிடலாம், வேகும் வரை கிளர வேண்டியதுதான்:))

சரி இது எதற்கென்றால், என்னால் முடிந்த வரை பொதுவான இடுகைகள் படித்து பின்னூட்டம் இடுபவன் என்ற முறையில் நான் சொல்ல விரும்புவது, என்னுடைய பின்னூட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் வேறுபாடு இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள், அல்லது நீங்கள் முழுதாய் வெந்தவர் என்றால் இதற்கு இப்படி பின்னூட்டம் போடுங்கள் என்று சொல்லி விடுங்கள். நவம்பர் மாதம் பதிவு கண்ட அரை வேக்காடுதான் நான்.:) என்னின் அளவுகள் எனக்குத்தெரியும். ஒருவரைப்பற்றி தெரியாமல் அவரை பற்றி கமெண்ட் அடிப்பது வெந்ததற்கு அடையாளம் என்றால் நான் அரை வேக்காடாக இருக்கவே விருப்பம்.:) இது என்னப்பற்றி சொன்னதிற்க்கான விளக்கம் மட்டுமே, மற்றபடி சம்பந்தப்பட்ட பதிவுகள்/பதிவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது அவர் அவர் கருத்து அவரவர்க்கு அதை நான் மதிக்கிறேன்.  

என்னை தவிர்த்து நிறைய வெந்தவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சொம்பு தூக்கி, நல்ல பெயர். ஆனால் என்னுடையது கழுவ மட்டுமே நான் தூக்குகிறேன். இது என்னுடைய பதிலிட்ட பின் கழுவியது.

இந்த பதிவுக்காக என்னைப்பற்றி தெரிந்தவர்கள் மன்னிக்கவும். ’உதப்பி’க்காக நான் எழுத நினைத்தது வேறு......ப்ச்..


.

வயா நடுக்கம் ..மிக்க நன்றி நண்பர்களே, :))

போன பதிவின் கவிதைகள் காரணம் திரு.D.R.அஷோக்கின் கவிதை தான் :) அதை படித்ததும் தோன்றியதை எழுதினேன்.  ஆனால் நான் எழுதிவிட்டு பார்த்தால் திருவாளர்கள். நர்சிம், பாரா, தண்டோரா, வானம்பாடிகள் எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே அலைவரிசையில் எழுதி இருப்பதாகப்பட்டது, பாரா, வானம்பாடிகள் அவர்களின் பின்னூட்டம் அதை உறுதி செய்தது.

முதல் கவிதையில் பெட்ரோல் போட்டு இருசக்கர வாகனம் ஓட்டி, உணவென்று நம்பி நஞ்சை தின்று, புகையால் நானும் வானும் மாசு சூழ, இறப்பின் பின் வரும் புகையை என் வண்டியும், முன் வண்டியும் எனக்குச்சொல்வதாய் எழுதி இருந்தேன் (அப்படியா?)

இரண்டாவது ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியை பல்லி தின்ன பார்க்கிறது எனக்கு அழகாய் இருப்பது பல்லிக்கு உணவு, அதை தின்ற பல்லி, என் உணவில் விழுந்து நான் அதை வெளியில் கொட்ட தனது குஞ்சுக்காய் உணவு தேடிய காகம் சோறா, பல்லியா என்ற குழப்பத்தில், அதே உணவுக்காய் ஒரு நாயும், பூனையும் சண்டை இடுவது போல எழுதி இருந்தேன். (சத்தியமா நம்புங்க ! )

நீங்க வேற விதமாயும் கற்பனை செய்து கொள்ளலாம் ::)) FULL RIGHTS TO YOU ALL.:)

ஹும்ம் இதெல்லாம் யாராவது பிஹெச் டி பண்ணி சிலாகிக்க வேண்டியது. நானே உரை எழுதா வேண்டியதா போச்சு.. :)) தமிழ் தொண்டில் இதெல்ல்ல்லாம் சாதா'ரணமப்பா'.

சரி :: உச்சீவி என்றால் =  return to life, get a new lease of life, மரணத்தினின்று தப்பிப் பிழை; என்பதுதான்.

கீழ் வரும் தலைப்புகளில் ஒன்றில் ஒரு பதிவு வரும் எது உங்களுக்கு பிடித்த தலைப்பு - சொல்லுங்கள்:))

உதபானம்

உதப்பி

வயா நடுக்கம்

----------------

24.02.2010 திரிஷா கையில் பூவைத்திருக்கும் படம் போட்ட ஆனந்த விகடனில் 34  ம் பக்கத்தில் 'சுஜாதாவை பற்றி ரங்கராஜனும் ரங்கநாதனும்' மற்றும் 48-ம் பக்கத்தில் செய்..செய்யாதே என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ் பக்கமும் எனக்கு மிகவும் பிடித்தது. படித்தீர்களா? அப்படியே பக்கம் 62-ம்..:))    


Take Care..:))

உச்சீவி..ல கோடி ஆண்டுகள் முன்
மண்ணிற் புதைந்த திட உயிர்களின்
திரவம் உறிஞ்சி மண்ணுள் இருந்த
கனிமங்களின் சேர்க்கையில் அரை வட்ட
கடிவாளம் முறுக்கி லாடமில்லா
புரவியின் இரு வட்ட கால்கள் கொண்டு
மரபணுக்கள் மாற்றிய மண் வாசனை
கழுவப்பட்ட ஆகாரம் மென்றுறிஞ்சி
உமிழ்நீரும் கெட்ட, உடல் குருதியும்
நஞ்சான ஒரு நாளின் பயணத்தில்
பிறவியின் முடிவில் வரும் புகையது
புரவியின் பின்னால் போக்கிக்கொண்டிருந்தது...


------------------------------


ண்ணத்துப்பூச்சியின் இறக்கை
கண்களுக்கு மட்டுமா விருந்து
பல்லிக்கும்தானே என்ற கவிதை
நெய்த பகலின் சாப்பாடு
தொட்டியில் விசிறிய கணத்தில்
சோற்றோடு விழுந்த
விரைத்த பல்லியை விளிம்பில் ஒரு காகம்
பொன் குஞ்சு கூட்டின் நினைவில்
முதலில் எதை கொத்துவதென்ற யோசனையில்
பூனையும், நாயும் முதல் சண்டையை
ஆரம்பித்திருந்தது...    
.

இதுதான் 'அது''அது' மேலே இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் டிக்கெட். இப்ப போய் விமர்சனம்னு எழுதினா அடிக்க வருவீங்க. நீங்களா படிச்ச என்னோட மொக்கைகள் நிறைய இருக்கலாம். ஆனா இதுதான் என்னோட மொத மொக்கை :)

சத்யம் போய் வருடங்கள் ஆச்சு, நெட்ல டிக்கெட் புக் பண்ணி (ஒரு பாப்கார்ன் சேர்த்து!) தியேட்டர் எப்படி மாறி இருக்குன்னு பார்க்கவும், ஆ.ஒ படத்த பார்க்க போனேன். படம் விமர்சனம் வேண்டாம், கடைசியில் a film by selvaraagavan அப்படிங்கறது எனக்கென்னமோ இந்த படத்துக்கான பிலிம் செல்வராகவன் வாங்கி கொடுத்ததை சொல்றாருன்னுதான் நினைக்கிறேன்.

அரங்கு நிறைந்திருந்தது. பல காட்சிகளில் மக்கள் இன்னும் விசில் அடிக்கிறார்கள், சிரிக்கிறார்கள். நிறைய காட்சிகளில் இன்னும் கூச்சலான கமென்ட் அடிக்கிறார்கள் (நொந்து போய்) தமிழ் படத்தில் புதிய முயற்சி என்பதெல்லாம் ஓவர் என்று நினைக்கிறேன், என்னை போல சினிமா தெரியாதவனிடம் யாராவது கேட்க்கும் பணம் கொடுத்து படமெடுக்க சொன்னால் ...

"சார் அந்த படத்துல ... அப்படின்னு ஆரம்பிச்சு .. மியூசிக், ஆர்ட், கேமரா, எல்லாரிடமும்  

 ஒரு சீன் வருமே அதே மாதிரி வைக்கணும்"
"அந்த மியுசிக் மாதிரி ஒரு பிட் "
"சார் புல் முகம் தெரியிற மாதிரி டைட் 'க்ளோஸ் அப்'ல இவங்க முகம் தெரியணும்.."
"சார் கப்பல மேலேருந்து காமிப்பாங்களே அந்த மாதிரி மூணு ஷாட்"
                          
இப்படித்தான் படமெடுத்திருப்பேன்.. இப்படித்தான் இந்த படமும் எனக்கு படுகிறது. ஒருவேளை செல்வா நிர்பந்தகளின் காரணமாய் இப்பிடி எடுத்தாரா??

ரீமாசென் முதன் முதலாய் பார்திபனை பார்த்து தன் முதுகில் புலி சின்னம் காட்டி அந்த கால தமிழில் பேசும்போது எனக்கு தொண்டை அடைத்து கண்களில் நீர் வந்தது சத்தியமாய் ஏன் என்று தெரியவில்லை! படம் முழுக்க இப்பிடி செய்யவைத்திருக்க வேண்டிய களம் ப்ச்...  

அடுத்த படமும் பார்ப்பேன் செல்வராகவன் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதல்ல இன்னும் உங்கள் படம் பார்க்க மக்கள் வருகிறார்கள் உங்களை மதித்து.....                  


போன பதிவுக்கு பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி. இந்த படத்துக்கான விமர்சனம் இப்படியும் இருந்திருந்திருக்கலாம். இது புரிந்தால் படம் பாருங்கள் என்று நான் சொல்லி இருப்பேன்..:))) யாரும் திட்டாதீங்க ப்ளீஸ் நான் பாவம்..:))           

வாத்தியார் இந்த பதிவுக்குதானே நீங்க மைனஸ் குத்தனும்??:)
.      
பி.கு. மொத காட்சி பார்த்துட்டுதான் விமர்சனம் எழுதனும்னு சட்டமா???? 

'அது' எது?'அது' நானாக வரவைத்துகொண்டது 'அது' என்ன செய்யப்போகிறது என்று தெரிந்திருந்தும், தெளிவாய் சொல்லப்பட்டிருந்தும் நானே 'அதை' தெரிவு செய்தேன், விதி வலிது. நான் அதை பற்றி கவலைப்படவில்லை, 'அது' என்னை கூட்டிச்சென்ற இடத்தில் கலவையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் சொல்லப்பட்டிருந்ததாகவே இருந்தது வேறு வேறு த்வனியில் இருந்தாலும் நிகழ்வு ஒன்றாகவே இருந்தது. 'அதை' பார்த்தேன் எந்தவித சலனமும் இன்றி அப்படியே இருந்தது. 

நிகழ்வுகளில் நான் கலக்க முடியாது, கருத்துரைக்க முடியாது, ஓங்கி குரலெழுப்ப முடியாது 'அது' ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது. சத்தியத்தை மீற நினைத்தாலும் என்னால் முடியவில்லை. கண்கள் இருண்டது பசி எடுத்தது 'அது'வும் சத்தியத்தை மீறவில்லை கரிக்கும் ஒன்றை தின்னக்கொடுத்தது. மறுப்பேதும் சொல்லாமல் புசிக்கத்துவங்கினேன். 

ண் முன்னே பார்த்த நிகழ்வுகளை சகிக்க முடியவில்லை, சில என்னை வேதனை படுத்தியது. வாளெடுத்து வரவில்லை. வந்திருந்தாலும் 'அது' பெற்ற சத்தியம் என்னை ஏதும் செய்ய விடாது. விதியை வெல்ல முடியாது என்னை நோக முடிவு செய்தேன்.    

காரண காரியங்களுடன் எனக்கு விளக்கப்பட்டிருந்தும் ஏன் இங்கு வந்தேன்? 'அதை' கேட்கலாம் என்றால் என்னால் முடியவில்லை. 'அது' எனக்கான அடையாளத்துடன் நானாகவே இருந்தது. இது இதற்கு முன்பும் எனக்கு நடந்திருக்கிறது அப்போதும் 'அது' என்னோடு இருந்திருக்கிறது ஆனாலும் நிகழ்வுகள் வேறு வேறானதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் எதுவும் செய்ய இயலாது வெறுமனே எனக்கு முன்னால் நடப்பதை ஒரு ஜடமாக பார்த்துகொண்டிருந்தேன். 

வாளிப்பான ஒருவன் சவலை பிள்ளையை தோளில் கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட என் வண்டி எனக்காய் தயாராய் இருந்தது. நான் கண்ட நிகழ்வுகளோடு 'அது'வும் கூடவே இப்போதும் என்னூடே வந்து கொண்டிருந்தது. 

'அது' கூட்டிச்சென்ற நிகழ்வில் சிலர் காரித்துப்பினார்கள், என்னைப் பார்த்தா? அப்படித்தான் தெரிந்தது அல்லது 'அது' அப்படி என்னை நினைக்க வைத்திருக்கலாம், 'அதனை' கேட்கலாம் என்றால் 'அதனுடன்' என்னால் தர்கிக்க முடியவில்லை! 'அது' வெவ்வேறு பெயர்களுடன் எப்போதும் என்னை அழைத்துக்கொண்டே அல்லது நான் அழைத்ததாய் இருக்கிறது. இதோ இப்போதும் இதனை அசை போடும்போதும் 'அது' சாதுவாய் என்னோடே இருக்கிறது. 

என்ன செய்ய?                              

'அதனுடன்'  போகும்போது மனது சமநிலையாய் இருந்தது. வரும்போது அப்படி இல்லை. ஆனால் போகும்போதும் வரும்போதும் 'அது' என்னமோ ஒரே நிலையிலேயே இருந்தது.     

வடிவங்கள் வேறாய் இருந்தாலும் உங்களுக்கும் 'அது' தெரிந்ததுதான் 'அது' எது?

 கொஞ்சம் சொல்லுங்களேன்..! 


பி.கு. 

து இன்றைக்கு எனக்கு நடந்தது! தயவு செய்து கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் நாளை 'அதை' படமாய் காண்பிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய இயலும். நன்றி!      

வட்டம்..காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை
நொடிகளின் இடைவெளி சிறிதாய் இருந்தாலும்
யுகங்கள் கடந்து நடந்து கொண்டே இருக்கிறது

மேலும் கீழுமாய் ஒரே இடத்தில்
சுற்றிக்கொண்டே
வட்ட கடிகாரத்தில் வாழ்க்கை தத்துவம்

எனக்கு முன்னாலும் சந்ததிகள் இருந்தது
எனக்குப் பிறகும் இருக்கலாம்
சின்ன சின்ன அடியெடுத்து
யுகங்களின் பயணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்
உலகம் புரிய விழையும் என் மகனும்
அவனுக்கான படமெடுக்க ஆயத்தமாய்...

நொடி முள் நிற்கவே இல்லை...

இரண்டு காதலியும் - இருநூறு காதலர்களும்...


கேபிள் சங்கர் மற்றும் பரிசலின் புத்தக வெளியீட்டுக்காக கே.கே நகர் செல்ல நான் ஆயத்தமான நேரம் எனக்கு உடல் முடியவில்லை காலையிலிருந்தே ஜலதோஷமும், தும்மலுமாய் படுத்திக்கொண்டிருந்தது. ஒரு வழியாய் மாத்திரைகள் முழுங்கி வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.
------------------------------------------------------------
                                 வலது ஓரம் உண்மை தமிழன், ரோமியோ, சங்கர்   
                               தல அஜீத் சாரி திரு.நர்சிம், அன்புடன் மணிகண்டன்.   
                   வலமிருந்து இரண்டாவதாக திரு.வீடுதிரும்பல் மோகன் குமார்.
  
எதையோ காதலிப்பவர்கள்தாம் நாம், கேபிள், பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த நண்பர்கள் கூட்டம் அதை நிரூபித்தது. வழக்கம் போல இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படித்தான் பதிவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்:-). இதற்கு பகடியாக பின் நவீன பதிவு ஏதாவது வரலாம். எனவே அவர்கள் இதை படிக்க தேவை இல்லை. 

-----------------------------------------------------------


                                              'கதை இளவரசு 'விசா'. திரு.தராசு  
                                                              ஜ்வரோம் சுந்தர் 
                                 ரோமியோ, நான், அண்ணன் உண்மை தமிழன்   
                                 பாப்ஜி தண்டோரா, முரளி, பட்டர் ப்ளை சூர்யா   

                         நர்சிம், மணிகண்டனுடன் 'இளைக்காத'  தளபதி கார்க்கி..


 பாடி வட்ட மேம்பாலம் தாண்டி இறங்கும்போது செல்போன் சிணுங்கியது வண்டியை ஓரம் கட்டி பேச முயலும்போது லைன் கட். சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வண்டியை கிளப்பும்போது
"ஹலோ' ஒரு அழகு பெண் வடநாடு, பதுமை, அடடா ஹிந்தி தெரியாதே.
"எஸ்"
கேன் யு கிவ் மீ அ லிப்ட்"
"ஷ்யூர்" வாயில் வார்த்தை வந்தாலும் மனசில் ஏதோ உதைத்தது. அந்த பெண்ணும் வண்டியில் உட்கார்ந்தாள்.
"ப்ளீஸ் கோ பாஸ்ட்" உட்கார்ந்தவுடன் சொன்ன வார்த்தை. எதுக்கு இவ்வளவு அவசரம்? எங்கே போகவேண்டும்? ஆங்கிலத்தில் கேட்டேன், வண்டி திருமங்கலம் தாண்டி கோயம்பேடு நெருங்கும்போது இடித்துவிடுவது போல ஒரு ஆட்டோ அதிலிருந்து நாலு பேர் தடி தடியாய் இறங்கினார்கள்
------------------------------------------------------------
                                                   திரு.டி.வி.ராதாகிருஷ்ணன் 
                                                               ஜெட்லி, சங்கர்
                                                            மயில் ராவணன் 
திருவாளர்கள். குகன், அகநாழிகை வாசு, பிரமிட் நடராஜன், அஜயன் பாலா, பரிசல்      


எல் கே ஜி குழந்தைகளுக்கும், நம்மை போன்ற பதிவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை:) டீச்சர் இல்லாத வகுப்பறை போலவே பதிவர்கள் கூடும் இடம் இருக்கிறது. என்னவோ ஒரு அன்பு, ஈடுபாடு, சந்தித்ததும் சொல்லொனாத ஒரு மகிழ்ச்சி. எதிர்பார்த்தது போல இடம் பத்தவில்லை, புழுக்கம், சல சலப்புகள், தாமதம், ஆனாலும் என்ன? ஒரு நட்பு, ஒரு மனிதர்க்கான காதல் இங்கே காணக்கிடைத்தது. பரிசல் ஆகட்டும், கேபிள் ஆகட்டும் நாளை காலை இந்த நிகழ்வை பற்றி அசைபோட நினைவில் ஏதும் இருக்காது என்றே தோன்றுகிறது (அவ்வளவு படபடப்பு கண் மூடி திறப்பதற்குள் நிகழ்ச்சி முடிந்ததுபோல). எல்லோருக்கும் ஒரு பரபரப்பு, நிறைய அறிமுகங்கள், புதிய நட்புகள், மனித காதல். ஒரு சேர நிறைய மனிதர்களை காதல் செய்யும் மனிதர்கள் ஒரே அரங்கினில் இருக்க நிகழ்ச்சி நிறைவாய் இருந்தது.            
--------------------------------------------

"ஏய் யார்றா இவ?"
" ஹலோ மறியாதையா பேசு. இவ என் அத்த பொண்ணு."
"அடிங்.. யாருகிட்ட?, உட்டேன்னா மூஞ்சி எகிரிடும்,"
 எனக்கு உதறல் எடுத்தது.
" என்னடா இவன்ட்ட பேசிக்கினு மண்டையிலே ஒண்ணு போட்டு பொண்ண தூக்கு," ஆஹா பொண்ணு தான் பிரச்சனையா?" "அவள் என்னை இறுகி கட்டியவாறு
"பிளீஸ் ஹெல்ப் மீ,"                  
37 வயது யுத் நான். சண்டை? ஹும்ம் வாய்ப்பே இல்லை, சட்டென்று வண்டியை செல்ப் ஸ்டார்ட் செய்து ஆட்டோவை கடந்து சிட்டாய் பறந்தேன், அசால்ட்டாய் என்னை நினைத்தது அவர்கள் தவறு! ஒரு அழகான பெண் பில்லியனில் இருந்தால் சால்ட் கூட அசால்ட் ஆகும், ரிவர் வியு மிரரில் ஆட்டோ ஒரு புள்ளியாய் தெரிந்தது.
----------------------------------------------

விருந்தினர் துளிகள்::

திரு. பிரமிட் நடராஜன்..

கேபிள் சங்கர் தந்தையை நினைவு கூர்ந்தார். சினிமாவே வேண்டாம் என்று சொல்லியும் மீறி கேபிள்ஜி சினிமா சார்ந்து இருந்ததோடு, அதனுடே ஒரு தேடலை கொண்டிருப்பதையும், வந்த நண்பர்கள் கூட்டம் கண்டு பெருமிதம் கொள்வதாயும் சொன்னார். எல்லோரும் தமிழ்த்தாய் வாழ்த்து சேர்ந்து பாடியது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.:)

திரு.அமுதன் தமிழ்ப்பட இயக்குனர்::

தமிழ்ப்படம் முதல் காட்சி திரையிட்டு வெளியில் வந்ததும் டென்ஷனுடன் கூகிளில் படம் பற்றி ஏதேனும் ரெவியு வந்திருக்கிறதா என்று பார்க்க தமிளிஷ் பக்கத்தில் படத்தை பற்றி பதிவர்கள் சிலாகித்த விஷயம் படித்து படம் வெற்றி என்ற நிம்மதி கிடைத்ததையும், பதிவர் விமர்சனங்கள் படம் பார்க்க தூண்டுவது போல எழுதும் பொறுப்பையும் (கதையை போட்டு உடைக்காமல் ) சினிமாவில் பதிவுலக தாக்கத்தையும் புகழ்ந்தார்.        
               திரு.அஜயன் பாலாவுக்கு பொன்னாடை / பின் நவீனத்துவம் தலைவர் தண்டோரா 
                                                 ஆட்டோ கிராப் தள்ளு முள்ளு :))
திரு.அஜயன் பாலா..

பேசும்போது சில இடையூறுகள் இருப்பினும் அவர் உள்ளத்திலிருந்து சொல்லிய கருத்து மிக முக்கியமானது. அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் தனது எழுத்தை அச்சில் பார்க்க அவர் பட்ட கஷ்டங்கள், வேதனைகள், இன்றைக்கு ப்ளாக்-கில் எவர் வேண்டுமானாலும்   
தனது எழுத்தை உடனே வெளியிடும் வசதி, அதன் தாக்கம், நமது எழுத்தை வெளியிட யாரோ தீர்மானிக்கும் அதிகார போக்கிலிருந்து விடுதலை, எழுத்துக்கான ஒரு அங்கீகாரம், நிறைய பேர் கூர்ந்து கவனிக்கும் ( அதிகார வர்க்கமோ, பெரிய தலைகளோ) ஒரு விஷயமாக பதிவர்கள் ஆனது போன்றவற்றை உணர்ச்சிகரமாய் சொன்னார்.  கேபிள்ஜியின் சில கதைகள் தம்மை கவர்ந்ததாகவும், பல கதைகள் சினிமாவின் பார்வையோடு எழுதப்பட்டிருப்பதையும், சினிமாவின் தேடல்களில் தோல்விகளின் வடிகாலாக அவரின் சிறுகதைகள் அமைந்திருக்கக்கூடும் என்றார். பதிவர்கள் ஒரு மைய்யப்புள்ளியில் சமூகத்திற்கான சில விஷங்கள் எழுதும்போது நிச்சயம் அது கவனத்துக்குள்ளாகும் என்று வலியுறுத்தினார்.
                                          ஜெட்லி, புலவன் புலிகேசி, ரோமியோ 
                                                                 வந்த நண்பர்கள் 
அகநாழிகை திரு.வாசுதேவன்,  வழக்கம் போல நண்பர்களை வாழ்த்தி பேசினார். பின்னர் கேபிளும்(பேசும்போது வெறும் காத்துதான் வந்தது :), பரிசல் அவர்களும்(ஒரு டீ கடை தத்துவம் சொன்னார்-சூப்பர் :), பப்ளிஷர் திரு.குகனும் நன்றி சொல்ல, கார்க்கியின் தத்துவத்தோடு (நானும் நர்சிம் எல்லா பதிவுகளையும் படிக்கிறோம் அதற்காக ஏன்  பின் நூட்டம் போடலைன்னு கேக்காதீங்க:-)  தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி, அண்ணன் உண்மைத்தமிழனின் சிறிய வாழ்த்துரையுடன், தேசிய கீதத்தில் முடிந்தது. மீண்டும் (வழக்கம் போல) பதிவர் மீட்டிங் ஆரம்பித்தது. :))      
             
நான் சந்தித்த பதிவர்கள்: திருவாளர்கள்.T.V.ராதாகிருஷ்ணன், அத்திரி, அதி பிரதாபன், அதிஷா, நர்சிம், கார்க்கி, விசா, தராசு, அன்பேசிவம் முரளி, ஈர வெங்காயம், மோகன் குமார், அன்புடன் மணிகண்டன், உண்மை தமிழன், மயில் ராவணன், பட்டர்ப்ளை சூர்யா, புலவன் புலிகேசி, ரோமியோ, M.M.அப்துல்லா, காவேரி கணேஷ், ஜெயமார்த்தாண்டன், வெள்ளிநிலா சர்புதீன், சங்கர், ஜெட்லி, வெயிலான், தண்டோரா, சிவராமன்.            
           
மறக்க முடியாத காதலர் தினம். வாழ்க நண்பர்கள்.

பி,கு.:-
 நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கரண்ட் போனது - இசைஞானி போல இரண்டு பேரும்   எழுத்து ஞானிகளாக வருவார்கள் (சோசியம்) என்பதால் இருவரிடமும் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டேன். எனது கவிதைகளை படித்து எனக்கு பரிசளிக்க கண்டிப்பாய் வருவேன் என்று சொன்ன ஹாலிவுட் பாலாவை எவ்வளவு தேடியும் காணவில்லை!.    

சென்னை பதிவர் சங்கம் ஒன்று விரைவில் உருவாகும் என்று தெரிகிறது.

ப்ளாக்-கில் பதிவுகள் போடுவதை நிறுத்தி இனி பதிவுகளை SMS மூலமாக அனைவருக்கும் அனுப்ப இருப்பதாக அண்ணன் உண்மைத்தமிழன் சொன்னார் (ஆலோசனை திரு.அத்திரி)    

அடுத்த தமிழ்மண நட்சத்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு.சுரேகா.        
 ------------------------------------------

"வேர் யு வான்னா கோ" இப்போது இருவருடைய டெம்பரேச்சரும் ஒன்றாகி இருந்தது.

அவள் இன்னும் என்னை இறுக பிடித்திருந்தாள்.

 "ஐ டோன்ட் நோ.. ஆனா கொஞ்சம் வண்டிய நிறுத்துங்கள்."

என்ன இவளுக்கு தமிழ் தெரியுமா?

"என்ன அப்படி பாக்கறீங்க? எனக்கு தமிழ் தெரியுமான்னா? மிருதுளா தெரியுமா உங்களுக்கு?"  இப்போது எனக்கு வியர்த்தது. இவளுக்கு எப்படி மிருதுளா?

"உனக்கு எ.. ப்.. ப.. டி.. மிருதுளா?"

பதுமை சிரித்தது..

 இப்போது அவள் சிரிப்பு ரசிக்கும்படி இல்லை.

"நீ அவளுக்காக கொலை செய்தது கூட தெரியும்..."  

"மை காட்..."

இப்படி சொன்ன பெண்ணை நான் என்ன செய்தேன்????

அவள் யார்???

எதற்கு துரத்தப்பட்டாள்??

அது என்ன கொலை??

யார் ? மிருதுளா?? -படியுங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கிறது கேபிளின் லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும், மற்றும் பரிசலின் டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்.. ..:))
----------------------------------------
கிடைக்குமிடம்:-
நாகரத்னா பதிப்பகம் 
3A, டாக்டர் ராம் தெரு,
நெல்வயல் நகர், பெரம்பூர்,
சென்னை - 11. 
nagarathna_publication@yahoo.in    
Price: Rs.50/- EACH.


                                                              நன்றி வணக்கம் :))

சின்ன சின்ன கவிதைகள் ..

காதலுக்கானதாய் 
ரோஜா இருப்பதில் 
வியப்பில்லை 
சரி என்றால் பூ உனக்கு 
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..

-------

வரம் கிடைக்குமா?
என்று தெரியாமல்  
பகுத்தறிவே 
தடுமாறும். 
இல்லாத கடவுளுக்கும், காதலுக்கும் 
பூ கொண்டு போவதை.. 

--------

ஏனோ காதல் தின 
சிகப்பு இருதய 
பலூன்களும், 
ரோஜாக்களும் தன் 
வடிவத்தை இழந்து விடுகின்றன 
மற்ற தினங்களைப் போலவே! 
இலவு காத்த கிளிக்கதை 
இன்னும் முடியவில்லை... 


Happy Valentines Day ..::))

தள்ளி திரிந்த காலம்..

காதலர் தின சிறப்பு பதிவு - இரண்டு. (கொசுவத்தி)


இதற்கு முன் முகிலன் பக்கத்திலிருந்து ஒரு தொடர்கதை இரண்டாம் பாகம் எழுதினேன். இப்போது அவர் டீன் ஏஜ் வாழ்க்கை கொசுவத்தி சுத்த அழைத்திருக்கிறார்.:) எனக்கு பின் இதை தொடர வழக்கம்போல நான் யாரையும் பெயர் சொல்லி அழைக்க விரும்பவில்லை விருப்பமிருக்கும் நட்புகள் யாரும் தொடரலாம்.. (கண்டிப்பாய் தொடருங்கள்:) முன் குறிப்பு: நான் காதலித்தபோது காதலர் தினம் எல்லாம் இல்லீங்க. 10 வருஷமாதான் இந்த பொங்கல் எல்லாம்..:))


----------

சாரி முகிலன் என் டீன் ஏஜ் வாழ்க்கையே இப்படித்தான் இருந்தது:). என் தந்தை கொடுத்த சுதந்திரம் தம்/தண்ணி எல்லாமே திருடாமல் அடித்ததால் அவ்வளவு சுவார்ஸ்யமாயில்லை “அப்பா இன்னிக்கு பார்ட்டி ஒரு பீர் அடிச்சிட்டுத்தான் வருவேன்” .
ன்னடா ஆச்சு ரிசல்ட்? டென்த் போய்டுவியா?”.“ஃபெயிலும்மா.” கண்களில் கண்ணீருடன் நான் சொன்னபோது, ”விடுடா நானே பல முறை எக்ஸாம்ல ஃபெயில் ஆயிருக்கேன் அடுத்த முறை பாஸாயிடலாம்,இதுக்கு போய் அழுதுகிட்டு, ஆனா இங்க வேண்டாம், சென்னைக்கு போய்டு” அப்பாவின் அந்த அன்புதான் என்னை எதிலும் ஃபெயிலாகாமல் இன்னும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.


குரங்கு பெடல் அடித்து முட்டி ஒடிய சைக்கிள் ஓட்டிய தழும்புகள், ”ஷங்கர் இந்தாப்பா கணக்கு பேப்பர். ரெண்டு மார்க் வாங்கி இருக்க அப்பாவ கூட்டிகிட்டு வா கண்ணு,” டான்பாஸ்கோ பள்ளி டைரியின் நடுவிலிருக்கும் ரோஸ் நிற பக்கத்தில் ஒல்லியாய் உயரமாய் கண்ணாடி போட்ட கணக்கு வாத்தியார் டியூஷனுக்கு நான் வராத கடுப்பில் எழுதியபோது மற்ற நண்பர்கள் பயத்துடன் பார்க்க, ”அப்பா இன்னிக்கு ஸ்கூல் வாப்பா”, ”ஏண்டா?” ”எனக்கு கணக்கு வரலை, அரை பரிட்ச்சையில ரெண்டு மார்க் தான், என்னை ஹிஸ்டரி செக்‌ஷன் மாத்திடு, உடனே சைக்கிளில் என்னுடன் வந்த என் அப்பா ஹெட்மாஸ்டர் ஃபாதரிடம் ”என் புள்ளைக்கு கணக்கு வராதுங்க, ஹிஸ்டரிக்கு மாத்திடுங்க..” காதலன் படத்தில் பீர் பாட்டிலுடன் வரும் அப்பாவைவிட என் அப்பா ரொம்ப ஃப்ரெண்ட்லி..:) 

மெட்ராஸிலிருந்து வந்த சித்தி பையன்கள் ”வாடா முட்டி பீஸ் விளையாடலாம்” னு கோலி விளையாட கூப்பிட்டுபோய் என் கை விரலின் முட்டிகளை ரத்தத்துடன் பார்த்து ரசித்த வில்லத்தனம். கிரிக்கெட் விளையாடப்போய், சச்சினுக்காய் அதை விட்டுக்கொடுத்த பெருந்தன்மை.

ச்சி ஒக்காருடா” ஒரு டிசம்பர் கடைசி நாள் இரவில் ரமேஷ் யமஹா பின் சீட்டை காட்டி கூப்பிட்டபோது அவன் நூற்றுப்பத்து கிலோமீட்டர் வேகத்தில் சொன்னது ”மாம்ஸ் ஜம்ப் னு கொரல் குடுத்ததும் கரெக்ட்டா ஜம்ப் பண்ணிடு என்ன,” ”ஏண்டா” ”திடீர்னு எதிர்க்க எவனாவது வந்தா உயிர் தப்பிக்கனும்ல,” ”டேய் நான் வீட்டுக்கு ஒரே பையன் டா, ” அதனாலதான் உன்ன கூப்ட்டு சொன்னேன், வேற எவனாவதா இருந்தா நோ வார்னிங்”. வேலூரின் குளிர் கண்களில் வழிந்த நீரை உரைய செய்து நான் வண்டியை நிறுத்த சொல்வதற்கு முன் ஏழு கிலோமீட்டரை நொடிகளில் கடந்து சி.எம்.சி அருகில் வண்டியை நிறுத்தி ஹாப்பி நியூயியர்டா” மறு ஜென்மத்தில் நம்பிக்கை பிறந்தது அப்போதுதான். சரி போதும் மிச்ச சுய புராணங்கள் பதிவுகளுக்காய் ரிசர்வ்ட். இப்போ சீசனுக்கு ஏற்ற பதிவு..(திங்கள் வரை என் தொந்தரவு இல்லை..!)

நான் அழகாத்தானே இருக்கேன். ஏன் எனக்கு மட்டும் ஒரு காதலியும் கிடைக்கவில்லை..?

ம்புங்கள் சாதா போனும், கறுப்பு, வெள்ளை தொலைக்காட்சி பொட்டியும் பரவலாய் வருவதற்கு முன்பே அதாவது நான் 6-வது வகுப்பு படிக்கும்போதே எனக்குள் காதல் வந்துவிட்டது (நான் அவ்ளோ அரத பழசுதான் ஆனாலும் யூத்து ). 9-வது வகுப்பு டான்பாஸ்கோ மேன் நிலை பள்ளியில் ஃபெயில் ஆகும்வரையில் மேலே உள்ள கேள்விகள் மட்டுமே பிரதானமானதாய் இருந்தது. 

கூடப்பிறந்தவர்கள் யாருமில்லாத தனிமை, நிறைய புத்தகங்கள் எனக்கான வாழ்க்கையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்த சமயத்தில் 10ஆவது வரையாவது படிக்க வைக்கும் முயற்சியில் என் தந்தை என்னை அனுப்பியது சென்னைக்கு. அங்கே நான் சேர்ந்தது கோஎட் பள்ளி, அப்போதும் எனக்கே எனக்கான ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் தேடலில் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

துவரை படித்துவிட்டு என்னை சரியான ரோமியோ, Girls Pick என்று நினைத்திருந்தால் ப்ளீஸ் நான் ரொம்ப பாவங்க, அதாவது பொன்னுங்களே நம்மள தேடிவந்து நீ ரொம்ப அழகா இருக்க ன்னு சொல்லி, க்ளுக் ன்னு சிரிக்கனும்னு ஆசப்பட்ட ஒரு பாவ ஜீவன். (அடப்பாவி நீ பாவமாடா..?? )

பிறகுதான் ’பாகு’ சித்தரின் அருள் வாக்கு படிக்க கிடைத்தது..

பெண்களை கவருவதில் முதல் வழி கண்டுகொள்ளாமலிருப்பது. அவள் அழகை கண்டு வாய்பிளக்காமலிருப்பது, எல்லா நேரங்களிலும், அமைதியோடு பேசுவது, தடுமாறுகிறவனை எந்தப்பெண்ணும் மதிப்பதில்லை.’

நான் படித்த அதிக பட்ச காதல் இலக்கியம் இவ்வளவுதான். ஆனால் இன்றைக்கும் இதுதான் சக்சஸ் பார்முலா (அட்லீஸ்ட் - எனக்கு) ஆனாலும் பெண்களை விட கூச்சம் எனக்கு அதிகம். இரண்டு பெண்கள் எதிரே வந்தாலும் எந்தப்பக்கம் எஸ்கேப் ஆகலாம் என்று யோசிப்பேன். வலிய வந்து யாராவது பேசினாலும் பதில் பேசுவதற்குள் நாக்கு உலர்ந்துவிடும், ஏன்? தெரியாது. ஆனாலும் என் வாழ்வில் செம்புலப்பெயனீர் போல தானே வந்து கலந்தவர்கள் பல பேர்..

சென்னையில் மீண்டும் 9-ஆவது, ஒரு வழியாய் 10-ஆவது படித்து பாஸாகி 11,12 ம் வகுப்பு படிக்க டான்பாஸ்கோவையே தேர்ந்தெடுத்தேன் (என்னை ஃபெயில் பண்ணிட்டீங்கல்ல இங்கேயே பாஸாகுறேன் பார் +2 என்ற வெறி) உங்களுக்கு தெரிந்த சிவராமன் முதல் பல நட்புகள் கிடைத்த நேரம் அதுதான் (என்னது ஏற்கனவே ஃபெயிலாகி இப்போ 11வது சேர்ந்து சிவராமன் க்ளாஸ்மெட்டுன்னா இன்னும் அரத பழசான்னு கேட்க்கறீங்களா?? ஸ்டில் யூத்துதான் ஒண்டிக்கு ஒண்டி எங்க வேணாலும் பெட் வெச்சிக்கலாம்:). 

டான்பாஸ்கோ பள்ளியின் பின்புறம் ஆக்சிலியம் பெண்கள் பள்ளி பச்சை தாவணி, வெள்ளை மேல் சட்டையில் தேவதைகள் சைக்கிளில் போவதை தரிசிக்க பள்ளி விட்டவுடன் நிறைய பேர் கேட்டின் இடது புறம் திரும்ப நான் மட்டும் வலது புறம் திரும்பி வீட்டிற்கு செல்வேன். (அப்போ இலக்கியம் தேடி சிவராமன் சென்னைக்கு சென்றதெல்லாம் சத்தியமாய் எனக்கு தெரியாது. அதுசரி யாரோட காதலையும் யாரிடமும் சொல்லாத ஒரு நட்பு வட்டம் அது..:)

10-ஆவது படிக்கும்போது முதல் காதல் நான் படித்த பள்ளி ஆசிரியரின் பெண், ஒரே வகுப்பு. அவளின் தைரியம் சக நண்பர்களுக்கு பயத்தை தர என்னை கோர்த்து விட்டார்கள், ட்ராயரும், கையில்லா பனியனுமாய் பி.டி வகுப்புக்கு வரிசையில் செல்கையில் அவள் சிரிக்கும் நமுட்டு சிரிப்பு அவளுக்குள் என்மீதான ஈர்ப்பை சொல்லியது. ”அவன் ஒரு வெள்ளை உளுவை, அவனை போய் லவ் பண்றியேடி” என்ற சக தோழிகளின் கேலியையும் மீறி அது வளர்ந்தது,  பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பாக என் பெயரிட்ட விலாசம் தாங்கிய முதல் கடிதம் பொங்கல் வாழ்த்தாய் வந்து சேர்ந்தது. ஆயிரம் கடிதங்கள் அதன் பின் வந்து விட்டாலும் அந்த முதல் கடிதம் அப்படியே பதிந்துவிட்டது.  இரண்டே வருடங்களில் நண்பர்களாலேயே வளர்ந்து, அவர்களாலேயே மலர் வளையம் வைக்கப்பட்டது.

ரு சினிமா, எத்திராஜ் கல்லூரி முன் அவளுக்கான அவஸ்தை தவம், அந்த கூவம் பாலத்தை தாண்டி நேரே போய் ஆவின் பார்லரில் ஐஸ் கிரீம் சாப்பிட்டது, ஒன்றாய் பார்த்த அரங்கேற்ற வேளை படம், காதலுக்கு ’சுபம்’ போட்ட புல்லா அவென்யூ திரு.வி.கா பூங்கா, அந்த காதலின் எச்சங்களாய் மிச்சமிருப்பது இவை மட்டுமே.

ந்த பிரிவில் எல்லாரையும் போலவே பெண்களை வெறுக்கத்தொடங்கினேன். மூன்றே மாதத்தில் வேறொறுத்தி வந்தாள், ஒரு பெண் என்பவள் யார்? அவளின் குணங்கள் என்ன? ஒரு ஆண் பெண்ணை எப்படி அணுக வேண்டும்?, காதலின் உச்சம் என்ன? உயிரை பிடுங்கி எறியும் முத்தம் எது?, பெண்மையின் வாசனைகள், கோபம், அழுகை, சிரிப்பு, கேலி, அசரவைக்கும் அழகு, காதல் இன்னபிற ஈரத்தோடு இந்த களிமண்ணை நோக்கி தினம் வருவாள் பார்க்கும் நாளெள்லாம் என்னை வைத்து பொம்மைகள் செய்வாள்.

ன்றைக்கும் எனக்கான பெண்களைப்பற்றிய புரிதலின் போதி மரம் அந்த பெண்தான். ஆங்கிலத்தில் மாதங்களின் ஸ்பெல்லிங் கூட சரியாக சொல்லத்தெரியாத என்னை இரண்டு இன்ச் அளவிற்கு ஆங்கில புத்தகம் படித்த பெண் கிறங்க கிறங்க காதலித்தாள். எந்த வித எதிர்பார்ப்புமில்லாத அந்த காதல் எனக்கு கற்று கொடுத்த பாடங்கள் அதிகம். அது மோகத்தை விட புரிதலை நோக்கி என்னை கூட்டிச்சென்றது. ஒரு கட்டத்தில் சட்டென்று அதுவும் முறிந்துவிட அதன் பின் வாழ்வில் காதல் சொல்லி வந்த பெண்கள் நிறைய பேர் டீன் ஏஜ் தாண்டியும்..                      
             
வெவஸ்தையே இல்லையா? இதுக்கு பேர் காதலாய்யா ன்னு கேட்டீங்கன்னா? தெரியல. உங்கள எனக்கு பிடிச்சிருக்குன்னு ஐ லவ் யூ ன்னு ஒரு பெண் முகத்த பார்த்து சொல்லும்போது நான் திரும்ப பதில் மரியாதையா அவங்கள காதலிச்சிருக்கேன்ன்னுதான் சொல்லமுடியிது (அல்லது அப்படித்தான் என் ஜீன்களில் எழுதப்பட்டிருக்கிறது). Is it Love or Lust? என்று மீண்டும் கேட்டால் நிச்சயம் Lust இல்லை என்று என்னால் சொல்ல முடியும். அப்ப காதலா? என்றால் ஒரு உணர்ச்சி பொங்கும் அந்த அனுபவத்தை நட்பு என்று என்னால் சொல்ல முடியவில்லை. என்னிடம் காதல் சொன்னவர்களும் நட்பு என்பதை பிரயோகிக்கவில்லை. ஆனால் மனதறிந்து யாரையும் நான் ஏமாற்றவில்லை, ’சத்தியமா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொல்லி மேலே கை வைத்ததில்லை. எப்படி என்னை காதலிப்பதாய் சொன்னபோது நான் மகிழ்ச்சியாய் வரவேற்றேனோ அதுபோலவே ’சாரிடா’ என்று எதுவும் சொல்லாது அவர்கள் பிரிந்தபோதும் சிரிப்போடே பிரிந்து மறைந்திருக்கிறேன் (ஆம் மீண்டும் யாரையுமே பார்க்கவில்லை/முயலவுமில்லை) .

ரு புரிதலோடே பிரிந்திருக்கிறோம். புரிதல் எப்படி பிரிவை தரும் என்றால் புரிதல் பிரிவை மட்டுமே தரும் வேதனையை அல்ல. சில காலம் என்னுடன் காதலாயிருந்த அந்த பெண்கள் இப்போது நல் வாழ்வு வாழக்கூடும். நிம்மதியாய் அவர்கள் உலாவிய ஒரு இடமாய் என் மனமும் இருந்திருக்கிறது என்பதில் எனக்கு பெருமைதான். 

ந்த 10 பேருமே என்னிடம் காதலை சொல்லியவர்கள், காதலுமின்றி நட்புமின்றி இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிரித்து யோசித்தபடியே, ”ஆல் த பெஸ்ட்” சொல்லி பிரிந்து போயிருக்கிறோம். ஆனால் கடைசியாக நான் சொல்ல விரும்பி காதலிக்கிறேன் என்று நான் சொல்லிய பெண் சிரித்தபடியே என்னை நிராகரித்ததோடு எனக்காய் தூது போனவரையே ”உனக்கு இவதான் கரெக்ட்” என்று ரெகமென்டேஷனுடன் திருப்பி அனுப்பினார்.:)) அட சரிதான் என்று அவரையே நான் தங்கமணியாகவும் ஆக்கிக்கொண்டேன்..:)) காதலுக்கு மரியாதை. இப்போதும் அந்த பெண்மணி நல்ல குடும்ப நட்பாகவே தொடர்கிறார். மேலே சொன்ன எல்லாமும் தெரிந்த என் மனைவியும் ”ஏங்க உங்க ரெண்டாவது லவ்வர் ரொம்ப அழகுங்க” என்று சொல்லும்போது ஏற்படும் உணர்வுகளுக்கு எந்த பெயரும் வைக்க மனமில்லாது சிரிப்போடே கடந்து போகிறேன்...:)) (அட அவங்களுக்கும் கொசுவத்தி இருக்குங்க..:-)         

ன் வாழ்வில் வந்த அந்த ஜீவன்களை, அறியாமலேயே என்னை செம்மைப்படுத்திய நல் மேய்ப்பர்களாகவே பார்க்கிறேன். காதலித்துப்பார்த்துவிட்டு அது வேஸ்ட் என்று சொல்வதற்கு முன்பு உண்மையில் காதலித்தோமா என்று கேட்டுக்கொள்வது நல்லது என்பது என் கருத்து. 

திகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும் (ஃபீலிங்ஸ் தாண்டி புரிதலோடு, மரியாதையோடு,). அது ஒரு மறு பிறப்பு போலத்தான். பெண்ணை/ஆணை நோக்கி மட்டுமே காதல் என்பது தேவை இல்லை தன்னை நோக்கியதாயும் இருத்தல் நலம். இன்னும் நிறைய எழுதலாம், ஆனால் அடிக்க வருவீர்கள்..:))  

Golden Moments Slip by
I Cannot Hold them Back
Don't ask me what and why
Expression is what i lack.
All that i can write to you
is that I have a Treasure
The meetings with you - though few
They were such a pleasure

.. 
..

As I think of you my love
my pen moves uninterruptedly
But there has to be a stop,
and I stop here.
.

காதலர்தின சிறப்பு பதிவு - ஒன்று..

நம்ம முகிலன் டீன் ஏஜ் காதல் பத்தி கொசு வத்தி சுத்த சொல்லி இருக்காரு (கவிதை கூடாதுன்னு கண்டிஷனோட:( அதனால அடுத்த பதிவு அதுதான், இது யூ டுயூப் ல மேஞ்சிகிட்டிருந்தப்போ கிடைத்த க்ளிப்.  பாருங்க..

கண்டிப்பா காதல சொல்லிடுங்க இல்லன்னா ...


.
அடுத்த பதிவில் கவிதை இல்லாததால் .. இன்னிக்கு..

யாரும் பறித்துவிடாமல்
நான்
காவலிருக்கும் 
ரோஜா தோட்டத்தில்
தேனீக்கள் சப்த்தமிட்டு
வந்துபோகிறது
நானும் அவைகளும்
ஒருபோதும் புறங்கையை
நக்கவில்லை...


------------------------------------------------

நீர் சொட்ட சொட்ட
துண்டு மறந்த
என் அவஸ்தையில்
ஈரக் கை மட்டும் காட்டி
வாங்க முனைகையில்
நம் இருவரின்
உணர்ச்சிகளை
நடுவிலிருந்த கதவு
மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
மரத்துப்போய்...

சுந்தர கண்டம்உரையாடல் சார்பாக கிழக்கு மாடியில் நேற்றைக்கு திரையிடப்பட்ட THE BEAUTIFUL COUTNRY படம் மனதை தொட்டுவிட்டது. அமெரிக்க வியட்நாம் போரில் ஒரு வியட்நாம் பெண்ணிற்கும், அமெரிக்க ராணுவ வீரனுக்கும் காதல் வந்து பிறந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி கள்ளத்தோணி ஏறி முதலில் மலேசியா சென்று, அங்கிருந்து கப்பலின் மூலம் அமெரிக்கா சென்று தன் தந்தையை காண செல்லும் கதை.


அமெரிக்கா வியட்நாமின் எதிரி ஒரு அமெரிக்கனின் மூலம் பிறந்த குழந்தை எதிரியின் குழந்தை. சுற்றமும் நட்பும் தரும் வேதனைகள், அலட்சியங்கள், எதிரே உள்ளவர் பாதங்கள் மட்டுமே பார்க்க முடிந்த சுதந்திரங்கள், தனது தாய் வேலை செய்யும் மேட்டுக்குடி குடும்பத்தில் அவளுக்கு தன் கண் எதிரே நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகள் எல்லாவற்றையும் தலை நிமிர்த்திபார்க்கமுடியாத, கேட்கமுடியாத அவல நிலையை அமைதியான, இறுக்கமான முகத்தினூடே கதையின் நாயகனாக வரும் இளைஞன் படம் முழுவதும் வெளியிட்டிருப்பது நம்மை அப்படியே பட களத்திற்கு எடுத்துச்செல்கிறது.

இடையில் கிடைக்கும் ஒரு சீனப்பெண்ணின் நட்பும் ஒரு அகதியாய் அனாதையாய் இருக்கும் இளம் பெண்ணிற்கு அதிகார வர்க்கம் தரும், இச்சை பிச்சைகளும் அதையும் வெறுமனே கண்டும் காணாமல் இருக்கும் கதாநாயகனின் நிலையும், உடலை வைத்தே நாயகனையும் அவனது தம்பியையும் அமெரிக்காவிற்கு கப்பலில் தப்பிக்க வைக்க அவள் செய்யும் உதவியின்போது "நீயும் கூட வா"  என்று அவன் அழைக்க "உள்ளே இறந்து நெடு நாள் ஆயிற்று நீச்சல் தெரியாததால் வெளியே இறக்க விருப்பமில்லை" என்று கூறும் காட்சிகள், மீறி அவளையும் தன்னுடே கப்பலுக்கு அழித்து செல்லுதல், இரண்டாயிரம் டாலர் பத்தாது என்று கப்பலில் முனையில் நிற்க வைத்து ஏஜென்ட் பேசும் பேரங்கள் போன்றவை படமக்கப்பட்டவிதம் அற்புதம்.


எந்த விதமான அடிப்படை வசதிகளுமின்றி கப்பலில் அமெரிக்காவிற்கு செல்லும் அகதிகள் படும் துயரங்கள் சமகால நம் இன மக்களின் அவலங்களை நிச்சயம் நினைவு படுத்தும். அதிலும் பாதிவழியில் இறந்து போகும் தன் தம்பியின் உடலை துணி சுத்தி கடலில் வீசும்போது ஒரு விசும்பல் கூட இல்லாமல் சோகத்தை நம்மில் காட்சிகள் ஏற்றுகின்றன. 

தன் கூடவே வரும் சீனப்பெண் அமெரிக்காவில் தனது வாழ்வாதாரத்துக்காய் சட்டென அமெரிக்க சூழலுக்கு மாறிப்போவதையும், தன் தந்தையை காணவேண்டுமென்ற நோக்கத்தில் வந்தவன் அதை மட்டுமே நோக்கி போவதையும் இருவருக்குமான காதலின் பிரிவின் மூலமே அழகாக படத்தில் சொல்லப்படுகிறது.

தன் தந்தையை காணப்போகும் வழியில் அவன் பார்க்கும் வியட்நாம் போரில் கண்ணி வெடியில் கை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள், வழியில் லிப்ட் கொடுக்கும் மனித நேயமிக்க கார் ஓட்டுனர், அத்தனை வருடங்கள் தந்தையின் மீது வெறுப்பை சுமந்தவன், தனது தாயை பற்றி தந்தை சொன்னதை கேட்டு சட்டென மாற்றமடையும் மன நிலை, அகதியாய் ஜெயிலில் இருக்கும்போது திடீரென உடையும் குழாய் நீரில் எல்லா கவலையும் மறந்து சேற்றில் விளையாடுவது. சிறுவனாய் இருக்கும் தம்பி கப்பலில் உடல்நிலை சரியில்லை என்பதை "அம்மாவ பாக்கணும் போல இருக்கு" என்ற டயலாக்கில் தெரிய வைப்பது. அமெரிக்கா வரை வந்த முதியவர் ஒருவர் கப்பலிலிருந்து கரைக்கு வரும் வழியில் இறந்து போவது என பல்வேறு விஷயங்கள் படம் நெடுக்க மிக சிறப்பான முறையில் கதையோடே படமாக்கப்ப்ட்டிருப்பது அழகு. இன்னும் நிறைய விஷயங்கள் நான் இதில் கூறவில்லை அது நீங்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.                

நல்லதொரு படத்தினை காண அழைத்த நண்பர் சிவராமனுக்கு நன்றிகள் பல.

வழக்கம் போல பதிவர் மாநாடு பிரபல பதிவர்களுடன் படம் முடிந்ததும் நடந்தது என்பதை கூறவும் வேண்டுமோ??    புதியதாய் ஒரு யூத்து பதிவர் (நிஜமாவே யூத்துங்க ) இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் (இது பதிவுலக உள்குத்துக்காக வெச்ச பெயர் இல்லையாம்:) ) வயலினோடு படம் பார்க்க வந்திருந்தார். அவர் கையில் இருந்த ஆறு விரல்கள் பார்த்து அப்போதே வந்த கவிதையை சங்கர் கேட்டு மயக்கமடைந்ததால் சற்று மாற்றி இங்கே..:))    


ஆறு விரல் ஞானமா?
அதிர்ஷ்டமா? தெரியாது..
ஆனால் நீ என்னை சுட்டி
குறை கூறியபோது 
ஒரு விரல் மட்டுமே என்னை காட்டியது 
நான்கு விரல்கள் உன்னை காட்டியது 
உன் ஞான விரலோ 
மண்ணை காட்டிக்கொண்டிருந்தது... .