பலா பட்டறை: வெண்ணை 0.12 (ராவணன் கவிதைகள்)

வெண்ணை 0.12 (ராவணன் கவிதைகள்)நான் ஒருவரைக் கொலை செய்தேன்
என்று யாரோ தீர்ப்பெழுதிக் கொண்டிருந்தார்கள்
இறைவன் அவரை என்மூலம்
இறக்கச்செய்தார் என்றேன்..
என்னின் உறவுகள்
நான் கொன்றவனின் உறவுகள் என
துக்கங்கள் இரண்டாய் இறைந்துகிடந்தது அந்த
மன்ற வளாகத்தில்..
கொலைசெய்யச் சொன்ன
இறைவனோ இறுதிவரை வரவே இல்லை..
கடைசியாய் ஏதேனும் சொல்ல விருப்பமா
என்று கேட்ட நீதிபதியிடம்
அகம் ப்ரம்மாஸ்மி என்றேன்
அதேதான் எனது தீர்ப்புமென்றார்...!

--

இன்றைக்கு இலையில்தான்
சாப்பாடு என்றதற்கு
பாத்திரத்தில் ஏதுமில்லை
என்றாள்.
பாத்திரம் இருக்கிறதே என்றேன்

--

காமம் களைய
முகிலுரசும்
உச்சி சென்று
ஒற்றைக்காலில் நிற்பினும்
அலைந்து குறு குறுக்கும் என் கேசமே
உன் கேசமானதே என் செய்வேன்..?

--

என்னதான் நக்கினாலும்
எச்சில் இன்னும்
மிச்சமிருக்கிறது
ருசிப்பவன் தட்டினில்

--

சரியாக
வந்துவிடுகிறது
இறந்த நாட்களில்
என்
பிறந்த நாட்கள்..


.

43 comments: