பலா பட்டறை: ஆத்தா நான் இடுகை போட்டுட்டேன்..

ஆத்தா நான் இடுகை போட்டுட்டேன்..

என் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்த, அன்பைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்பொழுது அவர் பூரண நலம். 

டபுள் செஞ்சுரி அடித்து நாட் அவுட்டாக ஆடிக்கொண்டிருக்கும் அனைத்து ஃபாலோயர்ஸ் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி! :))

நிறைய எழுத நினைக்கிறேன். ம்ஹும் முடியவில்லை (என்னது ரொம்ப சந்தோஷமா?). நிறைய நண்பர்களைச் சந்தித்ததையும் பகிர முடியவில்லை. ப்ரியமுடன் வசந்த் அன்பளிப்பளித்த கருவாச்சிகாவியம் ஒரு அமைதியான வாசிப்புக்காக அலமாரியில் நின்றுகொண்டிருக்கிறது. செ.சரவணக்குமாருடன் மதிய நேரம் சாப்பிட்ட மொச்சைக்கொட்டை ஐஸ்க்ரீம், அருகிலிருந்தும் ஜமாலுடன் அவ்வப்போது போனில் மட்டுமே பேச முடிகிறது. சிங்கை சிங்கம் பிரபாகரை, வானம்பாடிகள் சார் அலுவலகத்தில் சந்தித்து சிறிது நேரமே பேச முடிந்தது (மனிதர் சிங்கையிலிருந்து என்னிடம் போனில் பேசியதை விட குறைவான நேரம் (என்ன கொடுமை SP இது?:-) அரும்பாடுபட்டு அண்ணன் நைஜீரியா சிங்கம் ராகவன் அவர்களுடன் ஒரு மதியம் கழித்தது மனது நிரம்பிய மகிழ்ச்சியாக இருந்தது. (என்னா யூத்து? என்னா ஸ்பீச்சு? பத்திரமா ஊருக்கு போயிட்டீங்களா தல? ) மேலும் போனில் பேசிய காமிக்ஸ் லவ்வர் கிங் விஸ்வா என பார்த்த கணத்தில் சட்டென நெருக்கம் காட்டும் பதிவுலக நண்பர்கள் எனக்கு’ம் கொடுப்பினை. :-)

’ஹலோ’

’பட்டறை ஓனர் சங்கருங்களா?’

’ஆஅ மாங்க!’

’பட்டறை ஃப்ரீயா? ஒரு திருப்பாச்சி அருவா செய்யோனும், எப்ப வரட்டும்?’

(ஆஹா ப்ளேன் பிடிச்சி வந்து ப்ளான் பண்றாங்களே!!!)

என்று போனில் நேற்று என்னைக் கலாய்த்ததும் ஒரு பிரபல பதிவர்தான் :) அவரைச் சந்தித்ததும் சுவாரஸ்யங்கள் பகிர்கிறேன்.     


---------------

’சார்’

’சொல்லுங்க’

’ஊர்ல திருவிழா. ஒவ்வொரு வீட்டுக்கும் 350 ரூவா கலெக்‌ஷன். டியூப் லைட், சீரியல் லைட்டு அப்புறம் கோவிலுக்கும் ஒரு பங்கு போயிடும்.’

’சரிங்க தர்றேன்...’

இப்படித்தான் ஊரில் ஆடிமாதம் திருவிழா ஆரம்பித்தது. ரொம்ப நாளாச்சு. திருவிழா எல்லாம் பார்த்து. திடீர் கடைவீதிகள். ஊரெங்கும் ஒவ்வொரு வர் வீட்டிலும் உறவினர் கூட்டம். கூழ் ஊற்றி, கிடாவெட்டி, கோழி அறுத்து, 15 அடிக்கு ஒரு ஸ்பீக்கர் கட்டி தெருவுக்கு ஒரு சினிமாப் பாட்டு போட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். வேல் குத்தி, உடலில் கொக்கிகள் மாட்டி வித விதமான வாகனங்கள் இழுத்தும் / தொங்கிக் கொண்டும் நேர்த்திக் கடன் செலுத்திய விதம் குத்தாதவர்களுக்கு வலியும் குத்தியவர்களுக்கும்/ குத்திக்கொண்டவர்களுக்கும் ’சக்தி’யையும் தந்தது.

சாமி ஊர்வலம் வரும் தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. கிளை விரித்த மரங்கள் சிறிது கழிக்கப் பட்டன. (குடித்துவிட்டு சாமி ஊர்வலமே வராத தெருவில் நன்றாக வளர்ந்த மரத்தை வெட்டிப்போட்ட பஞ்சாயத்து தனிங்கோவ்!) கொக்கி போட்ட சீரியல் மற்றும் டியூப் லைட்டுகளால் மின் அழுத்தம் 120க்கும் கீழே சென்றது கூடவே எல்லா விளக்குகளும் மினுமினுக்கிக்கொண்டிருந்தன.   

ஆனால் முன்புபோல் மக்களால் இது போன்ற திருவிழாக்கள் குதூகலமாய் கொண்டாடப் படுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. பல புறக்காரணிகள் இருக்கலாம். மக்களின் ஆர்வம் திசை திரும்பி இருக்கலாம். இள வட்டங்களின் ஆர்வங்கள் திசை திரும்பியிருக்கலாம். நான் பேசியவரையில் பல லட்சங்கள் வெறும் சீரியல் லைட்டிற்காகவும், சவுண்ட் சர்வீஸிர்க்காகவுமே செலவழிக்கப் பட்டிருந்தது. 

ஒரு கவுரவ அடையாளமாக யார் சவுண்ட் அதிகம்? யார் சீரியல் கட்டவுட் அழகு? என்பது ஒரு போட்டியாகவும் அதற்கு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளும் இருப்பதாய் அறிந்து கொண்டேன். 

கோவிலும் பொலிவாக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்த திருவிழா செலவில் ஒரு பகுதி முறையாக செயல் படுத்தப் பட்டு அடிப்படை வசதிகள் கிராமத்திற்காக ஏன் செய்ய யாருமே முன் வரவில்லை என்பதுதான். தெரு மற்றும் சாலை வசதிகள், கழிப்பிடம் , கழிவு நீர் வசதிகள், அடிப்படை மருத்துவ வசதி, பொது சுகாதாரம், போக்குவரத்து வசதி,  இன்ன பிற போன்றவைகள் தேவையில்லை என்பது பழகிவிட்டதா? அல்லது பகுத்தறியும்/பகுத்தறியா சாமிகள் வரம் தரும் என்று காத்துக்கிடக்கிறார்களோ புரியவில்லை!


என்னமோ போடா மாதவா! (நன்றி முகிலன்!) 


கலர் டீவி பார்த்தால்
பொது அறிவு வளரும் என்ற
உச்ச நீதிமன்றத்தின் கருத்தறியாத
அண்டைவீட்டுக் கிழவி ஆடுகளைக்
கொட்டிலிலடைத்துவிட்டு
அவசரமாக பழையசோற்றுச் சட்டியுடன்
கிளம்பினாள்..
நூறு நாள் வேலைக்கு 
தள்ளுபடிச் சம்பளம் வாங்க..!





.

40 comments:

'பரிவை' சே.குமார் said...

ம்ம்ம்.... வாங்க ஷங்கர்... அப்பா நலமா?

எல்லாம் நல்லாயிருக்கு. கடைசி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

Unknown said...

அப்பா சொகமா இருக்காரா? இரவு அழைக்கிறேன் 

இளங்கோ said...

// கலர் டீவி பார்த்தால்
பொது அறிவு வளரும் என்ற
உச்ச நீதிமன்றத்தின் கருத்தறியாத //
Very nice..

VISA said...

KAVIDHAI NACH!!!

King Viswa said...

இந்த வீக் எண்டு மீட் பண்றோம், பண்றோம், பண்றோம். ஒக்கே?

vasu balaji said...

அப்பா நலமா? திருப்பாச்சி கேட்டவர் என்னையும் கலாய்ச்சார்.கவிதை அழகு:) ஆஆங். ஆத்தா நான் தமிழ்மணத்துல இணைச்சிட்டேன்:))

பிரபாகர் said...

அப்பா சுகமா?

அடுத்த முறை ஒரு நாள் முழுதும் உங்களோடுதான் சங்கர்...

கலாய்த்தவர் யாரென எனக்கும் தெரியும்... சேம் பிளட்...

பிரபாகர்...

Chitra said...

என் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்த, அன்பைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்பொழுது அவர் பூரண நலம். .... Praise the Lord!

Chitra said...

200 followers!!! Congratulations!!!

நாடோடி said...

அப்பா சுக‌ம் அறிந்த‌தில் ம‌கிழ்ச்சி... வாழ்த்துக்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி.

vasu balaji said...

aahaa.200க்கு வாழ்த்துகள்.

sathishsangkavi.blogspot.com said...

வாங்க ஷங்கர்....

தந்தை நலமா? கவிதை கலக்கல்..

பாலா said...

ஒங்களையும்... நம்புது..., என்னையும் நம்புது!! இது அப்பாவி ஜனங்க இருக்கற எடம் ராசா.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள்.. 200க்கும், இடுகை போட்டதுக்கும் :-)))))))))

தந்தை நலமறிந்து மகிழ்ச்சி..

மரா said...

200க்கு வாழ்த்துக்கள் நண்பா.

மரா said...

ஆந்திராவுல இருந்தாலும் எங்களையெல்லாம் நல்லா நினைவுல வெச்சிருக்கீங்க.நன்றி நண்பரே. மே மாத விடுமுறைக்கு வருகிறோம் உங்க வீட்டுக்கு.

பாலா said...

சார் ஆஃபீஸ்ல போரடிக்குது. ஒரு 1-100 இங்க எண்ணிட்டு போகவா?

பாலா said...

அப்பாவுக்கு எப்படியிருக்குன்னு ஒரு ரெண்டு வாரம் முன்னாடி கேட்டது. யப்பா இன்னிக்கு பதில் சொல்லிட்டார்.

பாலா said...

இது வேஸ்ட் ஏரியா. நான். நாஞ்சில் பதிவுக்கு போறேன்.

இதெல்லாம் ஒரு பதிவு!! ச்சே! ஒரு கும்மியுண்டா?

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பா நலமுடன் இருப்பது மகிழ்ச்சி!

ராகவன் அண்ணா ஸ்பீச் ரியலி ரொம்ப யூத்ஃபுல்லா இருக்கும் திரும்பவும் நான் கத்தார் வந்ததுக்கு காரணமே அவர்தான் அவரோட அனுபவத்தை அவரோட பொறந்த நாளன்னிக்க்கு பகிர்ந்துகிட்டார் அருமையான அனுபவசாலி...!
ரஜினி தோத்துடுவார் அம்புட்டு ஸ்பீடா பேசுறார் மனுசன்..!


கவிதை ஷார்ப்!

நட்புடன் ஜமால் said...

தந்தை நலமறிந்ததில் சந்தோஷம்

நான் ஊர் போயாச்சு ரமதான் ஸ்பெஷல்

கவிதை நறுக் ...

கலகலப்ரியா said...

||இப்பொழுது அவர் பூரண நலம். ||

அப்பா பூரண நலம்ன்னு சொன்னதுக்கப்புறமும்... சுகமா.. நலமா .. என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றிக் கவலைப் படாதீங்க... அவங்க எல்லாருக்கும்... சே.குமார் சின்ட்ரோம்... சே.குமார் மத்தவங்க பின்னூட்டத்த காப்பி பண்ணி போடுவாரு... இப்போ இவிங்க எல்லாம் அவங்க பின்னூட்டத்த போடுறாய்ங்க..

(தப்பா நினைச்சுக்காதீங்க ப்ரதர்... இப்டிப் பொலம்ப விட்டுட்டாய்ங்களே... அவ்வ்வ்...)

நசரேயன் said...

//என்னமோ போடா மாதவா! (நன்றி
முகிலன்!)//

இதுக்கு காப்புரிமை விதுஷ் பாட்டிகிட்ட இருக்கு

மதுரை சரவணன் said...

கவிதை அருமை...தந்தை நலம் அறீய ஆவல்.. பகிர்வுக்கு நன்றி.

செ.சரவணக்குமார் said...

அப்பா நலமாக இருப்பது ம‌கிழ்ச்சியளிக்கிறது ஷங்கர். நண்பர்களுடனான சந்திப்புகள் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

a said...

//
எனக்கு புரியாத ஒரே விஷயம். இந்த திருவிழா செலவில் ஒரு பகுதி முறையாக செயல் படுத்தப் பட்டு அடிப்படை வசதிகள் கிராமத்திற்காக ஏன் செய்ய யாருமே முன் வரவில்லை என்பதுதான்
//
சரியா சொன்னீங்க ,...........

Anonymous said...

//அமைதிச்சாரல் said...
வாழ்த்துக்கள்.. 200க்கும், இடுகை போட்டதுக்கும்
//
repeate

ஜோதிஜி said...

ஒங்களையும்... நம்புது..., என்னையும் நம்புது!! அப்பாவி மக்கா என்ன செய்யுறது.

200க்கு பார்ட் டீ ஏதும் உண்டா.

லாஸ்வேகாஸ்ல தல உடன் வச்சுக்கலாமா?

ஜோதிஜி said...

கும்பி அடிக்க விடாமல் புறக்காரணிகள் பற்றி பேசிய பட்டறை ஓனர் ஒழிக,

தல போதுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

அன்புடன் அருணா said...

கவிதைக்குப் பூங்கொத்து!

Unknown said...

பேசாமல் தள்ளுபடி சம்பளத்துக்கு வேலைக்கு போய் தூங்கிட்டு வரலாம்

மணிஜி said...

என்னவோ போடா மாதவா

ஜில்தண்ணி said...

கவித கலக்கல் :)

பட்டறையில் 200க்கு வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

200க்கு வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள் ஷங்கர்ஜீ... கூடியசீக்கிரம் நானும் உங்களுக்க ஸ்பீச் கொடுக்கறேன் :))

வல்லிசிம்ஹன் said...

அப்பா நலமறிந்து சந்தோஷம் சங்கர். கிராமத்திலாவது பக்தி செழித்து இருக்கும் என்று நினைக்க ,
சான்சே இல்லை. பழைய நாவல்களில் கூட இந்த போட்டி எடுத்து எழுதி இருப்பார்கள்.

அந்தப் பாட்டிதான் நிஜம். செய்யும் தொழிலே தெய்வம் அவளுக்கு. சாப்பாடு போடுகிறது அல்லவா:(

க ரா said...

200க்கு வாழ்த்துகள்..அப்பாவின் நலமறிந்தது மகிழ்ச்சி.. கடைசி கவிதை கலக்கல் :)

R.Gopi said...

200 Not Out..... Congrats....

How is your father doing now? Hope he is better....

Please do write more..........

Paleo God said...

அன்பிற்குரிய

சே.குமார்.
முகிலன்
இளங்கோ
விசா
கிங் விஸ்வா
வானம்பாடிகள்
பிரபாகர்
சித்ரா
சங்கவி
ஹாலிவுட் பாலா
அமைதிச்சாரல்
மயில் ராவணன்
ப்ரியமுடன் வசந்த்
நட்புடன் ஜமால்
கலகலப்ரியா
நசரேயன்
மதுரை சரவணன்
செ.சரவணக்குமார்
வழிப்போக்கன் யோகேஷ்
சின்ன அம்மிணி
ஜோதிஜி
T.V.ராதாகிருஷ்ணன்
அன்புடன் அருணா
கேஆர்பி செந்தில்
மணிஜீ
ஜில்தண்ணி யோகேஷ்
மோகன் குமார்
நாஞ்சில் பிரதாப்
வல்லிசிம்ஹன்
இராமசாமி கண்ணன்
ஆர்,கோபி

அனைவருக்கும் மிக்க நன்றி! :)