பலா பட்டறை: வெண்ணை 0.12 (ராவணன் கவிதைகள்)

வெண்ணை 0.12 (ராவணன் கவிதைகள்)



நான் ஒருவரைக் கொலை செய்தேன்
என்று யாரோ தீர்ப்பெழுதிக் கொண்டிருந்தார்கள்
இறைவன் அவரை என்மூலம்
இறக்கச்செய்தார் என்றேன்..
என்னின் உறவுகள்
நான் கொன்றவனின் உறவுகள் என
துக்கங்கள் இரண்டாய் இறைந்துகிடந்தது அந்த
மன்ற வளாகத்தில்..
கொலைசெய்யச் சொன்ன
இறைவனோ இறுதிவரை வரவே இல்லை..
கடைசியாய் ஏதேனும் சொல்ல விருப்பமா
என்று கேட்ட நீதிபதியிடம்
அகம் ப்ரம்மாஸ்மி என்றேன்
அதேதான் எனது தீர்ப்புமென்றார்...!

--

இன்றைக்கு இலையில்தான்
சாப்பாடு என்றதற்கு
பாத்திரத்தில் ஏதுமில்லை
என்றாள்.
பாத்திரம் இருக்கிறதே என்றேன்

--

காமம் களைய
முகிலுரசும்
உச்சி சென்று
ஒற்றைக்காலில் நிற்பினும்
அலைந்து குறு குறுக்கும் என் கேசமே
உன் கேசமானதே என் செய்வேன்..?

--

என்னதான் நக்கினாலும்
எச்சில் இன்னும்
மிச்சமிருக்கிறது
ருசிப்பவன் தட்டினில்

--

சரியாக
வந்துவிடுகிறது
இறந்த நாட்களில்
என்
பிறந்த நாட்கள்..


.

42 comments:

Unknown said...

அகம் பிரமாஷ்மி...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
உனக்காவது பாத்திரம்... பத்திரம்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கேசம் அவள் விரலில்.. சுகம் சுகம் ...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அதனாலென்ன விரலை நக்கிக் கொள்வேன்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஒரு நாள் நானும்....

நசரேயன் said...

//இன்றைக்கு இலையில்தான்
சாப்பாடு என்றதற்கு
பாத்திரத்தில் ஏதுமில்லை
என்றாள்.
பாத்திரம் இருக்கிறதே என்றேன்//

பத்திரமா அடகு கடையிலே
இருக்கு என்றாள்.

நசரேயன் said...

படத்திலே இருக்கிற தீவிர வாதி யார் ?

King Viswa said...

வந்துட்டோம்ல, மீ தி போர்த்து.

vasu balaji said...

எல்லாமே அபாரம். ஆமா அந்த தீவிரவாதி யார்?:))

Paleo God said...

செந்தில் - நாளை சந்திப்போம் :))

நசரேயன் - நான் துண்டு போடறதில்லீங்ணா அதனால இனிமேதான் அடகு வைக்கனும்.:))

அய்யோ அவரு இலக்கியவாதிங்கோவ்!!

King Viswa said...

நண்பரே,

நானும் என்னுடைய நண்பர் ஒருவரும் தான் இந்த பதிவை படித்தோம். அவர் ஒரு இயக்குனர் (வெகு விரைவில்). உங்களின் பதிவில் அந்த படத்தில் இருக்கும் நபர் யாரென்று சொன்னால் அவரை பத்தாவது படிக்கும் பள்ளி மாணவனாக வைத்து படமெடுக்க அவர் தயாராம்.

அவர் யாரென்று சொல்ல இயலுமா?

பாலா said...

http://cablesankar.blogspot.com/2010/08/blog-post_20.html?showComment=1282249845949#c2396105130675951949

Paleo God said...

விஸ்வா - நாளைக்கு வற்றீங்களா? :)

வானம்பாடிகள் - சார். அவரத் தெரியலையா பிரபல இலக்கியவாதி தலைப்பிலேயே பாதி பேர் இருக்கே :))

ப்ரியமுடன் வசந்த் said...

சரியாக
வந்துவிடுகிறது
இறந்த நாட்களில்
என்
பிறந்த நாட்கள்..
..

எலக்கியவாதி ஷங்கர் வாழ்க
கலியுக ராவணன் ஷங்கர் வாழ்க

:)

பாத்திரம் பிரியலையே அண்ணாத்த

King Viswa said...

நாளைக்கு நண்பர் கோவை கவிநேசனை பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்ய வைக்க அவசியம் வருகிறேன்.

Paleo God said...

சாரி அவர் அவ்ளோ வயசான கேரக்டர் பண்ணுவாரான்னு தெரியல விஸ்வா.

பாலா ஏன் இந்தக் கொலை வெறி. பாஸ்வேர்ட் கொடுத்து நான் போடச்சொன்ன கமெண்ட் என்ன நீங்க போட்டது என்ன? கேபிள் என்னப் பத்தி என்ன நினைப்பார்?

அது வேற வாயி..:)) (சாட் ஹிஸ்டரியெல்லாம் வெச்சிருக்கீங்களா என்ன?)

Paleo God said...

விஸ்வா - ரைட்டு :)

வசந்த் - புரட்சிக் கவிஞர்னு சொல்லாதவரைக்கும் ஓக்கே :))

King Viswa said...

//சாரி அவர் அவ்ளோ வயசான கேரக்டர் பண்ணுவாரான்னு தெரியல விஸ்வா.//

அவரோடைய பள்ளியில் பதினொன்னாவது படிக்கிற பொண்ணா தமன்னா நடிக்கிறாங்கலாம்.

இப்போ சொல்லுங்க உங்க பதில. சில நேரங்களில் நம்மோட கொள்கைகளை நாம தலர்திக்குரதுல தப்பு இல்ல தல. அவர கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணுங்க.

க ரா said...

மயில் என்ற குயில் பாடிய கவிதைகளா இவை.. அனைத்தும் அற்புதம் :)

Paleo God said...

தமன்னாவா ?? ஃப்ரீயாவே நடிப்பாருங்க! கவலைய வுடுங்க :)

Paleo God said...

இராமசாமி கண்ணன் : அம்சமா கமெண்ட் போட்டீங்க போங்க! :))

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே அம்சமா இருக்கு.. பாத்திரத்தை கொஞ்சம் விளக்கினால் நல்லாருக்கும் :-))))

செ.சரவணக்குமார் said...

படத்தில் இருக்கும் தீவிரவாதி யார்னு எனக்குத் தெரியும். பயபுள்ள என்ன போடு போடுது.

நட்புடன் ஜமால் said...

கடைசி செம ஜீ

பாலா said...

//பாலா ஏன் இந்தக் கொலை வெறி. பாஸ்வேர்ட் கொடுத்து நான் போடச்சொன்ன கமெண்ட் என்ன நீங்க போட்டது என்ன? கேபிள் என்னப் பத்தி என்ன நினைப்பார்?//

http://cablesankar.blogspot.com/2010/08/blog-post_20.html?showComment=1282249845949#c2396105130675951949

மரா said...

@ நசரேயன்
// படத்திலே இருக்கிற தீவிர வாதி யார் ? //

நாந்தேன் அது. என்னா பாஸ், அதுக்காக இப்புடி சொல்லிப்போட்டீங்க...

மரா said...

@ வானம்பாடிகள் said...
எல்லாமே அபாரம். ஆமா அந்த தீவிரவாதி யார்?:))

Sir, Its me Mayilravanan :)

மரா said...

@ இராமசாமி கண்ணண்
//
மயில் என்ற குயில் பாடிய கவிதைகளா இவை.. அனைத்தும் அற்புதம் :) //

அண்ணே, இந்த வீக்கெண்ட்
Yosemite கூட்டிப் போறேன்...ஓகே?

மரா said...

@ king Vishwa
//அவர கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணுங்க//

ஓகே ஏதோ எல்லாரும் சொல்றீங்கன்னு நடிக்கிறேன் :)

மரா said...

@ செ.சரவணக்குமார்
// படத்தில் இருக்கும் தீவிரவாதி யார்னு எனக்குத் தெரியும். பயபுள்ள என்ன போடு போடுது.//

ஹி ஹி ...பாலி கதை கேட்டேனே... தொகுப்புக்கு? என்ன ஆச்சு?

கலகலப்ரியா said...

நல்லாருக்கு ஷங்கர்..

Anonymous said...

//நசரேயன் said...

படத்திலே இருக்கிற தீவிர வாதி யார் ? //

எங்க போனாலும் இந்த நசர் பண்ணற ரவுசு தாங்க முடியலை :)

Unknown said...

நல்லாருக்கு.......

பா.ராஜாராம் said...

//இன்றைக்கு இலையில்தான்
சாப்பாடு என்றதற்கு
பாத்திரத்தில் ஏதுமில்லை
என்றாள்.
பாத்திரம் இருக்கிறதே என்றேன்//

ஒரு வார்த்தை கூட விரயமில்லை.

// காமம் களைய
முகிலுரசும்
உச்சி சென்று
ஒற்றைக்காலில் நிற்பினும்
அலைந்து குறு குறுக்கும் என் கேசமே
உன் கேசமானதே என் செய்வேன்..?//

அப்பா!

இரண்டும் மிக அருமை. இவரை இப்பதான் முதலில் வாசிக்கிறேன் ஷங்கர். பகிர்விற்கு நன்றி!

Unknown said...

கவிதைகள் அருமை.

Unknown said...

அண்ணே, ஏண்ணே இண்ட்லியில ஓட்டுப் போட முடியலை. காண்டா இருக்குண்ணே.

எறும்பு said...

கண் திருஷ்டி கணபதிக்கு பதில் இந்த படத்தை பயன்படுத்தி கொள்ளலாமா?

#Doubt

எறும்பு said...

//இன்றைக்கு இலையில்தான்
சாப்பாடு என்றதற்கு
பாத்திரத்தில் ஏதுமில்லை//

யோவ் ராவணன், ராவணன் மாதிரி சாப்பிடனும் கும்பகர்ணன் மாதிரி சாப்டா பாத்திரம் கூட இருக்காது.
:)

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு... ராவ‌ண‌ன் அவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்..

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Superb!! :-)

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...
This comment has been removed by the author.
Jerry Eshananda said...

என்னதான் நக்கினாலும்
எச்சில் இன்னும்
மிச்சமிருக்கிறது
ருசிப்பவன் தட்டினில்

--

சரியாக
வந்துவிடுகிறது
இறந்த நாட்களில்
என்
பிறந்த நாட்கள்..
" U ROCK MAN"

ஹேமா said...

எல்லாமே ஆழச் சிந்தித்த வரிகள்.சாப்பாடு இல்லாத பாத்திரம் சாப்பிட உதவுவது நெகிழ்வு.

மரா said...

Hi Mayilravanan,

Congrats!

Your story titled 'வெண்ணை 0.12 (ராவணன் கவிதைகள்)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st August 2010 01:00:01 PM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/324737

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

'பரிவை' சே.குமார் said...

//என்னதான் நக்கினாலும்
எச்சில் இன்னும்
மிச்சமிருக்கிறது
ருசிப்பவன் தட்டினில்//

Super.

Paleo God said...

அனைவருக்கும் இராவணனின் நன்றிகள். :))