பலா பட்டறை: 03/01/2010 - 04/01/2010

இன்னிக்கு செத்தா...???

எச்சரிக்கை :: சாவே வராதவர்கள் இதைப்படிக்கவேண்டாம்..!!20 நாட்களுக்கு முன்பு...

ஹலோ 


சொல்லுங்க பாலா சார்


ஷங்கர் எனக்கு சின்ன ஆக்சிடண்ட்


ஐய்யய்யோ எங்க சார் என்னாச்சு

இங்கதாங்க என் எஸ் கே நகர் ஆர்ச் பக்கத்துல, வலது கை ஃப்ராக்ச்சர், இப்ப ஆஸ்பிட்டல்லதான் அட்மிட் ஆயிருக்கேன். அந்த மெடிக்கல் இன்ஸூரன்ஸ் போட்டேனே அது நாளையோட முடியிது. ரினிவல் பண்ணனும், போக இப்ப ட்ரீட்மெண்ட்டுக்கு க்ளெய்ம் கிடைக்குமா?


கண்டிப்பா சார், கார்ட்ல இருக்குற நம்பர கூப்பிட்டு முதல்ல எந்த ஆஸ்பிடல்னு தகவல் சொல்லிடுங்க, அவங்க சொல்ற நம்பர குறிச்சுக்குங்க, எதுனா ப்ராளம்னா கூப்பிடுங்க, ரினிவல் நான் பார்த்துக்கறேன்.

இரண்டாம் நாள் மெடிக்ளைம் ரினிவல் செய்து அவரை பார்க்கப் போனபோது சிரித்தபடியே, சைட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அதே துடிப்பு.

என்ன பாலா சார் தனியா பிசினெஸ் பண்ண ஆரம்பிசிட்டீங்க, லைஃப் இன்ஸூரன்ஸ் ஓன்னும் பெரிசா சொல்ற மாதிரி இல்ல, ஒரு டெர்ம் பாலிசியாவது போட்டுக்குங்க, அப்படியே சேவிங்ஸும் ஆரம்பிச்சிடுங்க குழந்தைக்கு உதவும்.. ப்ளானிங் முக்கியம் சார். 

ஆமாங்க ஷங்கர், போடனும், கண்டிப்பா...


லேட் பண்ணிடாதீங்க..

:)

அன்றைக்கு அவர் சிரிப்பை பார்த்ததுதான், இதோ இப்பொழுது செல்பேசியில் அழைப்பு வந்தது. வீடு அருகில் ஷேர் ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்தவர் மீது அரசு பேருந்து மோதி அதே இடத்தில் மரணமடைந்திருக்கிறார். 34 வயது, வாழ்வின் கனவுகளுடனிருந்த மனிதர். இண்ட்டீரியர் டெக்கரேட்டர்,  இப்பொழுது..ப்ச்....

அவர் எப்போதோ பெங்களூரில் சிறிய தொகைக்கு எடுத்தவரையில் காப்பீட்டிற்கு க்ளெய்ம் கிடைக்க என்னாலான உதவி செய்வதாய் அவரின் சகோதரரிடம் சொல்லி இருக்கிறேன்.

அன்றே அவரை சற்று அழுத்தப்படுத்தி ஒரு பாலிசியை போடச்சொல்லி இருந்திருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சி அவரின் ஐந்து வயது குழந்தையை பார்க்கும்போது எனக்கு எழும். இது வரையில் யாரையும் நான் கட்டாயப்படுத்தியதில்லை. அதன் அத்தியாவசியத்தை சொல்வதோடு சரி. இனி கண்டிப்பாய் (யார்மூலமேனும்) எடுங்கள் என்று கட்டாயப்படுத்த / கண்டிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

பாலிசி - பாகம் 1
    
பாலிசி - பாகம் 2

இது காப்பீடு குறித்து நான் எழுதியது. படிக்காதவர்கள் படித்துப்பார்க்கலாம். அதில் ஒன்னும் பிரமாதமான கருத்துக்கள் இல்லீங்க , உயிரோடு இருப்பின் சம்பாதிக்கிறோம் குடும்பத்தை காப்பாத்தறோம், செத்தா? யார் காப்பாத்துவாங்க?

தறி கெட்டு வேகமாய் வண்டி ஓட்டும் நபர்களை
ங்கோத்தா தெவிடியாப்பையா நீ சாவேண்டா அதுக்கு ஏன் அடுத்தவன சாவடிக்கப்பாக்கறன்னு சண்டையிட்டிருக்கிறேன். கொஞ்சம் நிதானம் வந்தவுடன் மனதில் திட்டி இருக்கிறேன், பிறகு அதுவுமில்லாது வெறித்தபடி ஒதுங்கிப்போயிருக்கிறேன்.  ஆனால் இப்போது வாய் விட்டு திரும்பவும் திட்டலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.  ஏனென்றால் பஸ்ஸின் அடியிலிருந்து நண்பரின் உடலை வெளியே எடுக்க சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றி அக்கரையில்லாது இருக்கும், இதைப்படிக்கும் நண்பர்களே இறப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரும். சில விஷயங்கள் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குமெனில் அதை செயல்படுத்த தயங்காதீர்கள். இது பற்றி தெரியாதவர்களுக்கும் தயவு செய்து விளக்குங்கள்..

அங்காடித்தெரு - சுடும் நிஜம்..
அம்பை நாணில் பூட்டி குறிபார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனைப்பார்த்து வித்தை சொல்லித்தந்த குரு கேட்டார்.

"என்ன தெரிகிறது? "

"மரம்"

"பிறகு?"

"கிளை"

"ம்ம்.. பிறகு"

"ஒரு பறவை"

”சரி வேறு”

”அதன் கண்கள்..”

அடுத்த சிஷ்யனைப்பார்த்து கேட்டார்..

”உனக்கு??”

”பறவையின் கண்கள் மட்டும்..”

”இதுவே சரியான பார்வை. அம்பை விடு இலக்கு விழும் வெற்றி உனதே.”

--

ஆனால் அங்காடித்தெரு படம் முதல் கோணத்தை சொல்கிறது. இப்படித்தான் பல தேவைகளுக்காக பலதரப்பட்ட மனிதர்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நம் குறி நமது தேவைகள் மட்டுமே. அதில் தவறில்லை ஆனால் அதனை நிறைவேற்றும் மனிதர்களுக்கும் நம் போலவே ஒரு வலியுண்டு, வாழ்வுண்டு, ஆசைகளுண்டு அதனையும் புரிந்துகொள்வோம், மதிப்போம் என்று உணரவைக்கிறார் இயக்குனர் திரு.வசந்த பாலன்.  

இயல்பான காட்சிகள், பாத்திரங்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு, திரு.ஜெயமோகன் அவர்களின் வசனம், போன்றவை படத்தின் பலம். உயர் ரக காரில் காலில் செறுப்பு கூட இல்லாது கடைக்கு வந்திறங்கும் முதலாளி (இவர்களின் வியாபார சூத்திரங்கள் அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு புரியும். என்ன இவர் வாட்ச் கட்டி இருக்கிறார், நான் பார்த்தவர்களுக்கு அது கூட கிடையாது!!)

 ஆண்டாண்டு காலமாய் இன்வெஸ்டிகேஷன் ஜர்னல்கள் (என்று சொல்லிக்கொள்ளும்) கூட முழுமையாய் சொல்லமுடியாத/இயலாத/சொல்லாத ஒரு களம் இங்கும் முடிந்தவரையில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கே ஒரு பெரிய சபாஷ் போடலாம்.    

சின்னச் சின்ன கதா பாத்திரங்கள் மூலம் பெரிய விஷயங்கள் சொல்லப்பட்ட விதம் அருமை. முக்கியமாய் கதாநாயகியின் தங்கைக்கு வரும் ஒரு பிரச்சனை/கையாண்டவிதம். கண் தெரியாத பெரியவர், குள்ளமான மனிதரும் அவர் மனைவியும், நாயகியின் தோழிகள், நாயகன்/நாயகியின் முறிந்த காதல், கடையின் கண்கணிப்பாளர், இப்படியாக படம் முழுவதும்.

படம் இயல்பாகவே சில கேள்விகளை உள்ளுக்குள் எழுப்பும்? அது நம்மின், மனிதத்தின் சுயபரிசோதனை பற்றியதாக, அது புரிய விரும்பாதவர்கள்/தெரியாதவர்களுக்கு மேலே சொன்ன பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.

கற்றுக்கொடுக்கப்பட்டவை தாண்டி கற்றலும் நல்லதுதானே.

வாழ்த்துகளும், நன்றியும்..

திரு.வசந்த பாலன் அவர்களுக்கும்,
மற்றும் கண்ணில் நிறைந்த அத்துணை கதாபாத்திரங்களுக்கும்.


மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.


.

பதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)பதிவர்கள் என்று ஆரம்பித்து சந்திப்பு/குழுமம்/சங்கம்/கட்சி/பேரவை என ஏதோ ஒன்றில் முடியப்போகும் நேற்றைய சந்திப்பிற்கு நானும் போனேன். 

சிறிய கால அவகாசத்தில் நட்புகளின் அடிப்படையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. முறையான தகவல்கள் அளிக்கப்பட்டது, ஒருங்கிணைப்பு மட்டுமே சில நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் அழைப்பு விடப்பட்ட நிலையில், அதற்கான இடமும், நேரமும் அறிவிக்கப்பட்ட நிலையில், லோகோவில் மட்டுமே சில கருத்து வேறுபாடுகள் வந்தது. முயற்சியில், நோக்கத்தில் என்ன செய்யப்போகிறீற்கள்?? என்பதனை அறிவிப்பு நிலையிலேயே கேட்க்கப்பட்டிருந்தால் ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. அது வரை எனக்குப்புரிந்த வரையில் (அல்லது பெரும்பாலான பதிவர்களின் புரிதலின் படி) ஒரு முறையான நட்புக்கூட்டம் ஆரம்பிக்க இருக்கிறது. அது சங்கமாக, குழுமமாக கட்சியாக இருப்பதற்கு தடைகள் இருப்பின், இது வேண்டும் அல்லது வேண்டாம் என்று முடிவெடுத்து கடந்து போயிருக்கலாம். யார் யாரைக் கட்டாயப்படுத்த முடியும்? எதற்கு இத்தனைக் குழப்பம் என்றே புரியவில்லை. எந்த குழுவும் வேண்டாம் நட்பு ரீதியாகவே இணைவோம் என்றால் அதனை பதிவாகவோ அல்லது பின்னூட்டமாகவோ சொல்லி இருக்கலாம். அல்லது இதனை ஆரம்பித்து வைத்தவர்களுடன் கருத்து வேறுபாடு இருப்பின் புறக்கணிக்கிறோம், எங்களுக்கு தேவை இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம். வேண்டியவர் கலந்து கொண்டிருப்பர், வேண்டாதவர் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கலாம். அதை விடுத்து இது போன்ற ஒரு நிகழ்வை நான் எதிர்பார்க்கவில்லை.

எல்லாவற்றையும் குழப்பி, கடைசியில், இல்லைன்னா சொல்றோம் இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றோம், என்பது போல, குழுவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை சொன்னபோது. கல்கி ஆஸ்ரமமே தேவலை போல இருந்தது. நண்பர்களே எந்த குழுவும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. தயக்கமிருப்பின் சேரவே வேண்டாம். நட்பு ரீதியான சந்திப்பு எப்போதும் தொடரும். நல்ல நட்புகளுக்கான ஒரு தளமாகவே இந்த வலைமக்களை நான் பார்க்கிறேன். அது தொடர வேண்டும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆரம்பிப்போம். கவர்ச்சியாய் ஏதேனும் சொல்லி ஆரம்பிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அது தேவையா? இதைத்தான் செய்யப்போகிறோம் என்பதை விட இதைச்செய்யலாம் என்பது சிறப்பானாதாக இருக்காதா? 

உண்மைத்தமிழன் அவர் கருத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டாக தந்தார். அதில் குறைகள் ஏதுமிருப்பின் அதனை பிறகு விவாதித்திருக்கலாம். அல்லது நிராகரித்திருக்கலாம். அதனையே ஒரு காரணமாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. எதற்கும் ஒரு துவக்கம் வேண்டும். பிள்ளை பெறுவது முக்கியம் சுக பிரசவமோ?, சிசேரியனோ? ஆனால் அபார்ஷன் வேண்டாமே. பிள்ளையே வேண்டாம் என்பவர்களுக்கு நிறைய சாதனங்கள் இருக்கிறது. 

துவக்கம் மட்டுமே செயல்படுத்த யாராலும் இயலும். அதன் நகர்வோ, முடிவோ, இப்படித்தான் போகுமென்ற துல்லிய கணிப்போ, யாராவது இவ்வுலகில் இதுவரை செயல்படுத்தி இருக்கிறார்களா?? நான் ஆரம்பிக்கும் ஒன்று இன்னும் ஐம்பது வருடங்களுக்கு ஒவ்வொரு நொடியும் இப்படித்தான் நகரும் என்று யராவது ஒரு பட்டியல் தாருங்கள். உங்கள் குழுமத்தில் நான் ஆயுட்கால மெம்பர் ஆகிறேன்.   

அதுவரை, நேற்றைய நிகழ்வில் இணைய விருப்பமுள்ளவர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள், ஒரு நல்ல துவக்கத்தை நல்லபடியாய் ஆரம்பிக்க, சிறப்பானதாக்க .. 

மெயில் அனுப்ப வேண்டிய முகவரி tamilbloggersforum@gmail.com

நன்றி. 

---

வெண்ணை. இனி இந்த பெயரிலேயே அவ்வப்போது சிலவற்றை எழுதலாமென்று இருக்கிறேன் சிலது பிடிக்கலாம் சிலது மரண மொக்கையாக இருக்கலாம் ப்ளீஸ் பொருத்தருள்க!!!


மனுஷன் உயிரோட இருந்தா நோ பிராப்ளம்
செத்தா ரெண்டு பிராப்ளம்

அவன புதைக்கறதா? எரிக்கிறதா?

எரிச்சா நோ பிராப்ளம்
புதைச்சா ரெண்டு பிராப்ளம்

அங்க புல்லு வளருமா? வளராதா?

வளரலைன்னா நோ பிராப்ளம்
வளர்ந்தா ரெண்டு பிராப்ளம்

அத மாடு தின்னுமா? தின்னாதா?

தின்னலைன்னா நோ பிராப்ளம்
தின்னா ரெண்டு பிராப்ளம்

அது பால் கறக்குமா? கறக்காதா?

கறக்கலைன்னா நோ பிராப்ளம்
கறந்தா ரெண்டு பிராப்ளம்

அத மனுஷன் குடிப்பானா? மாட்டானா?

குடிக்கலைன்னா நோ பிராப்ளம்
குடிச்சா ரெண்டு பிராப்ளம்

அவன் உயிரோட இருப்பானா? மாட்டானா?

உயிரோட இருந்தா நோ பிராப்ளம்
செத்தா ரெண்டு பிராப்ளம்

அவன புதைக்கறதா? எரிக்கிறதா????????????

(யார் வேண்டுமானாலும் தொடரலாம்..)

பேரூந்தில் காதல் - தொடர் பதிவு

"மச்சி" 
"சொல்லுடா நாளைக்கு பஸ் ஸ்டாப் வந்துடு கடைசி பஸ்லதான் காலேஜுக்கு போவோம் "
"அதுவரைக்கும்.." 
"நூல் விடவேண்டியதுதான்.." 
--
"ஏண்டா குமார் இப்படி இருக்கான்?"
"அதோ உள்ள ஒரு அக்கா புடவை கட்டிக்கிட்டு நிக்கிது பாரு, சார் அத டீப்பா லவ் பண்றார் அதான் இந்த பீலிங்.."
"அப்படியா மச்சி," 
"ஆமாண்டா இவனுங்க மாதிரி தினம் ஒண்ணு இல்ல நான் அவள  மட்டும்தான் சின்சியரா லவ் பண்றேன்."
அந்த பெண் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. 
--
அதிகம் பஸ்ஸில் பயணித்திருந்தாலும் அடுத்தவர் காதல்களே அதிகம் பார்த்ததுண்டு. மேல் கம்பியில் விரல்களின் தொடுதல்கள், ஊக்குவிக்கும் நட்புகள், ரன்னிங்கில், படிக்கட்டில் வீரசாகசம், புத்தகம் மாற்றிக்கொள்வது இதெல்லாம் என்னை ஈர்த்ததை விட அவர்களின் முக பாவங்களும், நடையின் வித்தியாசமும், மொத்த உடல் மொழியும் நான் இப்போதும் ரசிக்கும் ஒன்று. யாரும் தங்களை பார்த்துவிடக்கூடாது என்பதை கவனமாய் அவர்கள் கையாளும்போது, சுலபமாய் மாட்டிக்கொள்வது தெரியாமலேயே மாட்டிக்கொள்ளும் காதலர்கள் எங்கேயும் எப்போதும் காணக்கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.             

பேரூந்தில் காதல் என்பது சுலபமல்ல, நிறைய வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும், என்னைப்போல ஒரு வீரசாகசம் செய்யத்தெரியாதவனை துணைக்கு வைத்தால், தேவதையிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கும். ஒரு நாள் என்னையும் நண்பர்கள் பஸ்ஸின் முன் வாசல் பக்கம் ஓட விட்டார்கள். தேமே என்று ஓடும்போது திடீரென வண்டி வேகமெடுத்தது ஓடிபோய் பதட்டத்தில் முன் வாசலின் ஜன்னலை பிடிக்கப்போனபோது  அங்கே உட்கார்ந்திருந்த பெண்ணின் இடுப்பையும் தொட்டு என் கை ஜன்னலோரத்தை பிடிக்க வீல் என்று கத்திய அந்த பெண்ணின் சத்தத்தில் பஸ்ஸின் வீல் நின்றது. செயலின் வீரியம் புரிந்து உடனே தங்கச்சி சாரிம்மா (அப்ப ஸ்நேக் பிரபா என் ப்ரென்ட் இல்லீங்க:) என்றேன். முதுகு தப்பிய அன்று இது இனி வேலைக்காவது என்று முடிவெடுத்தேன்.

சிநேக முகம் காட்டி கண்களில் பேசும் பெண்கள்  எனக்கும் வாய்த்ததுண்டு, எவ்வளவுதூரம் இவள் பின்னால் செல்ல முடியும்?? என்ற கேள்வியில் புன்னைகையோடு முடித்துக்கொண்ட நாட்கள் அதிகம். ஆனாலும் அந்த ஒற்றை புன்னகைக்காய் பஸ்ஸில் மஞ்சு விரட்டும் பசங்களை பார்க்கும்போது வருத்தமும் உற்சாகமும் ஒன்றாகவே வந்து செல்லும்.

இதெல்லாம் நடந்தது வேலூரில், பணி நிமித்தம் சென்னை வந்தும் ரூபாய் இருநூறுக்கு ஐடி இல்லாத எல்லாப் பேரூந்திலும் ஏறும் பாஸ் கொண்டு சர்ச் பார்க்கிலிருந்து திருவேற்காட்டிற்கு, அமைந்தகரை வழியே தினமும் பயணித்த தொன்னூறுகளில், காதல் போய் உரசல்களே அதிகம் தென்பட்டது. இப்போதும் எப்போதாவது சென்னையில் பேரூந்தில் பயணிக்கும்போதும் இதுவே மித மிஞ்சியும் கண்ணில் படுகிறது. இது போக நான் அதிகம் கவனித்தது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களைத்தான் :) நிறுத்தத்தில் ஏறி பாலத்தின் திருப்பத்தில் பர்ஸ் அடித்து இறங்கி விடும் லாவகம் பர்ஸ் பாதுகாப்பு பற்றி எனக்கு சொல்லித்தந்தது.    

யாகூ சாட்  மூலம் நட்பான ஒரு மலையாள தோழியை பணி நிமித்தம் மும்பையில் சந்தித்தபோது அவரை விட வயதில் மிக மூத்த ஒருவருடன் கல்லூரி பஸ் பிரயாணத்தில் காதல் வயப்பட்டு அவருக்கு முன்பே திருமணம் ஆனது தெரியாமல் வீட்டைப்  பகைத்து, பாதி படிப்பில் திருமணம் முடித்து, முதலிரவில் விவரம் தெரிந்து, மீண்டும் படிப்பைத்  தொடர்ந்து முதல் நிலையில் தேறி, ஏமாற்றிய, தூற்றிய, அனைவரையும் உதறி மும்பை வந்து நல்ல வேலையில் தெளிவாய் வாழ்கிறார். 

கணவரின் முதல் மனைவி இறந்து அவர் பெற்ற ஒரே மகனை தன் ஊரிலிருந்து வரவழைத்து இப்போது தன் செலவில் மேற்படிப்பு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். திருச்சூரின் செல்வந்தர் வீட்டுப்பெண் அவர். ஏமாற்றிய கணவர் வெளிநாட்டில் இப்போதும் சந்தேகத்துடன் குத்திக்கொண்டிருக்க எதைப்பற்றியும் கவலை கொள்ளாது, தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து உழைப்பில் நிம்மதி தேடிவரும் அவரிடம் இன்னும்  ஏன் கணவரை சகித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு. தன் செயலால் பெற்றோரை நடை பிணமாக்கி தன் பிறந்த நாளின் போது  தன் பெயரை சொல்லி இறந்த தந்தையை  மும்பையிலிருந்து விமானத்தில் சென்றும் காணமுடியாது போனதையும், தன்னால் காப்பாற்ற முடிந்தும் தன் மீது பாசம் உள்ள தாயை உடன் பிறந்தவர்கள் மும்பை வர விடாது  தடுப்பதையும், யாரோ மூலம் அவருக்கு பணம் அனுப்புவதையும், மன நிலை சரியில்லாத தன் சகோதரிக்காய் தன் பாகத்திற்கான சொத்து முழுவதையும் தந்ததையும் சொல்லி, இது தான் செய்த அந்த தவறுக்கான ஒரு தண்டனையாய் நினைப்பதாய் சொன்னார். 

பிரிதலின் மூலம் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும், பிரிந்தவைகள் கிடைக்காது என்பதால் இது தன்னாலேயே தொடர்வதாய் சொல்லியபோது எக்காலத்திலும் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாது என்பது எனக்கு புரிந்தது.                  

எவ்வளவோ ஸ்வாரஸ்யமாய் சொல்ல நினைத்தும், பேரூந்தில் காதல் என்று நினைத்த போது என்னை பாதித்த இந்த பெண்மணியின் வாழ்வை தவிர்க்க இயலாமல் பதிகிறேன்.    
                               
தொடர அழைத்த சங்கவிக்கு நன்றி! 

             

சனிக்கிழமை சந்திப்போம்..
Web


சென்ற பதிவிற்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. பல வருடங்களாக வித விதமாய் வரும் அது போன்ற மெயில்களை அழித்துவிடுவேன். ஆயினும் இன்றும் இது தொடர்கிறதென்றால், இன்னும் அப்பாவி (அல்லது பேராசை) மக்கள் இவர்களின் வலையில் விழுகிறார்கள் என்றே தெரிகிறது. சில பின்னூட்டமும், மெயில்களும் அதனை உறுதி செய்தது. (நண்பர்களின் நலன் கருதி அவற்றை நான் வெளியிடவில்லை) மற்றபடி தாமதத்திற்கு ஓர் மன்னிப்பு பிளீஸ்..:))

---

சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சனிக்கிழமை சந்திப்பில் அனைவரையும் காண ஆவலாய் இருக்கிறேன். நல்ல துவக்கமாய் அமைய வாழ்த்துகளும், ஆவலும்..


நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
6. முனுசாமி சாலை, 
மேற்கு கே.கே.நகர். 
சென்னை: 

தொடர்புக்கு 
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308 
நர்சிம் ; 9841888663 
பொன்.வாசுதேவன் : 9994541010 

--கீழே உள்ளதிற்கும் ஜெட்லிக்கு நான் சொன்ன கவிதை எழுதவது எப்படிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. :))பச்சைய நாக்குகள் கருகி நிறைந்திருந்த அடர்கானகத்தில்
என் பாதங்களின் அழுத்த ஒலிச்சிதறல்களில்
குளுமையை அனுபவித்தவாறே
கோடாலிகொண்டு விறகெறிக்க வாகாயிருக்கும்
மரத்தினைத் தேடி அலைகின்ற கண்களுக்கு
விறைத்திருக்கும் அரிசி வேகவைக்கும்
சிந்தனையில் போதி மரமும் பொருட்டாயில்லை..

------------

ராஜ கோபுரம்
அண்ணாந்து தரிசனம்.
சிறியதாக்கும் ஒரு மலை
அதையும் தொழச்சொல்லிய ஒரு கட்டளையில்
முடிவில்லா வெளி
கோடுகளாலான
அளவுகளை நகைத்துக்கொண்டிருக்கலாம்...

பலா பட்டறையின் உலக பயணம்..

கேபிள்ஜியின் சிங்கை பயணத்தை தொடர்ந்து பலா பட்டறை சார்பில் ஒரு உலக டூர் அடிக்கலாம் என்று யோசிக்கும்போது....

ஒரு ஆரம்ப நிலை தமிழ் எட்ழுத்தாளனுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. சில சாம்பிள் மெயில்கள் கீழே. இத்துனை கோடி ரூபாய்களை வைத்து நான் என்ன செய்ய?? உலகின் எந்த நாட்டில் செட்டில் ஆனால் சிறப்பாக இருக்கும்??, அகில உலக வலையுலக நண்பர்களே எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்.


பி.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Ł1,000,000Pounds has been awarded to you in
the BRITISH PROMOTION.send your requirement
immediately such as your
Names,,,,,,,,,,,
Tel,,,,,,,,,,,,,,,,,,
Age,,,,,,,,,,,,,,,,
Address,,,,,,,,,,,,
Occupation,,,,,,,,,,
Country,,,,,,,,,,,,,,,
Email:bnl.claimdept@live.co.uk@@@@@@@@@@@

fromUk National Lottery 
reply-touk.nl.2009@msn.com
to
dateWed, Feb 17, 2010 at 1:25 PM
subjectUK Electronics Award‏
mailed-bybsnl.co.in
 Feb 17
You have won £1,532.720.00GBP in the UK Electronics Award,for claim you are adviced to send the following details,names,address,age,sex.
thanks
Dr harry raymond
@@@@@@@@@@@@
fromMr.Diallo T.Alidu 
reply-todia_tom_alidu@voila.fr
to.
dateThu, Feb 25, 2010 at 4:01 PM
subjectFROM MR DIALLO T.ALIDU.
mailed-bymsn.com
Mr,Diallo T.Alidu,
15 kolughu naba av.
Age:45years old.
Marital status: married with 2 children.
Occupation: banker.
Country: Burkina Faso .
City: Ouagadougou .

I am Mr.Diallo T.Alidu, working at the auditing and accounting department, BANK OF AFRICA (B .O. A) Ouagadougou Burkina-Faso West Africa, with due respects and regard I have decided to contact you on a business transaction that will be very beneficial to both of us at the end of the transaction.

I know that a transaction of this magnitude will make any one apprehensive and worried, but I am assuring you that all will be well at the end of the day.

i came to know you in my Private Search for a Reliable and Reputable Person to handle this Confidential Transaction, which involves the transfer of huge sum of Money to a Foreign Account requiring Maximum Confidence.

During an annual auditing of Account's in this bank, my department came across a very huge sum of money belonging to a deceased person who died in a tragic plane crash on the Lenana Peak, Mount Kenya, Saturday, the 19th day of July, 2003 together with his wife Jean, three of their children and their spouses, and four grandchildren, since then his fund has been dormant in his account with this Bank without any claim of the fund in our custody either from his family or relation before discovery to this development.

The said amount was U.S $8.2M (Eight million, two hundred thousand United States dollars).In fact I could have done this transaction alone but because of my position in the country as a civil servant (A Banker), we are not allowed to operate a foreign account and would eventually raise an eye brow on my side during the time of transfer because I work in this bank.

This is the actual reason why it will require a second party or fellow who will forward claims as the next of kin with affidavits of trust of oath to the Bank and also present a foreign account where you will need the money to be transferred into on your request as it may be after due verification and clarification by the correspondent branch of the bank where the whole money will be remitted from, to your own designation bank account.

I will not fail to inform you that this transaction is 100% risk free. On smooth conclusion of this transaction, you will be entitled to 45% of the total sum as gratification, while 50% will be for me, also the remaining 5% will be for any expenses such like telephone bills which most involved in this transaction and it will all be deducted out from the total money when it is been transferred to your account over there and also you have to understand that you and i will put hands together to make any expenses that come up in this transaction, Please, you have been advised to keep "top secret" as I am still in service and intend to retire from service after I have concluded this transaction with you.

I will be monitoring the whole situation here in this bank until you confirm the money in your account and ask me to come down to your country for subsequent sharing of the fund according to percentages previously indicated and further investment, either in your country or any country you advice me to invest in. All other necessary, vital information will be sent to you when I hear from you.

I look forward to receive your reply urgently. Show your readiness to assist me in this transaction by replying this proposal as early as possible and I want you to assure me of your capability of handling this transfer with trust by giving me the following information's about yourself:

1) Your age:...............................
2) Your occupation:.......................
3) Are you married?:...............................
4) Your mobile phone number.:...............................
5) Your location and full address.
6) Scan and send a copy of your identity card to me. :...............................
7) Your Fax Number: :...............................
8) Sex:.:...............................

I will tell you how you can apply to the bank as soon as i receive your response towards this mail. Extend my greetings to your family and you should please try and have trust on me in this transaction so that we shall achieve our aim together.

Do not take this very transaction as a joke, I am betting you right now that this is just nothing but reality, so you reply and ask me how you can apply for the text of application form of claim of the deceased fund from the bank. It is the foreign remittance departments that are responsible for transference of fund into your account over there.

KINDLY GET BACK TO ME WITH MY PRIVATE ADDRESS; dia_tom_alidu@voila.fr

Thanks from,
Mr,Diallo T.Alidu.
@@@@@@@
fromSHELL INTERNATIONAL LOTTERY 
reply-todisbursementdett01@gmail.com
to
dateThu, Feb 25, 2010 at 6:57 PM
signed-bysbcglobal.net


You have won the sum of $700,000.00USD in the SHELL INTERNATIONAL LOTTERY. All participants for the online version were selected randomly from World Wide Web sites through computer draw system and extracted from over 100,000 unions, associations, and corporate bodies that are listed online. Contact Mr. Donald Robert to claim winnings at; disbursementdept001@katamail.com with the details;

Full Name:
Complete Address:
Phone Number:

Congratulations!!!

Regards,
Mrs. Helen Woods.

&&&&&&
&&&&&&&&&
FROM THE DESK OF,MR.OBILLO UCHE.
DIRECTOR AUDITING AND ACCOUNTING UNIT,
AFRICAN DEVELOPEMENT BAKN.(A.D.B)
OUAGADOUGOU -BURKINA FASO.
PHONE NUMBER +226 787 000 41

Dear Friend,
This message might meet you in utmost surprise, however,it's just my urgent need for foreign  partner that made me to contact you for this transaction. I am a banker by profession from  Burkina faso in west Africa and currently holding the post of Director Auditing and Accounting unit of the bank.I have the opportunity of transfering the left over funds ($15.5 million) of one  of my bank clients who died along with his entire family on december 2003 in a plane crash.  Hence,i am inviting you for a business deal where by  this money can be shared between us in the ratio of 60/40 and 60 for me while 40 is for you .

If you agree to my business proposal.further details of the transfer will be forwarded to you as soon as i receive your return mail. have a great day. Yours Faithfully MR.OBILLO UCHE. NB,MAKE SURE YOU KEEP THIS TRANSACTION AS YOUR TOP SECRET AND MAKE IT CONFIDENTIAL TILL WE  RECEIVES THE FUND INTO THE ACCOUNT THAT YOU WILL PROVIDE TO THE BANK. DONT DISCLOSE IT TO ANY  BODY IN YOUR COUNTRY "PLEASE",BECAUSE THE SECRECY OF THIS TRANSACTION IS AS WELL AS THE SUCCESS OF IT

REGARDS
MR.OBILLO UCHE
DONT DISCLOSE THIS TO ANY BODY
#########

This is to inform you that your email has been  selected winner for cash prize  £1,500,000.00(British Pounds)  in Our  computerized email selection system (ESS)London Uk this week.Send claim form to Agent Edward Parker via Email:bnl_claimsgent01@msn.com

Fund Release Form :
1.Full Name:
2.Full Address:
3.Marital Status:
4.Occupation:
5.Age:
6.Sex:
7.Nationality:
8.Country Of Residence:
9.Telephone Number:

@#################!!!!!!!!!!!!!!!!!!!!$$$$$$$$$$$$$$%%%%%%%%%%%%%%%%%%%%%^^^^^^&&&&&&&&&&
வெண்ணை..நல்லா.. கல்ல நல்லாஆட்டுப்பா, வெண்ணைமாதிரி அரைக்கனும்

சரிண்ணே

தோ சூப்பர்வைசர் வர்றாம்பார், மோசமான ஆளு, எதுனா குறை சொல்லிகிட்டே இருப்பான்..

யோவ் உளுந்து மாவா?

ஆமாங்க சார்

இரு நீ புதுசுதான, அரைச்ச மாவ காமி... என்னைய்யா மாவ அரைச்சிருக்க, உளுந்து மாவு அரைச்சா சும்மா வெண்ணை மாதிரி இருக்கனும், புரியுதா? அப்பதான் வடை தின்றவன் நம்ம கடைய வாயிலயே வெச்சிருப்பான்..

சரிங்க..

ம்ம் சீக்கிறம் ஆவட்டும்.

----

என்ன வேலைய விட்டுட்டு போயிடலாம் போல இருக்கா?

இல்லண்ணே நானும் நல்லாதான் அரைக்கிறேன், ஒரு வாரமா பாக்கறேன், இந்த சூப்பர்வைசர் வெண்ணை மாதிரி அரை, வெண்ணை மாதிரி அரைன்னு சொல்லி வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான்..

நாந்தான் சொன்னேனே, அவன் எப்போமே இப்படித்தான் கொற சொல்றதே வேலை, வேற எதுவும் தெரியாது.

இல்லண்ணே இன்னிக்கு அந்தாளுக்கு நான் வெக்கெறேன் வேட்டு..

---

என்னய்ய்யா மாவு அரைச்சிட்டயா?

ஆச்சுங்க சார்..

ஹாங் காமி பார்க்கலாம்,

யோவ் எத்தன முறை சொன்னாலும் புரியாதா? எதுக்குயா வேலைக்கு வர்றீங்க? நீ என்ன அரைச்சி கிழிச்சிறுக்க, உளுந்து மாவுன்னா சும்மா வெண்ணை மாதிரி..

டேய் லூசு,  நீ கைய்யில வெச்சிறுக்கறத நக்கிப்பாரு, அது வெண்ணைதாண்டா, வெண்ண..

என்னது வெண்னையா??

ஆம்மாய்யா, நீதான் சொல்லுவியே வெண்ணை மாதிரி அரைக்கனும்னு, அதுக்குத்தான் மாவுக்கு பதிலா வெண்ணையே குடுத்தேன். அதையும் செக் பண்ணிட்டு வெண்ணைமாதிரி அரைக்கனும்னு சொல்றியே நீதான்யா வெண்ண, காலத்துக்கும் குறை சொல்லியே பொழுத ஓட்டறியே?? அதுக்குத்தான் இன்னிக்கு வெண்ணையே குடுத்தேன், அதையும் வெண்ணை மாதிரி அரைக்கனும்னு குறை சொல்ற பார், இதெல்லாம் ஒரு பொழைப்பாய்யா...????


.

க்ளக், க்ளக், க்ளக்

ரைட், போன பதிவில் வந்தது அடிக்கடி நிகழும் ஒன்றாயிருந்தாலும், முடிவினை உங்கள் யூகத்திற்கு விட்டுவிட்டேன். ஆனாலும் விதி (ரூல்ஸ்ங்க) என்ற ஒன்று நம்மை சுற்றி எப்பொதும் பின்னப்பட்டதாகவே இருக்கிறது, ஒரு நொடி அதை மறக்கும்போது நிகழும் நிகழ்வுகளை இப்படி பயம் கலந்துதான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்..:(( 
உலக தண்ணீர் தினம். மார்ச் 22 இதை பற்றிய சக பதிவர்களின் தொடர் இடுகைகள்..

மண், மரம், மழை, மனிதன் வின்செண்ட்
சிறு முயற்சி - முத்துலெட்சுமி
முத்துச்சரம் - ராமலக்‌ஷ்மி
மேலும் பதிவர்களின் இது பற்றிய பதிவுகள்  ( நன்றி நீச்சல்காரன்)

இங்கே, தினமும் தண்ணீர் தினம் கொண்டாடப்போகும்(!?) நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசம்தான். ஏதோ புண்ணியத்துக்கு மழை நீர் சேகரிப்பு என்ற ஒன்று செயல்படுத்தப்பட்டு, கண்ணெதிரே பயன் தெரிந்தாலும் இன்னும் சிறப்பாக உபயோகிக்காது இருப்பது குறையே. கடல் நீர் சுத்திகரிப்பு போய் காற்றிலிருந்து சுத்திகரிப்பார்கள் போல, பின்ன ஏரி குளமெல்லாம், பட்டா போட்டு, குப்பை போட்டு, சுத்தி இருக்கிற இடங்களெல்லாம் சிமெண்ட் போட்டு சுத்தமா மூடி, கதவு வைத்த சமாதிகளில் வாழ்க்கை வாழும்போதுதான் இம்மாதிரி தினங்கள் வந்து நினைவு படுத்துகிறது.  நம் வீட்டு தண்ணீர் தொட்டியின் அளவு, எத்துனை முறை அதனை காலி செய்து நிரப்புகிறோம், நம் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கான சராசரி தண்ணீர் செலவு என்ன? என்பதை கணக்கு செய்தால் தலை சுற்றுகிறது.

ஒன்பது சென்ட் இடத்தில் வெறும், இரண்டு சென்ட் மட்டுமே வீடு கட்டுகிறேன், மிச்சம் தோட்டம், செடி, மரம் இவைகளுக்காக. 20 அடியில் தண்ணீர் வந்த இடத்திற்கு நான் செய்யும் கைமாறு இதுவாகத்தான் இருக்க முடியும். நீர் சுத்திகரிக்கும் தாவரங்கள், மறு சுழற்சி, குறைவான நீர் உபயோகம் போன்றவை மூலமும், சூரிய சக்தி பயன்பாடு மூலமாகவும் இயற்கை சார்ந்த ஒரு வாழ்வு முறைக்காக, சிங்கார ந(ர)கரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தாலும், என் குழந்தைகளுக்கான படிப்பு வசதிகளில் சில குறைவுகள் இருப்பினும் எந்த தயக்கமுமில்லாது இந்த முடிவு மகிழ்ச்சியாகவே எடுத்திருக்கிறேன். குடி நீருக்காக குடம் கொண்டு அலைவதையும், லாரியில் காசு கொடுத்து வாங்குவதையும் பார்த்து மனது வெறுத்து போயிருக்கிறேன். இருப்பினும் தண்ணீர் என்பது ...

இதுவரை இது அரசியல்,

இப்போது வியாபாரம்

இனி

அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்குமாம்...

அதுவரையுமாவது

நிம்மதியாய்..

                              க்
                    ள
                க்

                க்
                      ள
                             க்

                                      க்
                                            ள
                                                 க்
(நண்பர்களே நீங்களும் இதுகுறித்து கண்டிப்பாக ஒரு பதிவு போடுங்க.. .. ப்ளீஸ்..)


விதி..

எவ்ளோப்பா?

முழம் 15 ரூவா தாயி

சரி 2 முழம் குடுங்க, ஆட்டோகார் கொஞ்சம் இருங்க பார்லர் போயிட்டு வந்திடறேன்..

-----

என்னாச்சி

ரீச் ஸ்டேக்கர் பிரச்சனை பண்னுது. கன்டைனர் தூக்கல

ஹைட்ராலிக்ஸ் எதுனா பிரச்சனையா?

இல்ல சார் இஞ்சின் அமுங்குது, லோட் எடுக்கல, ப்ரைம் மூவர்தான் பிரச்சனை,

சரி மெக்கானிக் யாராவது வரச்சொல்லுங்க, ஏகப்பட்ட லாரிங்க நிக்கிது..

சொல்லியாச்சு சார், ஆன் த வே

-----

ஏம்மா இப்படியா செலவு பண்றது, உன் புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் தெரியுமில்ல,?

இல்லம்மா அவர்தான் இப்பதானே கல்யாணம் ஆச்சி எனக்குன்னு யாருமில்ல இப்பதான் நீ இத்தன வருஷத்துல வந்த உறவு, கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம் உனக்கு என்ன வேணுமோ செலவு பண்ணிக்கோ, நீ சந்தோஷமா இருக்கத்தான் நான் சம்பாதிக்கிறேன்றார், நானும் சொல்லிப் பார்த்துட்டேன், கேக்கல, சரி அவர் சந்தோஷம்ன்னு விட்டுட்டேன்..

----

என்னாச்சுங்க?

லோட் எடுக்கல சார், எம்ப்டி கண்டெய்னர் தூக்கினாகூட அப்படியே அமுங்குது..

ம்ம்..  நல்ல டீசல்தான் யூஸ் பண்றீங்களா? ஃபில்டர் எப்ப மாத்தினீங்க?

டீசல் லோக்கல் பங்க்லதான் வாங்கறது, ஃபில்டர் மாத்தறதில்லசார் அப்படியே க்ளீன் பண்ணி போட்றுவோம்..

என்னங்க ஒரு கோடி ரூபாய்க்கு கிரேன் வாங்கிட்டு 1700 ரூவா ஃபில்டர் மாத்த யோசிக்கிறீங்க? கிடைக்கிற டீசல்லயே ஏகப்பட்ட கலப்படம், இதுல ஃபில்டரும் மாத்தலன்னா எப்படி? ஸ்டாக் இருந்தா ஸ்டோர்ஸ்லேர்ந்து எடுத்துட்டு வாங்க..

----

ஹலோ


சார்

ஏன்ப்பா லேட் ஆவுது லோடிங்?

கிரேன் பிரச்சனை சார், மெக்கானிக் பார்த்துகிட்டு இருக்காங்க சரியாகிடும், முடிச்சிடலாம் சார் ஹார்பர் லோடிங்..

சீக்கிறம்ப்பா, பதில் சொல்ல முடியல, போன்ல கத்தறாங்க..

----

சார் ஃபில்டர் இந்தாங்க..

ஸ்பின் ஆன் ஃபில்டர்தானே, ஒரு அசக்கு அசக்கி திருகினா வெளில வந்திடும், புதுசு சுலபமா மாட்டிடலாம், ஓரிங் கூட இல்ல, லீக் ஆவாது, இதப்போய் க்ளீன் பண்ணி போடறீங்களே? ம்ம் மாத்தியாச்சு.. இஞ்சின ஆன் பண்ணுங்க..

ஷ்ர்க்..

டொம்..

ஐய்யோஓஓஓஓ

---

ஹலோ

---
ஹலோ

---
ஹலோ(.....)

டச் (குட் & பேட், ஆல் இன்குலூசிவ்)


யிர்ப்பித்தே வருகிறது ஸ்பரிசங்கள்
சிலிர்ப்பு மட்டுமே தீர்மானிக்கும்
ஸ்பரிசத்தின் மொழி
சொல்லும் வார்த்தைகளற்ற
உணர்ச்சிக் குவியல்

யிரில்லாத உடைகளும்
சித்திரவதை செய்திருக்கிறது
கூட்டத்தினூடே எல்லா ஸ்பரிசமும்
நிறம் பிரிக்கும்வரை

வேட்கைக்கான நடுக்கங்களுடன்
ஆயத்த ஸ்பரிசங்கள் தேடி
உணர்ச்சிகளை திரியாய் உருட்டி
ஸ்பரிசக்குச்சி கொண்டு தீப்பிடித்து
வெந்து, தணியாமல் கனன்று
கடக்கும் காற்றில் சாம்பல்
உடல் நடுங்குகிறது...

ங்குகள் ஒளிர்ந்ததில் மக்கிப்போனது.
மாய உயிர்ச் சுழலின் தந்திரம்,
வட்டத்தின் தொடர் பயணம்,
நீந்தித் தீண்டித் தொடர்ந்துகொண்டே
முடிந்து, தீர்ந்து, முடியவிருக்கும் தருணத்தில்
இச்சுவர்களின் வண்ணம் விலகவாரம்பிக்கிறது.

னித் தவங்கள் தேவைப்படலாம்,
உணர்வுகளைக் குத்தும் பரிட்சைகளும்
வேட்கையின் கணங்கள் மீது சயனத்தின் வரம்
நினைவுகளில் ஸ்பரிசங்களை மீட்க முடியவில்லை
தொடர் சயனத்தின் அழுத்தங்கள் கொப்புளித்து வரலாம்

லியில்லா ரணத்தின் வீச்சங்கள்
ஸ்பரிசங்களுக்கு அருவெறுப்புத் தரக்கூடும்.
ஒரே போல்தான் உடல் நடுங்குகிறது
தளர்ச்சி மட்டுமே ஏளனம் செய்கிறது இருப்பை..


.

என்னை கவர்ந்த பத்து பெண்கள்.. (தொடர் பதிவு)விதி வலிது எனக்கு பிடித்த பத்து பெண்கள் பத்தி சகோதரி திவ்யாஹரி எழுத கூப்பிட்டிருக்காங்க. ரைட்டு ஏற்கனவே எழுதியாச்சேன்னு பார்த்தா, சொந்தமா இருக்கக்கூடாதாமில்ல..:(

சரி புடிங்க..ஏவாள்.

திருமதி.பாரதியார்.

என் தாயின் வயிற்றிலிருந்து என்னை வெளியே எடுத்து என் தாயை காப்பாற்றிய டாக்டர்.திருமதி.சுலோச்சனா

ஐடா ஸ்கடர், வேலூர் சிஎம்சி மருத்துவமனை துவங்க காரணமாயிருந்தவர்.

கஸ்தூரிபாய் காந்தி

அஞ்சலி டெண்டுல்கர்

கிரன் பேடி.

எஸ்.ஜானகி

கேட் வின்ஸ்லட்

அவ்வையார்.

------

வரிசை எல்லாம் இல்லைங்க - அப்படியே தோணினதுதான்..:)

இப்ப ..


நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,

வரிசை முக்கியம் இல்லை.,

ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,

இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள் (இந்த வம்பே வேணாம்.. யார் வேண்டுமானாலும்/எல்லோரும் எழுதுங்க ப்ளீஸ்..)

----

கேபிள்சங்கரின் லெமென் ட்ரீ - ஒரு வாசித்த கோணம்..சிறந்த, மிகச்சிறந்த, கேவலம் என்பதெல்லாம் ஒரு எழுத்தாளனுக்கு தேவையில்லாத அடைமொழி என்பது எனது கருத்து. தான் பார்த்ததை, யோசித்ததை எழுத்தில் சொல்லத்தெரிந்த கலை எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. நாம் விக்கித்து போவதாலோ, கண்களில் தாரை தாரையாக நீர் வழிவதாலோ, அதுவே மிக உன்னதம் என சொல்வது மிகையே, உணர்ச்சிகளையும், உடலுறுப்புகள் எழுச்சிப்படுத்தும் வாக்கியங்கள் உள்ளடக்கிய எழுத்துக்கள் எல்லாமே படிக்கும் எல்லாருக்குமே அதே உணர்வைத்தருவதில்லை. அதி உன்னதமான எழுத்துக்கள் மட்டுமே நான் படிப்பேன் அதுவே மிகச்சிறந்தது என்று வாதிடும் எவரும் ஒரு முறை தனது வாழ் நாளில் கண்டதை அல்லது தான் வாழ்ந்ததை ஒரு படமாக எடுத்து பார்க்கும்போது உணர்ச்சிக்குவியலான தருணமாகவே இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் வறட்சியானதாகவே இருக்கும். யாரோ இறப்பது செய்தி, நம்மோடே இறப்பவரே துக்கம். எங்கோ மேலை நாட்டில் எழுதப்படும் புதினங்கள் கூட நம்மால் சிலாகிக்கப்படுவது நாம் அதனை நம்மில் பொறுத்திப்பார்ப்பதினாலேயே அன்றி வேறெதுவும் இல்லை. மிக உன்னதமான இலக்கியங்கள் ஒவ்வொரு நொடியும் உலகெங்கிலும் நிகழ்ந்துகொண்டேதானிருக்கிறது. நீங்களும் நானும் கவனித்தோ, கவனிக்காதோ தாண்டிய தருணங்களிலும் அவை நிகழ்ந்திருக்கக்கூடும், அந்த அலைவரிசையில் ஒத்துப்போன யாரோ ஒருவன் அதை ரசிக்கிறான், ஒரு படைப்பாளியாக அவனிருப்பின் அது வெறும் செய்தியாக இல்லாது புதினமாகவோ, படமாகவோ, ஓவியமாகவோ, கவிதையாகவோ, கதையாகவோ அது வெளியாகிறது. அல்லது அப்படி இல்லாதவனால் வெறும் தகவலாகவே சொல்ல முடிகிறது.           

நண்பர் திரு.கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணன் அவர்கள் எழுதிய சிறு கதைகளின் முதல் புத்தக தொகுப்பான லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் என்பதில் உள்ள 13 கதைகளும் தின வாழ்வில் நாம் பார்க்க, கேட்கக்கிடைக்கிற, சாதாரன நிகழ்வாக கவனிக்கத்தவறுகிற சம்பவங்களின் கோர்வையாகவே நான் பார்க்கிறேன். திரைப்படங்களில் தீராத ஆர்வம்கொண்ட இந்த நண்பரின் எழுத்து குறும்படங்கள் இவை எனத்தோன்றுகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு காட்சியை விரிக்கிறது.

முதல் கதையான முத்தம் மேலோட்டமாக பார்க்கும்போது விலைமகளின் பால் தீராத ஆசை கொண்ட ஒருவனுக்கு வலிய வரும் அது போன்ற ஒருத்தி தான் அணிந்து கொண்டிருக்கும் அடுத்தவர்களின் வக்கிரக்காலணிகளை அவனறியாமலே அவன் காலில் அணிவிக்கிற ஒரு நிகழ்வை சொல்கிறதாய் படுகிறது. முள்ளால் ஆன அந்த காலணி தரும் வேதனை அவன் மோகத்தை விலக்கி அவளை பெண்ணாய் உணர்த்தும் தருணத்தை சற்றே மிகைப்படுத்தி இருந்திருந்தால், ஒரு வேளை சிலாகித்து படித்துவிட்டு பின் ஏதோ ஒரு நாளில் எங்கேனும் விலகிய மார்பங்கங்கள் பார்க்குப்போது நமக்கு இந்த கதை மறந்து போக வாய்ப்புண்டு. ஆனால் இவர் சொல்லிய எளிமை விதம் நீங்கள் இது உங்களுக்கோ அல்லது தெரிந்தவருக்கோ நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே அடுத்தவரிடம் சொல்லி ஒரு கைத்தட்டலையோ, பாராட்டையோ உங்களுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது. நம்மில் அந்த காலணி ஏறும்போது அவ்வலி உடையோரை நாம் பார்க்கும் விதம் வேறாகலாம். வாழ்வில் நாம் கற்ற பெரும்பாலான விஷயங்கள் இது போலத்தான். மேலும் என்றோ நாம் செய்யும் சில அசாதரணமான காரியங்களை நினைத்துப்பாருங்கள் அது எழுதப்படாத ஒரு புதினமாக நம்மால் அடுத்தவருக்கு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். அது நானும் நல்லவனாய் இருந்திருக்கிறேன் அல்லது நானும் இப்படியெல்லாம் கேவலமாக இருந்திருக்கிறேன் என்பதை சொல்லி நம் காலணிகளை அடுத்தவனுக்கு ஏற்றும் முயற்சி.

இரண்டாவதான லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் வேறு கோணம், இங்கே ஒரு மது அருந்துகிற ஒருவனுக்கு கிடைக்கிற ஆச்சரிய அனுபவம். இதிலென்ன ஆச்சரியம் அனுபவம் என்று எண்ணலாம். இருக்கிறது மது அருந்த போகிறவர்கள் யாருமே நடைமுறை அனுபவத்திலிருந்து விலகி தன் நிலை மறக்கச்செல்லும் இடமாகவே மது அருந்தும் இடம் இருக்கிறது. மது அருந்தாத ஒருவனின் பார்வையில் அந்த இடம் கோமாளிகளின் கூடாரமாக இருக்க அந்த பானம் அருந்துபவர்களுக்கோ அது போதிமரம். ஞானம் பிறக்கும், தெளிவில்லாத நிலையில் தெளிவு பிறக்கும், பிடிமானமில்லாத வாழ்வில் மன்னராய் முன்னிருத்தும், எது முடிக்கவும் உறுதி தரும், அழாதவனையும் அழ வைக்கும். நீங்களும் உங்கள் மனமும்தான் யாருக்கும் தெரியாத ரகசியம்தான் எனினும் உங்களுக்கே தெரியாமல் மனம் எதை தேடுகிறது என்பது அந்த திரவம் குடித்தவுடன் வெளிப்படும். அப்படியான ஒரு இளைப்பாரலுக்காக சென்ற ஒருவனுக்கு அங்குள்ள சூழ் நிலைகள் மீறி, உற்சாக ஒலிகள் மீறி, பரவச பார்வை விருந்துகள் மீறி யாரோ ஒருவனின் உரையாடல்களில் அவன் மனத் தேவை பசியாறி ஆச்சர்யமடைவதாக முடித்துள்ள விதம் அழகு. என்றேனும் இம்மாதிரியான ஒரு அசாதாரண தருணம் உங்களுக்கு வாய்ப்பின் இக்கதை படித்தபின் திரவம் தாண்டி மனிதர்கள் தேட நீங்கள் ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம்.

மூன்றாவது கல்யாணம் முதிர்கன்னிகளின் வேதனைகள் என்ற தளத்திலிருந்து விலகி அதனை ஒரு ஆணின் பார்வையில் சொல்லி இருக்கும் விதம் இன்றைய சமகால நிகழ்வுகளுக்கும் பொறுத்தமாகவே இருக்கும். திருமணம் தள்ளிப்போன ஒரு ஆணுக்கு இச்சை தீர்க்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் இந்த சமூகம் வழங்கி உள்ளது. வெறும் பாலினம் மாறி பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரே வேதனைக்கு பெண்ணிற்கு விலங்கும், ஆணிற்கு கூடவே சாவியும் தந்துள்ள இந்த சமூக அமைப்பினூடே இன்னும் திருமணமாகாத அந்த இளைஞன் உடலியல் வேதனைகள் உந்த, இச்சை தீர்க்க சாவி கொண்டு செல்லும் இடத்தில் சமூக கட்டுப்பாடுகளின் விலங்கின் சங்கிலிக்கான காரணம் புரிந்து மேலுன் தானே விரும்பி ஒரு பூட்டு பூட்டி சாவியை தொலைப்பதாக முடிகிறது. உலகில் எல்லா உயிரினங்களுக்கும் உணவும், உறவும் சந்ததிக்காக இருக்க நாம் மட்டுமே அதை அனுபவமாக்கிக்கொண்டு அல்லாடுகிறோம். தேடி அலைகிறோம் ருசிக்கிறது, கசக்கிறது என்று வகைப்படுத்துகிறோம். நாடி அடங்கி தள்ளாடும் பொழுதில் மட்டுமே அவை இரண்டும் எதற்கு என்பதின் அவசியம் புரிகிறது. நாமே நமக்கொறு விலங்கிட்டு நாமே அதன் திறவு கோலையும் தாங்கி அதனை தேடுவது போல அல்லது தொலைக்காதது போல பாசாங்கும் செய்யும் வாழ்கையில் இந்த கதையில் வரும் கல்யாணம் அந்த கட்டுப்பாட்டை எப்படி கையாளுகிறான் என்பது சிறப்பு. மேலும் ஒரு பெயரினை கேட்ப்பதிலேயே அவனின் தேவை என்னவாக இருக்கமுடியும் அவன் தேடிவந்தது என்ன என்பதை அழகாக கதாசிரியர் நம்மக்கும் புரியவைக்கிறார்.

அடுத்த கதை ஆண்டாள் பால்ய கால நட்பு என்பது மறக்க முடியாததோ, மறக்க விரும்புவதோ அதல்ல விஷயம், ஆனால் அந்த நட்பினை ஒரு நீண்ட இடைவெளியின் பிறகு நீங்கள் எதேச்சையாக பார்க்கும்போது காலச்சக்கரம் என்னதான் இருவருக்கும் தேய்ந்திருந்தாலும் முன்பிருந்த புதிய நிலையிலேயே பார்க்க வைக்கும். தேய்மானங்களே தெரியாது அன்றுள்ளதையே மனம் காண விழையும், காணும், களிக்கும். இந்தக் கதையும் அதுதான் எத்துனை வருடங்கள் கழித்து ஒரு பழைய நட்பை, பகையை நீங்கள் பார்த்தாலும் கடைசியில் நீங்கள் அணைக்காது விட்ட அந்த தீயானது அதே வடிவிலேயே உங்கள் முன் வந்து நிற்கும் ஒரு பேரதிசயம் அது இருவரும் அதே தீயை சுமந்து கொண்டிருப்பின் அது அந்த உறவு ஒரு உன்னத நிலையை அடைகிறது, இல்லாது போயின் சட்டென அந்த தீ தன்னை சுறுக்கி மீண்டும் மன அடுப்பில் நினைவுகளை சமைக்கப்போய்விடுவதை ஆண்டாள் மூலமாக நமக்குள்ளும் எறிய விடுகிறார்.

ஒரு காதல் கதை இரண்டு கிளைமாக்ஸ் என்ற கதையில் நினைவுகளைத்தாங்கும் மனிதற்களுக்கான போராட்டம். நினைவுகளின் தொடர்பு அறுந்தவன் ஒருவன், நினைவே இல்லாதவன் ஒருவன், இருவரின் நினைவுகளின் சாட்சிகளை நினைவாக கொண்டு ஒருவள், ஒரு கணத்தில், ஒரு சேர நினைவு திரும்பும் இருவரும் உயிர்ப்போடு வைத்திருக்கும் இறந்தகால நினைவுகள் உயிர்ப்பிக்கும்போது என்ன ஆகிறது என்பதை நம் நிகழ்கால யூகத்திற்கு விட்டுவிட்டார். எது முக்கியம் இனி வரப்போகும் தருணங்களா? மாற்றமுடியாது மறித்த தருணங்களா? எது சிறப்பு எது பயன் தரும் என்ற பல கேள்விகள் இதில் உள்ளது. கழிந்துபோன கல்வெட்டுகளால் தேங்கிய நினைவுகளின் வக்கிரங்களோ, உக்கிரங்களோ, உன்னதங்களோ நம்மை வழி நடத்திச்செல்லும் வாழ்வின் அபத்தம் இக்கதை படிப்பின் உணர்வீர்.

தரிசனம்.. மாயையானானது இவ்வுலகு. பார்க்கும் கோணத்தில் நீளங்கள் அகலமாகவும், உயரங்கள் பள்ளமாகவும், உருண்டை தட்டையாகவும், நிறமில்லாதது நீலமாகவும் தெரியும் அறிவுக்கு. அந்த அறிவினாலேயே ஆக்கப்பட்ட ஆன்மீகம், அதன் சார்புடைய நிகழ்வுகள் எப்படித் தெரியும் என்பது களம். நீங்களும் நானும் பார்ப்பது ஒன்றேயானாலும் உள்ளே தைக்கும் விதம் எப்படி மாறுகிறது என்பதை சூழலை அழகாக விளக்கிப் பின் சொல்லி இருப்பது சிறப்பு. இது நீங்களும் நானும் கடந்து வந்த, அல்லது நமக்கே நிகழ்ந்த ஒன்றாயும் இருக்ககூடும், நாம் கவனிக்ககூடாது தாண்டவைப்பதில் கவனாமாயிருக்கிற, அப்படி நம்மை பழக்குவதில் முனைவாயிருக்கிற சமூக நிகழ்வுகளின் ஜாக்கிரதைகள் இங்கே அதிகம். ஒன்றைப்போவதும், மீறுவதும், மீறுவதை காயப்படுத்தாது ஒன்றிப்போனவரிடம் ஒன்றிப்போனதாகவே மீறுவதின் மொழியிலேயே சொல்வதாய் இருக்கிற த்வனி கதைக்கான சமன்பாட்டை அப்படியே வைத்திருக்கிறது.

போஸ்டர் என்ற இந்த 7 வது கதையில் வருங்கால ரகசியங்களின் சுவாரஸ்யத்தை பின்னி அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மில் நாம் கணிக்க இயலாத அடுத்த கணத்தை ஒரிரு நாளின் பாதை மாறிய சிலரின் இயல்புவாழ்க்கை நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. காண்பதும், கேட்பதும் பொய்யெனப்படும்போது தீர விசாரிக்கப்படுவதை இயல்புகளின் அடிப்படையில் கேலியாக நம் மனதில் படுமாறு கதை நகருகிறது. மீண்டும் கற்றுணர்ந்த விஷயங்களும், அசட்டையான தருணங்களும், ஆச்சர்யத்திற்கும், அதிற்சிக்குமான விதையாக தூவப்பட்டு முடிவில் நமக்கும் பின்புலத்தில் நாம் மறந்த அல்லது நினைவில் கொண்ட நம்மால் செய்யப்பட்டது என்று நம்பப்பட்ட கோமாளித்தனங்களை அல்லது உன்னதங்களை  நினைவிற்கு கொண்டு வருகிறது. பார்வைகளின் மூலம் வளர்க்கும் கருத்தியல்புகளின் முடிவுகள் உண்மையில் அதன் சரியான முடிவுகளா என்பது இதை படிக்கும்போது உணரலாம்.

துரை நான் ரமேஷ் சார்.. துரோகங்கள் நமக்கு புதிதல்ல, நன்றாய் விழுங்கி, தினமும் மல ஜலம் கழித்துக்கொண்டுதானிருக்கிறோம். ரவுத்திரம் தரும் துரோகம் என்பது எது? நம்பிக்கைத்துரோகம். நம்மை நாம் இழந்து சொல் வாளோ வலிமை வாளோ எடுக்கும் தருணம் அதுதான். மன்னிக்க இயலா அந்த துரோகத்தை, துரோகங்கள் மூலமே சீரழிக்கப்பட்ட ஒரு பெண் அப்படி செய்தவனை, காதலின் பால் ஜீரணித்து தன் உதிரத்தால் உணவளித்து, உணர்வுகளால் உத்தமியாய் இருந்து நம்பிக்கை துரோகத்தால் பத்தினியாய் மாறி, உதவி செய்தவருக்கு துரோகம் செய்யாது அன்பால் உயர்த்துவதாய் சொல்லி இருக்கும் விதம் கதையின் பெயரிலேயே குறியீடாக சொல்லி இருப்பதாகவே படுகிறது. சொல்லப்பட்ட விதம், களம் இரண்டுமே வார்த்தைகளில் கலப்பின்றி நமக்குள் ஊற்றப்படுகிறது.

என்னை பிடிக்கலையா? கதை.. எதிர்பாலின உறவுகளின் இயல்பான வெளிப்பாடே காமம். முயங்குதலில் உணர்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கிறது. காமம் கழிந்தபின்னே இயல்புகளின் கோர்வையில் அபத்தமோ, ஆச்சர்யமோ, அருவெறுப்போ தெரிய வருகிறது. உணர்வுகளின் உச்சகட்டத்தில் சூழ் நிலைகள் மறப்பதே ஒருவேளை இதனை ரகசியமாக்கிதற்கான காரணமாயும் இருக்கக்கூடும். அந்த சூழ் நிலைகள் மறக்க வேண்டியே உச்சகட்டம் நோக்கிய சில மனிதர்களின் பயணங்கள் அவர்களின் வாழ்வியலை மாற்றிப்போடுவதாயும் இருக்கக்கூடும், இயல்பு என்பதற்கான விதிமுறைகள் மீறும்போது மனம் இயல்பினை விட்டு அதாவது இயல்பான இச்சையின் பார்பட்ட காமத்தினின்று விலகி விதிமுறைக்கான இயல்பினை தேடத்துவங்கும் அதிசயம் பலருக்கு நிகழும். அப்படி ஒரு முறை தவறிய காமத்தில் ஒருவளுக்கு தேடுதலின் முடிவும் ஒருவனுக்கு தேடுதலின் ஆரம்பமும் ஒரு  சேர அவர்கள் ஒன்று சேர்ந்து முடிக்கும்போது எழுகிறது. நமக்குள்ளும் பல கேள்விகள் எழுப்பும் இந்த கதை என்பது நிச்சயம்.

காமம் கொல்..சில கதைகள் தலைப்பினை கிடப்பில் போடவைத்து கதையி மிதக்க வைக்கும், பாத்திரங்களே அதில் மிதக்கும் ஆனால் இந்த கதையில் தலைப்பு அப்படியல்ல, மறந்தாலும் கதை படித்து முடிந்ததும் மீண்டும் தலைப்பை படித்து விடுங்கள் ஏனெனில் அதுவே இதில் பிரதானம். பனியினால் சூழப்பட்டிருந்தாலும் உலகின் எதிர் எதிர் துருவங்கள் வேறானவை. உங்களின் ஏளனங்கள், புத்திசாலித்தனங்கள், அதனை செயல்படுத்தும்போதே, அதனின்பார்பட்டே, அதன் மூலமே அது உங்களை முட்டாளாக்கினால்? உங்களின் வலை விரிப்பிலேயே நீங்கள் மீளா வகையில் வீழும்போது ஏற்படும் ஓர் அதிற்சி இந்த கதையில் காத்திருக்கிறது. ஒருவனின் கேள்வியே அடுத்தவருக்கான பதிலாக, வாய்ப்பாக, விருப்பத்தின் இரையாக மாறும் வேடிக்கை.

ராமி, சம்பத், துப்பாக்கி.. உண்மை என்பது இரு புறமும் கூரான ஒரு கத்தி. அது சொல்பவரை விட கேட்பவரை அதிகம் காயப்படுத்தும். உண்மையால் காயப்படும் ஒருவனுக்காய் அவன் விரும்பும் ஒரு பொய் சொல்லப்படும்போது அந்த பொய் அவனால் விரும்பப்படுகிறதா? கேட்ட வரம் கொடுத்த தேவதை செய்தது தவறா? இந்த கதையின் சூழ் நிலையில் நீங்கள் விரும்பவது என்ன? உண்மையா? பொய்யா? விடை தேடுங்கள். உண்மை எப்போதுமே இனிப்பதில்லை எனில் எப்போதும் பொய்யும் இனிப்பதில்லை.

விருப்பமும் காதலும் ஒன்றா? என்ற கேள்வி மாம்பழ வாசனை என்ற இந்த கதையில் உங்களுக்கு வரக்கூடும். இருவரின் செயல்களும் ஒன்று விருப்பமாகவோ அல்லது காதலாகவோ இருந்தால் அதிகம் பாதிப்பில்லாது நகரும் நிகழ்வுகள் விருப்பமாயும், காதலாயும் எதிர்கொள்ளும் சூழ் நிலையில் அது எவ்வாறு கதையில் பெயரில் வரும் மாம்பழம் போன்றே இருக்கிறது. தோல் சுற்றி இருந்தாலும் அது உள்ளிருக்கும் இனிப்பு சதையினை தின்பதில்லை, அந்த சதைக்கும் உள்ளிருக்கும் விதையெனும் மாங்கொட்டைக்கான விதியோ இது போன்ற எண்ணற்ற தோல் சதை இனிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டிய கடுமை தவம். மூன்றையும் ஒன்றாய் பார்க்கும் நமக்கோ சதை மட்டுமே முக்கியம், தவம் கலையும் கொட்டைக்கோ இனி விதையாகவேண்டிய கட்டாயம். வழித்தெடுத்த தோல்தான் இரண்டு ஆதாரங்களை கட்டிக்காத்ததறியாது வீசி எறியும்போது அந்த தோலே தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட சதையின் வாசனையை நுகர்ந்து மகிழ்வதாய் பெயரிட்டு வேறு வடிவில் எல்லா கதை போலவே எளிமையாய் சொல்லப்படுகிறது.

கடைசியாய் நண்டு இனி எப்போதும் உள்ளுக்குள் ஊறிக்கொண்டே இருப்பதற்காய் பெயரிடப்பட்டதோ என்னவோ!  காசே கடவுள் என்றாகிவிட்ட இவ்வுலகில் எல்லா சுற்றம், உற்றத்தின் அன்பும் அரவணைப்பும் செலவில்லாத வார்த்தைகளிலும், அறிவுறைகளிலும் கட்டற்று வழங்கப்படும்நேரம், பணம் என்ற அளவுகோல் வரும்போது அது பாத்திரம் அறிந்தே பிச்சை அளிக்கப்படுகிறது. முகம் தெரியாது உங்களை சுற்றும் கடக்கும் மனிதர்களில் பாதிக்கும்மேல் இக்கதையின் அனுபவம் ஏதோ ஒரு வடிவில் இருக்கக்கூடும். அடுத்தது என்ன செய்ய என்ற கேள்வியிலேயே உங்களை அறியாது காலம் உங்களை கடக்கவைக்கும் வினோதங்கள் இது போன்ற நிகழ்வுகளில் நீங்கள் காணக்கூடும். வெறும் கண் முன்னே நடக்கும் செயல்களில் நீங்கள் ஒரு காட்சி பொருளாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களோடே அது நழுவிப்போகும்,

இவ்வளவு படித்தும் விக்கித்துப்போவதையும், கண்கள் குளமாக, உதடு துடிக்க வாசிப்பதே எனக்கு பிடித்த அனுபவம் என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருப்பின், இந்த புத்தகத்தை கடைசியிலிருந்து படிக்கத்துவங்கலாம் நண்டு உங்களுக்கான கதையும் கூட.

இந்த புத்தகத்தை வாங்க இணையதளம் மூலம் வாங்க சுட்டி
திரு கேபிள் சங்கர் பக்கம்  

தொகுப்பு விலை :50.00 நாகரத்னா பதிப்பகம், 3ஏ , டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,பெரம்பூர், சென்னை 11.

***

பின் குறிப்பு : போன பதிவில் சொன்னதுதான் :)))


.

எஸ்கிமோ கதைகள்..

குருஜி. அபசகுனமாக நினைக்கவேண்டாம். திரும்ப வரும் காலம் ..

அது என்னிடமில்லையப்பா.. கட்டளை வந்தது அவ்வளவுதான். பயணங்கள் என்னால் தீர்மானிக்கப்பட்டாலும், பாதைதான் அதை பூர்த்தி செய்கிறது, இதுவே ஆரம்பமும் முடிவுமாயும் இருப்பின் நான் இங்கேயே திரும்பக்கூடும், அல்லது முடிவில்லா பாதையெனில் என்னின் முடிவு வேறெங்காவதுமாயின் இருக்கலாம். இது உனக்கும் பொருந்தும், உன் அடுத்து வருபவருக்கும் இதுவே.

ஆனாலும் குருஜி, இத்துனை அதிகாரங்கள், சொத்துகள், வசதிகள் கொண்ட இந்த ஆஸ்ரமத்தை விட்டு பிட்சை எடுத்து வாழப்போகும் வடக்கு நோக்கிய பயணம் அவசியமா? மேலும் தங்களின் மேல் தீரா அன்பு கொண்ட பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைய மாட்டார்களா? என்னின் தகுதியிலும் எனக்கு சந்தேகங்கள் உண்டே...

***

நோ நோ யு ஆர் ராங்.. மை சன். எனக்கு இது அலுத்துடிச்சி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னுதான் ஹிமாலயாஸ் போறேன். நோ போன், நோ கான்ப்ரன்ஸ், நோ டென்ஷன்.. நீ ரொம்ப ஸ்மார்ட்.. உன் வயசுல நான் கூட இவ்ளோ ஸ்பீட் இல்ல. கோடிக்கணக்குல காசு இருந்தாலும், ஏ.சி போட்டா ஹிமாலயாஸ் ஆகிடுமா. கம் ஆன் டியர். நான் வரலைன்னாலும் கவலை வேண்டாம் இன்ஸூரன்ஸ் இருக்கு அதுக்கும் நீதான் நாமினி.. ஹா ஹாஹ்ஹா.. ஸோ இந்த சாம்ராஜ்யம் உன் பொறுப்பு, நீ என்ன பண்ணினாலும் இட்ஸ் அப் டு யூ.. நீ ஏர்போர்ட் வந்ததே போதும்..

பட், டாட், இப்பதான் செல் போன் இன்டர்னெட் எல்லாம் இருக்கே ஐ கேன் மேனேஜ்.. நானும் உங்க கூட வர்றேன்.. ஜஸ்ட் கூட இருக்கேன்.. ஒரு கேரவேன் வெச்சிகிட்டு.. எந்த தொந்தரவும் இருக்காது.. ப்ளீஸ்

***

சும்மா இருடா.. அப்பா வேலை விஷயமா டெல்லி போறார், நானும் வர்றேன்னு அடம் பிடிக்கிற..

அடியே, அவனுக்கு என்ன தெரியும்? குழந்தைதானே..விடு. செல்லம் அப்பா சீக்கிறம் வந்திடுவேன்,, வரும்போது உனக்கு பிடிச்ச ரிமோட் கார், ஸ்வீட்ஸ், சாக்லேட் எல்லாம் வாங்கி வருவேன், குட் பாய். அம்மா சொல்றத கேட்க்கனும், அழுகாச்சி பாப்பாவா இருக்கக்கூடாது என்ன? சிரி..

ம்க்கும்,, வர்றதே எப்பவோ வீட்டு கதவ தட்டும்போதே போன் வந்திடுது. அதுக்குள்ள பார்டர்ல குண்டு போட்டான்னு

சலிச்சிக்காதம்மா, கல்யாணம் பண்ணும்போதே நான் தெளிவா சொன்னதுதானே.. ஒரு ராணுவ வீரன் மனைவி இப்படியெல்லாம் பேசற நேரத்துல ரொமாண்டிக்கா எதுனா பேசலாம்ல..

அப்பா அதுதான் நீ ஏறப்போற ஃப்ளைட்டா?

***

ப்ச்க்..

ஹாஹ். இனி என் உயிர் போனாலும் கவலையே படமாட்டேன்,..

ப்ச்க்..

என்ன டியர் இங்கயே சாவடிக்கலாம்னு பார்க்கறியா? ஏர்போர்ட் ஆச்சே ன்னு பார்க்கறேன் இல்லைன்னா.. அப்படியே உன்ன..
ம்ஹும் தெரியும் அதுனாலதான் ஏர்போர்ட்ல வெச்சி.. இச்சி.. திரும்பற வரைக்கும் மறக்காதுல்ல, எதுனா வெள்ள தோல பார்த்து ஷாதி ஆயிடக்கூடாதுல்ல..

****

என்னங்க மிஸ்.பொண்டாட்டி யோசனை?

ஏங்க இப்ப டெல்லில ரொம்ப குளிருமா? ஆமாம் ஹனிமூன்னா என்ன?

ஓ ஹனிமூன்னா தெரியாதா உனக்கு. வெல், என் கிராமத்து கிளியே.. கேளு தாஜ்மஹால் இருக்குல்ல, அது பக்கத்துல ஒரு ரிவர் இருக்கு அங்க ஜமுக்காளம் விரிச்சி பவுர்ணமி அன்னிக்கி ராத்திரி மூன் வெளிச்சத்துல தேன் பாட்டில தொறந்து...

****

பயணிகள் கவனிக்கவும் டெல்லி செல்லும் பயணிகள் கேட் 6ஏ வுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

****

நாம போறது ஆன்மீக பயணம் ஹனிமூன் இல்ல, பல் செட் பத்திரம். விரகதாபத்துல விழுங்கிடப்போறீங்க..

இதுவும் ஆன்மீகம்தாண்டி நீயும்தான் பல்செட், அதுக்குன்னு நான் உன்னவிட்டுட்டு வேற இளசா டிஎல்ஜே பார்த்தா ஜொள்ளு ஊத்தறேன்..அலட்டிக்காத...

போதும் சகிக்கல, ப்ளைட் அனொன்ஸ் பண்ணியாச்சு கிழடுங்கதான் முன்னாடி நிக்கனும். வாங்க முட்டி வலிக்கிது..

****

சற்றுமுன் கிடைத்த செய்தி, சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணிகள் விமானம் தீவிரவாகளால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது


****

பூனம் ஹோல்ட் ஆன் எ செகண்ட், நவ் லெட் அஸ் கோ டு ப்ரெஸ் மீட் லைவ் ஃப்ரம் செக்ரட்டரி..

எக்ஸ்கியூஸ் மி சார் அபொட் தி ஃப்ளைட் பாஸஞ்சர்ஸ்..

ஹலோ சார் தி டெர்ரரிஸ்ட்...

சார் ப்ளீஸ் ஆன்ஸர் ஹவ் மெனி டெர்ரரிஸ்ட்...

ப்ளீஸ்..ப்ளீஸ்..ப்ளீஸ் சைலன்ஸ்... லெட் மீ ரீட் தி அஃபிஷியல் ஸ்டேட்மென்ட். பர்ஸ்ட்

டெர்ரரிஸம் வில் பி டிஃபீட்டெட், வி நெவெர் அலோ டெர்ரரிஸ்ட்ஸ் டு...

****

கேட் 6ஏ கமின்..

திஸ் ஈஸ் கேட் 6ஏ ஓவர்..

செக்யூரிட்டி ரெட் அலெர்ட், லெவெல் 3, கேன்ஸல் ஃப்ளைட், ஸ்டாப் போர்டிங் பாஸஞ்சர்ஸ். ஸ்டாண்ட்பை.

ராஜர்..

****

எப்படி இந்த வீடியோ கிடச்சிது? வாட் ஹாப்பெண்ட் டு சிசிடிவி?

ரிப்பேர் சார், இன்னும் ஏஎம்சி டெண்டரே விடல, ஏதோ வாரண்ட்டி டிஸ்ப்யூட்..இது ஸ்வீப்பர் கீழ கிடச்சிதுன்னு கொண்டுவந்து கொடுத்தாங்க, பட் யார் எடுத்தது, என்ன மோட்டிவ் எதுவும் தெரியல,

ரைட் எதுனா க்ளூ கிடைக்குதான்னு பாருங்க, மே பி டைவர்ஷனா கூட இருக்கலாம். எனிவே இங்கேர்ந்துதான் நூல் பிடிக்கனும், பட் நோ நியூஸ் டு மீடியா..பீ அலர்ட்..     

*****

என்னய்யா இப்படி சொதப்பிட்ட..

சாரி சார் ரெஸ்ட்ரிக்டெட் ஏரியா, ரொம்ப நேரம் தனியா கேமரா கையில வெச்சிருக்க முடியல,,ஸோ அப்படியே முடிஞ்ச வரை ஒரு வாக் ஷாட்,, எடுத்துட்டேன். போதாத குறைக்கு அங்க ஹைஜாக்னு ஒரே பரபரப்பு..திடீர்னு போலீஸ், கமாண்டோல்லாம் வரவும் வெளில எடுத்த கேசட்ட பதட்டத்துல எங்கியோ விட்டுட்டேன்..

ஷிட். 500 எபிசோட் ஏர்போர்ட்லதான் ஓட்டனும், ரியலிஸ்ட்டிக்கா டயலாக் வேணும்னு சானல்ல ப்ரஷர் மேன்.. இப்ப யோசிக்கல்லாம் டைம் இல்ல கேண்டிட் டைப்தான் பெஸ்ட்.. இத வெச்சி டயலாக் முடிச்சிடலாம், 200 எபிசோட் ஒருமாதிரி இழுத்துடலாம், டிஆர்பி பொறுத்து மாத்திடலாம்னு நெனெச்சித்தான் ஏர்போர்ட்ல நடக்கறத படம் புடிய்யான்னு சொன்னேன். என்ன பண்ணுவியோ ஐ டோண்ட் கேர். ஒரு டென் டேஸ்க்கு இதுதான் உன் வேலை. புரிஞ்சிக்க ப்ளீஸ், இல்ல பழையபடி மார்ல அடிச்சிட்டு அழுவுற சீன்தான் எடுக்கனும். பயணிகள் கவனிக்கவும்னு பேர் வெச்சி பந்தாவா விளம்பரம் கொடுத்தாச்சிய்யா.   

*****

ஹலோ ஸ்டிங் டிவி ரெஜி

யெஸ்..

டெல்லி ப்ளேன் ஹைஜாக் பத்தி ஒரு வீடியோ புட்டேஜ் இருக்கு, எக்ஸ்குளூசிவ்,  இப்ப சிபிஐ க்ளாசிஃபைட், இண்ட்ரெஸ்டெட்?

வெயிட்..

”----”

யா ஷ்யூர், வாட்ஸ் த ப்ரைஸ்..?
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பின் குறிப்பு: ரத்தத்தின் ரத்தங்களான அன்பு வலையுலக நட்புகளே, வேலை, கணிணி குறைபாடு, இன்ன பிற காரணங்களால் எந்த பதிவுகளையும் படிக்க முடியவில்லை, பின்னூட்டமும் இடமுடியவில்லை. மன்னிக்கவும். ஓரிரு நாளில் வழக்கம்போல் கொடுமைகள் ஆரம்பமாகும்.
:)).

அமதி..எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும்
பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்
என் பட்டறையில்..

எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு
ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,
பெய்த மழை நீரின் மிச்சத்தில்
வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என
வேண்டாதவைகள் மனதில் தேக்கி
ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..

என் இருப்பு சூழலை மாசுபடுத்துவதையும் பொறுத்துக்கொண்டு
சுவாசிக்க காற்றும் அவ்வப்போது நிரம்பிக்கொண்டுதானிருக்கிறது
உயிர் வளர்க்கும் வெற்றிடத்தில்.

மனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்
இரண்டும் கொண்டு ஏங்கிக்கொண்டிருக்கிறேன்..
பட்டாம்பூச்சியை பல்லி பிடிக்குமா? என்ற கவலை எனக்கு
பல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா? என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..


.

யார் ஞானி? தொடர் பதிவு..:)

தொடர் பதிவா? கூப்பிடுங்கையா பலா பட்டறைய அப்படின்னு ஆகிப்போச்சு :-) யார் ஞானி அப்படின்னு ஒரு (சீஸனுக்கேற்ற) தொடர் பதிவு. கூப்பிட்டவர் நம்ம நண்பர் அன்பு செய்வோம் ஜீவன் சிவம். நீங்களும் தொடரலாம்..:)) நண்பரின் பதிவில் உள்ள பத்தாவது பாயிண்டுக்கும் மேலே உள்ள படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..:))

------------
யார் ஞானி..?

முதலில் யாரையாவது ஞானி ஆக்குவது தேவையா? தேவையெனில் எதற்கு? மனிதரை தவிர்த்து மற்றெதுவுக்கும் கடவுளோ, மொழியோ, கோட்பாடுகளோ தேவையில்லாதபோது, ஆறறிவு கிடைத்த நமக்கு சொறிந்து கொள்ள உதவும் சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் முழுமையான ஒன்றை போதித்து இருக்கிறதா?

புத்தி தெரிந்து இறப்பது வரை ஒரு கோனார் நோட்ஸ் போல உபயோகிக்க அன்றி அதனை கட்டிக்கொண்டு அழுவதும், கிழித்தெறிந்து காறித்துப்புவதும் தேவையா? கூடலின்பார்பட்டே, அதனையே தனது சுழற்ச்சியாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில் ஆடை அணிந்து, அகந்தை வளர்த்து, கூடலையே தவறென்று கூடலின் வழியே வந்து, கூடலுக்காய் நேரமும், காரணங்களும், இடம், பொருள், ஏவலும் குறிக்கும் யாரின் வாழ்வும், அதனை கேட்போறும் திறந்த புத்தகமாய் இல்லாது மூடிக்கிடக்க, இங்கே யாரை ஞானியாக்க முடியும்? அப்படியே கண்டுபிடித்தாலும் அவர் சாகும் வரையில் கூடினாரா இல்லையா என படம் பிடிக்க யார் செலவு செய்வது? அப்படியே படம் பிடித்தாலும் அவன் குறியை கேள்விக்குறியாக்க நாம் கற்ற தர்க்கங்கள் வாளாயிருக்குமா?

கூச்சல்களுக்கிடையே கற்றுக்கொடுக்கப்பட்ட அறிவினை நீட்டி, முழக்கி பார்த்ததையெல்லாம் பெயர் வைத்து மாய்ந்து அதுவே வேதமென்று, புகழ்ந்தும், இகழ்ந்தும் புதிய அர்த்தங்கள் கண்டுபிடித்தும் மாட்டினால், தர்க்கம் செய்து தப்பித்தும் வரும் கூட்டத்தில் ஞானியை எங்கு தேட?? ஏன் தேடவேண்டும்?

ப்படியே உங்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஞானிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. கூடிக் கூடி பல்கி பெருகி இவ்வுலகையே நாசம் செய்துவரும் நமக்கும் உணவு அளித்து வாழ்வு கொடுக்கும் அவைகளே ஞானிகள், கடவுள், வேதம் இன்ன பிற.

வையும் எந்த பிரக்ஞையுமன்றி கூடுகின்றன தினமும். அவற்றிற்கு தெரியும் கூடுதல்களும் இருப்பின் புரிதல்களும் நம்மை விட அதிகமாய், ஏனெனில் அவை எதற்கும் பெயர் வைப்பதில்லை.

மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். !

ஊற்றம்..
ஸ்பரிசம் ஆயிரம்.. தாயில் ஆரம்பித்து, குழந்தையின் விரல்களினூடே அது என்னை உயிர்ப்பித்தே வருகிறது. ஒரே உடல்தான், உரசல்கள் யார் மூலம் என்பதே சிலிர்ப்புகளின் இன்பத்தை தீர்மானிக்கிறது. ஸ்பரிசத்தின் மொழி சொல்லும் நேரம் சிறியதாய் இருப்பினும், வார்த்தைகளற்ற உணர்ச்சிகளின் குவியல் உள்ளே உலுக்கிப்போடுகிறது.

யிரில்லாத துப்பட்டாக்களும் உயிருள்ள என்னை சித்திரவதை செய்திருக்கிறது. எங்கோ கூட்டத்தினூடே எல்லார் ஸ்பரிசமும் ஒன்றாகவே இருக்கிறது கண்கள் நிறம் பிரிக்கும்வரை. அதை நான் உணர நெடு நாட்கள் ஆயிற்று. வேட்க்கைக்கான நடுக்கங்களுக்கான உடலின் ஆயத்தத்தில் ஸ்பரிசங்கள் தேடி அலைந்தது மனது. உணர்ச்சிகளை திரியாய் உருட்டி பாலின எண்ணங்கள் எண்ணையாய் ஸ்பரிசக்குச்சி கொண்டு உரசல்களில் தீப்பிடித்து உணர்வுகள் வெந்து, தணியாமல் தணல் கனன்று, பிடித்தவைகள் கடக்கும் காற்றில் சாம்பல் விலகி கங்குகள் ஒளிர்ந்த வெளிச்சத்தில் மற்றெல்லாமும் மக்கிப்போனது.

மாய உயிர்ச் சுழலின் தந்திரம், அழியா விதைகளுக்கான சூட்சுமம், வட்டத்தின் தொடர் பயணம், நானும் நீந்த, தீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, அன்பாய் வந்த தீண்டல்கள் முடிந்து, விரகத்தின் தீண்டல்கள் தீர்ந்து, பாசத்தின் தீண்டல்கள் முடிய இருக்கும் தருணத்தில் ஸ்பரிச சுவர்களின் பூச்சுகள் விரிசல் விட ஆரம்பிக்கிறது. இனி அன்புத்தீண்டல்கள் வேண்டி தவங்கள் தேவைப்படலாம், ஸ்பரிசம் உணர குத்திப்பார்க்கும் பரிட்சைகள் தேவைப்படலாம், நிரந்தர ஸ்பரிசங்கள் வேண்டிய, வேட்க்கையின் கணங்கள் நீண்ட விரும்பிய சயனத்தின் வரம் இப்போது கிடைத்திருக்கிறது. நினவுகளில் ஸ்பரிசத்தின் இன்பத்தினை மீட்டெடுக்க முடியவில்லை, அசை போட முடியவில்லை. தொடர் சயனத்தின் அழுத்தங்கள் கொப்புளித்து வரலாம், வலியில்லா ரணத்தின் வீச்சங்கள் என் தொடர் விதையின் ஸ்பரிசங்களுக்கு வேதனையோ, அருவெறுப்போ தரக்கூடும். ஒரே போல்தான் உடல் நடுங்குகிறது. வேட்கையிலும், வேதனையிலும் தளர்ச்சி மட்டுமே ஏளனம் செய்கிறது இருப்பை.